இப்ப, தாங்கமுடியாத வலிகளில் மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். வேதனையான மூட்டுவலிக்குத்தான் எத்தனை வகை சிகிச்சைகள், வலிக்கு மாத்திரை சாப்பிடுணுமா? இல்ல எதனால் இந்த மூட்டுவலி வந்துன்னு தெரிஞ்சு நோயின் காரணத்துக்கு மருந்து சாப்பிடணுமா? அதாவது வலியை தற்காலிகமா மறக்கணுமா ? அல்லது முழுமையா குணப்படுத்துணுமா? இந்த கேள்வி நம்மில் பலபேருக்கு இருக்கு. arthritis எனப்படும் இந்த மூட்டு வலிக்கு Arthron என்றால் மூட்டு என்றும், itis என்றால் வலியும் வீக்கமும் என்று பொருள்படும்
பொதுவாக இரண்டு தனித்தனி எலும்புகள் இணைந்திருக்கிற இந்த மூட்டின் இடைவெளியில் பை போன்ற அமைப்பும், அதில் சுரக்கிற நீரும் (Synovial Fluid - கிரிஸ் பசை மாதிரி) - Cartilage எனப்படுகிற சவ்வு போன்ற குருத்தெலும்பும் உராய்வை தடுக்கும். மூட்டைச் சுற்றி இருக்கிற சதை நார்களும், சதையும், ஒரு இருக்கமான பிணைப்பை மூட்டுக்கு கொடுத்திருக்கும். இந்த அமைப்பை கெடுக்கிறதுதான் மூட்டு வலி. வயதானால் வருமா? மூட்டு தேய்மானம்ணு ஒன்று இருக்கா? வாத நீர்னு சொல்றீங்களே அப்படின்னா என்ன?
1 comments:
வணக்கம்சார்.மூட்டுவலி சார்ந்த அடுத்ததொடர் கான ஆவலுடன்உள்ளேன்.
நன்றி வாழ்த்துக்கள்..
கருத்துரையிடுக