வியாழன், அக்டோபர் 14, 2010

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

 • எது ஒத்து கொள்ளவில்லை என்று அதனை தவிர்த்து கொள்ளுங்கள்
 • வயிற்றை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் ..மலச்சிக்கல் இல்லாமல் ,அஜீர்ணம் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்
 • எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்த்துகொள்ளுங்கள்
 • பச்சை வாழைப்பழம் ,கொய்யாபழம் ,புளித்த பழங்கள்,பச்சரிசி உணவுகள் ,தயிர் ,இரவில் பால் ,பெப்சி கொக்கோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் வகைகள் ,ப்ரிஜ்ஜில் வைத்த உணவுகள் ,பழைய ஆறிப்போன உணவுகள் ,கேக் வகைகள் ,அதிகமான இனிப்பு வகைகள் ,சிப்ஸ் வகைகள் ,கொண்டைகடலை ,கடல் உணவுகள் ஆகியவற்றை தவிருங்கள் -முடிந்தால் நிறுத்துங்கள் ..தண்ணீரோ வெந்நீரோ மாற்றி மாற்றி குடிக்காதீர்கள் ,ஒரே வகையான நீரை குடியுங்கள் .சளி பிடிக்கும் உணவுகளை தவிருங்கள் ..உணவு வகைகளில் அலட்சியம் வேண்டாமே
 • மூச்சு பயிற்சி ,பிராணயாமம் போன்றவற்றை செய்யுங்கள் ...மூச்சு பயிற்சியில் முழு நிவாரணம் பெற முடியும் ..நிச்சயம் அதற்கான நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்
 • தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்சி செய்யுங்கள் ...நடப்பது நன்மைக்கே
 • காற்றோட்டமோக உள்ள அறையிலே தூங்குங்கள் ,ஜன்னலை மூடி வைக்காதீர்கள் ,fan-க்கு நேர்கீழே படுக்காதீர்கள் ,இருப்பத்தி நாலு மணிநேரமும் air condition (AC)-அறையில் இருப்பதாய் இருந்தால் இருங்கள் ..தூங்க மட்டும் air condition (AC)-அறை உபயோகபடுத்தாதீர்கள்
 • புகையிலை ,புகையிலை சார்ந்த விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் -புகை பிடிப்பவர் அருகில் இருக்காதீர்கள் ..அது புகை பிடிப்பதை விட கொடியது .
 • டை அடிப்பது  ,செயற்கை சாயம் போன்ற விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள்
 • ஒட்டடை அடிப்பது ,உணவை  தாளிக்கும் போது மூக்கை மூடாமல் இருப்பது ,வாசனை திரவியங்களை உபயோகிப்பது ,சென்ட் போடுவது ,சாம்பிராணி புகை போடுவது ,ஊதுபத்தி பத்தவைப்பது ,கொசு வரது சுருள் பத்தவைப்பது ,லிக்யூட் கொசு விரட்டிகளை சதா காலமும் பயன்படுத்துவது (கொசு விரட்டியில் உள்ள அளித்ரின் என்னும் மருந்து மூச்சு குழலை சுருங்க வைக்கும் ),பட்டாசு -வெடி பொருட்களின் புகை (தீபாவளி வருதில்ல ),கண்ணுக்கு தெரிந்த புகையில் ,கண்ணுக்கு தெரியாத தூசுகளில் அதிக நேரம் இருப்பது -போன்றவைகளை தவிர்க்க வேண்டும் ..
 • உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் விஷயங்கள் ,அஜினோ மோட்டோ சேர்ந்த உணவுகள் ,அதிகமான பாஸ்ட் புட் உணவுகள்  போன்றவைகளும் ஆஸ்த்மாவை அதிகரிக்கும் ..உணவில் கலப்படம் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள் ..
 •  ஆஸ்த்மா ஒரு குறிப்பிட்ட காலத்தில் சீசனாக வந்தாலும் எப்போதுமே தவிர்க்க வேண்டிய விஷயங்களை தவிர்த்து கொள்ளுங்கள் .நூற்றுக்கு நூறு தவிர்த்தல் நல்லது .
 • நடந்தால் மூச்சு வாங்குகிறது என்றால அது  இதய பலஹீனமாக கூட இருக்கலாம் ..எனவே ஆஸ்தமாவோடு சம்பதமான பல விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் ..எல்லா மூச்சு வாங்குதலும் ஆஸ்த்மாவாகாது-ஆஸ்த்மா வில் மூச்சு வாங்குவது மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை
 • இரத்தசோகை கூட எப்போதும் ஆஸ்த்மாவோடு இணைந்து இருக்கும் .இரத்த  சோகை ஆகாமல் உணவுகளில் கவனம் தேவை .இரத்தசோகைக்கு சிகிச்சை எடுப்பது மிக அவசியம் .
 • எந்த காரணத்தை முன்னிட்டும் ஸ்டீராய்ட் மருந்தகளான-prednisolone,(wysolon),betamethsone(betnasol),methylprednisolone(medrol)-உள்ளே உபயோகிக்காதீர்கள் ..எப்போதுமே ஸ்டீராய்ட் அவசரத்திற்கு உதவினாலும் அதை விட மோசமான பக்க விளைவுள்ள மருந்து உலகத்தில் இல்லவே இல்லை. ஸ்டீராய்ட் அதிகநாள் பயன்படுத்தினால் இரத்த சோகை வரும் ,எலும்பு சிதைவடையும் ,சர்க்கரை நோய் வரும் ,முடி உதிரும் ,உடல் பெருக்கும்-குண்டாகும் ..இன்னும் பிற பிற சொல்லமுடியாத பக்கா பக்க விளைவுகளை விலைக்கு வாங்காதீர்கள் ..(நான் ஆங்கில மருந்தை குறை சொல்லவில்லை -மருந்தின் அளவு ,உபயோக்கும் முறை ,கால வரைமுறை தெரிந்து நல்ல ஆங்கில மருந்தை எடுப்பது -அவசரத்திற்கு நல்லது )
 • இந்த விஷயங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவியுங்கள் ...நான் கஷ்டப்பட்டு எழுதிய விஷயத்தை காப்பி பண்ணி நீங்கள் சொன்னது போல் போடாதீர்கள் ..எனது தள முகவரியை மறக்காமல் நண்பருக்கு தெரிவியுங்கள் 
 • inhaler,rotohaler,போன்ற வெளிப்ரோயோக மூச்சு அடிப்பான்களை பயன் படுத்துவதில் தவறில்லை ..அனால் தினமும் இருவேளை -அல்லது அடிக்கடி உபயோகபடுத்தும் அளவுக்கு பழகிபோய் அடிமை ஆகிவிடுவது நல்லதில்லை ..
 • எந்த காரணத்தை கொண்டும் மருந்து கடைகளில் ,மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்கி உபயோகிப்பதை விட கேவலமான ,மோசமான விஷயம் உலகத்தில் இல்லை ..எனவே ..மருத்துவர் எழுதிகொடுத்த மருந்தே என்றாலும் மருத்துவர் உபயோகிக்க சொன்ன கால அளவுக்கு மேல் அதனை அவர்க்கு தெரியாமல் மருந்து கடைகளில் வாங்கி உபயோகிக்காதீர்கள் ..
 • இந்த விஷயங்களில் ஆட்சேபனை இருந்தால் தெரிவியுங்கள் ...நான் கஷ்டப்பட்டு எழுதிய விஷயத்தை காப்பி பண்ணி நீங்கள் சொன்னது போல் போடாதீர்கள் ..எனது தள முகவரியை மறக்காமல் நண்பருக்கு தெரிவியுங்கள் ..முடிந்தால் பின்னூட்டம் எழுதுங்கள் 

நாளை முதல் தினமும் அப்டேட் செய்யப்படும்
 

  Post Comment

  16 comments:

  கருத்துரையிடுக