செவ்வாய், ஜூன் 29, 2010

மூட்டு வலிக்கு அடிப்படை சிகிச்சை எப்படி எடுக்கணும் ?




மூட்டுகளில் எண்ணை பசையை உண்டு செய்யணும் 
உடம்பில் உஷ்ணம் அதிகமாக இருந்தால் அதை முதலில் குறைக்கணும்
பீடிசிகரெட்பாக்குவெற்றிலைகுடிபழக்கங்களை வைத்துக்கொண்டு உடல் உஷ்ணத்தை குறைக்கவே முடியாது.
வாத  நீர்னு  தெரிஞ்சா நீரைக்குறைப்பதற்கு சிகிச்சை அளிக்கணும்
ஆம வாதத்தில் ஆமத்தை (செரிக்காமல் உடம்பில் சேர்ந்த  விஷ நீரை) முதலில் வயிற்றில் சாடராக்னியை தூண்டிவிட்டு - ஆமத்தை செரிக்க வைக்கணும்மேலும்  மேலும் ஆமம் (விநீர்சேராமல் தடுத்து ஆமத்தை முழமையா நீக்கணும்.  அப்பறமாக எலும்பில் வலு சேரக்கணும்.  மூட்டுகளுக்கு இடையே பசையை உருவாக்கணும்.  இதற்கான பிரத்தியோகமான ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடணும்.
தைலம் வலி இருந்தாலும்,இல்லை என்றாலும் தினமும் தேய்க்கணும் .நூறு மிலி தைலத்தை மூணு மாசம் வைத்து வேடிக்கை பார்க்கும் நோயாளிகளும் பலர் உண்டு .
தேவையில்லா வாதத்தை குறைக்கணும்.
யோகாசன பயிற்சிகளையும் அத்தியாவசியமான வழிமுறைகளையும் பின்பற்றணும்.
ஒரு கோர்வையான மருந்துகளை 48 நாட்களுக்கோமூன்று முதல் ஆறு மாதங்களுக்கோ வலிக்கு மாத்திரை சாப்பிடாமல்பொறுமையாக வியாதிக்கு மருந்து சாப்பிடாமல் முழுமையாக குணம் தெரியும்.
 பல வருடமாக உள்ள வியாதிக்கு 10 நாட்களில் குணம் கிடைச்சிடும்ன்னு நினைக்க கூடாது. நாட்களில் கூட தீர்வு கிடைக்கலாம்.   ஆனால் பிரச்சினை திரும்ப வரக்கூடாதுன்னா மருந்துகளை பக்குவமாக சாப்பிடனும்.  
வலியை மறக்க மாத்திரை சாப்பிட்டும்  இன்னொரு வியாதியை உங்ககிட்ட படிச்ச பட்டம்போல சேர்க்காம இருக்கிறதுக்கு ஆயுர்வேத மருந்துகள் உங்களை அழகுபடுத்த காத்துக்கொண்டிருக்கிறது.
முறையாக 5 ½  வரும் படிச்சு அனுபவ அறிவும்நோயை கணிக்கிற திறனுடைய மருத்துவர்கிட்ட எந்த ஒரு கண்டினும் நீங்க போடாமவியாதிக்கு தக்க மருத்துவர் சொல்கிற கண்டிசனை நீங்க கேட்டு நடந்தால் மூட்டுவலினா என்னன்னு 90 வயது தாத்தாகூட கேட்க வாய்ப்பு இருக்கு !

 அடுத்து ..மூட்டு வலிக்கான ஆயுர்வேத பொதுவான மருந்துகள் .

Post Comment

3 comments:

மச்சவல்லவன் சொன்னது…

வணக்கம்சார்,மூட்டுவலி இல்லாமல் நீண்ட ஆயுள்காலம் வாழ அனைவரும் அசைப்படுவார்கள், நானும் அப்படிதான் உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்சார்.
வாழ்த்துக்கள்...

சனியன் சொன்னது…

உங்கள் பதிவு மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கிறது. இத்தனை விபரங்களை தொகுத்துத் தரும் உங்களுடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

//உடம்பில் உஷ்ணம் அதிகமாக இருந்தால் அதை முதலில் குறைக்கணும்// உடல் உஷ்ணத்தை எப்படி குறைப்பதென கொஞ்சம் சொல்லுங்களேன்.

curesure Mohamad சொன்னது…

@சனியன்நன்றி நண்பரே ..சீக்கிரம் தூங்குங்கள் ..புளியை குறையுங்கள் ..அவசர பாஸ்ட் புட் உணவை தவிருங்கள் தானாக சூடு குறையும்

கருத்துரையிடுக