வெள்ளி, மே 22, 2015

மூலிகை தந்தை வைத்ய உஸ்மான் அலி இயற்கை எய்தினார்

மூலிகைகளின் அரசர் ,மூலிகைகளின் தந்தை  என்று எங்களை போன்ற மருத்துவர்களால் போற்றப்படும் வைத்ய உஸ்மான் அலி அவர்கள்  21/5/2015 அன்று இயற்கை எய்தினார் ..

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று .

  • அவர் ஒரு நடமாடும் மூலிகை அகராதி ..
  • தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று பல தாவரவியல் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவர் ..
  • மகாராஷ்டிரா ஆரோக்ய மண்டல் போன்ற பெரிய பெரிய தொண்டு நிறுவங்களை நிறுவ மூல காரணமானவர் ..
  • உலக புகழ் பெற்ற குஜராத் ஆயுர்வேத பல்கலை கழகத்தின் Asst.Director  that is formar OSD Gujarat Ayurvedic University -யாக பணியாற்றியவர்
  • சென்னை அடையார் இம்ப்காப்ஸ் என்ற சித்த ஆயுர்வேத யுனானி  மருந்தகளை தயாரிக்கும் மிக பெரிய நிறுவனத்தை துவங்கிய காலத்தில் இவருடைய பங்கு மிக அளப்பரியது .தலைமை தாவரவியல் வல்லுனராக மட்டுமல்லாது இம்பாகாப்ஸ் செம்மையாக நடைபெற சிறப்பு துவக்கம் தந்தவர் .
  •  டேம்ப்கால்  நிறுவனத்தின் முதல் தலைமை தாவரவியல் வல்லுனராகவும் இருந்தவர்  பல மூலிகைகளை மக்களுக்கு சென்றடைய உதவியர் .
  • CTMR பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைவர் .இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு களப்பணிகள்  ஆராய்ச்சிகள் செய்தவர் .
  • அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் ஒரு மூலிகை தந்தை .பல சித்த மருத்துவர்களுக்கே மூலிகைகளை அடியாளம் காட்டி , அவர்களுக்கு தெரியாத எளிய பயன்களை சொல்லி கொடுத்த ஆசான் .
  • கிட்னி பெயிலியருக்கு பூனை மீசை மருந்து மிக சிறப்பாக வேலை செய்யும் என்று கண்டு பிடித்து சொன்ன மிக சிறந்த மேதை http://www.ayurvedamaruthuvam.blogspot.com/2014/01/blog-post_16.html
  • எங்களது  சென்னை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தை துவக்கி வைத்தவர் .http://www.ayurvedamaruthuvam.blogspot.com/2014/11/blog-post.html 
  • என்னை அவரது மகன் என்று குற்றாலம்  பராசக்தி  கல்லூரியின்  ஒரு மிக பெரிய கருத்தரங்கில் சொல்லி மகிழ்ந்தவர் .My son என்று என்னை அழைப்பவர் .
  • ஒற்றை மூலிகை பயன் பற்றி  எங்களை போன்ற மருத்துவர்களுக்கு வழி காட்டியவர் .
  • எனது உடன் பிறவா சகோதரர் Dr.சித்தீக் அலி MD ( Siddha)  அவர்கள் எப்போதும் வைத்ய உஸ்மான் அலி  அவர்களிடம் இருந்து பல இருந்து பல விஷயங்களை கற்று மருத்துவர்களுக்கு வழி காட்டியவாறு .முதலாளி என்று எனது சகோதரர் சித்தீக் அலி அவர்களை அழைப்பர்கள் .
  • யாரிடமும் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காத மூலிகை மேதை அவர் .
 எம்மை போன்ற மருத்துவர்களுக்கு வழி காட்டியாக ,தந்தையாக ,ஆசானாக இருந்தவர் 21/5/2015 வியாழன் காலையில் இயற்கை  எய்தினார் .அவர்கள் இடத்தை யாரும் நிரப்ப இயலாது .மாறா துக்கத்துடன் கவலையுடனும் அவரது மறுமை வாழ்வின் வெற்றிக்காக அழுது பிரார்த்தித்தவனாக ...



Post Comment

0 comments:

கருத்துரையிடுக