வியாழன், ஜூலை 26, 2012

அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodhaya Rasa


அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodahya Rasa
 (ref -பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக        30          


இவைகளை நன்கு அரைத்துக் கறுத்த கஜ்ஜளி செய்து அத்துடன்,
1.            தாமிரபற்பம் தாம்பர பஸ்ம      20 கிராம்
2.            அயபற்பம் லோஹ பஸ்ம       20          
3.            அப்பிரக பற்பம் அப்ரக பஸ்ம    50          

இவைகளைச் சேர்த்தரைத்துப் பின்னர்,


1.            பொடித்துச் சலித்த மிளகு மரீச்ச                  165 கிராம்
2.            பொரித்துப் பொடித்த பெருங்காயம் ஹிங்கு        5             
3.            எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து விழுதாக்கிய
       நாபி ஷோதித வத்ஸநாபி                      30          

                                இவைகளைச் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறு, அத்திப்பட்டைக் கஷாயம் (உதும்பரத்வக் கஷாய), லவங்க கஷாயம் (லவங்க கஷாய) இவைகளை விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.


அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாக சுரத்தல் (அம்லபித்தம்), ரத்த சோகை (பாண்டு), காமாலை (காமில), கல்லீரல், மண்ணீரல் பெருத்தல் (யக்ருத் ப்லீஹ வ்ருத்தி), ரத்தப் போக்கு (அஸ்ரஸ்ருதி), சூதக சூலை (ஆர்த்தவசூல), பெரும்பாடு (அஸ்ரிக்தர), கருப்பை நோய் (யோனி ரோக)

  •  காய்ச்சலில் சுக்கு, கொத்தமல்லி, மிளகுக்கஷாயத்துடன்  இது வழங்கப்படுகிறது. 

  • பாண்டு, காமாலை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் போன்றவற்றில் திரிகடுகுச் சூர்ணம், அன்னபேதிச் செந்தூரம், கரிசலாங்கண்ணித்தழை ஆகியவர்றுடன் தரப்படுகிறது. 

  • அமுக்கராச் சூரணத்துடன் கலந்து இதனை ரத்தப்போக்கு, சூதக சூலை, பெரும்பாடு, கருப்பைக் கோளாறு போன்றவற்றுக்கு தருவது வழக்கம்.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ரக்த வஹ  ஸ்ரோதஸ் சார்ந்த நோய்களை குணபடுத்தும் ..\
  2. பெண்களின் அதிக உதிரப்போக்கினால் வரும் அனீமியாவை சரிசெய்யும் ..கருப்பையையும் வலுபடுத்தும் ..
 

Post Comment

ஞாயிறு, ஜூலை 22, 2012

அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும் அசோகாதிவடீ-Ashokadi vati


அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும்
அசோகாதிவடீ-Ashokadi vati
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பொடித்த அசோகப்பட்டை அசோகத்வக் 500 கிராம்
2.            தண்ணீர் ஜல                   8.000 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து ஒரு லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி மறுபடியும் வடிகட்டிய அக்கஷாயத்தைக் கொதிக்க வைத்து நன்கு கெட்டியாகும் வரை குறுக்கி அத்துடன் பொடித்துச் சலித்த அசோகப்பட்டைச் சூர்ணம் 60 கிராம் சேர்த்து நன்கு கலக்கிக் கிளறவும். இது அசோக ரஸக்ரியை எனப்படும்.

1.            அசோகப்பட்டை ரசக்கிரியை அசோகரஸக்ரியா    100 கிராம்
2.            அன்னபேதிச் செந்தூரம் காஸீஸ பஸ்ம                25           “
இவைகளைக் கல்வத்திலிட்டு அசோகப்பட்டைக் கஷாயம் (அசோகத்வக் கஷாய) விட்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

                               
 அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன்.

                                 
தீரும் நோய்கள்:  



பெரும்பாடு (அஸ்ரிக்தர), சூதகக் கட்டு (நஷ்டார்த்தவ (அ)ஆர்த்தவரோத), கருப்பை / பெண்குறி வலி (யோனி சூல), சூதக வலி (ஆர்த்தவசூல (அ) ரஜக்ரிச்சர), கருப்பை சார்ந்த நோய்கள் (கர்பாஸய ரோக).

                
 மேற்கூறிய நிலைகளில் இது கருவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, மிளகாய் விதை, நீர்முள்ளி விதை, சுக்கு, கொத்தமல்லி ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுவது வழக்கம்.

              
  இது கருப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. அதிக உதிரப்போக்கை இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. மாதவிலக்கில் ஏற்படும் வலிக்கு சப்தசார கஷாயத்துடன் மூன்று மாத விலக்கு வரை சாப்பிட நன்கு பலன் தரும்
  3. குறிப்பு -அசோகபட்டை என்று இப்போது கிடைப்பது அசோகா பட்டை இல்லை ..நெட்டிலிங்கம் என்னும் மரத்தின் பட்டை தான் ...

Post Comment

கிராணிக்கும் ,பேதிக்கும் ..காலராவுக்கும் மருந்தாகும் அஷ்டாக்ஷரீ குடிகா-Astaksheeri Gutika


கிராணிக்கும் ,பேதிக்கும் ..காலராவுக்கும் மருந்தாகும்
அஷ்டாக்ஷரீ குடிகா-Astaksheeri Gutika
(ref-ஆரோக்ய கல்பத்ருமம் க்ரஹணீ சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அபின் அஹிபேன                        10 கிராம்
2.            சந்தனம் சந்தன                           10          
3.            செஞ்சந்தனம் ரக்தசந்தன                   10          
4.            ஜாதிக்காய் ஜாதீபல                        10          
5.            சுத்தி செய்த லிங்கம் ஷோதித ஹிங்குள    10          
6.            திப்பிலி பிப்பலீ                            10          
7.            பொரித்த பெருங்காயம் ஹிங்கு           10          
8.            அதிவிடயம் அதிவிஷா                   10          

இவைகளை அபின், இலிங்கம் நீங்கலாகப் பொடித்துச் சலிக்கவும். பின்னர் கல்வத்திலிட்டுப் பொடித்துச் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தறைத்த லிங்கத்துடன் க்ஷெ சூரணத்தைச் சேர்த்து,

1.            வில்வமூலம் பில்வமூல
2.            சுக்கு சுந்தீ
3.            சீரகம் ஜீரக
4.            சிறுகாஞ்சூரிவேர் துராலபா
5.            கோரைக்கிழங்கு முஸ்தா
6.            ஓமம் அஜமோதா
7.            கொத்தமல்லி விதை தான்யக

இவைகளைக் கொண்டு தயாரித்த கஷாயம் விட்டரைத்து விழுதானவுடன் அபினியைச் சிறு, சிறு துண்டுகளாக்கிச் சேர்த்து நன்கு கரைய அரைத்துப் பின்னர் எலுமிச்சம்பழச் சாறு (ஜம்பீரஸ்வரஸ) விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அபினி பொடிக்க முடியாத ஒரு பொருளாகையால் அதை மேலே கூறிய கஷாயத்தை விட்டு நன்கு கரைத்தோ அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சிறிது கஷாயம் விட்டு நன்கு அரைத்தோ சேர்க்க வேண்டும்.

அளவும் அனுபானமும்:      

ஒரு மாத்திரை வீதம் இரண்டு அல்லது மூன்று வேளைகள். தயிர், மோர், தண்ணீர் அல்லது தேனுடன் கொடுக்கவும்

.
தீரும் நோய்கள்:  


பேதி (அதிஸாரம்), சீதபேதி (அ) சீதக்கடுப்பு (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), ரத்தமூலம் (ரக்தார்ஷ), இரத்தக் கொதிப்பு.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. அபின் இப்போது கிடைப்பது அரிது ..அரசு நெறிமுறைப்படி மருந்து கம்பெனிகள் வாங்கி சேர்ப்பது மிக மிக கஷ்டம் ...
  2. இந்த மருந்தும் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை ..

Post Comment