ஆயுர்வேதத்தில்- இதனை சம்பக என்று சொல்வோம்
ஆசார்யர் சரகர்,சுஸ்ருதரும் -புஷ்ப வர்க்கத்தில் இதனை குறிப்பிடுகிறார்கள்
வாக்பட்டார் இதனை -விஷ ரோக சிகிச்சையில் குறிப்பிடுகிறார்
பயன்பாடுகளில் -
அதிக மூத்திர வெளியேறும நோயான மூத்திர அதிசாரம் என்னும் நோய்க்கு -வேர்பட்டையை கசாயமாகி குடிக்க சொல்கிறது (வைத்யா மாதவ )
பெண்களின் யோனி நோய்களில் -இலுப்பை பூ,மல்லிகை பூ, சம்பங்கி பூ மற்றும் இலை ,தேன்,நெய் விட்டு காய்ச்சி பூச யோனி இறுக்கம் பெரும் -குழந்தை பேருக்கு பின் வரும் பெண் உறுப்பு தளர்வை சரி செய்யும்),யோனியில் ஏற்படும் அரிப்பு ,வெள்ளை படுதலை போக்கிடும் .
சித்த மருத்துவத்தில்
செய்கை -
இலை -உடலை தேற்றும் ,முறை வெப்பகற்றி,உள் அழல்ஆற்றி வீககமுருக்கி,ருது உண்டாக்கி ,பசிதூண்டி
பூ - அகட்டு வாய் அகற்றி ,சிறுநீர் பெருக்கி ,வெப்பமுண்டாக்கி உரமாக்கி
பட்டை -துவர்ப்பி,உரமாக்கி ,
பட்டை -துவர்ப்பி,உரமாக்கி ,
வேர் -நீர் மலம் போக்கி
குணம் - பூ -இதனால் வாத பித்த சுரம் ,என்பு சுரம் ,வெள்ளை ,ஆண்மை குறைவு ,கண் அழலை தீரும் ,மனம் களிப்பு உண்டாகும்.
வாத பித்த அத்திசுரம் மாமேகம் சுத்தம் சுரந்
தாதுநட்டங் கண்ணழற்சி தங்காவே-மாதே கேள்
திண்புறு மனக்களிப் பாந் திவ்யமனம் உட்டினஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்
(அகத்தியர் குணபாடம்)
உடல் பலம் பெற-செண்பகப் பூ மிகச்சிறந்த மருந்தாகும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க-செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும்.
பித்தம் குறையகு பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் உண்டாகும். செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும்
ஆண்மை குறைவு நீங்க செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
பெண்களுக்கு தினமும் சண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.
காய்ச்சல் குணமாக வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
கண் பார்வை ஒளிபெற செண்பகப் புவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.
சிறுநீர் பெருக்கி சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
பாலியல் நோய்களைக் குணப்படுத்த ஒழுக்க சீர்கேட்டால் வைரல் டிசிஸஸ் (Viral diseases) என்ற பாலியல் நோயின் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.
செண்பக எண்ணெய் செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் வாசனை திரவியங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது.இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும். மேலும் தலைவலி, கண்நோய்கள் குணமாகும். மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை குணமாக்கும்
வேர்-சுரம் ,கண் நோய்கள் ..ஆகியவைகளை போக்கும் ..
தீராத உட்டிணதைத் தீர்க்குஞ் சுரம் போக்கும்
நேரே பசிஎழுப்பும் நிச்சயமே -ஒருங்கால்
பண்புருகண் தோடத்தை பற்றரருக்கும் வாசமுள்ள
சண்பக மரத்தின் வேர் தான் .
0 comments:
கருத்துரையிடுக