வெள்ளி, அக்டோபர் 28, 2016

தேசிய ஆயுர்வேத தினம் அக்டோபர் 28

பல்லாண்டு வாழ பழமையான மருத்துவ  அறிவியல் ...
வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழும் முறையை அவசர உலகில் மறந்த இந்த நாள் மனிதருக்கும் சொல்லி கொடுக்கும்  இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவம் இந்த ஆயுர்வேதம் ...





உள்ளே வெளியே ........உள்ளே சாப்பிட அறிவியல் நிரூபிக்கப்பட்ட வேதியியல் கெமிக்கல் மருந்துகள் ...வெளியே பூசிக்கொள்ள இயற்கை மூலிகைகள் ...இது  இன்றைய  மக்களின் மன நிலை ...உள்ளே தானே ஆயுர்வேதம் மருத்துவம் பயன்படணும் ...ஆனால் இங்கே அத்தனையும் தலை கீழ் ..

பிரிந்து பிரிந்து தனி தனியாக ஆனது இந்த ஆக்டோபஸ் -ஆயுர்வேதம் ...
அக்டோபஸ் என்னும் கடல் உயிரினத்தை இரண்டாக பிளந்தால் அது தனி தனி அக்டோபஸ் ஆக மாறி வாழும் என்பது உண்மை ..அதே போல் ஆயுர்வேதத்தின் கூறுகளான யோகா ,Pharmacognosy ,அறுவை மருத்துவம் ,இன்னும் பல பல ...ஆனால் தாய் இங்கே கவனிப்பாரின்றி கிடக்கிறது ...


நல்லதை சொல்ல விளம்பரம் வேண்டும் ..மோரை கூவி கூவி விற்க வேண்டிஉள்ளது ... கள்ளுக்கடைக்கு விளம்பரமே தேவை இல்லை ..அகிலாண்ட மன்னவருக்கு உதவிய ஆயுர்வேதத்தை கடைசி குடி மகனுக்கும் கொண்டு செல்ல தேவைபடுகிறது விழிப்புணர்வு என்னும் விளம்பரம் ..


அடுப்பறையில் தேட சொன்ன ஆயுர்வேதம் ..உண்ணும் உணவை வைத்து உடல் வளர்க்கும் ,உயிர் வளர்க்கும் முறை சொன்னது ஆயுர்வேதம் ..ஆனால் இங்கே மஞ்சளை  கூட இனி பாக்கெட்டில் மட்டுமே பார்க்க போகிறது இந்த முன்னேறிய உலகம் ...இப்போது உள்ள பாட்டிக்கு அஞ்சரை பெட்டியும் தெரியவில்லை ..பேர குழந்தையோ உலக்கை ,அம்மியை இனி அருங்காட்சியகத்திலே மட்டுமே பார்க்க போகிற வருங்கால சந்ததிக்கு அவசரமாய் தேவை ஆயர்வேதம் ...

கண்ணை விற்று காட்சி வாங்கும் புதிய தலைமுறைக்கு தேவை அவசரமாய் ஆயுர்வேதம் ..cut copy paste உலகத்திலே ,எல்லாம் இருக்கிறது மாயை உலகத்திலே ,விவசாயம் கூட Facebook Farmville செய்கிறது விளையாட்டாய் இக்கால குழந்தைகள் ...சாப்பிடுவது உரம் , விஷம் என்று தெரியாமல் விவசாயம் மறந்த உலகுக்கு ஆயுர்வேதம் வேண்டும் நாம் உயிர் வாழ மட்டுமல்ல நமது தலைமுறைக்கு  கூட ..


ஆயிரம் தினத்தில் ஒன்றல்ல இந்த தேசிய ஆயுர்வேத தினம் ..காதலுக்கு ஒரு தினம் ,குழந்தைக்கு ஒரு தினம் ,எயிட்ஸுக்கு ஒரு தினம் ..என்று அனுதினும் ஒரு தினம் கொண்டாடும் உலகத்திலே இந்த ஆண்டு முதல் தேசிய ஆயுர்வேத தினம் அக்டோபர் 28 ....மக்களுக்கு ஆயுர்வேதம் சென்றடைய ,ஆயுர்வேதத்தால் மக்கள் நோயின்றி வாழ ,மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக இந்த தினம் ...


பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தை மக்களுக்கு கொண்டு செல்ல என்னால் இயன்ற முயற்சிகள் பல செய்தாலும் ...இந்தியாவே ஆயுர்வேதத்தை கொண்டாடும் ஒரு நிலை வந்த மகிழ்ச்சியில் மக்களுக்கு வேண்டி விரும்பி கேட்டு கொள்வது ....


  1. ஆயுர்வேதம் என்பது ஆயுர்வேதிக் அழகு நிலையம் இல்லை ..ஆயுர்வேதிக் சோப்பு என்று ஒன்று இல்லை ..ஆயுர்வேதம் என்றால் வெளிப்புற சிகிச்சைகள் மட்டுமல்ல .ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை அறிவியல் ...
  2. எந்த நோய் என்றாலும் நோய் வராமல் தடுக்க ,நோயை கட்டுபடுத்த ,நோயை  குணப்படுத்த ஆயுர்வேதம் என்றும் உதவும் ...
  3. நோய் வந்த உடன் நாட வேண்டியது ஆயுர்வேதம் மட்டுமே ...எல்லா மாற்று சிகிச்சைகளை பார்த்து விட்டு ..இனி முடியாது  என்ற உடன் கடைசியில் பார்க்க வேண்டிய முடிவல்ல ஆயுர்வேதம் ...ஆயுர்வேதத்தில் உங்கள் ஆரோக்கியம் ஆரம்பிக்கட்டும் ...
  4. முறையாக படித்த மருத்துவரிடம் மட்டுமே ஆயுர்வேத சிகிச்சை எடுக்க வேண்டும் ..போலிகளிடம் ஏமாந்து ஆயுர்வேதத்தை குறை சொல்லாதீர்கள் ...ஆயுர்வேதம் என்றும் ஏமாற்றம் அளிக்காது ..
தொடரும் ..


ஆயுர்வேத மருத்துவன் டாக்டர் அ முகமது சலீம் என்கிற Dr.Curesure.,,தொடர்புக்கு ஈமெயில் -curesure4u@gmail.com..cel 90 4222 5333




Post Comment