வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து - பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்


வாத நோய் ,தோல் நோய் -இரண்டிற்கும் உதவும் மருந்து -
பஞ்சதிக்தகுக்குலு க்ருதம்

(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் வாதவியாதி சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            வேப்பம்பட்டை நிம்பத்வக்                  500 கிராம்
2.            சீந்தில்கொடி குடூசி                        500        
3.            ஆடாதோடைவேர் வாஸாமூல             500        
4.            பேய்ப்புடல் பட்டோல                      500        
5.            கண்டங்கத்திரி கண்டகாரீ                  500        
6.            தண்ணீர் ஜல                            500        

                இவைகளைக் கொதிக்க வைத்து 1.600 லிட்டராகக் குறுக்கி வடிகட்டி பசுவின் நெய் (க்ருத) 800 கிராம் சேர்த்து அதில்

1.            பாடக்கிழங்கு பாத்தா                              12.500 கிராம்
2.            வாயுவிடங்கம் விடங்க                               12.500        
3.            தேவதாரு தேவதாரு                                 12.500        
4.            யானைத்திப்பிலி கஜபிப்பலீ                          12.500         
5.            ஸர்ஜக்ஷாரம் ஸர்ஜக்ஷார                             12.500        
6.            யவக்ஷாரம் யவக்ஷார                                12.500        
7.            சுக்கு சுந்தீ                                           12.500        
8.            மஞ்சள் ஹரீத்ரா                                    12.500        
9.            சதகுப்பை ஸதபுஷ்ப                                 12.500        
10.          செவ்வியம் சவ்ய                                    12.500        
11.          கோஷ்டம் கோஷ்ட                                  12.500        
12.          வாலுளுவை அரிசி ஜ்யோதிஸ்மதி                     12.500        
13.          மிளகு மரீச்ச                                        12.500        
14.          வெட்பாலை அரிசி இந்த்ரயவ                         12.500        
15.          சீரகம் ஜீரக                                          12.500        
16.          கொடிவேலி வேர் சித்ரக                              12.500        
17.          கடுகரோஹிணீ கடுகீ                                12.500        
18.          சுத்தி செய்த சேராங்கொட்டை ஷோதித பல்லாதக   12.500        
19.          வசம்பு வச்சா                                        12.500        
20.          திப்பிலி பிப்பலீ                                      12.500        
21.          மோடி பிப்பலீ மூல                                  12.500         
22.          சித்தரத்தை ராஸ்னா                                 12.500        
23.          மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                               12.500        
24.          அதிவிடயம் (வெள்ளை) அதிவிஷா                  12.500        
25.          அதிவிடயம் (வெள்ளை) அதிவிஷா                 12.500        
26.          ஓமம் அஜமோதா                                    12.500        
27.          சுத்தி செய்த குக்குலு ஷோதித குக்குலு                     12.500        
                இவைகளைக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

(நெய் சேர்க்கும் முன் சுத்தி செய்த குக்குலுவை நன்கு கஷாயத்தில் கரைத்து விடவும்) 

குறிப்பு:     

சம்பிரதாயத்தில் குக்குலு, கஷாயச் சரக்குகளுடன் சேர்த்துக் கஷாயமாக்கி உபயோகிக்கப்படுகிறது.

                 
நெய், குக்குலு இவைகளைக் கஷாயத்துடன் கலந்து காய்ச்சி வெல்லப் பாகு போன்ற நிலையில் கல்க சாமான்களின் சலித்த சூரணத்தைக் கலந்து யோகராஜ குக்குலு”, முதலியவைகள் போல் உபயோகிப்பதும் உண்டு.

                 
இதற்கு நிம்பாதிக்ருத என்றொரு பெயருமுண்டு.


அளவும் அனுபானமும்:      
5 முதல் 10 கிராம் வரை வெந்நீருடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

                 
தீரும் நோய்கள்: 
கீல்வாயு (அ) எலும்புப்பூட்டு வாதம் (சந்திகாதவாத), எலும்புப்பூட்டுவாதம் (அஸ்திகாதவாத), எலும்பின் மஜ்ஜையைப் பற்றிய வாதம் (மஜ்ஜாகாத வாத), குதிகால் வாதம் (வாதரக்த), புறையோடிய புண்கள் (அ) விரணங்கள் (நாடீவ்ரண), வெண்குட்டம் (ஸ்வித்ர), பரங்கிப்புண் (பிரங்க வ்ரண (அ) குஹ்யவ்ரண) மற்றும் பலதரப்பட்ட தீவிர தோல் நோய்கள் (குஷ்ட), கண்டமாலை (கண்டமால), பவுத்திரம் (பகந்தரம்) போன்ற நோய்கள் தீரும்
 

  • நன்னாரி (ஸாரிவா), மஞ்சிஷ்டா கஷாயத்துடன் கொடுக்க நாட்பட்ட பலதரப்பட்ட தோல் நோய்களும்,குதிகால் வாதமும் நீங்கும்.   • தாளிசாதி சூர்ணத்துடன் இது நாட்பட்ட காய்ச்சல், மஞ்சட் காமாலை மற்றும் ரத்தசோகைக்குத் தரப்படுகிறது. 

  • பரங்கிநோயில் மதுஸ்னுஹீ ரஸாயனம், பனஞ்சர்க்கரையுடன் இஃது தரப்படுகிறது. 

  • வெண்குட்டத்தில் கார்போக அரிசியுடன் இதனைத் தருவது வழக்கம். 
  • கதிராரிஷ்டம், அமிர்தபல்லாதக லேகியத்துடன் இது தோல் நோய்களில் (குஷ்ட) தரப்படுகிறது.

  • இதைத் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகவும் உபயோகிப்பதுண்டு.
தெரிந்து கொள்ள வேண்டியவை .
  1. தோல் நோய்களில் -அதிகம் பயன்படுகிறது
  2. ஆறாத புண்களை ஆற்ற பயன்படுகிறது
  3. வலி சம்பந்தமான நோய்களில் -நீர் வாதம் ,எலும்புகளில் உள்ள வாத நோய்க்கு சிறந்தது

Post Comment

1 comments:

கருத்துரையிடுக