வெள்ளி, ஜூன் 25, 2010

மூட்டுவலி எந்த வகைன்னு எப்படி கண்டுபிடிக்க?


இரத்தத்தில் 
ESR கூடுதல்(நீர் வாதம் ,இரத்த சோகை ,கிருமி தொற்று...) 
RA Factor ( positive ஆக இருந்தால் முடக்கு வாதம் என்று சொல்வார்கள் -இது ஆயுர்வேத மருந்தில் negative ஆக வாய்ப்புள்ளது )
CRP(C Reactive Protein- வாத நீரின் தன்மையை இது  positive இருந்தால் கண்டு பிடிக்கலாம் )
ASO TITRE (Anti Streptococcal Antibodies-வாத நீரின் தன்மையை இது  positive இருந்தால் கண்டு பிடிக்கலாம்) ,
ANA (Anti nuclear Antibody-வாத நீரின் தன்மையை இது  positive இருந்தால் கண்டு பிடிக்கலாம்),
Uric acid (gout arthritis -உப்பு நீரால் ஏற்படும் வாத நீரை கண்டு பிடிக்கலாம் )
VDRL போன்ற டெஸ்ட்டுகள் மூட்டுவலி எந்த வகைன்னு நமக்கு காட்டிக்கொடுத்திடும்.  

மேலும் தேவை என்றால் X-Ray, ஸ்கேன்(தேவை இல்லாமல் எடுப்பதில் பயனில்லை-சதை நார் கிழித்தல்,எலும்பு சேதாரத்தின் அளவு ) எடுத்துப் பார்க்கலாம். 
 வாத நீரின் அளவு விடியல் காலையில் நாடியில் தெரியும் -பொதுவாக அதிகாலையில் ஏற்படும் வலி , வீக்கம், இறுக்கம் போன்றவற்றை வைத்தும் கணக்கிடலாம் .
எலும்பு தேய்மானத்தின் தன்மையை மூட்டுகளில் மடக்கி  நீட்டும் போது உண்டாகிற சத்தம்,உராய்வில் ஏற்படுகிற கர் கர் என்ற சத்தம்
 இவைகளை கணக்குப் போட்டுமூட்டு பக்கத்தில் இருக்கிற சதையுடைய உருவ அமைப்பையும் தாங்கும் சக்திவலி எப்பொழுது கூடுதலாகிறது  குறைகிறது என்று தெரிதல்,
ஆகாரத்திற்கும் மூட்டுவலிக்கும் சம்மந்தம் இருக்குதான்னு தெரிஞ்சு மூட்டை மூட்டா மட்டும் பார்க்காம முழு மனிதனுடைய வாழ்க்கை முறையை தெரிஞ்சு சரியாக  நோயின் தன்மையின் அளவு தெரிஞ்சு வைத்தியம் செய்தல் நல்ல பலனளிக்கும்.

அடுத்து -ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு நாங்கள் என்ன செய்வோம் 

Post Comment

2 comments:

மச்சவல்லவன் சொன்னது…

வணக்கம்சார்,எனக்கு இடதுகாலில் முட்டியில் மடக்கி நீட்டினால் வலி உள்ளது,அதோடு கய்யினால் முட்டியை அசைத்தால் உள்ளே நொருங்கிபோனதுபோல் உள்ளது.இது மூன்றுமாதமாக உள்ளதுசார்,இதற்கு உங்களின் ஆலோசனை கூரவும்.
மூட்டுவலி பற்றி உங்களின் பதிவுக்கு எனது நனறி,வாழ்த்துக்கள்.
மச்சவல்லவன்
சிங்கப்பூர்.

curesure Mohamad சொன்னது…

நண்பரே தொடர்ந்து படியுங்கள் ...உங்களது பிரச்சனைக்கு தீர்வு எளிதாக கிடைக்கும் ..பயப்படவேண்டாம் ..பலஹீனம் உங்களது வலிக்கான காரணமாக இருக்கலாம் ..

கருத்துரையிடுக