பொதுவாக மூட்டுவலி ஏற்பட காரணம் என்ன?
மேலே சொன்ன அனைத்துமே முக்கிய காரணங்கள் ஆனாலும் ஆமம் எனப்படுவது அஜீரணத்தால் உண்டாகும் விஷம் - சாடராக்னி பலமிழந்ததால் ஜீரணமாகாமல், ரசதாது பக்குவமாகாமல் இருக்கும். அதாவது நமது உடம்பில் செரிக்கப்படாமல் விஷமாக சேர்ந்த உணவுதான் இந்த ஆமம். சரி , ஆமம் உருவாக காரணம் என்ன?
1. மெதுவாக அரைத்து விழுங்காமல் அவசர கதியில் உண்ட உணவுகள்
2. அதிக புளி, அதிக காரம்
3. ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவு. உதாரணம் Firdge - ல் சேகாpக்கப்பட்ட சமைத்த உணவு. Tinfoods. (அமுதம் ஆனாலும் நேற்றைய உணவு நஞ்சு என்பது பழமொழி)
4. எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள் - பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள்.
5. பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு சாப்பிடும் அதிமிஞ்சிய உணவுகள்.
6. சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்வது.
7. முரண்பட்ட உணவுகள் உதாரணத்திற்கு இரண்டு வெவ்வேறு புரதச்சத்துகளை ஒரே சமயத்தில் சேர்த்து உண்ணும்போது - உதாரணம் - கடல் உணவுகளுடன் பால் உணவுகளையும், தேனையும் நெய்யையும் சம அளவு கலந்து சாப்பிடுவது, முளைகட்டிய தானியங்களுடன் மாமிச உணவுகளையும், வாழைப்பழத்துடன் தயிர், மோர் உடன்... (இப்படி பல இருக்கு)
8.மேலும் கண் விழித்தல், மலம், சிறுநீர் இவற்றின் வேகங்களை தடுத்தல், அளவுக்கு மீறிய உடற்பயிற்சி, பட்டினி கிடத்தல்,
9.கடலை, சிறுபயறு, சோளம், காராமணி, வெல்லம், பாக்கு, மொச்சை, அதிகமான உளுந்து வகைகள், நாவல் பழம், கொண்டைக்கடலை, உப்புகண்டம், ஊறுகாய்
10.அதிக அலைச்சல், அதிகநேர பயணம், சவாரி செய்தல், எப்பொழுதும் வேலை செய்யமால் படுத்திருப்பதனால் உடம்பில் தேவையற்ற ஊளச்சதை, குண்டாக இருப்பது,
11.தேவையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது அளவுக்கு மீறிய புணர்ச்சி , மூட்டு வலிகளை அதிகப்படுத்திடும்.
0 comments:
கருத்துரையிடுக