ஞாயிறு, மே 11, 2014

பிணி -பணி -இனி ..

இயற்கை ஒரு போதும் தனது கடமையை செய்ய தவறுவதில்லை  ...என்றார் நம்மாழ்வார் அவர்கள் ....

பிணி நீக்கும் பணியில் ..ஒய்வு கிடைக்கும் போது எழுதினால் போதும் என்று சிறிய இடைவேளை எடுத்தது பெரிய இடைவேளை ஆகி போனது ..இந்த எண்ணத்தை மாற்றிட சொன்ன விஷயம் இது தான் ..

இரண்டு நாளைக்கு முன் ஒரு தொலை பேசி அழைப்பு ..

சார் நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம் ..மிக்க நன்றி  என்றார் அவர் ...நன்றி சொல்லும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்றேன் அவரிடம் ..எனக்கு வயது ஐம்பத்து ஒன்று  ..எனது மனைவிக்கு வயது நாற்பத்தி ஒன்று ..திருமணமாகி இருபத்தி மூன்றாண்டுகள் ஒடி விட்டது ..பார்க்காத வைத்தியமில்லை ..செய்யாத செலவுமில்லை ..டெஸ்ட் ட்யூப் பேபி கூட பொய்த்து போனது ...நம்பிக்கை பொய்த்து போனது ..ஆறு மாதம் முன் உங்களது ஆயுர்வேத மருத்துவ தளம் படித்தேன் ..அதில் உள்ள ஒரு மருந்தை உங்களிடம் கேட்காமலே சாப்பிட்டு வருவோம் என்று ( பல சர்பிஸ் என்னும் நெய் மருந்து அது ) எனது மனைவியை மூன்று மாதம் சாப்பிட சொன்னேன் ..அவர்களும் அதை சாப்பிட்டு வந்தார்கள் ..நானும் உங்களது தளத்தில் உள்ள ஒரு மருந்தை எடுத்து  வந்தேன் ..இப்போது எனது மனைவி கரு உண்டாகி இருக்கிறார்கள் 
கரு வளர்ச்சி நன்றாக இருப்பதாக ஒரு பெண் மருத்துவரும் உறுதி படுத்தி உள்ளார்கள் ..பிரதி பலன் பாராமல் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரை எங்களை எவ்வளவு சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது ..என்றார் ..சார் ஒரே ஒரு விண்ணப்பம் ..என்ன என்றேன் ?..நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் ..இடைவேளை விடாமல் எழுத வேண்டும் ..நிச்சயம் எல்லோருக்கும் பலன் தரும் ..மருத்துவர் அல்லாது பலர் மூலிகை பற்றி எழுதும் போது அத்துறை உள்ள நீங்கள் மட்டுமே சரியான தகவலை தர முடியும் ..எழுதத்தான் வேண்டும் என்றார் ..

பிணி நீக்கும் பணியே -என் பணி என்றிருந்தேன் ..எழுத்துக்களும் பிணி தீர்க்கும் என்று உணர்த்திய  அவரது  வேண்டு கோளுக்கு இணங்க ..
பிணி -பணி -இனி -கட்டுரைகள் தொடரும் ..Post Comment

1 comments:

Thiyagarajan Punniyakotti சொன்னது…

Sir, We also have same Problem, and we completed 17 yrs, but no baby, pls suggest the medicine for me and my wife

கருத்துரையிடுக