வியாழன், ஜூன் 24, 2010

சரி ! மூட்டுவலி வராமல் இருக்க என்ன செய்யணும்?


          மூட்டுல இருக்கும் இயற்கையான எண்ணை பசையை காப்பாத்திக்கிட்டாலே மூட்டுவலி வராது.  கடக் கடன்னு சத்தம் வர அளவுக்கு மேலே சொன்ன காரணங்களை(
1. மெதுவாக அரைத்து விழுங்காமல் அவசர கதியில் உண்ட உணவுகள்,
2. அதிக புளிஅதிக காரம்,
3. ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவு. உதாரணம் Firdge - ல் சேகரிக்கப்பட்ட சமைத்த உணவு. Tinfoods. (அமுதம் ஆனாலும் நேற்றைய உணவு நஞ்சு என்பது பழமொழி),
4. எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள் - பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள்,
5. பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு சாப்பிடும் அதிமிஞ்சிய உணவுகள்.  ,
6. சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்வது.   ,
 7. முரண்பட்ட உணவுகள் உதாரணத்திற்கு இரண்டு வெவ்வேறு புரதச்சத்துகளை ஒரே சமயத்தில் சேர்த்து  உண்ணும்போது - உதாரணம் - கடல் உணவுகளுடன் பால் உணவுகளையும்தேனையும் நெய்யையும் சம அளவு கலந்து சாப்பிடுவதுமுளைகட்டிய தானியங்களுடன் மாமிச உணவுகளையும்வாழைப்பழத்துடன் தயிர்மோர் உடன்... (இப்படி பல இருக்கு),
8.மேலும் கண் விழித்தல், மலம்சிறுநீர் இவற்றின் வேகங்களை தடுத்தல்அளவுக்கு மீறிய உடற்பயிற்சிபட்டினி கிடத்தல்,
9.கடலைசிறுபயறுசோளம்காராமணிவெல்லம்பாக்குமொச்சைஅதிகமான உளுந்து வகைகள்நாவல் பழம்கொண்டைக்கடலைஉப்புகண்டம்ஊறுகாய் 
10.அதிக அலைச்சல்அதிகநேர பயணம்சவாரி செய்தல்எப்பொழுதும் வேலை செய்யமால் படுத்திருப்பதனால் உடம்பில் தேவையற்ற ஊளச்சதைகுண்டாக இருப்பது
11.தேவையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது அளவுக்கு மீறிய புணர்ச்சி மூட்டு வலிகளை அதிகப்படுத்திடும்.) செய்துகிட்டே இருந்தோம்னா நமக்குத்தான் கேடு.  அதனால் நோய் உருவாகக் காரணம் என்னென்ன பார்த்து அதை நீக்கணும்.  உதாரணம் எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்ப்பது போல.


          இயற்கையான வாழ்க்கையை ஆயுர்வேதம் சொல்லியபடி கேட்டு நடக்கணும்.  மூட்டு வலி வந்தபின் அவஸ்தைபடுவதைவிடவராமலிருக்கும் முறைகளை பின்பற்றுவதே நல்லது.  சத்தான சாப்பாடு, சரிவிகித உணவு (அருசுவை) நல்லது.  காரம்புளி எண்ணெய் தயிர்மிதமிஞ்சிய அசைவ உணவுபோன்றவைகளை தவிர்த்து சாதாரணமாக மூட்டுகளில் எண்ணெய் (நல்லெண்ணெய் அல்லது ஆயுர்வேத எண்ணெய்கள்) தேய்த்து குளித்தல் போன்றவை பலன் தரும்.  யோகாசனங்கள் - பிராணாயமாம் - சரியான பயிற்சிகள் பலன்தரும்.....


அடுத்து ..எந்த வகை மூட்டு வலின்னு எப்படி கண்டு பிடிக்க ?

Post Comment

3 comments:

கருத்துரையிடுக