செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல - லீலாவிலாஸ ரஸ -LEELA VILASA RASA


எச் .பைலோரை என்னும் வயிறு புண்ணை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க வல்ல -
லீலாவிலாஸ ரஸ   -LEELA VILASA RASA                     
(Ref-பைஷஜ்யரத்னாவளி - அம்லபித்தாதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       10          
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்
3.            தாமிரபற்பம் தாம்ர பஸ்ம            10 கிராம்
4.            அப்பிரக பற்பம் அப்ரக பஸ்ம         10          
5.            அயபற்பம் லோஹ பஸ்ம            10          

இவைகளையும் சேர்த்தரைத்து,

6.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீ ஸ்வரஸ  போதுமான அளவு
7.            தான்றிக்காய் கஷாயம் பிபீதகீ கஷாய போதுமான அளவு கொண்டு மூன்று
                                                                               
நாட்கள் அரைத்துப் பின்னர்     
                                                                                         
8.            கரிசலாங்கண்ணி சாறு ப்ருங்கராஜஸ்வரஸ கொண்டு ஒரு முறை பாவனை செய்து உலர்த்திப் பதத்தில் ரவைகளாக்கி 100 மி.கி. மாத்திரைகள் ஆக்கவும்.

அளவு:           

1 முதல் 4 மாத்திரைகள்.

தீரும் நோய்கள்:
 
வயிற்றில் புளிப்பு நீர் (அமிலம் அதிகமாக சுரத்தல் (அம்ல பித்தம்), வாந்தி (சர்தி), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாக).




தெரிந்து கொள்ள வேண்டியவை ..

1. அதிகமான வாய் புளிப்பு -புளிப்பு சுவைக்கு இந்த மருந்தை -காமதுக  ரச மற்றும் பாஸ்கர லவன சூரணத்துடன் கலந்து தந்து நல்ல பலனை பெறலாம் ..

2.கரிசாலை சாறு உள்ளதால் நிச்சயமாக எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது ..

3.வயிற்று  புண்ணை  ஏற்படுத்துவதாக கருதப்படும் எச் .பைலோரை என்னும் பாக்டீரியாவை அழிக்க  இந்த மருந்துக்கு சக்தி உள்ளது என்பது நிச்சயம் ..

4.நெஞ்சு வலி போல் தோன்றும் வயிறு புண்ணுக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும்

Post Comment

சனி, ஆகஸ்ட் 03, 2013

ஆரோக்ய வாழ்வு என்ற கருத்து திருட்டு தளம்

ஆரோக்ய வாழ்வு என்ற கருத்து திருட்டு தளம்  பேஸ்  புக் தளம் மற்றும் காப்பி அடிக்க கூடாது என்று வாட்டர் மார்க் படத்திற்கு போடும்  .. காப்பி அடிக்கும் தளத்தின் பெயரை மறந்து கூட நன்றி என்று தளத்திற்கு போட மறுப்பது ஆரோக்யமா ?..

எனது தளத்தின் இருந்து அச்சு அசல் மாறாமல் காப்பி அடித்த இந்த தகவலை யாரை கேட்டு காப்பி அடித்தீர்கள் ..நீங்கள் கருத்து திருடரே ..

எங்களை போன்றவர்களை எழுத விடாமல் காப்பி அடிக்கும் உங்களை என்ன செய்ய ?


ஆரோக்ய வாழ்வு என்ற கருத்து திருட்டு தளம் https://www.facebook.com/arogiyam

Post Comment

Pages (31)123456 Next