வெள்ளி, ஏப்ரல் 17, 2015

சொல்ல முடியாத வேதனை -நண்பர்களே உதவுங்கள் ..

வலை தள நண்பர்களே ..
மக்களுக்கு ஆயுர்வேத சித்த மருத்துவத்தை கொண்டு சென்று உலகறிய செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கத்திலே இந்த ஆயுர்வேத மருத்துவம் என்ற பிளாக் ஸ்பாட் தளம் உருவாக்கப்பட்டது  என்பது நீங்கள் அறிந்ததே ..

எனது தளம் பல போலி மருத்துவர்களை உண்டாக்குகிறது என்ற பெரிய குற்றசாட்டை எனது சக மருத்துவர்கள் வைத்த காரணத்திற்க்காக என்னால் பல மாதங்களாக என்னால் தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .

நான் யார் ,எந்த ஊர் என்ற விவரங்கள் இல்லாமலே தான் சில வருடங்களாக இந்த தளத்தில் மக்களுக்கு ஆயுர்வேத சித்த மருத்துவத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று நடத்தி வந்தேன் ..


தற்செயலாக ஒரு சர்ச் எஞ்சினில் தேடி கொண்டிருக்கும் போது இன்று தான் இந்த தளம் அதாவது எனது மொத்த www.ayurvedamaruthuvam.blogspot.com தளத்தையே ஒரு அச்சு அசல் மாறாமல் இந்த தளத்தில் பதிவு ஏற்றப்பட்டுள்ளது என்று தெரிந்து மிகவும் நொந்து போய் விட்டேன் ..மிகவும் சொல்ல முடியாத துயருக்கு -வேதனைக்கு ஆளாக்கபடுகிறேன் ..இந்த தளத்தின் முகவரி www.tamilnaturalmedicine.blogspot.in என்ற இந்த தளம் ..
இந்த தளத்தின் ஸ்க்ரீன் ஷாட் இதோ






கிட்டத்தட்ட எனது எல்லா பதிவுகளையும் காப்பி செய்யப்பட்டுள்ளது இந்த தளத்தில் ..சுமார் ஆயிரம் பதிவுகள் எனது தளத்தில் இருந்து அச்சு அசல் மாறாமல் காப்பி அடிக்கப்பட்டுள்ளது ..

தாங்க முடியாத வேதனை அடைகிறேன் ..
இந்த தளத்தின் பின்னூட்டத்தில் ..இவ்வாறு எழுதுள்ளேன் ..
எனது பிளாக்கை அப்படியே காப்பி அடித்ததற்கு நீங்கள் ஏன் என்னிடம் அனுமதி வாங்க வில்லை .,நீங்கள் செய்கிற இந்த காரியம் என்னை போன்றவர்களை மிகவும் கஷ்டப்டுத்துவதாக உள்ளது ..ஒருவர் பொருளை திருடுவது மட்டுமல்ல அவரது கருத்துகளை திருடுவதும் மிக பெரிய திருட்டு ..நண்பா ..ஏன் இப்படி செய்தாய் ?.என்னை போன்றவர்களை தொடர்ந்து எழுதாது இருக்க உங்களை போன்றவர்களே மிக முக்கிய காரணம் ...நீங்கள் உடனடியாக எனது தளத்தில் இருந்து காப்பி அடித்ததை எல்லா கட்டுரைகளும் நீக்க வேண்டும் ..அன்பாக கூறுகிறேன் ..மிக விரைவில் /குறிப்பிட்ட கால தில் /ஒரு வார காலத்திற்குள் எனது www.ayurvedamaruthuvam.blogspot.com என்ற தளத்தில் இருந்து காப்பி அடித்தை நீக்கா விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் ..எனது email முகவரி curesure4u@gmail.com

இந்த காப்பி அடித்தமைக்கு என்னை போன்ற தன்னலம் கருதாது உழைக்கும் மனிதனை செருப்பால் அடித்திருக்கலாம் ..உங்களது செயல் அருவருக்கத்தக்கது ..கண்டிக்கத்தக்கது



நான் என்ன செய்ய வேண்டும் நண்பர்களே -உதவுங்கள் ..
சைபர் க்ரைம் -பதிவு காப்பி அடிக்ககூடாது என்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திருடனை எப்படி கண்டு பிடிப்பது


எனக்கு உங்களது உதவி தேவை
1.www.tamilnaturalmedicine.blogspot.in -என்ற இந்த திருட்டு தளத்தின் கயவன் -திருடன் யார் ?
2. எப்படி கண்டுபிடிப்பது ?
3.எப்படி action -எடுப்பது ?
4. எப்படி சட்டப்படி -பதிவு காப்புரிமை படி அவரை  அணுகுவது

என்று எனக்கு உதவி செய்தால் பெரிய உதவியாக இருக்கும் .



அல்லது நான் என்ன செய்யட்டும் ..ஓரிரு கட்டுரைகள் திருடப்பட்டாலே வேதனை தருவது ..மொத்த எனது தளத்தையுமே  திருடிய இந்த நபரை என்ன செய்வது ..

Post Comment

திங்கள், ஏப்ரல் 06, 2015

ஆயுள் முழுவதும் தைராய்ட் மாத்திரை சாப்பிட தேவையில்லை

ஆறே மாதத்தில் தைராய்ட் நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஆயுர்வேத, ஆயுஷ் சிகிச்சை .

தினமும் காலையில் எழுந்து .எல்ட்றாக்சின் ,தைரோநார்ம் மாத்திரைகளை உயிருள்ளவரை போடவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவரா நீங்கள் ? இந்த மாத்திரைகள் தைராய்ட் சுரப்பை சீராக்குகிறதா அல்லது தற்காலிக சமாளிப்பு தானா ? ஏன் இந்த நாளமில்லா சுரப்பி தைராய்ட் சுரப்பை குறைவாக அல்லது அதிகமாக சுரக்கிறது ?


                வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான  பணிகளை செய்கிறதுகட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபாதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
உடல் எடை கூடுதல் /குண்டாகுதல்
உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)
உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோஉடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)
     அதிகமானசத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்    
குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு)
அதிகமானவேகமான நாடித்துடிப்பு,இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு
அதிகமான உடல் சோர்வுகளைப்பு
கைகால்நடுக்கம்பதட்டம் 
முறையற்ற மாதவிலக்கு
மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு   
குறைவான வியர்வை 
மிக அதிகமான வியர்வை 
அதிமான தூக்கம்சோர்வு
தூக்கமின்மை

மலச்சிக்கல்    
அடிக்கடி மலம் கழித்தல்அதிகமான குடலின் அசைவுத்தன்மை  
மன அழுத்தம்
பய உணர்வுகோப உணர்ச்சி
அதிகமாக முடி கொட்டுதல்முடி வறண்டு போதல்சரும வறட்சி  
அதிகமாக முடி கொட்டுதல்
அதிகமான குளிர் உணர்தல்
அதிகமான உஷ்ணம் உணர்தல்
அதிகமான உடல் சதை வலிசதை பிடிப்பு,சதை இறுக்கம்வலிகள் அதிகமாக இருத்தல்
உடல் சதை பலஹீனம்    
நினைவாற்றல் குறைதல்பாலுணர்ச்சி குறைதல்
இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல்
இரத்தத்தில் T3 அளவு அதிகமாயிருத்தல்    


                               

                மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல்,ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல்சிறுநீரகக் கற்கள்பித்தப்பைக் கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும். குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.

               
          தைராய்ட் சுரப்பியை சீராக்க கூட்டு சிகிச்சை அணுகுமுறை .     
பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிற இந்த தைராய்ட் நோய்க்கு ஆங்கில மருந்துகள் ஒரு தீர்வாக அமைவதில்லை. எல்ட்றாக்சின் ,தைரோநார்ம் மாத்திரைகள் ஒரு Supplement தவிர வேறில்லை .எவ்வளவு குறைவாக சுரக்கிறதோ எந்த குறைந்த சுரப்பிற்கு மாத்திரையே தவிர ,தைராய்ட் சுரப்பை சீராக்க பயன்படுவதில்லை என்பது தான் உண்மை .மாத்திரை நிறுத்தினால் திரும்பவும் அதே பிரச்சனைகளும் ,இரத்தத்தில் TSH அளவில் அதிகமும் உடனே வந்து சேர்க்கிறது .பின் எப்படித்தான் இதை ஒழுங்கு செய்ய முடியும் ?.தைராய்ட் நோயாளி என்ற ஆங்கில மருத்துவத்தால் அறிவிக்கபட்ட நூறு நோயாளிகளை எடுத்து கொண்டால் கிட்டத்தட்ட 80 % நோயாளிகள் தைராய்ட் மருந்துகளே தேவை இல்லாதவரக்ள் .ஆனாலும் அவர்களுக்கும் ஆயுள் முழுமைக்கும் மருந்தை சாப்பிட கட்டாயபடுத்த படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை .மிகுனும் குறையினும் நோய் செய்யும் என்பது இந்த தைராய்ட் நோய்க்கு மிக சரியாக பொருந்தும் .எனவே இயற்கையாக தைராய்டை ஒழுங்கு படுத்த(Curative apporach) வேண்டுமே தவிர அதை ஒப்பேற்றும் Conservative Management எந்த பலனும் அளிக்காது


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ,ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் தைராய்ட் நோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறை .

அறிவியல் அணுகு முறையோடு முறையாக MD(siddha)., BAMS.,BHMS மருத்துவம்  படித்த மருத்துவர்களின் துணையோடு நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கபடுகிறது .


ஆயுர்வேதத்தில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை
                ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம்ஹம்ஸபாதி கசாயம்பிருஹத் கட்பாலதி கசாயம்குக்குலுதிக்க கசாயம்காஞ்சனார குக்குலு மாத்திரை,ஷட்தர்ணம் மாத்திரைகள் .தைராய்ட் கஷாயமும் வழங்கபடுகிறது ,பஞ்ச கர்ம சிகிச்சை முறைகைளில் நஸ்ய சிகிச்சை சிறந்த சிகிச்சை அளிக்கபடுகிறது

சித்த மருத்துவத்தில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை
சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம்முட்சங்கன்தேள் கொடுக்கு இலை,சீதாபழ இலைகள்  மற்றும்  வர்ம சிகிச்சை அணுகு முறையும் சேர்ந்து கொடுக்கபடுகிறது

ஹோமியோபதியில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை         
ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம்நேட்ரம் மூர்ஸ்பான்ஜியாஅயோடம்,பிட்யூட்டரினம் , லெசித்தின்அகோனைட். பல்சேட்டிலாசைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும்.

மருந்தில்லா சிகிச்சை முறைகளில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை
மிக சிறந்த மூலிகைகளை கொண்டு ,மூலிகை எண்ணைகளை கொண்டு நஸ்ய சிகிச்சையும் ,தலை மற்றும் கழுத்துக்கு சேர்த்த தாரா சிகிச்சை முறைகள் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு செய்ய தைராய்ட் நோய் சரியாகும் .மேலும் ஹிஜாமா சிகிச்சையும் ,வர்ம சிகிச்சைகளும் ,யோக பிராணயாம சிகிச்சைகளும் தைராய்ட் நோயை ஆங்கில மருந்தில் இருந்து படி படியாக வெளியேறி முற்றிலும் குணம் அடைய உதவும் .     
         
தைராய்ட் கட்டிகளுக்கும் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கபடுகிறது .

 தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத சித்த ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு மேலும் விவரங்களுக்கு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையும் ,4,  துரை சாமி நகர் முதல் தெரு ( Near KFC), கீழ் கட்டளை ,சென்னை 117.  மருத்துவ ஆலோசனை மற்றும் முன் பதிவுக்கு  90 4333 6444. மற்றும்  90 4333 6000
அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை ,மருத்துவ ஆலோசனை பெற முன் பதிவுக்கு கடையநல்லூர்  90 4222 5333, திருநெல்வேலி 90 4222 5999






Post Comment