அமுக்கராச் சூரணம்
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
“ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி
“
- அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம்
– 360
சேரும் பொருட்களும் அளவும் :
இலவங்கம் 0.39
% சிறுநாகப்பூ 0.79 %
ஏலம் 1.57
% மிளகு 3.15
%
திப்பிலி 6.30
% சுக்கு 12.60 %
அமுக்கரா வேர் 25.20 % சர்க்கரை 50.00 %
அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம்,
இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம்,
வறட்சி, கை கால் எரிவு தீரும்
குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை ..
சித்த அமுக்ரா சூரணம் என்று கடைகளில் கிடைக்கும் சித்த மருந்தும் -அஸ்வகந்த சூர்ணம் என்று கிடைக்கும் ஆயுர்வேத மருந்தும் ஒன்றில்லை ..
உடல் பலஹீனத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் வெட்டை சூட்டை தணிக்கும் .
உடலுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாது குன்ம நோய் -உடல் எரிச்ச்சலை போக்கும்
ஒருதடவைக்கு கிட்டதட்ட பத்து கிராம் எடுத்து உபயோகிப்பது நல்லது ..
கை கால் வலிகளுக்கும் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தரும்
குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட்டால் மட்டுமே பலனை உணர முடியும் .
பல பற்ப சிந்தூரங்களுக்கு கலந்து கொடுக்கும் தாய் மருந்தாக -Base மருந்தாக இதனை பயன்படுத்தலாம் .
பாலியல் உணர்வை வளர்க்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
இதில் கலந்திருக்கும் சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை மட்டுமே