திங்கள், ஆகஸ்ட் 27, 2012

சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து -சந்திரப்ரபாவடீ -Chandra Praba Vati


சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து -சந்திரப்ரபாவடீ -Chandra Praba Vati
 (ref-பைஷஜ்ய ரத்னாவளி - ப்ரமேஹாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த குக்குலு ஷோதித குக்குலு  80 கிராம்
2.            சுத்தி செய்த கோமூத்திர சிலாஜது
ஷோதித கோமூத்திர சிலாஜது                  80          
3.            சர்க்கரை ஸர்க்கர                      40          
4.            திரிபலா கஷாயம் திரிபலாகஷாய     போதுமான அளவு

இவைகளை ஒன்று கலங்க கரைத்துக் கொதிக்க வைத்து அது குடிகா பாகத்தை அடைந்தவுடன் அத்துடன்

1.            அயபற்பம் லோஹ பஸ்ம                     20 கிராம்
2.            பொன்னிமிளைபற்பம் ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம    10          

இவைகளையும் நன்கு பொடித்துச் சலித்த

1.            கார்போக அரிசி பாகுச்சி                         10 கிராம்
2.            வசம்பு வச்சா                                  10          
3.            கோரைக்கிழங்கு முஸ்தா                        10          
4.            நிலவேம்பு பூநிம்ப                              10          
5.            தேவதாரு தேவதாரு                            10          
6.            மஞ்சள் ஹரீத்ரா                               10          
7.            அதிவிடயம் அதிவிஷா                          10          
8.            மரமஞ்சள் தாரு ஹரித்ரா                       10          
9.            மோடி பிப்பலீ மூல                             10          
10.          கொடி வேலி வேர் சித்ரக                        10          
11.          சிவதை (கருப்பு) த்ரிவ்ருத்                       10          
12.          நேர்வாள வேர் தந்தீமூலம்                      10          
13.          இலவங்கபத்திரி லவங்கபத்ர                     10          
14.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்                  10          
15.          ஏலக்காய் ஏலா                                10          
16.          மூங்கிலுப்பு வம்சலோசன                       10          
17.          தனியா தான்யக                                10          
18.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்   10          
19.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்  10          
20.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10          
21.          செவ்வியம் சவ்ய                               10          
22.          வாயுவிடங்கம் விடங்க                         10          
23.          யானைத்திப்பிலி கஜதிப்பிலி                     10          
24.          சுக்கு சுந்தீ                                     10          
25.          மிளகு மரீச்ச                                   10          
26.          திப்பிலி பிப்பலீ                            10          
27.          ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார                       10          
28.          யவக்ஷாரம் யவக்ஷார                           10          
29.          இந்துப்பு ஸைந்தவலவண                       10          
30.          கல்லுப்பு ஸ்வர்ச்ச லவண                       10          
31.          சோற்றுப்பு ஸமுத்ரலவண                      10          

இவைகளின் சூர்ணம் சேர்த்துக் கலந்த பின்னர் நன்கு அரைத்து 500 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    

 1.            சுத்தி செய்த குக்குலுவைச் சிறிது தேன் விட்டு நன்கு இடித்தரைத்து விழுதாக்கி அத்துடன் பஸ்மங்கள், சிலாஜது, சர்க்கரை, பொடித்துச் சலித்த சூரணம் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து அரைத்து உருட்டியும் இதைத் தயாரிப்பதுண்டு.

2.            தேனுக்குப் பதிலாக திரிபலா கஷாயம், சீந்தில் கஷாயம் இவைகளை உபயோகித்துச் சரக்குகளைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்துத் தயாரிக்கலாம்.

3.            இது எல்லா வியாதிகளிலும் பொதுவாக உபயோகிக்கத் தகுந்த சிறந்ததோர் மருந்து.

4.            இதில் குறிப்பிட்டுள்ள சரக்குகளை சற்று மாறுதலான விகித அளவில் எடுத்துக்கொண்டு கூடுதலாக கற்பூரத்தையும் (சந்திரப்ரபா) சேர்த்து தயாரிக்கும்படியான மற்றொரு முறை அரசினர் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் சாரங்கதர ஸம்ஹிதையில் உள்ளது.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் நெல்லிக்காய்ச்சாறு, சீந்தில்சாறு, பால், எள்ளுச்சூரணம் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும் (உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குமுன்).

தீரும் நோய்கள்:  

மலச்சிக்கல் (விபந்த), வயிற்றுப்புசம் (ஆனாஹ), சூலை (சூல), கிரந்தி (கிரந்தி), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), நீர்ச் சுருக்கு (மூத்ரக்ரிச்சர), பிரமேகம் (ப்ரமேஹ), கல்லடைப்பு (அஷ்மரீ), மூத்திரம் தடைபடல் (மூத்ராசங்கம்), மூலம் (அர்ஷ), தானே விந்து நழுவுதல் (சுக்ரமேஹ), வாத நோய்கள் (வாதரோக), தோல் நோய்கள் (சர்ம ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கோமூத்ற சிலாஜித் சேர்த்தால் மட்டுமே -சர்க்கரை நோய்க்கு சிறந்த  மருந்தாகும் ..
  2. கோமூத்ற சிலாஜித் சேர்ப்பதால் ஆண்மை பெருகும் ,உடல் வலு பெரும் ,தாது புஷ்டி உண்டாகும் ..
  3. சர்க்கரை நோயில் இந்த மருந்து -சிறந்த அளவில் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் ..
  4. நீர்கடுப்பு ,நீர் பிரியாமை போன்ற நோய்க்கும் -சிறுநீரக கல் அடைப்பிற்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  5. பலர் சிறுநீரக நோய்களுக்கு பிரதானமாக பயன் படுத்துகிறார்கள் ..
  6. விந்து முந்துதில் -பல துணை மருந்தோடு நன்றாக வேலை செய்யும் ..
  7. மார்கெட்டில் ஒரு ரூபாய்க்கும் குறைவாக இந்த மருந்து கிடைக்கிறது ..
  8. பல கம்பெனிகள் கோமூத்ற சிலாஜித் சேர்ப்பதில்லை  என்பது எனது தனிப்பட்ட கருத்து

Post Comment

1 comments:

கருத்துரையிடுக