திங்கள், ஜூன் 10, 2013

மருத்துவ முதுமொழிகள்

மருத்துவ முதுமொழிகள்


v  பணமுள்ளவர்க்குக் கஸ்தூரி  ,ஏழைக்கு மஞ்சள்
v  ஆவாரை இருக்கச் சாவாரை என்சொல்வேன்
v  வல்லாரையினும் நல்லாருமில்லை; வல்லாருமில்லை
v  மூலிகை அறுத்தால் மூன்றுலகு ஆளலாம்
v  பொங்கின வயிற்றுக்குப் பொடுதலைச் சாறு
v  அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்
v  கதிரவன் ஒளியில் பண்டம் பாழாகாது.
v  அஞ்ஞானம் தொலைந்தால் ஔடதம் பலிக்கும்.
v  சேய்க்கு நோயானால் தாய்க்கும் மருந்திடு.
v  வைந்தாரை வளர்க்கும் மணத்தக்காளி.
v  தேற்றாங் கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை
v  வாயிற்குச் சுவை உடம்பிற்குக் கேடு
v  நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்
v  கொன்றைப் பட்டையில் கோடி நோய்கள் போகும்
v  தண்ணீர் விட்டான்கிழங்கு தழுவப் பால் சுரக்கும்
v  அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்
v  மறுசாதம் போட்டுக் கொள்ளாதவன் மாட்டுப் பிறப்பு
v  தாமரையில் உணவு கொள்ளத் தீராப்புண்ணும் தீரும்.
v  ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரமாகும்.
v  எருக்கிலையில் உணவு கொள்ளக் கடிவிடம் தீரும்
v  உண்டி வெய்யோற்கு உறு பிணி எளிது
v  குடிநீர்த் தோடங்கட்கு உத்தாமணிக் குடிநீர் மாற்று
v  எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
v  உணவில் உப்பை ஒழித்தவன் யோகி
v  நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்
v  வெங்காயம் தின்பார்க்குத் தங்காயம் பழுதில்லை
v  வெந்தால் தெரியும் வெங்காய மாண்பு
v  உடல் துவாரம் ஒன்பதின் நோயும் சிறு கீரை உணவு சிறுக்கச் செய்யும்
v  கண்ணேறுக்குக் கால்மண் சுற்றியிடு
v  கருவேப்பிலையை அரைத்துக் கண்கட்டிவிடு
v  கண்களில் நோயானால் உள்ளங்காலில் மருந்திடு
v  எருச்சிக்கல் நீங்க உடற் சிக்கல் தீரும்
v  அரையிலே புண்ணும் அண்டையிலே கடனுமாகாது.
v  பப்பாளிப் பழத்தைத் தேமல் மேல் தேய்
v  சேற்றுப் புண்ணிற்குச் சிறுநீர் விட்டாற்று
v  மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்
v  புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று
v  கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை
v  எந்த வீக்கத்திற்கும் எருக்கின் பாலடி
v  மாந்திரிகன் வீட்டுப் பேயும் மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
v  குருவில்லா வித்தை பாழ்



Post Comment

1 comments:

sakthi சொன்னது…

மிக அருமை சார்

கருத்துரையிடுக