வியாழன், நவம்பர் 22, 2012

ஆண்மையை மட்டும் அதிகரிக்குமா அமுக்ரா சூர்ணம்


சித்த மருத்துவத்தில் கிடைக்கும் அஸ்வகந்தா சூர்ணம் (அமுக்ரா சூர்ணம்-Amukra choornam )ஆயுர்வேத மருத்துவத்தில் கிடைக்கும் அஸ்வகந்தா சூர்ணமும் Aswagndha choornam ஒன்றா ?

ஒரேடியாக ஆயுர்வேத கட்டுரைகள் எழுத படிக்கவும் போரடிக்கும் என்று சித்த மருத்துவம் பற்றி ..


ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் செய்யும் முறை -பயன்பாடுகள் பற்றி படிக்க இங்கே எனது பழைய கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ..


சித்த மருத்துவத்தில் அமுக்ரா சூர்ணம் செய்யும் முறை ..

Ref-சித்த வைத்திய திரட்டு

ஆதாரப் பாடல் :


    “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
       குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
       தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
       தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
       வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
      விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
      நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
     நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
     செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “

                               -    அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் - 360

சேரும் பொருட்களும் அளவும் :

இலவங்கம்             0.39 %      
சிறுநாகப்பூ             0.79 %        
ஏலம்                         1.57 %      
மிளகு                       3.15 %
திப்பிலி                    6.30 %      
சுக்கு                         12.60 %
அமுக்கரா வேர்    25.20 %     
 சர்க்கரை                 50.00 %

அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :

எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும். 

சுரத்திற்கு ( டெ ங்கி  போன்ற விஷ காய்ச்சல்கள்) பின் சிறந்த உடல் தேற்றியாக  பயன்படுத்தபடுகிறது 

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

  1. ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் -ஒரு ஒரு மூலபொருள் -சீமை அமுக்ரா  மட்டும் ..ஆனால் சித்த அமுக்ரா சூரணத்தில் எட்டு பொருட்கள் சேரும்
  2. ஆயுர்வேத அஸ்வகந்தா சூர்ணம் சற்று கசக்கும் -ஆனால் சித்த அமுக்ரா சூரணம்  நன்றாக இனிக்கும் -ஏனென்றால் அதில் சர்க்கரை (நாட்டு ) சேருவதால் ..
  3. இதே போல் தான் ஆயுர்வேத மருந்தும் -சித்த மருந்தும் ஒன்றல்ல ..பெயரளவில் ஒன்றாக இருந்தாலும் கூட ..ஆனால் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல ..
 


Post Comment

Pages (31)123456 Next