சுண்டியாதி கியாழம் :- சுக்கு, கண்டுபாரங்கி இவைகளைக்கியாழம் வைத்து சாப்பிட்டால் சுவாசரோகம் தீரும்.
திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷ, சீந்தில்கொடி, சுக்கு இவைகளைக் கியாழம் வைத்து அதில் திப்பிலிசூரணத்தை கலந்து சாப்பிட்டால் சுவாசம், காசம், சூலை, அக்கினிமந்தம், இருமல் இவைகள் நிவர்த்தியாகும்.
குளுத்தாதி கியாழம் :- கருங்கொள்ளு, சுக்கு, முள்ளங்கத்த்ரி வேர், ஆடாதோடை, ஆமணக்குவேர் இவைகளைக் கியாழம் வைத்து சாப்பிட்டால் சுவாசகாசங்கள் நிவர்த்தியாகும்.
தேவதார்வியாதி கியாழம் :- தேவதாரு, வசம்பு, கண்டங்கத்திரி, சுக்கு, காயபலம், புஷ்க்கரமூலம் இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து சாப்பிட்டால் சுவாசம், காசம் இவைகள் தீரும்.
சிம்ஹியாதி கியாழம் :- கண்டங்கத்திரி, மஞ்சள், ஆடாதோடை, சீந்தில்கொடி, சுக்கு, திப்பிலி, கண்டுபாரங்கி, கோரைக் கிழங்கு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் திப்பிலி சூரணம், மிளகுசூரணம் கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள் நிவர்த்தியாகும்.
வாசாதி கியாழம் :- ஆடாதோடை, மஞ்சள், திப்பிலி, சீந்தில் கொடி, கண்டுபாரங்கி, கோரைக்கிழங்கு, சுக்கு, கண்டங்கத்திரி இவைகளை கியாழம் விட்டு அதில் திப்பிலி, மிளகு இவைகளின் சூரணங்கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள் நிவர்த்தியாகும்.
மரீச்யாதி கியாழம் :- மிளகு, கரிசாலை, சுக்கு, கருப்பு உப்பி லாங்கொடி, போயாவரை, ஆடாதோடை, சாரணைவேர், கண்டு பாரங்கி, இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து அதில் திப்பிலி சூரணங்கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள், க்ஷயங்கள் இவைகள் நீங்கும்.
சூர்யாவர்த்தம் :- பாதரசம் 1 பாகம், கெந்தி 1/2 பாகம், இவைகளை ஒரு ஜாமம் அரைத்து இவைகளுக்கு சமம் தாம்பிரபற்பம் கலந்து உருண்டை செய்து கோரைக்கிழங்கு அரைத்து மேலுக்கு லேபனஞ்செய்து வாலுகாயந்திரத்தில் வைத்து ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து சுத்திசெய்த கெந்தி, மிளகுச்சூரணம் இவைக
ளைக் கலந்து நெய் அனுபானத்துடன் சாப்பிட்டால் கபசுவாசங்கள் தீரும்.
அமிருதார்ணவ ரசம் :- சுத்தி செய்த பாதரசம், கெந்தி, லோஹ பற்பம், பொரித்தவெங்காரம், சிற்றரத்தை, வாய்விளக்கம், திரிபலை தேவதாரு, திரிகடுகு, சீந்தில்கொடி, தாமரைத்தண்டு, நாபி இவைக ளை சமஎடையாகச் சூரணித்து 2 குன்றி எடை தேனில் கொடுத்தால் காசங்கள், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.
சுவாசகுடார ரசம் :- பதரசம், கெந்தி, வசநாபி, வெங்காரம், மனோசிலை இவைகள் சுத்திசெய்தது வகைக்கு 1/4 பலம் மிளகு, 2 பலம் திரிகடுகு, 1 1/2 பலம் இவைகள் யாவையும் சூரணித்து கல்வத்திலிட்டு ஒரு ஜாமம் அரைத்து வைத்துக்கொள்க. இதை குன்றி எடை முதல் இரண்டு குன்றி எடை வரையிலும் சாப்பிட்டால்
ஐந்து வித சுவாசங்கள், காசங்கள், க்ஷயங்கள் இவைகள் சூரியனைக் கண்ட இருளைப்போல் நீங்கும்.
சுவாசகுடார ரசம் :- பதரசம், கெந்தி, வசநாபி, வெங்காரம், மனோசிலை இவைகள் சுத்திசெய்தது வகைக்கு தோலா, மிளகு 8 தோலா, திரிகடுகு 6 தோலா, இவை யாவையும் கல்வத்திலிட்டு அரைத்து காசிக்குப்பியில் வைத்துக்கொள்க.காலை மாலை குன்றி எடை வெற்றிலைச் சாற்றினால் கொடுத்தால் சுவாசகாசம்
அக்கினிமந்தம், வாதசிலேஷ்மரோகம், சந்நிபாதம், மூர்ச்சை, அபஸ்மாரம் இவைகள் யாவும் குணமாகும்.
சுவாசகுடார லேகியம் :- முள்ளங்கத்திரி ரசம் 256 பலம் கரிசனாங்கண்ணி, உத்தாமணியிலை, ஆடாதோடை, கண்டங்கத்திரி தூதுவளை, சதுரக்கள்ளி, இலைக்கள்ளி, கொடிக்கள்ளி, இவைகளின் ரசம் வகைக்குப் 16 பலம், இவைகளை பாண்டத்தில் போட்டு 102-பலம், வெல்லத்தை கலக்கி வடிகட்டி, பாகு பதமாக காய்ச்சி அதில் கடுக்காய்ப்பூ, திரிகடுகு, செவ்வியம், மோடி,சித்திரமூலம், திரிகடுகு, ஏலக்காய், இலவங்கப்பட்டை. இலவங்க பத்திரி, நாககேசரம், தாளிசப்பத்திரி, கிராம்பு, இந்துப்பு, வசம்பு, ஓமம், சீரகம், கண்டுபாரங்கி இவைகள் வகைக்கு 3-பலம், மைப்போல் சூரணித்து வஸ்திகாரஞ்செய்து அதில் கலந்து தேன் 16-பலஞ்சேர்த்து இலேகியபதமாகக்கிளறி இறக்கிவைத்துக் கொள்ளவும். இதை சாப்பிட்டால் காசம், சுவாசம், வாந்தி, விக்கல், பாண்டு, உதிரம், பகந்தரம், பீநசம், சுரம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
பஞ்சபத்திர சார லேகியம் :- ஆடாதோடை கரசனாங்கண்ணி, நொச்சி, அழவனை, கண்டங்கத்திரி, இந்ததினுசுகளின் இலை இரசத்தை பிரத்தியோகமாக பிழிஞ்சி அந்த ரசங்கள் சமஎடையாக ஒன்றாய்க் கலந்து அதில் திப்பிலி சூரணத்தையும் சர்க்கரையையும் கலந்து லேகியபாகமாக கிளறி நெய் தேன்கலந்து சாப்பிட்டால் தீவிரமான சுவாசங்கள் நிவர்த்தியாகும்.
களிங்காதி லேகியம் :- வெட்பாலை பழரசம் 16-பலம், வெல்லம் 10-பலஞ்சேர்த்து காய்ச்சி பாகுபதம் வரும்போது, அதில் சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் இவைகள் வகைக்கு 1/4-பலம் பிரமாணஞ் சூரணித்து கலந்து 4-பலம் தேன் கலந்து கிளறினால் லேகியபதமாகும். இதை காலையில் சுண்டக்காயளவு சாப்பிட்டு வந்தால், சுவாசங்கள், காசங்கள், பாண்டுரோகம், குன்மம், உதிரரோகம், அஷ்டீலவாதம், சூலை, ஜீரணசுரம், வீக்கம்,
காமாலை இவைகள் நாசமாகும்.
இலகுவியாக்கிறாதி லேகியம் :- கண்டங்கத்திரிவேர் 100-பலம், கடுக்காய் 100-பலம், 800-பலம் ஜலத்தில்க்கொட்டி, நாலில் ஒரு பாகம் மீறும்படியாக கியாழம் சுண்டக்காய்ச்சி, அதை வடிகட்டி
கடுக்காய் விரையை எடுத்துவிட்டு அந்தகியாழத்திலேயே போட்டு 100-பலம் வெல்லத்தை கலந்து காய்ச்சி பாகுபதம் வரும்போது அதில் அதிமதுரம், இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, ஏலக்காய் நாசகேசரம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் வகைக்கு 3-பலம் விகிதஞ் சூரணித்து போட்டு, தேன் 6-பலங்கள் சேர்த்து கிளறி
னால் லேகியம் தயாராகும். இதை சாப்பிட்டால், சுவாசங்கள், மார்பு நோய், அருசி, காசங்கள், சிரோரோகம், ஹிருத்ரோகம், இவைகள் குணமாகும்.
க்ஷ£த்திராதி லேகியம் :- கண்டங்கத்திரி 100-பலம், இவை களை 256-பலஞ் ஜலத்தில் கொட்டி, நாலிலொன்றாகக் கியாழஞ் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அதில் 100-பலம் வெல்லத்தை கலந்து, அதில் இருக்குங் கடுக்காய் விரையை யெடுத்து விட்டு அதை மறுபடியுங் கியாழத்திலேயே அரைத்து போட்டு லேகியபதமாக
சமைத்து ஆறிய பிறகு தேன் வார்த்து திரிகடுகு2 பலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் நாககேசரம் இவைகள் வகைகு 1/2 பலம் சூரணித்து அத்துடன் கலந்து கிளறி னால் லேகியம் தயாராகும். இதை கொடுத்தால் கபவிகாரம், சுவாசங்கள், கோழை, பஞ்சகாசங்கள், விக்கல், ஹிருதயரோகங்கள்
அபஸ்மாரம் இவைகள் நீங்கும். அக்கினிதீபனம் உண்டாகும்.
கண்டகாரியாதிலேகியம் :- கண்டங்கத்திரி 100 பலம், 256 பலஞ்சலத்தில் கொட்டி நான்கிலொன்றாய் கியாழம் சுண்டக்காய்ச்சி அதில் சீந்தில்கொடி, செவ்வியம், சித்திரமூலம், கோரைக்கிழங்கு, கடுக்காய்ப்பு, சுக்கு, திப்பிலி, மிளகு, பூனைக்காஞ்சொரி கண்டுபாரங்கி, சிற்றரத்தை, கிச்சிலிக்கிழங்கு வைகைக்கு
1 பலம் வீதம் சூரணித்துப் போட்டு சர்க்கரை 20 பலம், நெய் எண்ணெய் இவைகள் தனித்தனி பலம் 8, விகிதம் சேர்த்து லேகிய பதமாக கிளறி ஆறிய பிறகு தேன் 8 பலம், மூங்கிலுப்பு சூரணம் 4 பலம், திப்பிலி சூரணம் 4 பலம், இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து நெய்யில் ஊறிய பாண்டத்தில் லேகியத்தை வைத்து தானிய புடமிட வேண்டியது. பிறகு அந்த லேகியத்தை கடுக்காய் பிரமாணம் கொடுதால் காசங்கள், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.
வாசாவ லேகியம் :- ஆடாதோடை 100 பலம் 800 பலம் சலத்தில் கொட்டி நான்கிலொன்றாய் கியாழம் விட்டு அதில் கடுக்காய் சூரணம் , கற்கண்டு இவைகள் 64 பலம் கொட்டி லேகியபதமாக கிளறி ஆறிய பிறகு மூங்கிலுப்பு சூரணம் 2 பலம், திப்பிலி 1/2 பலம், சாதுர் சாதம், வகைக்கு 1 பலம் இவைகளை சூரணித்து தேன் 8 பலம், போட்டு கலக்கி தானியபுடமிட வேண்டியது. பிறகு கொடுத்தால் பீநசரோகம், இருதயரோகம், தேகமெலிவு, இரத்தவாந்தி, ரத்தபித்தம், கபம், க்ஷயரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.
திராக்ஷ¡தி லேகியம் :- கடுக்காய், காரைக்கிழங்கு, பூனைக்காஞ்சொரி, இவைகளை சூரணித்து நெய்,தேன் கலந்து சாப்பிட்டால் கொடூரமான சுவாசரோகங்கள் நிவர்த்தியாகும்.
ஹரீதிராத்தியவ லேகியம் :- மஞ்சள், மிளகு, திரா¨க்ஷ, திப்பிலி, சிற்றரத்தை, சுக்கு இவைகளை சூரணித்து அதில் வெல்லம் கலந்து கொடுத்தால் பிராணத்தை சங்கரிக்கும் சுவாசங்கள் நிவர்த்தியாகும்.
கண்டுபாரங்கி லேகியம் :- கண்டுபாரங்கி, கடுக்காய், கடுகு ரோகணி, அதிமதூரம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் சமஎடையாகச் சூரணித்து தேன் நெய் கலந்து கொடுத்தால் சுவாசரோகங்கள் நீங்கும்.
குடாத்தியவ லேகியம் :- வெல்லம், மாதுளம் பழத்தோல். திரா¨க்ஷ, திப்பிலி, சுக்கு இவைகளை சமஎடையாகச் சூரணித்து கொடிமாதுளம்பழரசம், தேன் கலந்து கொடுத்தால் சுவாசங்கள் நீங்கும்.
விபீதக லேகியம் :- தான்றிக்காய்த் தோ¨லா ஆட்டி மூத்திரத்தில் வேகவைத்து உலர்த்திச் சூரணித்து திரிகடிபிரமாணம் தேனுடன் கலந்து சாப்பிட்டுவர சுவாசகாசங்கள் நீங்கும்.
சுருங்கியாதி சூரணம் :- கடுக்காய்ப்பூ, சுக்கு, திப்பிலி, மிளகு கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கண்டங்கத்திரி, கண்டு பாரங்கி, புஷ்க்கரமூலம், ஜடாமாஞ்சி, இந்துப்பு, சவ்வர்ச்சலவணம்,
பிடாலவணம், காசலவணம், பாதிரிலவணம் இவைகளை சமஎடையாகச் சூரணித்து வெந்நீரில் சாப்பிட்டால் விக்கல், சுவாசங்கள், ஊர்த்துவவாய்வு, காசங்கள், அருசி, இவைகள் நீங்கும்.
சட்டியாதி சூரணம் :- கிச்சிலிக்கிழங்கு,கண்டுபாரங்கி, வசம்பு, சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய், பாதிரிலவணம், புஷ்க்கர மூலம், கடுக்காய்ப்பூ, இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன் கலந்து சாப்பிட்டால் சுவாசகாசங்கள் நீங்கும்.
பாரங்கியாதிசூரணம் :- கண்டுபாரங்கி, சுக்கு இவைகளைச்சூரணித்து இஞ்சி ரசத்தில் சாப்பிட்டால் சுவாசரோகம் நீங்கும்.
விடங்காதி சூரணம் :- வாய்விளங்கம், திப்பிலி, ஏலக்காய், இலவங்கப்பட்டை இவைகள் வகைக்கு 1/4-பலம், மிளகு 1/2-பலம், சுக்கு 4-பலம் இவைகளைச் சூரணித்து சூரணத்திற்கு சமம் சர்க்கரைக் கலந்து 1/8-பலம் விகிதம் சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள், சுரம், பிலீஹம், பாண்டு இவைகள் நீங்கும்.
தாடிம்பாதி சூரணம் :- மாதுளம்பழத்தோல், சுக்கு, பெருங் காயம், திப்பிலி, இந்துப்பு இவைகளைச் சூரணித்து கொன்னைப்புளிரசத்துடன் கலந்து சாப்பிட்டால் சுவாசங்கள், ஹிருத்ரோகம் இவைகள் நீங்கும்.
கூழ்மாண்டசிபா சூரணம் :- கலியாண பூசனிவேர் சூரணத்தை வெந்நீரில் சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள் இவைகள் நீங்கும்.
சுண்டியாதி சூரணம் :- சுக்கு 6-பாகம், திப்பிலி 5-பாகம்,மிளகு 4-பாகம், அதிமதுரம் 3-பாகம், லவங்கப்பட்டை 2-
பாகம், ஏலக்காய் 1-பாகம், இவைகள் யாவையுஞ் சூரணித்து இந்தச் சூரணத்திற்கு சமஎடை சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அக்கினிமந்தம், சுவாசம், காசம், கண்டரோகம், இருதயரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.
மர்க்கடீ சூரணம் :- பூனைக்காஞ்சொரி விரைச் சூரணத்தை தேன் நெய் இவைகளுடன் கொடுத்தால் சுவாசரோகங்கள் நிவர்த்தியாகும்.
பாரதாதி மாத்திரைகள் :- பாதரசம் கெந்தி, நாகபற்பம்,தாம்பிரபற்பம், சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், சர்ஜகாரம் இவைகள் சமஎடை சூரணித்து வெற்றிலை சாற்றினால் 10 நாள் அரைத்து மிளகு அளவு மாத்திரை செய்து சாப்பிட்டால் மந்தாக்கினி கபரோகம், சுவாசங்கள் இவைகள் நீங்கும்.
இலவங்காதி மாத்திரைகள் :- இலவங்கம், மிளகு, திரிபலை இவைகளை சூரணித்து வேலன் சக்கை கியாழத்தினால் அரைத்து மாத்திரை செய்து சாப்பிட்டால் சுவாசங்கள், காசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.
வேறு விதம் :- இலவங்கம், சுக்கு, திப்பிலி, மிளகு, நாகபற் பம்,கரிசனாங்கண்ணி, கண்டங்கத்திரி, தானிக்காய், இவைகளை சமஎடையாகச் சூரணித்து கற்றாழை ரசத்தில் அரைத்து மாத்திரை செய்து கொடுத்தால், சுவாசரோகங்கள் நிவர்த்தியாகும்.
திரிகடுகு மாத்திரைகள் :- சுக்கு, திப்பிலி, மிளகு, பொரித்த வெங்காரம், இவைகளை சூரணித்து வெற்றிலை ரசத்தில் அரைத்து மாத்திரை செய்து சாப்பிட்டால் சுவாசங்கள் நீங்கும்.
சுவாச குடோரிமாத்திரை :- வெள்ளெருக்கம் பூவுடன் சமனெடை மிளகு சேர்த்து கல்வத்திலிட்டு அரைத்து மெழுகு பதத்தில் குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இரு வேளை ஆடாதோடை சுரசம், இஞ்சி சுரசம், இவைகளில் கொடுத்து வர
சுவாசகாசம், முறைசுரம் முதையன குணமாகும்.
அர்க்காதிக்கிருதம் :- எருக்கப்பூ சுமார் 15 அல்லது 20 பூக்கள், இலவங்கம், இலவங்கப்பத்திரி, திப்பிலி வகைக்கு வராகனெடை 1/2 இவைகளைப் பொடித்து பால்விட்டு அரைத்து கற்கமாக்கி 5 பலம் பசு நெய்யுடன் சேர்த்து பதமுடன் காய்ச்சி கிருத பதத்தில் வடித்து வைத்து கொண்டு வேளைக்கு 1/2 தோலா எடை வீதம்
தினம் இரு வேளையாய் அருந்திவர சுவாசகாசம், நீர்பினசம் முதலியன குணமாகும்.
கஸ்தூரி மாத்திரை :- கஸ்தூரி வராகனெடை-1, சுக்கு வராக னெடை-4, சாதிக்காய் வராகனெடை-2, கோஷ்டம் வராக னெடை-2, குங்குமப்பூ வராகனெடை-3, இலவங்கம் வராக னெடை-2, அக்ராகாரம் வராகனெடை-2, திப்பிலி வராகனெடை-2, இவைகளை பொடித்து முறைப்படி கல்வத்திலிட்டு முலைப்பால் அல்லது இலவங்கக் கியாழமிட்டு ஒருஜாமம் அரைத்து சிறு குன்றியளவு மாத்திரைகளாய்ச் செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேன் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவர சுவாசகாசம், இருமல், கபக்கட்டு, நீர்பீனசம், கபசுரம் முதலியன குணமாகும். சிறுவர்கட்கு இம்மாத்திரையில் 1/4 அல்லது 1/2 பாகமும் குழந்தைகட்கு ஆறில் ஒருபாகமும் தாய்ப்பாலில் உரைத்து கொடுத்துவர சுரம், சன்னி, கபக்கட்டு மாந்தம், இசிவு முதலியன குணமாகும்.
தாளக மாத்திரை :- கற்சுண்ணாம்பினிடையே வைத்து பனங்கள் விட்டுத் தாளித்து மூன்றுமுறை சுத்திசெய்த தாளகம் ஒரு தோலா எடைக்கு எடுத்து அதை ஓர் மண்ணோட்டில் வைத்து அடுப்பிலேற்றி சிறுதீயாக எரித்து முலைப்பால், இஞ்சிச்சாறு, தும்பையிலைச்சாறு ஆகிய இவைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனி முறையே ஒவ்வொரு மணிநேரம் சுருக்குக் கொடுத்து இத்துடன் மொட்டு நீக்கிய கிராம்பு தோலா-1, உயர்ந்த பால்பெருங்காயம் தோலா-1 சேர்த்து கல்வத்திலிட்டு இஞ்சிச்சாறு விட்டு ஒரு ஜாமம் நன்கு அரைத்து மெழுகுபதத்தில் சிறுபயறு பிரமாணம் மாத்திரை கல்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்க.
இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இருவேளை தாய்ப்பால் அல்லது கம்மாறு வெற்றிலைச்சாறு இவைகளில் அனுபானஞ்செய்து குழந்தைகட்கு புகட்டிவர இருமல், கபகட்டு, கபமாந்
தம் முதலியன குணமாகும். பெரியவர்கட்கு வேளைக்கு 2-முதல் 4-மாத்திரைகள் வீதம் தினம் இருவேளை கம்மாறு வெற்றிலையில் வைத்து மடித்து மென்று தின்னும்படிச் செய்யலாம். இதனால் இருமல், ஈளை, சுவாசகாசம் முதலியன குணமாகும்.
திரிலோக சூடாமணிமாத்திரை :- சுத்திசெய்த லிங்கம், தாளகம், மனோசிலை, நாபி வகைக்கு கழஞ்சி-1, சுக்கு, மிளகு, திப்பிலி, பொரித்த வெங்காரம் வகைக்குப் பலம்-2, இவைகளை பொடித்து கல்வத்திலிட்டு இஞ்சிச்சாறுவிட்டு நான்கு ஜாமம் நன்கு அரைத்து மெழுகுபத்தில் குன்றியளவு மாத்திரைகளாய்ச் செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இருவேளை இஞ்சி சுரசம், ஆடாதோடை சுரசம், துளசி சுரசம், சிற்றரத்தைக் குடிநீர் முதலிய அனுபானங்களில் ஏதேனும் ஒன்றில் கொடுத்துவர சுவாசம், காசம், ஈளை, கபக்கட்டு, கபசுரம் முறை சுரம் முதலியன குணமாகும்.
திப்பிலி ரசாயணம் :- அரிசி திப்பிலி பலம் 10, மிளகு பலம் 5 சுக்கு பலம் 5, சீரகம் பலம் 2, கருஞ்சீரகம் பலம் 2, ஓமம் பலம் 2, சிற்றரத்தை பலம் 2, சித்திரமூலவேர்ப்பட்டை பலம் 1, தாளிசபத்திரி
பலம்1, இலவங்கப்பத்திரி பலம் 1, இலவங்கப்பட்டை பலம் 1, இலவங்கம் பலம் 1, கடுக்காய்த்தோல் பலம் 1, நெல்லிவற்றல் பலம்1, ஏலம் பலம் 1, தான்றிக்காய்த்தோல் பலம்1, இவைகளை இளவறுப்பாய் வறுத்துடித்து சூரணித்து சமன் சர்க்கரை சேர்த்து இதில் வேளைக்கு வெருகடிப்பிரமாணம் தினம் இரு வேளையாக அருந்தி வர
இருமல், ஈளை, சுவாசம், காசம், முதலிய கபநோய்கள் யாவும் குணமாகும்.
திப்பிலியாதிச்சூரணம் :- சிறுதிப்பிலி பலம் 2, சிறு நெரிஞ்சில் பலம் 2, சுக்கு பலம் 2, கண்டங்கத்திரிவிதை பலம் 2, அதிம தூரம் பலம் 2, அதிமதூரப்பால் பலம் 2, சிற்றரத்தை பலம் 2, அக்ராகாரம் பலம் 2, ஊமத்தம் விரை தோலா 1/2, அபினி தோலா 1/2. ஊமத்தம்விதையை எலுமிச்சம்பழசாற்றில் மூன்று நாள் ஊற வைத்து உலர்த்திவைத்துக்கொள்ளவும். பிறகு இத்துடன் அபினி நீங்காத மற்ற சரக்குடன் சேர்த்து இடித்து சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து கல்வத்திலிட்டு அபினியை சிறிது வெந்நீரில் கரைத்து சூரணித்து தெளித்து பிசறி ஒரு ஜாமம் நன்கு கலக்க அரைத்து உலர்த்தி பத்திரப்படுத்தவும். இதில் வேளைக்கு 5 முதல் 10 குன்றி எடை வீதம் தினம் இரு வேளை தேனில் கொடுத்தால் இருமல், சுவாசகாசம் முதலியன நீங்கு.
பஞ்சாரக்கிருதம் :- ஆடாதோடை, சீந்தில்கொடி, கரிசனாங்கண்ணி, போயாவரை, கண்டங்கத்திரி இவைகளின் ரசங்கள் 2, பாகம், நெய் 1 பாகம், இவைகளுக்கு சமமாக பால்கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி அதில் கண்டுபாரங்கி, வாய்விளக்கம், திரிபலை, சித்தரத்தை, திரிகடுகு, யவக்ஷ¡ரம், கடுக்காய்ப்பூ, இவைகளின் சூரணத்தை நெய்யிற்கு எட்டில் ஒரு பாகம் கலக்கி கொடுத்தால் சுவாசங்கள் க்ஷயங்கள் ரத்தபித்தம், ஹிருத்ரோகம், விஷசுரம், பஞ்சகாசங்கள் இவைகள் நீங்கும்.
பாரங்கீகுட ரசாயணம் :- கண்டுபாரங்கி, தசமூலங்கள்,கடுக்காய் இவைகள் வகைக்கு 100 பலம், 400 பலம் ஜலத்தில் போட்டு நாலாவது பாகம் மீறும் படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அதில் 100 பலம் வெல்லம் விரையை எடுத்து கடுக்காயைப்போட்டு மந்தாக்கினியால் லேகியபாகமாக சமைத்து அதில் திப்பிலி, மிளகு, சுக்கு இலவங்கப்பத்திரி , இலவங்கப்பட்டை, ஏலக்காய், இவைகள் வகைக்கு 1 பலம், யவக்ஷ¡ரம் 1/2 பலம், இவைகளின் சூரணமும் தேன் 6 பலமும் விட்டு கலக்கி வைத்துக்கொள்ளவும். வேளைக்கு ஒரு கடுக்காய் அளவு லேகியம் சாப்பிட்டால், சுவாசங்கள் ஐந்துவித காசங்கள் மூலவியாதி, அரோசகம், குன்மம், சூலை,க்ஷயம் இவைகள் நீங்கும். அக்கினி தீபனம்-பலம்-மேனி இவைகளையுண்டாக்கும்.
சுவாசரோகத்திற்கு பத்தியங்கள் :- பேதியாகும்படி செய்யல், வியர்வை வாங்கல், புகை குடித்தல், வாந்திசெய்தல் பகல் நித்திரை 60-நாள் பயிராகும் பழைய சிகப்பு அரிசி, கோதுமை, யவதானியம், முயல், மயில், காடை இவைகளின் மாமிசங்கள், காட்டு மிருகங்கள்,பக்ஷ¢கள் இவைகளின் மாமிசங்கள், பழைய நெய், ஆட்டுநெய் பால், தேன், புடலங்காய், கத்திரிக்காய், வெள்ளைப்பூண்டு, கோவைக்காய், எலுமிச்சன், திரா¨க்ஷ, ஏலக்காய், புஷ்க்கரமூலம், வெந்நீர், திரி கடுகு, கோமூத்திரம், இவைகள் சுவாசரோகத்திற்கு பத்தியங்க
ளென்று அறியவேண்டியது.
அபத்தியங்கள் :- ரத்தம் வடிதல், கிழக்கு காற்று, வாயுபதார்த்தங்கள், செம்மரியாடு, பால், நெய், கெட்டசலம், மீன்கள், கந்தமூலங்கள், கடுகு, ரூக்ஷம், சீதளம் ஆகிய அன்னபானங்கள், மூத்திரம், சர்தி, தாகம், சுவாசம், இவைகளை அடக்குதல், நசியம், வஸ்திகர்மம், சிரமை இவைகளை சுவாசரோகி நிவர்த்திக்க வேண்டியது.
3 comments:
பகிர்வுக்கு நன்றிங்க....
ஆஸ்துமாவை குணப்படுத்தும் மருத்துவ முறைகள் மிகவும் தெளிவாக எழதிஉள்ளீர்கள் நன்றிசார்.
வாழ்த்துக்கள்...
மிகவும் அருமை
கருத்துரையிடுக