செவ்வாய், அக்டோபர் 19, 2010

உங்களுக்கு ஒரு டெஸ்ட் ....(ஆஸ்த்மா மூலிகை பற்றி )

கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளில் -எந்த மூலிகை ஆஸ்த்மாவுக்கு மிக மிக நன்றாக வேலை செய்யும் ?..

கண்டு பிடித்தவர்கள் -பின்னூட்டத்தில் எழுதலாம் ..சரியாக சொல்பர்களுக்கு -அவர்களுடைய மருத்துவ ஆலோசனைக்கான பதினைந்து நாள் மருந்தை -இலவசமாக கூரியரில் அனுப்பித்தர முடிவு செய்துள்ளேன் ..(கால அவகாசம் -வியாழன் இரவு பத்து மணி வரை -21/10/2010-)..அதிகமான சரியான பதிலை சொல்லியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யபடுவர் 








ஊமத்தை   


Post Comment

24 comments:

Chitra சொன்னது…

சுக்கு - அவசியம். கண்டங்கத்திரியும் சிற்றரத்தையும் மற்றும் சில மூலிகைகளையும் சுக்குடன் சேர்த்து லேகியம் செய்வார்கள் என்று நினைக்கிறேன். அதி மதுரம் கூட சேர்க்க வாய்ப்புண்டு. ஊமத்தை - விஷம் அல்லவா?

பொன் மாலை பொழுது சொன்னது…

கண்டங்கத்திரி,அதன் இலைகள், பூ, காய் எல்லாமே ஆஸ்த்மாவுக்கு சிறந்த மருந்துதான்.

jagadeesh சொன்னது…

கண்டங்கத்திரி

Unknown சொன்னது…

கண்டங்கத்திரி
நீங்கள் தருகின்ற தகவல்களே மிகவும் உபயோகமாக இருக்கும் போது, இலவச ஆலோசனை இப்போது வெற்றியாளருக்கு இலவச மருந்தும்...
நலம் வாழ வாழ்த்துக்கள் sir.

curesure Mohamad சொன்னது…

இன்னும் பின்னூட்டம் எழுதலாமே ?..யார் அந்த அதிஷ்ட சாலி ?

பால முருகன் சொன்னது…

கண்டங்ககத்தரி வெள்ளை என்று கொழபீட்டேன்களே சார் ?..

Unknown சொன்னது…

ஊமத்தை- இதனை காய வைத்து, பொடி செய்து, தூளை ஒரு தாளில் சுற்றி வாயில் வைத்து புகையினை உறிஞ்சுவார்கள் என்று என் அப்பா சிறு வயதில் பார்த்து உள்ளார்.

jagadeesh சொன்னது…

ஒருத்தரே பல விடை சொன்ன என்ன பண்ணுவீங்க? எப்படியும் அனுபுவீங்கள்ள

curesure Mohamad சொன்னது…

@jagadeeshகடைசியில் பார்க்கலாம் ..எத்தனை நபர்கள் சரியாக எழுதி இருக்கிறார்கள் என்பதை முதலில் தொகுத்து பின் அவர்களை -குலுக்கலில்(அல்லது உங்களது ஆலோசனை படி )தேர்ந்து எடுத்து பின் அவர்களுக்கு தேவையான மருந்தை இந்தியாவில் எங்கிருந்தாலும் அனுப்பலாம் ..
ஜெகதீஷ் சார் ..நீங்களும் ஒரு ஆலோசனை சொல்லுங்களேன் ?

மங்கை சொன்னது…

தாங்கள் குறிப்பிடும் மூலிகை சிற்றரத்தை என்றே எண்ணுகிறேன்.. ஆதாரம் அகத்தியர் பாடல்..
"தொண்டையிற் கட்டுங் கபத்தைச் தூரத் துரத்திவிடும்
பண்டைச்சீ தத்தைப் பறக்கடிக்கும்-கெண்டை விழி
மின்னே கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்கும்
சொன்னோம் அரத்தைச் சுகம்"

- அகத்தியர் -

Unknown சொன்னது…

மூலிகை சிற்றரத்தை

jagadeesh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

//..(கால அவகாசம் -வியாழன் இரவு பத்து மணி வரை -21/10/21010-)..///

// 21010 // இந்த ஆண்டு எந்த காலண்டர்ல வரும்..

jagadeesh சொன்னது…

//கால அவகாசம் -வியாழன் இரவு பத்து மணி வரை -21/10/21010-)//அப்பாடா, பொறுமையாய் யோசித்துப் பதில் சொல்லலாம் போல இருக்கே. but ரொம்ப வருஷம் டைம் கொடுதுருகீங்க... கலியுகமே முடிஞ்சுடுமே! அதுக்கு அப்புறம் எங்களுக்கு மருந்து அனுப்பி என்ன பயன்,,,

ONLINE சொன்னது…

மூலிகை சிற்றரத்தை ithuthan sirantha marunthu

By mariselvam

curesure Mohamad சொன்னது…

@பெயரில்லாதவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி ..பிழையாக அடித்துவிட்டேன் ..அதை திருத்திவிட்டேன் ..கால அவகாசம் 21/10/2010

curesure Mohamad சொன்னது…

@jagadeeshஜெகதீஷ் சார் ..கலக்கிறீங்க ...தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி ..பிழையாக அடித்துவிட்டேன் ..அதை திருத்திவிட்டேன் ..கால அவகாசம் 21/10/2010 வருகிற வியாழன் மாலை பத்து மணி வரை

curesure Mohamad சொன்னது…

@மங்கைஉங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன் ..மூலிகை பாட்டினை எழுதியது அருமை ..தவறா ? .. சரியா? என்பது நாளை தெரிந்து கொள்ளுங்கள்

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

வெள்ளை கண்டங்கத்திரி...?

மச்சவல்லவன் சொன்னது…

கண்டங்கத்திரிதான் மிகவும் நன்றாகவேலைசெய்யும்.

curesure Mohamad சொன்னது…

இதற்கான பதில் அடுத்த போஸ்ட்டில் போடப்பட்டுள்ளது ..வெற்றியாளர் யார் ?

curesure Mohamad சொன்னது…

வெற்றியாளர் பற்றிய லிங்க் http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/10/blog-post_21.html

babu சொன்னது…

kandankathuri sri

கருத்துரையிடுக