ஞாயிறு, ஜூன் 27, 2010

ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்?எலும்பு தேய்வுன்னு ஒன்று இருக்காஇப்ப 90 வயது தாத்தாவுக்கே  எலும்பு உடஞ்சுசுதுன்னு வச்சுக்குவோம் அப்பகூட எலும்பு சேரத்தானே செய்யுது.  கடவுளோட அற்புத படைப்புகளில் எலும்பு அற்புதமான படைப்பு  - எலும்பு எந்த வயசுல உடைஞ்சாலும் கூட தானே சேர்ந்து கொள்ளும்.  அதனால எலும்பில் பசையை உருவாக்குவது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான்.  அதனால எலும்பு தேய்வுன்னு ஒன்று இருந்தால் கூட அதை முழு சரி செய்து விட முடியும்ன்னு ஆயுர்வேதம் சொல்கிறது.
எட்டு வகையான ஆயுர்வேதப் பிரிவில் - முக்கியப் பிரிவான ரசாயனம் - வயதாவதை தடுக்கும் பிரிவு (Anti Aging Therapy ) இளமையோடு ஆரோக்கியத்தோடு வாழ்வது எப்படி என்று சொல்லித் தருகிறது - அதற்கென கூறப்பட்ட காயகல்பசஞ்ஜீவி மூலிகைகளும் சரியான நேரத்தில் தொடர்ந்து  சாப்பிடும்போது இயற்கையான வயதான காலத்தில் வரும் மூட்டுவலியை கூட தடுத்துவிடலாம்.

தாகமெடுத்தவுடன் - கிணறுவெட்டி தண்ணீர் குடிக்கும் கதிதான் இப்போது.  நோய் வராமல் தடுப்பதைவிட்டுவிட்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை விட்டுவிட்டு பணத்தை நோக்கி மூச்சிறைக்க ஓய்வின்றி ஓடுபவன்உரம் கலந்த உணவுகளை உண்டுடிவியில்  விளம்பரம் பார்த்து எது ஆரோக்கியமென்று அறிந்துகொள்ளும் மனிதர்களிடையே - நோய் நிரந்தரமாக குணமாக வேண்டுமானால் வலியினை தற்காலிகமாக மறக்க வைக்கும் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து ஆயுர்வேதம் செல்லும்படி நடக்கவேண்டும்.

ஆஹாரம்தூக்கம்ப்ரமசர்யம்- இம்மூன்றும் வாழ்க்கையினை முக்கிய தூண்கள் இதில் எது குறைந்தாலும் மனிதனுக்கு வாதபித்தகப தோங்களிலும், 7 தாதுக்களிலும்உயிர் தாதுக்களின் சாராம்சம் ஓஜஸுனுடைய குறைவை ஏற்படுத்திவிடும்.  ப்ரமசர்யம் என்பது நாம் நினைப்பது போன்றது இல்லை. பெண்களை விட்டு விலகிகியிருப்பது இல்லை, சரியான  முறையான குடும்ப வாழ்க்கையை போதிக்கும் - கௌடில்ய ப்ரமசர்யம் என்பதும் கூட அடங்கும்.  மூட்டுவலிக்கு சிகிச்சை சரியான  நேரத்தில் அளிக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு மேலே கூறிய அடிப்படைத் தத்துவங்கள் மிக அவசியம்.
பஞ்சகர்மாவில் :- வஸ்தி சிகிச்சை எனப்படும்ஆசனவாய் வழியே எண்ணை மருந்துகளையோகஷாய மருந்துகளை உட்செலுத்தி வாதத்தின் பிரதான இடமான பெருங்குடலிலுள்ள வாதத்தின் தன்மையை கட்டுக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான சிகிச்சை.  இது பொதுவாகநாட்கள், தொடர்ந்து  நோயின் தன்மைக்கு ஏற்றவாறு நாட்களை கூட்டி முறையாக செய்யப்படும் அற்புத சிகிச்சை.  மூட்டுகளில் தடவப்படும் எண்ணை சிகிச்சைநவரகிழிபிழிச்சல், வேஷ்டனம் (எண்ணை வைத்து கட்டுதல்). உபநாகம் (பற்றிடுதல்) போன்ற சிகிச்சைகளும்ஓத்தடம் கொடுக்கும் முறைகளும் (ஸ்வேதனம்) பச்சகிழிஇலக்கிழிகளும்மூட்டுகளுக்கும்பசையும்வலுவையும் விரைவில் கொடுத்திடும்.

          ஒரு மனிதனுக்கு பசி எடுத்தது - சாப்பிட ஆரம்பித்தால் இட்லி சாப்பிட்டான்பசி அடங்கவில்லை, 5வது இட்லி சாப்பிட்டவுடன் உடனடியாக அவனது பசி அடங்கியது அப்பாடா. 5வது இட்லியில் பசி அடங்கியிருந்தால் இனி 5வது இட்லியை மட்டும் முதலில் சாப்பிட்டு பசி அடங்க முடியுமா என்னஆயின்மெண்ட் என்பது 5வது இட்லிபோலத்தான் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாமே தவித முழு நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை - அடிப்படை சிகிச்சை எடுத்த பின்னர் - எண்ணை அல்லது  ஆயின்மெண்ட் பலன்தரும்.

அடுத்து அடிப்படை சிகிச்சை எப்படி எடுக்கணும் ?

Post Comment

3 comments:

கருத்துரையிடுக