அலட்சியமும்.. எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கும்.. அரை குறை அறிவும்.. மருந்துக்கு செலவழிப்பத்தில் கஞ்ச தனமும்..
உங்களை என்றும் நோயின் முற்றிய நிலைக்கு தள்ள வைக்கும்.. #avarampoo #avaraikudineer #tamilhealth #unavemarunthu #nalamvazha #sarkarainoi #diabetes #homeremedy #ignore #madhumeham #alshifaayush #ayurveda #siddha #siddhamedicine #ayurvedamedicine Please share if this message is true
எலும்பு தன்னாலே உடைதல் ,கிட்னி பெய்லியர் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிற ஆன்டாசிட் என்கிற அரக்கன் .சாப்பிட்ட உணவை எளிதாக செரிக்க –வெற்றிலை பாக்கு உதவியது அந்த காலம் ..கொஞ்சம் வயிறு வலி ,வயிறு உப்புசம் வந்தாலோ தொலைக்காட்சி விளம்பரம் பார்த்துவிட்டு Pifizer கம்பெனியின் Gelusil MPS, Abbolt கம்பெனியின் Digene, GSK கம்பெனியின் Eno போன்ற மாத்திரைகளும் மருந்துகளும் தாராளமாக உணவோடு சாப்பிடும் விருந்தாக மாறிவிட்டது இந்த காலம் .#antacid #badeffectofantacid #sideeffects#indigestion #blotting #ஆன்டாசிட் #பால்மருந்து #செரிமானம்இல்லை #வயிறுவலி, #alshifaayush #சலீம் #ஆயுர்வேதியம்
ஆன்டாசிட் Digene (Mg 185mg Al 830mg), Gelusil (Mg 250mg Al 250mg) போன்ற மருந்துகளில் அதிக அமிலத்தன்மையை நடுநிலையாக்கும் அலுமினியம், மெக்னீசியம் கால்சியம் போன்ற காரத்தன்மையுடைய உலோகங்களே உள்ளன. இப்போது, ‘ஒரே வேளை’ மருந்தில் அமிலம் சுரக்கும் சுரப்பிகளை நிறுத்தும் Proton pump inhibitors (PPIs) மருந்துகள் இருப்பதால், ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னும் –பின்னும் அமிலத் தன்மையை குறைந்து வயிற்றில் உள்ள அமிலம் நீர்த்து போய் விடுகிறது .பர்சில் பாக்கெட்டில் எப்போதுமே ஸ்டாக் வைத்துள்ளவர்கள் நம்மில் பலர் இந்த மிட்டாய் மாத்திரை,கேஸ் மாத்திரை ,சப்பி சாபிடற மாத்திரை , பால் மருந்து, ரோஸ் மருந்து என்று பல பெயர்களில் அழைக்கபடுகிற இந்த ஆன்டாசிட் மருந்துகள் –அலுமினியம் ஹைட்ராக்சைட்,மக்னேசியம் ஹைட்ராக்சைட்,கால்சியம் ஹைட்ராக்சைட் போன்ற வேதி பொருளை உள்ளடக்கியது . அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனைபக்க விளைவுகள்1. வயிற்றில் உள்ள அமிலத்தன்மை குறைவதால் –வயிறு புரதத்தை செரிக்கும் தன்மையை இழந்து விடும்..எனவே பல அமினோ ஆசிட் என்னும் புரதத்தின் கடைசி பொருளின் கலவைகள் தன்னில் ஒன்று இணைந்து இல்லாமல் தனி தனியாக விட படுவதால் ..குடல் இந்த புரதத்தை உறிஞ்சாமல் விட்டு –ஆட்டோ இம்யூன் நோய்கள் வரவும் அதே சமயத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்த போகவும் நிறைய வாய்ப்புள்ளது..எனவே சாதாரண ஜெலுசில் ,டைஜின் போன்ற ஆண்டாடிசிட்கள் ஆட்டோ இம்யூன் நோய்களான –சொரியாசிஸ் ,ருமாடாய்ட் ஆர்த்ரைடீஸ் , ஆட்டோ இம்யூன் தைராய்ட் ,SLE போன்ற பெரிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் .2. குடல் உறிஞ்சிகள் –வைட்டமின்களை கிரகிக்கும் தன்மை இழந்து B 12 மாத்திரைகளை கிலோ கணக்கில் எடுத்தாலும் இரத்தத்தில் சேர விடாது ..ஆக நரம்பு சமந்தமான நோய்கள் உருவாகும்3. இருப்பு சத்து கிராக்கிம் தன்மையும் மொத்தத்தில் இழந்து போகவும் வாய்ப்புகள் இந்த ஆன்டாசிட் எடுத்தால் அதிகம்4. மிக மிக முக்கியமாக இந்த ஆன்டாசிட்களில் உள்ள வேதி பொருள்கள் ..உடலின் மக்னீசியம் சத்தை கிராக்கும் தன்மை இழந்து –சதைகள் வலு விழந்து போய் விடும் நிலையும்..மக்னீசியம் குறைபாட்டால் உடல் கடுமையான சோர்வை பெரும்5. ஆன்டாசிட்களின் மிக முக்கியமான அதி பயங்கர பக்க விளைவுகள் –உடலின் கால்சியம் சத்தை கிரகிக்கும் தன்மை இழந்து ,அமைன் (க்ளுகோஸ் அமைன்) என்கிற குருத்து எலும்பு வளர்க்கும் புரதம் இழந்து எலும்பு அடர்த்தி குறைந்து –ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்பு வலு விழக்கும் நோய் ஏற்பட்டு ,எலும்பு எளிதில் உடையும் தன்மையும் உண்டாகிறது ..அதனால் கால் மூட்டு தேய்மானம் ,இடுப்பு எலும்பு தேய்மானம் ,போன்ற தேய்மான நோய்கள் எளிதாக வந்துவிடும்.6. பசியின்மை ,மலச்சிக்கல் ,சதை பலஹீனம் போன்றவை அலுமினியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும் .7. மலச்சிக்கல் ,அதிக வாயிற்று பொருமல் ,அடிக்கடி சிறுநீரக கற்கள் ,பித்தப்பை கற்கள் உருவாக கால்சியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்8. சோடியம் பை கார்பனேட் கலந்த ஆன்டாசிட்களால் உடலில் உப்பு சத்தும் ,கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றம் ,வயிறு உப்புசம் போன்றவையும் உண்டாகும்9. அடிக்கடி மலம் கழித்தல் ,பசியின்மை போன்றவை மக்னீசியம் கலந்த ஆன்டாசிட்காளால் உண்டாகும்10. சிறுநீரக கோளாறு ,மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்கள் எந்த ஆண்டாசிட்கள் எடுத்தாலும் மிக மிக ஆபத்து .11. ஹார்ட் அட்டாக்கும் கூட வயிறு வலி ,மேல் ஏப்பம் போன்று தோன்றுவதால் ..எதையும் பரிசோதிக்காமல் ஆண்டாசிட்களில் அடிமையாய் இருப்பது உயிருக்கு உலை வைத்து விடும்12. மெட்டபாலிக் நோய்களுக்கு அடிப்படை இந்த ஆண்டாசிட்களும் ஒரு காரணம்.13. கல்லீரல் கொழுப்பு நோய்க்கும் இந்த ஆண்டாசிட்கள் பெரிய பங்கு வகிக்கிறது .அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை- கடையநல்லூர்செரிமானத்தை தூண்டி ,வயிறு உப்புசம் ,நெஞ்சு எரிச்சல் ,வயிறு புண் ,வயிறு வலி போன்ற செரிமான கோளாறுகள் எதுவாக இருந்தாலும் இயற்கையான ஆயுர்வேத சித்த மருந்துகள் பல உள்ளது..சொந்த வைத்தியங்கள் தனக்கு தானே கொள்ளி வைப்பதற்கு சமம்..ஒருவருக்கு நன்கு வேலை செய்யக்கூடிய ஒரு மருந்து அதே தொந்தரவுகள் உள்ள இன்னொருவருக்கு வேலை செய்யாது ..இது தான் ஆயுர்வேத சித்த மருத்துவத்தின் தனித்தன்மை ..தகுதி வாய்ந்த ஆயுர்வேத சித்த மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெற ,உண்மையான ஆயுர்வேத மருத்துவம் –சித்த மருத்துவ ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனைகடையநல்லூர் 90 4222 5333திருநெல்வேலி 90 4222 5999ராஜபாளையம் 90 4333 6888சென்னை 90 4333 6000..
டிஸ்க் எப்படி இருக்கும்.. எளிதாக புரிந்து கொள்ள சில உதாரணங்கள்..
முழுமையாக டிஸ்க் பற்றி அறிந்து கொள்ளுங்கள்..முதுகு எலும்பு டிஸ்க் பற்றி யாரும் யோசிக்க முடியாத கோணங்களில் புரிந்து கொள்ளுங்கள் #knowyourdics #knowyourspine #disc #l4l5disc #annuralfibel #halfboil #alshifaayush#lowbackpain#backpainrelief #ayurvedaspine #drsaleem #saleemdr #ayurveda #alshifa #ayushifa #tamilhealth#ayush #drayurveda #tamilnadudr #maruttuvam #முதுக்குதண்டுவடம் # டிஸ்க் #முதுகுவலி #வலி #pain #ayurvedam
அறிவியல் பூர்வமான .. சித்த மருத்துவ குணபாட நூலில் இருந்து ஆதாரத்துடன்..எப்படி ? தெரிந்து கொள்ள முழு வீடியோவை பாருங்கள்..How potato will cause bad effect to our health, It's not story..It's not awareness..It's beyond our expectations..Reveals bad face of potato..#potototoxin #badhealth #baddiet #junkfood#tamilhealth #maruttuvam #urulaikilangu #உருளைக்கிழங்கு #freschfry #பிரெஞ்ச்ப்ரை #ayurveda#toxicfood#drsaleem#alahifaayush
மாதவிலக்கின் போது அதிக ரத்த போக்கை உடனடியாக நிறுத்த உதவும் மூலிகை இது.. ஆயுர்வேத சிகிச்சையில் அதிக உதிரப்போக்கு நிறுத்த உதவும் இந்த மூலிகை எப்படி பயன்படுத்தலாம்மூலத்தில் அதிக ரத்த போக்கை குணப்புத்தக்கூடிய இந்த மூலிகை தமிழ் இது..Herb which helps to stop excessive bleeding while menstruation..#drsaleem#dub#rakthapittam#ayurvedicmedicine#herbal#vasa #ஆடாதோடை#alahifaayush#bleeding#bleedingdisorders#excessivebleeding #viral #trending #DUB #excessvaginal
டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,MD (Ayu),M.Sc.,MBAஉணவில் கலப்படம்- மனிதனின் பேராசை.மூலிகையில் கலப்படம் –மனிதனின் உயிருக்கே ஆபத்து.மூலிகை பற்றி சரியான தெளிவு இருத்தல் மிக மிக அவசியம் . கரிசாலை என்னும் கரிசாலாங்கண்ணி மூலிகை –மஞ்சள் காமாலை மற்றும் முடி வளர மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அனால் அவர்கள் பயன்படுத்துகிற அந்த மூலிகை கரிசாலையா என்றால் அது மிகவும் சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது .தாடி வைத்து காலையில் டிவியில் வைத்தியம் சொல்கிற அவர்க்கு அசோகம் எது –நெட்டிலிங்கம் எது என்கிற அறிவு இல்லை. நெட்டிலிங்க மர இலையை பயன்படுத்தி பெண்களின் மாதவிலக்கு நோய்க்கு சிகிச்சை செய்ய சொல்கிறார் அவர் .கரிசாலையில் போலி மூலிகை உள்ளது ,நான் படத்தில் காட்டிய இந்த இரண்டு போலி கரிசாலை மூலிகைகளை -மதுரையில் உள்ள திலகர் திடலில் மூலிகை விற்பனை நிலையத்தில் இரண்டு வகை போலிகளை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்ற விளக்கம் வேறு. பச்சை மூலிகையில் எளிதாக ஏமாற்றி விட முடிகிறது என்றால் –காய்ந்த இந்த போலி கரிசாலை எப்படி கண்டு பிடிக்க முடியும்.கரிசாலையில் இரண்டு வகையான போலி கரிசாலை உள்ளது .அதனுடைய தாரவியல் பெயருடன் படங்கள் விளக்கத்துடன் கொடுக்கபட்டுள்ளதுசம்பவம் ஒன்று -வயிறு வீங்கி மூச்சு விட சிரமத்துடன் –கண்ணில் மஞ்சள் நிறத்துடன் ஒரு இருப்பத்தைந்து வயது மிக்க ஒரு இளைஞர் என்னிடம் மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு வந்தார்..சார் பக்கத்து வீட்டு அம்மா தினமும் எனக்கு மஞ்சள் கரிசாலையை கிட்டதட்ட ஒரு வாரம் கொடுத்தார்கள் ஆனாலும் மஞ்சள் காமாலை பிலுரூபின் அளவு அதிகமாகி கொண்டே சென்றதே தவிர கொஞ்சம் கூட மாற்றம் இல்லை என்றார் . கையில் ஒரு மஞ்சள் பூ உள்ள செடியை காட்டி அவர் –இது எங்களது வீட்டு அருகே அதிகமாக உள்ளது இது மஞ்சள் கரிசாலை தானே என்று கேட்டார் .கிட்டத்தட்ட சாவின் விளிம்பு வரை அவரை அழைத்து சென்றது அவரது அறியாமை என்று சொல்வதா ? பக்கத்துக்கு வீட்டு திடீர் வைத்திய பெண்மணியை சொல்வதா ? sphagneticola trilobata என்கிற மஞ்சள் கரிசாலை போன்று மஞ்சள் பூ பூக்கிற அழகு குரோடன்ஸ் செடியை அவர் கரிசாலை என்று பச்சையாக சாறு எடுத்து குடித்து வந்திருக்கிறார் . அப்புறம் அவருக்கு தக்க சிகிச்சை அளித்து அவரது மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்தினோம் என்பது மற்ற தகவல் .சம்பவம் இரண்டுமகளுக்கு முடி கூடுதலாக கொட்டுகிறது என்று சொன்ன அந்த அம்மா ..இந்த மஞ்சள் போலி கரிசலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்திருக்கிறார். கரிசாலையில் எந்த பலனும் இல்லை என்று –மூலிகையை குறை கூறிய அவர்களுக்கு தக்க விளக்கம் போலி கரிசாலை பற்றி அளிக்கபட்டது .எனவே –தெளிவான மூலிகை அறிவே நல்லது .சரியான மூலிகைகளை பயன்படுத்து சிகிச்சை செய்கிற –தகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களை கண்டு சிகிச்சை எடுத்தல் அவசியம்
#பருங்கராஜ் #duplicateeclipta #alshifaayush #கரிசாலை #கரிசலாங்கண்ணி #பொலிமூலிகை #ayush #மருத்துவம் #தவறு #tamilhealth #ayurvedadoctor #dravayaguna #tamilmoolikai