ஞாயிறு, அக்டோபர் 24, 2010

ஆயுர்வேத மருந்துகளின் பெயர்கள் & பயன்பாடுகள்

ஆயுர்வேத மருந்துகளின் பெயர்கள் அதனின் பயன்பாடுகள் பற்றி அறிய வேண்டுமா ?
ஆசவங்கள்
அரிஷ்டங்கள்
லேஹியங்கள்
நெய்யில் செய்த மருந்துகள்
வெளியே தேய்க்கும் தைலங்கள்
உள்ளே சாப்பிடும் எண்ணைகள்
கஷாயங்கள்
சூரணங்கள்
மாத்திரைகள் ,குளிகைகள் ,
பல நூறு வகையான ஆயுர்வேத மருந்துகளை பற்றி எழுதுள்ளேன் ..ஆனால் அனைத்தும் ஆங்கிலத்திலே தான் ..புரியவில்லை என்றால் கேளுங்கள் ..
 என்ற நமது போரத்தில் இணைந்து படியுங்கள் ..எழுதுங்கள் ..மருத்துவம் பற்றி நண்பர்களுக்கு சொல்லுங்கள் ..

Post Comment

சனி, அக்டோபர் 23, 2010

சரகர் சொன்ன ஆஸ்துமாவிற்கான பத்து சூப்பர் மூலிகைகள் -படங்களுடன்

சுவாசஹர மூலிகைகள் (சுவாசஹர மகா கஷாயம்)
                பூலாங்கிழக்குபுஷ்கர மூலம்புளி வஞ்சிஏலரிசிபெருங்காயம்அகில்துளசி,கீழாநெல்லிகீரைப் பாலைகாட்டுக் கோரைக் கிழங்கு ஆகிய 10 மூலிகைகள்.1.பூலான் கிழங்கு -SATI -HEDYCHIUM SPICATUM


2.புஷ்கர மூலம் -PUSHAKARA MOOLA-INULA RACEMOSA
3.புளிவஞ்சி -amlavethas-rheum emodi /garcinia pedunculata4.ஏலக்காய்-ELA-ELETARIA CARDAMOM

5.காயம் -HINGU-FERULA FOETIDA

6.அகில் -AGARU-AQUILARAIA

7.துளசி -tulasi -ocimum sanctum

8.கீழா நெல்லி -buamyamlaki-phyllanthus niruri 


9.கீரை பாலை -jeevanthi -leptadenia reticulata

10.-காட்டுக் கோரைக் கிழங்கு-chanda-
...

Post Comment

வியாழன், அக்டோபர் 21, 2010

வெற்றியாளர் யார் ?..ஆஸ்துமா விற்கு சிறந்த மூலிகை ..

வெற்றியாளர் யார் ?..ஆஸ்துமா விற்கு சிறந்த மூலிகை ..

அதற்க்கு முன் நான் ஒரு ஆயுர்வேத forum -ஆரம்பித்துள்ளேன் ..அதற்க்கான லிங்க் ..http://ayurvedamaruthuvam.forumta.net-
இதைதான் நான் உங்களுக்காக என்று பிளாக்கில் கருத்துக்களை பரிமாற்ற ஒரு நல்ல விஷயம் என்று எழுதினேன் ..
இந்த ஆயுர்வேத forum -இல் இணையுங்கள் ..உங்களது பதிவை போடுங்கள் ...கருத்துக்களை பரிமாறுங்கள்


நண்பர்களே ..நீங்கள் கொடுத்துள்ள பதில்கள் அர்த்தமுள்ளவை ..நான் கொடுத்துள்ள அனைத்து மூலிகைகளும் ஆஸ்துமாவிற்கு உரிய ..மூலிகை கள் தான் .என்றாலும் கண்டங்கத்தரி மூலிகை ஆஸ்துமாவிற்கு மூலிகை நல்லது என்று எல்லாராலும் நம்பப்படும் மூலிகை ...அதனை விட சிறந்தது ..சிறந்த மூச்சு குழல் விரிவாக்கி கனகம் அதாவது தமிழில் தங்கம் என்று புனை பெயருடன் அழைக்கபடும் ஊமத்தை தான் மிக சிறந்த ஆஸ்த்மாவிர்க்கு நல்ல மூலிகை ..கண்டங்கத்தரி ..சளி ,காசம் இவற்றிற்கு சிறந்து ..ஆஸ்துமாவை குணமாக்குவதில் ஊமைத்தைக்கு பின் தான் .


ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் கனகாசவம் என்னும் மருந்து கனகம் என்னும் ஊமத்தை யிலிருந்து தயாரிக்கபடுகிறது ..இந்த மருந்து ஆஸ்துமா விற்கு சிறந்த மருந்து (இந்த மருந்தை இருபத்தைந்து மிலியுடன் +சம அளவு வெந்நீர் கலந்து காலை மாலை ஆகாரத்திற்கு பின் சாப்பிட உடன் பலன் தரும் -தொடர்ந்து சாப்பிட நோயிலிருந்து விடுபட வைக்கும் )

வெற்றியாளர் -தமிழன் என்ற நண்பர் தான் ..(நண்பரே ..நீங்கள் என்னிடம் மருத்துவ ஆலோசனை கேட்கலாம் ..அல்லது உங்களது முகவரி மெயிலில் அனுப்பினால் பொதுவாக நாம் சாப்பிடும் -அஸ்வகந்தா லேஹியம் -ஐந்நூறு கிராம் , ச்யவன ப்ராஸ லேஹியம் .ஐந்நூறு கிராம்,ஓரிதழ் தாமரை சூரணம் நூறு கிராம் அனுப்பித்தர எண்ணுகிறேன் )..

மற்ற நண்பர்கள் -சித்ரா ,கக்கு மாணிக்கம் ஜெகதீஷ் ,ஜெரில்,பால முருகன் ,மங்கை தமிழர்களின் சிந்தனை களம் அருள் ,மாரிச்செல்வம் ,ஸ்ரீதர் ,மச்ச வல்லபன் ,அனைவர்களுக்கும் பாராட்டும் ,நன்றியும்..கண்டங்கத்தரி என்றும் எழுதிய கக்கு மாணிக்கம் ஜெகதீஷ் ,ஜெரில்,பால முருகன் ,மாரிச்செல்வம் ,ஸ்ரீதர் ,மச்ச வல்லபன் ஆகியோர் விரும்பி கேட்டால் நல்ல ஆரோக்கிய மருந்துகளை இலவசமாக அனுப்பி தருகிறேன் 

ஊமைத்தைக்கான ..ரெபரன்ஸ் ..கீழே கொடுத்துள்ளேன் ...

http://ayurvedamaruthuvam.forumta.net/-ayurvedic-herbals-f19/-t648.htm-ஆஸ்தமா குணமாக -கனகாசவம் உதவும் 
http://en.wikipedia.org/wiki/Datura_metelDatura is known for its anticholinergic and deliriant properties: D. metel is one of the 50 fundamental herbs used in traditional Chinese medicine, where it is called yáng jīn huā (). The ingestion of D.metel in any form is dangerous and should be treated with extreme caution. The dry flower, particularly the violet coloured, if rolled and used like cigar, will help to relieve the asthma or wheezing like symptoms[citation needed].

Indications
It is applied to swellings, tumors and rheumatic pains. Its decoction is used for eye diseases. The flowers are used in asthma.

http://www.bpi.da.gov.ph/Publications/mp/pdf/t/talong-punai.pdfDatura in the cure of asthma is becoming very popular. Cigarettes made of it are now sold in the market. Regarding asthma cigarettes, Garcia reports that smoking has been shown to produce relief in attacks of bronchial asthma, in some cases complete relief and in others partial, but in all cases the patients claim to derive comfort.

http://www.sandmountainherbs.com/sadadhatura.htmlDATURA METEL. Used in India like stramonium in treatment of asthma, whooping cough and bronchitis. Poultice of leaves used for rheumatic swellings of the joints, lumbago, painful tumours.

http://database.prota.org/PROTAhtml/Datura%20metel_En.htmDatura metel and Datura stramonium L. have largely similar medicinal uses throughout the world. In tropical Africa as well as in Asia the most widely documented use of Datura metel is for relieving asthma, cough, tuberculosis and bronchitis by smoking the dried leaves, roots or flowers as a cigarette or in a pipe. These ‘asthma cigarettes’ have been shown to be very effective in some cases, but in other cases they had little or no எபிபிச்ட்

http://www.bitterrootrestoration.com/perennials-plants/datura-metel.htmlDatura metel is mainly used in traditional Chinese medicine as a treatment for asthma, chronic bronchitis, chronic pain, seizures, and coma. It has also been used for its anesthetic, or pain-killing, properties.

நல்லவைகளை பாராட்டுங்கள் ..நன்றி .

Post Comment

செவ்வாய், அக்டோபர் 19, 2010

உங்களுக்கு ஒரு டெஸ்ட் ....(ஆஸ்த்மா மூலிகை பற்றி )

கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளில் -எந்த மூலிகை ஆஸ்த்மாவுக்கு மிக மிக நன்றாக வேலை செய்யும் ?..

கண்டு பிடித்தவர்கள் -பின்னூட்டத்தில் எழுதலாம் ..சரியாக சொல்பர்களுக்கு -அவர்களுடைய மருத்துவ ஆலோசனைக்கான பதினைந்து நாள் மருந்தை -இலவசமாக கூரியரில் அனுப்பித்தர முடிவு செய்துள்ளேன் ..(கால அவகாசம் -வியாழன் இரவு பத்து மணி வரை -21/10/2010-)..அதிகமான சரியான பதிலை சொல்லியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யபடுவர் 
ஊமத்தை   


Post Comment

திங்கள், அக்டோபர் 18, 2010

ஆஸ்த்மா -இளைப்புக்கு ஆயுர்வேத மருந்துகள்

தசமூலாலதி கியாழம் :- தசமூலத்தை கியாழம் வைத்து அதில் ஆமணக்குவேர் சூரணத்தை கலந்து சாப்பிட்டால் சுவாசம், காசம் பாரிசூலை இவைகள் நீங்கும்.

சுண்டியாதி கியாழம் :- சுக்கு, கண்டுபாரங்கி இவைகளைக்கியாழம் வைத்து சாப்பிட்டால் சுவாசரோகம் தீரும்.

திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷ, சீந்தில்கொடி, சுக்கு இவைகளைக் கியாழம் வைத்து அதில் திப்பிலிசூரணத்தை கலந்து சாப்பிட்டால் சுவாசம், காசம், சூலை, அக்கினிமந்தம், இருமல் இவைகள் நிவர்த்தியாகும்.

குளுத்தாதி கியாழம் :- கருங்கொள்ளு, சுக்கு, முள்ளங்கத்த்ரி வேர், ஆடாதோடை, ஆமணக்குவேர் இவைகளைக் கியாழம் வைத்து சாப்பிட்டால் சுவாசகாசங்கள் நிவர்த்தியாகும்.

தேவதார்வியாதி கியாழம் :- தேவதாரு, வசம்பு, கண்டங்கத்திரி, சுக்கு, காயபலம், புஷ்க்கரமூலம் இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து சாப்பிட்டால் சுவாசம், காசம் இவைகள் தீரும்.

சிம்ஹியாதி கியாழம் :- கண்டங்கத்திரி, மஞ்சள், ஆடாதோடை, சீந்தில்கொடி, சுக்கு, திப்பிலி, கண்டுபாரங்கி, கோரைக் கிழங்கு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் திப்பிலி சூரணம், மிளகுசூரணம் கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

வாசாதி கியாழம் :- ஆடாதோடை, மஞ்சள், திப்பிலி, சீந்தில் கொடி, கண்டுபாரங்கி, கோரைக்கிழங்கு, சுக்கு, கண்டங்கத்திரி இவைகளை கியாழம் விட்டு அதில் திப்பிலி, மிளகு இவைகளின் சூரணங்கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

மரீச்யாதி கியாழம் :- மிளகு, கரிசாலை, சுக்கு, கருப்பு உப்பி லாங்கொடி, போயாவரை, ஆடாதோடை, சாரணைவேர், கண்டு பாரங்கி, இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து அதில் திப்பிலி சூரணங்கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள், க்ஷயங்கள் இவைகள் நீங்கும்.

சூர்யாவர்த்தம் :- பாதரசம் 1 பாகம், கெந்தி 1/2 பாகம், இவைகளை ஒரு ஜாமம் அரைத்து இவைகளுக்கு சமம் தாம்பிரபற்பம் கலந்து உருண்டை செய்து கோரைக்கிழங்கு அரைத்து மேலுக்கு லேபனஞ்செய்து வாலுகாயந்திரத்தில் வைத்து ஒரு நாள் எரித்து  ஆறிய பிறகு எடுத்து சுத்திசெய்த கெந்தி, மிளகுச்சூரணம் இவைக
ளைக் கலந்து நெய் அனுபானத்துடன் சாப்பிட்டால் கபசுவாசங்கள் தீரும்.

அமிருதார்ணவ ரசம் :- சுத்தி செய்த பாதரசம், கெந்தி, லோஹ பற்பம், பொரித்தவெங்காரம், சிற்றரத்தை, வாய்விளக்கம், திரிபலை தேவதாரு, திரிகடுகு, சீந்தில்கொடி, தாமரைத்தண்டு, நாபி இவைக ளை சமஎடையாகச் சூரணித்து 2 குன்றி எடை தேனில் கொடுத்தால் காசங்கள், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

சுவாசகுடார ரசம் :- பதரசம், கெந்தி, வசநாபி, வெங்காரம், மனோசிலை இவைகள் சுத்திசெய்தது வகைக்கு 1/4 பலம் மிளகு, 2 பலம் திரிகடுகு, 1 1/2 பலம் இவைகள் யாவையும் சூரணித்து கல்வத்திலிட்டு ஒரு ஜாமம் அரைத்து வைத்துக்கொள்க. இதை  குன்றி எடை முதல் இரண்டு குன்றி எடை வரையிலும் சாப்பிட்டால்
ஐந்து வித சுவாசங்கள், காசங்கள், க்ஷயங்கள் இவைகள் சூரியனைக் கண்ட இருளைப்போல் நீங்கும்.

சுவாசகுடார ரசம் :
- பதரசம், கெந்தி, வசநாபி, வெங்காரம், மனோசிலை இவைகள் சுத்திசெய்தது வகைக்கு தோலா, மிளகு 8 தோலா, திரிகடுகு 6 தோலா, இவை யாவையும் கல்வத்திலிட்டு அரைத்து காசிக்குப்பியில் வைத்துக்கொள்க.காலை மாலை குன்றி எடை வெற்றிலைச் சாற்றினால் கொடுத்தால் சுவாசகாசம்
அக்கினிமந்தம், வாதசிலேஷ்மரோகம், சந்நிபாதம், மூர்ச்சை, அபஸ்மாரம் இவைகள் யாவும் குணமாகும்.

சுவாசகுடார லேகியம் :- முள்ளங்கத்திரி ரசம் 256 பலம் கரிசனாங்கண்ணி, உத்தாமணியிலை, ஆடாதோடை, கண்டங்கத்திரி தூதுவளை, சதுரக்கள்ளி, இலைக்கள்ளி, கொடிக்கள்ளி, இவைகளின் ரசம் வகைக்குப் 16 பலம், இவைகளை பாண்டத்தில் போட்டு 102-பலம், வெல்லத்தை கலக்கி வடிகட்டி, பாகு பதமாக காய்ச்சி அதில் கடுக்காய்ப்பூ, திரிகடுகு, செவ்வியம், மோடி,சித்திரமூலம், திரிகடுகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை. இலவங்க பத்திரி, நாககேசரம், தாளிசப்பத்திரி, கிராம்பு, இந்துப்பு, வசம்பு, ஓமம், சீரகம், கண்டுபாரங்கி இவைகள் வகைக்கு 3-பலம், மைப்போல் சூரணித்து வஸ்திகாரஞ்செய்து அதில் கலந்து தேன் 16-பலஞ்சேர்த்து இலேகியபதமாகக்கிளறி இறக்கிவைத்துக் கொள்ளவும். இதை சாப்பிட்டால் காசம், சுவாசம், வாந்தி, விக்கல், பாண்டு, உதிரம், பகந்தரம், பீநசம், சுரம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

பஞ்சபத்திர சார லேகியம் :- ஆடாதோடை கரசனாங்கண்ணி, நொச்சி, அழவனை, கண்டங்கத்திரி, இந்ததினுசுகளின் இலை இரசத்தை பிரத்தியோகமாக பிழிஞ்சி அந்த ரசங்கள் சமஎடையாக ஒன்றாய்க் கலந்து அதில் திப்பிலி சூரணத்தையும் சர்க்கரையையும் கலந்து லேகியபாகமாக கிளறி நெய் தேன்கலந்து சாப்பிட்டால் தீவிரமான சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

களிங்காதி லேகியம் :- வெட்பாலை பழரசம் 16-பலம், வெல்லம் 10-பலஞ்சேர்த்து காய்ச்சி பாகுபதம் வரும்போது, அதில் சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு 1/4-பலம் பிரமாணஞ் சூரணித்து கலந்து 4-பலம் தேன் கலந்து கிளறினால் லேகியபதமாகும். இதை காலையில் சுண்டக்காயளவு சாப்பிட்டு வந்தால், சுவாசங்கள், காசங்கள், பாண்டுரோகம், குன்மம், உதிரரோகம், அஷ்டீலவாதம், சூலை, ஜீரணசுரம், வீக்கம்,
காமாலை இவைகள் நாசமாகும்.

இலகுவியாக்கிறாதி லேகியம் :- கண்டங்கத்திரிவேர் 100-பலம், கடுக்காய் 100-பலம், 800-பலம் ஜலத்தில்க்கொட்டி, நாலில் ஒரு பாகம் மீறும்படியாக கியாழம் சுண்டக்காய்ச்சி, அதை வடிகட்டி
கடுக்காய் விரையை எடுத்துவிட்டு அந்தகியாழத்திலேயே போட்டு 100-பலம் வெல்லத்தை கலந்து காய்ச்சி பாகுபதம் வரும்போது அதில் அதிமதுரம், இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, ஏலக்காய் நாசகேசரம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் வகைக்கு 3-பலம் விகிதஞ் சூரணித்து போட்டு, தேன் 6-பலங்கள் சேர்த்து கிளறி
னால் லேகியம் தயாராகும். இதை சாப்பிட்டால், சுவாசங்கள், மார்பு நோய், அருசி, காசங்கள், சிரோரோகம், ஹிருத்ரோகம், இவைகள் குணமாகும்.

க்ஷ£த்திராதி லேகியம் :- கண்டங்கத்திரி 100-பலம், இவை களை 256-பலஞ் ஜலத்தில் கொட்டி, நாலிலொன்றாகக் கியாழஞ் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அதில் 100-பலம் வெல்லத்தை கலந்து, அதில் இருக்குங் கடுக்காய் விரையை யெடுத்து விட்டு அதை மறுபடியுங் கியாழத்திலேயே அரைத்து போட்டு லேகியபதமாக
சமைத்து ஆறிய பிறகு தேன் வார்த்து திரிகடுகு2 பலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் நாககேசரம் இவைகள் வகைகு 1/2 பலம் சூரணித்து அத்துடன் கலந்து கிளறி னால் லேகியம் தயாராகும். இதை கொடுத்தால் கபவிகாரம், சுவாசங்கள், கோழை, பஞ்சகாசங்கள், விக்கல், ஹிருதயரோகங்கள்
அபஸ்மாரம் இவைகள் நீங்கும். அக்கினிதீபனம் உண்டாகும்.

கண்டகாரியாதிலேகியம் :- கண்டங்கத்திரி 100 பலம், 256 பலஞ்சலத்தில் கொட்டி நான்கிலொன்றாய் கியாழம் சுண்டக்காய்ச்சி அதில் சீந்தில்கொடி, செவ்வியம், சித்திரமூலம், கோரைக்கிழங்கு, கடுக்காய்ப்பு, சுக்கு, திப்பிலி, மிளகு, பூனைக்காஞ்சொரி கண்டுபாரங்கி, சிற்றரத்தை, கிச்சிலிக்கிழங்கு வைகைக்கு
1 பலம் வீதம் சூரணித்துப் போட்டு சர்க்கரை 20 பலம், நெய் எண்ணெய் இவைகள் தனித்தனி பலம் 8, விகிதம் சேர்த்து லேகிய பதமாக கிளறி ஆறிய பிறகு தேன் 8 பலம், மூங்கிலுப்பு சூரணம் 4 பலம், திப்பிலி சூரணம் 4 பலம், இவைகள் யாவையும் ஒன்றாக  கலந்து நெய்யில் ஊறிய பாண்டத்தில் லேகியத்தை வைத்து தானிய புடமிட வேண்டியது. பிறகு அந்த லேகியத்தை கடுக்காய் பிரமாணம் கொடுதால் காசங்கள், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

வாசாவ லேகியம் :- ஆடாதோடை 100 பலம் 800 பலம் சலத்தில் கொட்டி நான்கிலொன்றாய் கியாழம் விட்டு அதில் கடுக்காய் சூரணம் , கற்கண்டு இவைகள் 64 பலம் கொட்டி லேகியபதமாக கிளறி ஆறிய பிறகு மூங்கிலுப்பு சூரணம் 2 பலம்,  திப்பிலி 1/2 பலம், சாதுர் சாதம், வகைக்கு 1 பலம் இவைகளை சூரணித்து தேன் 8 பலம், போட்டு கலக்கி தானியபுடமிட வேண்டியது. பிறகு கொடுத்தால் பீநசரோகம், இருதயரோகம், தேகமெலிவு, இரத்தவாந்தி, ரத்தபித்தம், கபம், க்ஷயரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.

திராக்ஷ¡தி லேகியம் :- கடுக்காய், காரைக்கிழங்கு, பூனைக்காஞ்சொரி, இவைகளை சூரணித்து நெய்,தேன் கலந்து சாப்பிட்டால் கொடூரமான சுவாசரோகங்கள் நிவர்த்தியாகும்.

ஹரீதிராத்தியவ லேகியம் :- மஞ்சள், மிளகு, திரா¨க்ஷ, திப்பிலி, சிற்றரத்தை, சுக்கு இவைகளை சூரணித்து அதில் வெல்லம் கலந்து கொடுத்தால் பிராணத்தை சங்கரிக்கும் சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

கண்டுபாரங்கி லேகியம் :- கண்டுபாரங்கி, கடுக்காய், கடுகு ரோகணி, அதிமதூரம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் சமஎடையாகச் சூரணித்து தேன் நெய் கலந்து கொடுத்தால் சுவாசரோகங்கள் நீங்கும்.

குடாத்தியவ லேகியம் :- வெல்லம், மாதுளம் பழத்தோல். திரா¨க்ஷ, திப்பிலி, சுக்கு இவைகளை சமஎடையாகச் சூரணித்து கொடிமாதுளம்பழரசம், தேன் கலந்து கொடுத்தால் சுவாசங்கள் நீங்கும்.

விபீதக லேகியம் :- தான்றிக்காய்த் தோ¨லா ஆட்டி மூத்திரத்தில் வேகவைத்து உலர்த்திச் சூரணித்து திரிகடிபிரமாணம் தேனுடன் கலந்து சாப்பிட்டுவர சுவாசகாசங்கள் நீங்கும்.

சுருங்கியாதி சூரணம் :- கடுக்காய்ப்பூ, சுக்கு, திப்பிலி, மிளகு கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கண்டங்கத்திரி, கண்டு பாரங்கி, புஷ்க்கரமூலம், ஜடாமாஞ்சி, இந்துப்பு, சவ்வர்ச்சலவணம்,
பிடாலவணம், காசலவணம், பாதிரிலவணம் இவைகளை சமஎடையாகச் சூரணித்து வெந்நீரில் சாப்பிட்டால் விக்கல், சுவாசங்கள், ஊர்த்துவவாய்வு, காசங்கள், அருசி, இவைகள் நீங்கும்.

சட்டியாதி சூரணம் :- கிச்சிலிக்கிழங்கு,கண்டுபாரங்கி, வசம்பு, சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், பாதிரிலவணம், புஷ்க்கர மூலம், கடுக்காய்ப்பூ, இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன் கலந்து சாப்பிட்டால் சுவாசகாசங்கள் நீங்கும்.

பாரங்கியாதிசூரணம் :- கண்டுபாரங்கி, சுக்கு இவைகளைச்சூரணித்து இஞ்சி ரசத்தில் சாப்பிட்டால் சுவாசரோகம் நீங்கும்.

விடங்காதி சூரணம் :- வாய்விளங்கம், திப்பிலி, ஏலக்காய், இலவங்கப்பட்டை இவைகள் வகைக்கு 1/4-பலம், மிளகு 1/2-பலம், சுக்கு 4-பலம் இவைகளைச் சூரணித்து சூரணத்திற்கு சமம் சர்க்கரைக் கலந்து 1/8-பலம் விகிதம் சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள், சுரம், பிலீஹம், பாண்டு இவைகள் நீங்கும்.

தாடிம்பாதி சூரணம் :- மாதுளம்பழத்தோல், சுக்கு, பெருங் காயம், திப்பிலி, இந்துப்பு இவைகளைச் சூரணித்து கொன்னைப்புளிரசத்துடன் கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள், ஹிருத்ரோகம் இவைகள் நீங்கும்.

கூழ்மாண்டசிபா சூரணம் :- கலியாண பூசனிவேர் சூரணத்தை வெந்நீரில் சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள் இவைகள் நீங்கும்.

சுண்டியாதி சூரணம் :- சுக்கு 6-பாகம், திப்பிலி 5-பாகம்,மிளகு 4-பாகம், அதிமதுரம் 3-பாகம், லவங்கப்பட்டை 2-
பாகம், ஏலக்காய் 1-பாகம், இவைகள் யாவையுஞ் சூரணித்து இந்தச் சூரணத்திற்கு சமஎடை சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அக்கினிமந்தம், சுவாசம், காசம், கண்டரோகம், இருதயரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.

மர்க்கடீ சூரணம் :- பூனைக்காஞ்சொரி விரைச் சூரணத்தை தேன் நெய் இவைகளுடன் கொடுத்தால் சுவாசரோகங்கள் நிவர்த்தியாகும்.

பாரதாதி மாத்திரைகள் :- பாதரசம் கெந்தி, நாகபற்பம்,தாம்பிரபற்பம், சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், சர்ஜகாரம் இவைகள் சமஎடை சூரணித்து வெற்றிலை சாற்றினால் 10 நாள் அரைத்து மிளகு அளவு மாத்திரை செய்து சாப்பிட்டால் மந்தாக்கினி கபரோகம், சுவாசங்கள் இவைகள் நீங்கும்.

இலவங்காதி மாத்திரைகள் :- இலவங்கம், மிளகு, திரிபலை இவைகளை சூரணித்து வேலன் சக்கை கியாழத்தினால் அரைத்து மாத்திரை செய்து சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

வேறு விதம் :- இலவங்கம், சுக்கு, திப்பிலி, மிளகு, நாகபற் பம்,கரிசனாங்கண்ணி, கண்டங்கத்திரி, தானிக்காய், இவைகளை சமஎடையாகச் சூரணித்து கற்றாழை ரசத்தில் அரைத்து மாத்திரை செய்து கொடுத்தால், சுவாசரோகங்கள் நிவர்த்தியாகும்.

திரிகடுகு மாத்திரைகள் :- சுக்கு, திப்பிலி, மிளகு, பொரித்த வெங்காரம், இவைகளை சூரணித்து வெற்றிலை ரசத்தில் அரைத்து மாத்திரை செய்து சாப்பிட்டால் சுவாசங்கள் நீங்கும்.

சுவாச குடோரிமாத்திரை :- வெள்ளெருக்கம் பூவுடன் சமனெடை மிளகு சேர்த்து கல்வத்திலிட்டு அரைத்து மெழுகு பதத்தில் குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இரு வேளை ஆடாதோடை சுரசம், இஞ்சி சுரசம், இவைகளில் கொடுத்து வர
சுவாசகாசம், முறைசுரம் முதையன குணமாகும்.

அர்க்காதிக்கிருதம் :- எருக்கப்பூ சுமார் 15 அல்லது 20 பூக்கள், இலவங்கம், இலவங்கப்பத்திரி, திப்பிலி வகைக்கு வராகனெடை 1/2 இவைகளைப் பொடித்து பால்விட்டு அரைத்து கற்கமாக்கி 5 பலம் பசு நெய்யுடன் சேர்த்து பதமுடன் காய்ச்சி கிருத பதத்தில் வடித்து வைத்து கொண்டு வேளைக்கு 1/2 தோலா எடை வீதம்
தினம் இரு வேளையாய் அருந்திவர சுவாசகாசம், நீர்பினசம் முதலியன குணமாகும்.

கஸ்தூரி மாத்திரை :- கஸ்தூரி வராகனெடை-1, சுக்கு வராக னெடை-4, சாதிக்காய் வராகனெடை-2, கோஷ்டம் வராக னெடை-2, குங்குமப்பூ வராகனெடை-3, இலவங்கம் வராக னெடை-2, அக்ராகாரம் வராகனெடை-2, திப்பிலி வராகனெடை-2, இவைகளை பொடித்து முறைப்படி கல்வத்திலிட்டு முலைப்பால் அல்லது இலவங்கக் கியாழமிட்டு ஒருஜாமம் அரைத்து சிறு குன்றியளவு மாத்திரைகளாய்ச் செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேன் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவர சுவாசகாசம், இருமல், கபக்கட்டு, நீர்பீனசம், கபசுரம் முதலியன குணமாகும். சிறுவர்கட்கு இம்மாத்திரையில் 1/4 அல்லது 1/2 பாகமும் குழந்தைகட்கு ஆறில் ஒருபாகமும் தாய்ப்பாலில் உரைத்து கொடுத்துவர சுரம், சன்னி, கபக்கட்டு மாந்தம், இசிவு முதலியன குணமாகும்.

தாளக மாத்திரை :- கற்சுண்ணாம்பினிடையே வைத்து பனங்கள் விட்டுத் தாளித்து மூன்றுமுறை சுத்திசெய்த தாளகம் ஒரு தோலா எடைக்கு எடுத்து அதை ஓர் மண்ணோட்டில் வைத்து அடுப்பிலேற்றி சிறுதீயாக எரித்து முலைப்பால், இஞ்சிச்சாறு, தும்பையிலைச்சாறு ஆகிய இவைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி முறையே ஒவ்வொரு மணிநேரம் சுருக்குக் கொடுத்து இத்துடன் மொட்டு நீக்கிய கிராம்பு தோலா-1, உயர்ந்த பால்பெருங்காயம் தோலா-1 சேர்த்து கல்வத்திலிட்டு இஞ்சிச்சாறு விட்டு ஒரு ஜாமம் நன்கு அரைத்து மெழுகுபதத்தில் சிறுபயறு பிரமாணம் மாத்திரை கல்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்க.

இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இருவேளை தாய்ப்பால் அல்லது கம்மாறு வெற்றிலைச்சாறு இவைகளில் அனுபானஞ்செய்து குழந்தைகட்கு புகட்டிவர இருமல், கபகட்டு, கபமாந்
தம் முதலியன குணமாகும். பெரியவர்கட்கு வேளைக்கு 2-முதல் 4-மாத்திரைகள் வீதம் தினம் இருவேளை கம்மாறு வெற்றிலையில் வைத்து மடித்து மென்று தின்னும்படிச் செய்யலாம். இதனால் இருமல், ஈளை, சுவாசகாசம் முதலியன குணமாகும்.

திரிலோக சூடாமணிமாத்திரை :- சுத்திசெய்த லிங்கம், தாளகம், மனோசிலை, நாபி வகைக்கு கழஞ்சி-1, சுக்கு, மிளகு, திப்பிலி, பொரித்த வெங்காரம் வகைக்குப் பலம்-2, இவைகளை பொடித்து கல்வத்திலிட்டு இஞ்சிச்சாறுவிட்டு நான்கு ஜாமம் நன்கு அரைத்து மெழுகுபத்தில் குன்றியளவு மாத்திரைகளாய்ச் செய்து நிழலிலுலர்த்தி  வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இருவேளை இஞ்சி சுரசம், ஆடாதோடை சுரசம், துளசி சுரசம், சிற்றரத்தைக் குடிநீர் முதலிய அனுபானங்களில் ஏதேனும் ஒன்றில் கொடுத்துவர சுவாசம், காசம், ஈளை, கபக்கட்டு, கபசுரம் முறை சுரம் முதலியன குணமாகும்.

திப்பிலி ரசாயணம் :- அரிசி திப்பிலி பலம் 10, மிளகு பலம் 5  சுக்கு பலம் 5, சீரகம் பலம் 2, கருஞ்சீரகம் பலம் 2, ஓமம் பலம் 2, சிற்றரத்தை பலம் 2, சித்திரமூலவேர்ப்பட்டை பலம் 1, தாளிசபத்திரி
பலம்1, இலவங்கப்பத்திரி பலம் 1, இலவங்கப்பட்டை பலம் 1,  இலவங்கம் பலம் 1, கடுக்காய்த்தோல் பலம் 1, நெல்லிவற்றல் பலம்1, ஏலம் பலம் 1, தான்றிக்காய்த்தோல் பலம்1, இவைகளை இளவறுப்பாய் வறுத்துடித்து சூரணித்து சமன் சர்க்கரை சேர்த்து இதில் வேளைக்கு வெருகடிப்பிரமாணம் தினம் இரு வேளையாக அருந்தி வர
இருமல், ஈளை, சுவாசம், காசம், முதலிய கபநோய்கள் யாவும் குணமாகும்.

திப்பிலியாதிச்சூரணம் :- சிறுதிப்பிலி பலம் 2, சிறு நெரிஞ்சில் பலம் 2, சுக்கு பலம் 2, கண்டங்கத்திரிவிதை பலம் 2, அதிம தூரம் பலம் 2, அதிமதூரப்பால் பலம் 2, சிற்றரத்தை பலம் 2, அக்ராகாரம் பலம் 2, ஊமத்தம் விரை தோலா 1/2, அபினி தோலா 1/2. ஊமத்தம்விதையை எலுமிச்சம்பழசாற்றில் மூன்று நாள் ஊற வைத்து உலர்த்திவைத்துக்கொள்ளவும். பிறகு இத்துடன் அபினி  நீங்காத மற்ற சரக்குடன் சேர்த்து இடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து கல்வத்திலிட்டு அபினியை சிறிது வெந்நீரில் கரைத்து சூரணித்து தெளித்து பிசறி ஒரு ஜாமம் நன்கு கலக்க அரைத்து உலர்த்தி பத்திரப்படுத்தவும். இதில் வேளைக்கு 5 முதல் 10 குன்றி எடை வீதம் தினம் இரு வேளை தேனில் கொடுத்தால் இருமல், சுவாசகாசம் முதலியன நீங்கு.

பஞ்சாரக்கிருதம் :- ஆடாதோடை, சீந்தில்கொடி, கரிசனாங்கண்ணி, போயாவரை, கண்டங்கத்திரி இவைகளின் ரசங்கள் 2, பாகம், நெய் 1 பாகம், இவைகளுக்கு சமமாக பால்கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி அதில் கண்டுபாரங்கி, வாய்விளக்கம், திரிபலை, சித்தரத்தை, திரிகடுகு, யவக்ஷ¡ரம், கடுக்காய்ப்பூ, இவைகளின் சூரணத்தை நெய்யிற்கு எட்டில் ஒரு பாகம் கலக்கி கொடுத்தால் சுவாசங்கள் க்ஷயங்கள் ரத்தபித்தம், ஹிருத்ரோகம், விஷசுரம், பஞ்சகாசங்கள் இவைகள் நீங்கும்.

பாரங்கீகுட ரசாயணம் :- கண்டுபாரங்கி, தசமூலங்கள்,கடுக்காய் இவைகள் வகைக்கு 100 பலம், 400 பலம் ஜலத்தில் போட்டு நாலாவது பாகம் மீறும் படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அதில் 100 பலம் வெல்லம் விரையை எடுத்து கடுக்காயைப்போட்டு மந்தாக்கினியால் லேகியபாகமாக சமைத்து அதில் திப்பிலி, மிளகு, சுக்கு இலவங்கப்பத்திரி , இலவங்கப்பட்டை, ஏலக்காய், இவைகள் வகைக்கு 1 பலம், யவக்ஷ¡ரம் 1/2 பலம், இவைகளின் சூரணமும் தேன் 6 பலமும் விட்டு கலக்கி வைத்துக்கொள்ளவும். வேளைக்கு ஒரு கடுக்காய் அளவு லேகியம் சாப்பிட்டால், சுவாசங்கள் ஐந்துவித காசங்கள் மூலவியாதி, அரோசகம், குன்மம், சூலை,க்ஷயம் இவைகள் நீங்கும். அக்கினி தீபனம்-பலம்-மேனி இவைகளையுண்டாக்கும்.

சுவாசரோகத்திற்கு பத்தியங்கள் :- பேதியாகும்படி செய்யல், வியர்வை வாங்கல், புகை குடித்தல், வாந்திசெய்தல் பகல் நித்திரை 60-நாள் பயிராகும் பழைய சிகப்பு அரிசி, கோதுமை, யவதானியம், முயல், மயில், காடை இவைகளின் மாமிசங்கள், காட்டு மிருகங்கள்,பக்ஷ¢கள் இவைகளின் மாமிசங்கள், பழைய நெய், ஆட்டுநெய் பால், தேன், புடலங்காய், கத்திரிக்காய், வெள்ளைப்பூண்டு, கோவைக்காய், எலுமிச்சன், திரா¨க்ஷ, ஏலக்காய், புஷ்க்கரமூலம், வெந்நீர், திரி கடுகு, கோமூத்திரம், இவைகள் சுவாசரோகத்திற்கு பத்தியங்க
ளென்று அறியவேண்டியது.

அபத்தியங்கள் :- ரத்தம் வடிதல், கிழக்கு காற்று, வாயுபதார்த்தங்கள், செம்மரியாடு, பால், நெய், கெட்டசலம், மீன்கள், கந்தமூலங்கள், கடுகு, ரூக்ஷம், சீதளம் ஆகிய அன்னபானங்கள், மூத்திரம், சர்தி, தாகம், சுவாசம், இவைகளை அடக்குதல், நசியம், வஸ்திகர்மம், சிரமை இவைகளை சுவாசரோகி நிவர்த்திக்க வேண்டியது.
 

Post Comment

சனி, அக்டோபர் 16, 2010

ஆஸ்த்மாவும் நமது நிலையும்

ஆஸ்த்மாவுக்கான காரணம் ஆஸ்த்மா பரிபூர்ணமாக குணம் ஆகாததிர்க்கான  காரணம்
 ஆஸ்த்மா பரிபூர்ணமாக சரியாகி தீர்ந்திட

ஆஸ்த்மா பரிபூர்ணமாக சரியாகி குணமாகிட

 

Post Comment

வியாழன், அக்டோபர் 14, 2010

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

 • எது ஒத்து கொள்ளவில்லை என்று அதனை தவிர்த்து கொள்ளுங்கள்
 • வயிற்றை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் ..மலச்சிக்கல் இல்லாமல் ,அஜீர்ணம் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்
 • எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்த்துகொள்ளுங்கள்
 • பச்சை வாழைப்பழம் ,கொய்யாபழம் ,புளித்த பழங்கள்,பச்சரிசி உணவுகள் ,தயிர் ,இரவில் பால் ,பெப்சி கொக்கோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் வகைகள் ,ப்ரிஜ்ஜில் வைத்த உணவுகள் ,பழைய ஆறிப்போன உணவுகள் ,கேக் வகைகள் ,அதிகமான இனிப்பு வகைகள் ,சிப்ஸ் வகைகள் ,கொண்டைகடலை ,கடல் உணவுகள் ஆகியவற்றை தவிருங்கள் -முடிந்தால் நிறுத்துங்கள் ..தண்ணீரோ வெந்நீரோ மாற்றி மாற்றி குடிக்காதீர்கள் ,ஒரே வகையான நீரை குடியுங்கள் .சளி பிடிக்கும் உணவுகளை தவிருங்கள் ..உணவு வகைகளில் அலட்சியம் வேண்டாமே
 • மூச்சு பயிற்சி ,பிராணயாமம் போன்றவற்றை செய்யுங்கள் ...மூச்சு பயிற்சியில் முழு நிவாரணம் பெற முடியும் ..நிச்சயம் அதற்கான நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்
 • தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்யுங்கள் ...நடப்பது நன்மைக்கே
 • காற்றோட்டமோக உள்ள அறையிலே தூங்குங்கள் ,ஜன்னலை மூடி வைக்காதீர்கள் ,fan-க்கு நேர்கீழே படுக்காதீர்கள் ,இருப்பத்தி நாலு மணிநேரமும் air condition (AC)-அறையில் இருப்பதாய் இருந்தால் இருங்கள் ..தூங்க மட்டும் air condition (AC)-அறை உபயோகபடுத்தாதீர்கள்
 • புகையிலை ,புகையிலை சார்ந்த விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் -புகை பிடிப்பவர் அருகில் இருக்காதீர்கள் ..அது புகை பிடிப்பதை விட கொடியது .
 • டை அடிப்பது  ,செயற்கை சாயம் போன்ற விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள்
 • ஒட்டடை அடிப்பது ,உணவை  தாளிக்கும் போது மூக்கை மூடாமல் இருப்பது ,வாசனை திரவியங்களை உபயோகிப்பது ,சென்ட் போடுவது ,சாம்பிராணி புகை போடுவது ,ஊதுபத்தி பத்தவைப்பது ,கொசு வரது சுருள் பத்தவைப்பது ,லிக்யூட் கொசு விரட்டிகளை சதா காலமும் பயன்படுத்துவது (கொசு விரட்டியில் உள்ள அளித்ரின் என்னும் மருந்து மூச்சு குழலை சுருங்க வைக்கும் ),பட்டாசு -வெடி பொருட்களின் புகை (தீபாவளி வருதில்ல ),கண்ணுக்கு தெரிந்த புகையில் ,கண்ணுக்கு தெரியாத தூசுகளில் அதிக நேரம் இருப்பது -போன்றவைகளை தவிர்க்க வேண்டும் ..
 • உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் விஷயங்கள் ,அஜினோ மோட்டோ சேர்ந்த உணவுகள் ,அதிகமான பாஸ்ட் புட் உணவுகள்  போன்றவைகளும் ஆஸ்த்மாவை அதிகரிக்கும் ..உணவில் கலப்படம் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள் ..
 •  ஆஸ்த்மா ஒரு குறிப்பிட்ட காலத்தில் சீசனாக வந்தாலும் எப்போதுமே தவிர்க்க வேண்டிய விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் .நூற்றுக்கு நூறு தவிர்த்தல் நல்லது .
 • நடந்தால் மூச்சு வாங்குகிறது என்றால அது  இதய பலஹீனமாக கூட இருக்கலாம் ..எனவே ஆஸ்தமாவோடு சம்பதமான பல விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் ..எல்லா மூச்சு வாங்குதலும் ஆஸ்த்மாவாகாது-ஆஸ்த்மா வில் மூச்சு வாங்குவது மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை
 • இரத்தசோகை கூட எப்போதும் ஆஸ்த்மாவோடு இணைந்து இருக்கும் .இரத்த  சோகை ஆகாமல் உணவுகளில் கவனம் தேவை .இரத்தசோகைக்கு சிகிச்சை எடுப்பது மிக அவசியம் .
 • எந்த காரணத்தை முன்னிட்டும் ஸ்டீராய்ட் மருந்தகளான-prednisolone,(wysolon),betamethsone(betnasol),methylprednisolone(medrol)-உள்ளே உபயோகிக்காதீர்கள் ..எப்போதுமே ஸ்டீராய்ட் அவசரத்திற்கு உதவினாலும் அதை விட மோசமான பக்க விளைவுள்ள மருந்து உலகத்தில் இல்லவே இல்லை. ஸ்டீராய்ட் அதிகநாள் பயன்படுத்தினால் இரத்த சோகை வரும் ,எலும்பு சிதைவடையும் ,சர்க்கரை நோய் வரும் ,முடி உதிரும் ,உடல் பெருக்கும்-குண்டாகும் ..இன்னும் பிற பிற சொல்லமுடியாத பக்கா பக்க விளைவுகளை விலைக்கு வாங்காதீர்கள் ..(நான் ஆங்கில மருந்தை குறை சொல்லவில்லை -மருந்தின் அளவு ,உபயோக்கும் முறை ,கால வரைமுறை தெரிந்து நல்ல ஆங்கில மருந்தை எடுப்பது -அவசரத்திற்கு நல்லது )
 • இந்த விஷயங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவியுங்கள் ...நான் கஷ்டப்பட்டு எழுதிய விஷயத்தை காப்பி பண்ணி நீங்கள் சொன்னது போல் போடாதீர்கள் ..எனது தள முகவரியை மறக்காமல் நண்பருக்கு தெரிவியுங்கள் 
 • inhaler,rotohaler,போன்ற வெளிப்ரோயோக மூச்சு அடிப்பான்களை பயன் படுத்துவதில் தவறில்லை ..அனால் தினமும் இருவேளை -அல்லது அடிக்கடி உபயோகபடுத்தும் அளவுக்கு பழகிபோய் அடிமை ஆகிவிடுவது நல்லதில்லை ..
 • எந்த காரணத்தை கொண்டும் மருந்து கடைகளில் ,மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்கி உபயோகிப்பதை விட கேவலமான ,மோசமான விஷயம் உலகத்தில் இல்லை ..எனவே ..மருத்துவர் எழுதிகொடுத்த மருந்தே என்றாலும் மருத்துவர் உபயோகிக்க சொன்ன கால அளவுக்கு மேல் அதனை அவர்க்கு தெரியாமல் மருந்து கடைகளில் வாங்கி உபயோகிக்காதீர்கள் ..
 • இந்த விஷயங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவியுங்கள் ...நான் கஷ்டப்பட்டு எழுதிய விஷயத்தை காப்பி பண்ணி நீங்கள் சொன்னது போல் போடாதீர்கள் ..எனது தள முகவரியை மறக்காமல் நண்பருக்கு தெரிவியுங்கள் ..முடிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள் 

நாளை முதல் தினமும் அப்டேட் செய்யப்படும்
 

  Post Comment

  ஞாயிறு, அக்டோபர் 10, 2010

  சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

  சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

  (யதார்த்தமாய் நடைமுறை வழக்காடு முறையில் ஒரு கட்டுரை ..)


  சுற்றுப்புற மாசுல்ல வெளி உலகம், மன அழுத்தத்தோடு வாழுகிற இயந்திர வாழ்க்கை முறைதான் பல கோடி ஆஸ்துமா நோயாளிகளை உருவாக்கிட்டிருக்கு. காசு கொடுக்காம கிடைக்கிற ஒரே விஷயம் காற்று, அந்த காற்று கூட நுரையீரல் முழுமையா செல்ல முடியாம தவிக்க வைக்கிற வியாதிதான் ஆஸ்துமா. வயிறுமுட்ட சாப்பிடத் தெரிஞ்ச நம்ம மனுஷங்க 5லிட்டர்  காற்று போகிற நுழையீரல்ல ½ லிட்டர்  காற்று கூட முழுமையா இழுக்காம போறதாலதான், ஒரு நிமிஷத்திற்கு 14 தடவை சராசரியா மூச்சு விடணும்னா நம்ம அரைகுறையாக 20 - 25 தடவை சுவாசித்து ரத்த சோகை முதல் பல்வேறு மூச்சு சம்பந்தமான நோய்க்கு காரணமாகிறோம்.  ஆயுர்வேதத்தில் ஆஸ்த்மாவிற்கு தமக சுவாசம் என்று பெயர் 

  ஆஸ்துமாவுக்கு காரணம் என்ன?
                  ஒவ்வாமையை உண்டு பண்ணக் கூடிய தூசிகள், ஒட்டடை, பூனை, நாய், மாடு போன்ற மிருகங்களோட முடி, புகை, குளிர்ந்த பனிக்காற்று, பார்த்தியான (மூக்குத்தி குலை செடி) செடியிலிருந்து வரும் காற்று, நம்ம தலையணை படுக்கை பெட்ஷீட்டோடு இருக்கும் டஸ்ட் மைட்என்ற கோடிக்கணக்கான நுண்பூச்சிகள் ,வேலை செய்கின்ற இடத்திலிருந்து வரும் புழுதிகள், அலர்ஜியை உண்டுபண்ற உணவுகளான மீன், இரால், நண்டு, தயிர், சாக்லேட் ,பச்சை வாழைப்பழம் ,வெண்டைக்காய், கெட்டுப்போன சாப்பாடு, குளிர்ந்த தண்ணீர் (Ice Water) ப்ரிட்ஜ்ல வைத்து சாப்பிடுகிற நாளான சமைத்த உணவு, நச்சுகலந்த குளிர் பானங்கள் (Soft Drinks) பீடி, சிகரெட், புகையிலை, இது போன்ற காரணங்களால வருகிறதை  ஆங்கில மருத்துவத்தில் Atopic Asthma(ஆரம்ப நிலையில வருவது ) இதுக்கு மேல் சொன்ன அலர்ஜன்கள் (ஒவ்வாமையை உண்டுபண்ணக்கூடியவை) காரணமாக அமைந்து விடும்  Non Atopic Asthma (தாமதமாக வருவதற்கு )வுக்கு பொதுவாக infection-ம் அதிகமான உடற்பயிற்சிகள். Fan-க்கு நேர் கீழேபடுப்பது, சில மருந்துகள்(like propanalal ), Air Condition Room ,மன அழுத்தம் சோகம் அதாவது அலர்ஜி இல்லாம கூட காரணமாக அமைகிறது.  ஆஸ்த்மாவை  அதனால் தான் Psychosomatic Disease (மனசும் உடம்பும் காரணமாக அமைகின்ற வியாதி) ன்னு சொல்கிறார்கள் .ஆயுர்வேதத்தில் ஆஸ்த்மாவுககு நுரையீரல் சம்பந்தப்பட்டதில்லாம வயிறுதான் மிக முக்கிய காரணம் சொல்கிறது 

  ஆஸ்த்மாவால் என்ன கஷ்டம் வரும்
                  சுவாச நாளங்கள் சுருக்கமும் (Broncho Spasm),mass cell - லோட கிளர்வும், Histamin என்ற நொதி உருவாக்கமும் பொதுவாக  மூச்சுவிடறதுக்கு சிரமம், தொண்டையில் அரிப்பு தொடர்ந்து வறட்டு இருமல் பூனைகத்துதல் மாதிரி இழுப்பு, நெஞ்சில் அழுத்தம், விடியல் காலையில் அலாரம் வச்சமாதிரி படுத்துகிடக்கிறவனை உட்கார வைக்கிற அளவுக்கு கஷ்டம், அதிகம் பேசகூட முடியாத அளவுக்கு சிரமம் போன்ற மரண அவஸ்தைகளும் கொடுக்கும் பொதுவாக பார்த்தோம்னா இளைப்பு நோயாளிகளுக்கு ஆரம்ப நாட்களல்ல செரிமானக் கோளாறு மலக்கட்டு அல்லது பேதி ,வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் (வயிறுகூட ஆஸ்த்மாவுக்கு காரணமானது) ,நாள்பட்ட இருமல் கூட இருந்திருக்கும்.

  எப்ப எப்ப வரும்
                  ஆஸ்த்மா எவ்வளவு நாளைக்கு ஒரு முறை எந்த வேகத்தில் வரும் என்பது ஒவ்வொருவரோடு உடம்பை பொறுத்தது. சிலருக்கு Episodic-க்கா, சிலருக்கு Mild Episodic-க்கா, நவம்பர் -லிருந்து பிப்ரவரி மாதம் வரைக்கும், சிலருக்கு Season-ல பனிமழை நாட்களிலும் , சிலருக்கு வறட்சியான கோடைகாலத்திலும் , AC Room விட்டு வெளியிலே வந்தாலும், சிலருக்கு AC Room -லையும் வரும் Episodic, Severe Acute Asthma (Status asthmaticus) Chronic asthma-என்று வருகிற வேகத்தை வைத்து அதை பிரிக்கலாம்.  ஆஸ்த்மா இருக்கு - என்ன பண்ணலாம்?
                  முதல்ல எந்தெந்த காலங்கள்ல என்னென்ன காரணத்தில ஆஸ்த்மா வருதுன்னு ஆராயணும், பின்ன அதையெல்லாம் தவிர்கணும் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் பலம் தரக்கூடிய மருந்துகளை முறையா சாப்பிடணும், உடம்போட எதிர்ப்பு சக்தியை கூட்டணும் வயிற்றில் ஆஸ்த்மா தொடங்கி நுரையீலை தாக்குவதால் வயிறுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும், வயிறை சுத்திப் பண்ணி பசியைத்தூண்டி (தீபனம்) அஜீரணத்தை போக்கி (பாசனம்) முறையாக மருந்துகளை எடுக்கணும்..


  சுவாசத்திற்கு பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத - சாஸ்திர மருந்துகள்
  கஷாயம்
  1.            தசமூலகடுத்ரயாதி கஷாயம்
  2.            நாயோபாயம் கஷாயம் (குருந்தொட்டி, ஜீரகம், சுக்கு)
  3.            பலாஜீரகாதி கஷாயம்
  4.            ஏலகனாதி கஷாயம்
  5.            வ்யாக்ரயாதி கஷாயம்

  அரிஷ்டம்
  6.            கனகாசவம்
  7.            வாசாரிஷ்டம்
  8.            பார்தாத்யாரிஷ்டம்

  லேகியம், க்ருதம்
  9.            அகஸ்தய ரசாயனம்
  10.          தஷமூல ரசாயனம்
  11.          சயவன ப்ராசம்
  12.          கூஷ்மாண்ட் ரசாயனம்
  13.          தாம்பூல ரசாயனம்
  14.          வ்யாக்ரி ஹரிதகி, தசமூல ஹரிதகி
  15.          கண்டகாரி அவலேஹம் ,கண்டகாரி கிருதம்
  16.         க்ஷீரஷட்பல க்ருதம், ராஸ்னா தஷமூலாதி க்ருதம்

  சூரணம்

  17.          தாளிசாதி சூரணம், சீதோபலாதி சூரணம், ஷ்ருங்கயாதி சூரணம், ஏலாதி சூரணம், கற்பூராதி சூரணம், வ்யோஷாதி சூரணம், ஷட்யாதி சூரணங்கள்

  குளிகை
  18.          சந்திரரோதயரசம், கபசிந்தாமணி ரசம், லக்ஷ்மிவிலாச ரசம், பிரவாள சந்திரோதயம், சுவாச காசசிந்தாமணி, ஸ்வர்ணமாலினி வசந்த ரசம்சுவாசகுடாரம், சுவாசானந்தம் ,த்ரைலோகிய சிந்தாமணி, வாயுகுளிகைதான்வந்திரம் குளிகை, ப்ராபாகரவடி, வ்யோஷாதிவடி.
  பஸ்மங்கள்
  19.          முக்தா பஸ்மம், பவள  பஸ்ம, ஷ்ருங்கி  பஸ்மம், மல்ல செந்தூரம், தாளக பஸ்மம்.

  சரகர் சொல்கிற 55 மகாகஷாயங்களில்
  சுவாசஹர மூலிகைகள் (சுவாசஹர மகா கஷாயம்)
                  பூலாங்கிழக்கு, புஷ்கர மூலம், புளி வஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப் பாலை, காட்டுக் கோரைக் கிழங்கு ஆகிய 10 மூலிகைகள்.

  காசஹர மகா கஷாயம்
                  திராட்சை, கடுக்காய், நெல்லிக்காய், அரிசி திப்பிலி, காஞ் சொறி, கர்க்கட ஸ்ருங்கி, கண்டங்கத்திரி , வெள்ளை சாரணை, சிவப்பு சாரணை, கீழாநெல்லி ஆகிய 10 மூலிகைகள்.

  ஆயுர்வேதம் சொல்கிற ஆதாரப்பூர்வமான அனுபவ வைத்திய முறைகள்
  • அகில் சூரணத்தை தேனில் சாப்பிடலாம் (சரக .சிகிச்சை. 17 129)
  • கொடம்புளியை சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம் (சரக .சிகிச்சை. 17 104)
  • இஞ்சி சாறை தேனில் கலந்து சாப்பிடலாம் (ஹரித சம்ஹிதை  312.38)
  • எருக்கம் பூவை, மிளகில் வைத்து அரைத்து அதனை பார்லியில் வேக வைத்து சாப்பிடலாம். (சுஸ்ருத உத்தர சி. 36.37)
  • சீமை அமுகரா சாம்பலை தேனில் குழைத்து சாப்பிடலாம் (சரக .சிகிச்சை.17.117)
  • சுக்கு, இந்துப்பு, சிறு தேக்குடன் 2 பங்கு சர்க்கரையுடன் வெந்நீரில் சாப்பிடலாம் (சரக .சிகிச்சை. 17. 109)
  • தான்றிக்காய் சூரணம் தேனுடன் சாப்பிடலாம் (அஷ்டாங்க ஹ்ருதயம் சிகிச்சை .3. 173)
  • சிறுதேக்கு, சுக்கு, மிளகுடன் யவக்ஷாரத்துடன் தேனுடன் (சரக .சிகிச்சை 17. 110 சுஸ்ருத உத்தர சி 39)
  • காரிசலாகண்ணியும் கடுக்காய் சேர்ந்த தைலம் (K.K..16. 11)
  • பரங்கி சாம்பிராணி, குக்குலு, அகில், தாமரையுடன் நெய் சேர்த்து புகை பிடிக்கலாம் (அஷ்டாங்க ஹ்ருதயம் சிகிச்சை.4.10)
  • பழைய நெய்யுடன் கடுக்காய் தோல் சேர்த்து உண்ணலாம். (சுஸ்ருத உத்தர சி. 51-16)
  • மஞ்சளுடைய சாம்பலை தேனுடன் (S.B. 4-370)
  • வயல் நண்டு - 20 எண்ணம் 5 மிளகோடு சேர்த்து பச்சையாக இடித்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் உண்ணுதல் நலம்.
  • கண்டங்கத்திரியும் சமஅளவு நெல்லிக்காயும் பாதி அளவு பெருங்காயமும் தேனுடன் சேர்த்து உண்ண 3 நாளில் குணம் தெரியும்.(சுஸ்ருத உத்தர சி. 51.55)
  • வெல்லத்துடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட கற்பூரம்  (S.B. 4. 386)
  • கர்கட ஸ்ருங்கியுடன் காய்ச்சப்பட்ட கஞ்சி (சரக .சிகிச்சை.17.101)
  • வேலிப்பருத்தி வேர் முசுமுசுக்கை வேர் திப்பிலியுடன் தினமும் சாப்பிடலாம்.
  • கொள்ளு சூப் ஆஸ்துமாவுக்கு நல்லது. (சுஸ்ருத உத்தர சி.. 51-31)
  • ஜடாமன்ஜில் ஊமத்தை பூவில் வைத்து புகைக்கலாம். (சரக .சிகிச்சை 17-78)
  • மாதுளை இலையை எரித்து சாம்பலாக்கி அந்த நீருடன் வேம்பு பேய்புடல் சிறு பயிர், திடுகடுகு சாப்பிட  (சரக .சிகிச்சை.17-97)
  • காசமர்த இலை கஷாயத்துடன் சேர்த்து சமைக்கப்படும் முள்ளங்கி, முருங்கை விதை (சரக .சிகிச்சை. 17-99)
  • நொச்சி இலை சாறுடன் காய்ச்சி தயாரிக்கப்படும் நெய் (சுஸ்ருத உத்தர சி. 32. அஷ்டாங்க ஹ்ருதயம் சிகிச்சை.3-57)
  • பூண்டு அல்லது வெங்காய வேர் தாய்ப்பாலுடன் கலந்து மூக்கிலிட விக்கல் மற்றும் இளைப்பு தீரும் (சரக .சிகிச்சை. 17.131)
  • திப்பிலி, அங்கோட்ட வேர்  இந்துப்பு  சேர்த்து t உண்ணலாம் (K.K.. 16-17)
  • ஏழிலம் பாலை பூ  அல்லது சிரிம் (முன்னை பூ) உடன் திப்பிலி சேர்த்து தேனுடன் உண்ண ஆஸ்துமா தீரும்.  (சரக .சிகிச்சை. 17-114சுஸ்ருத உத்தர சி 51-36அஷ்டாங்க சங்க்ரகம் சிகிச்சை 6-35)
  • தாளிசபத்திரியுடன் ஆடாதொடை இலை சாறு ஆஸ்துமாவை குணமாக்கும் (சரக .சிகிச்சை. 17-145-148 சுஸ்ருத உத்தர சி 51-20 ஹரித சம்ஹிதை 3-10-27)
  • திரிபலாவை திப்பிலியுடன் சேர்த்து உண்ண ஆஸ்துமா குணம் தெரியும். (சாரங்க தர சம்ஹிதை  2-6-37)

  வராமல் தடுப்பது எப்படி?

                  எது எது ஒத்துக்கொள்ளவில்லையென்று தெரிஞ்சு தவிர்க்கணும், மேலும் முறையான மூச்சு பயிற்சி, பிராணயாமம், தியானம், அமைதியான மனநிலை அவசியம். தயிர் ,பழைய சோறு, பிரிட்ஜ் உணவுகள், பச்சை வாழைப்பழம் எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்த்தல் நலம். இரவு மிக எளிதாக செரி,மானம் ஆகக்கூடிய உணவுகளையும், எப்பொழுதும் எல்லாவிதமான உணவுகளையும் சூடாகவே உட்கொள்ளணும். புகைப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தணும். முறையான சிகிச்சை எடுக்கணும்..

  ஆயுர்வேதத்தில் மிக எளிமையாக ,முழுமையாக ஆஸ்த்மாவை சரி செய்யலாம் .எனது அனுபவத்தில் இதனை மிக எளிமையாக செய்கிறோம் .நஞ்சறுப்பான் ,மற்றுமுள்ள சரகர் சொன்ன சுவாசஹர கசாயத்துடன் பவள பஸ்மம் +ஸ்ருங்கி பஸ்மம் சேர்த்து  நாங்கள் மாத்திரைகளாகவும் ,பொடியாகாவும்,டானிக்காகவும் தந்து முழுமையாக சரி செய்திவிடுவோம்

  Post Comment