சனி, டிசம்பர் 19, 2009

விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்

தற்போது வேகமாக பரவி வரும் விஷக்காய்ச்சலை மிக எளிதாக நாம் வென்று விடலாம்.பொதுவாக விஷக்காய்ச்சல் அனைத்திற்கும் மூலம் வைரஸ் என்னும் மாய கிருமியே காரணம். ஆயுர்வேதத்தில் பல வகையான காய்ச்சலை பற்றி மிக தெளிவாக எடுத்துரைக்கிறது .ஆயுர்வேத சிகிச்சா கிரந்தங்கள் அனைத்துமே ஜ்வரம் என்னும் முதல் அத்தியாயத்திலேயே ஆரம்பிக்கிறது என்றால் காய்ச்சலுக்கு ஆயுர்வேதம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நாம் உணரலாம். ஆயுர்வேத மருந்துகளில் விஷ காய்ச்சலுக்கு -அம்ருதாரிஷ்டம் -மஹா சுதர்சன மாத்திரை -வெட்டு மாறன் குடிகா -விஷம ஜ்வரான்குஷ ரசம் மாத்திரை -ஆம வாதரி கஷாயம் & மாத்திரை -சஞ்சீவனி குடிகா மாத்திரை இது போன்ற நிறைய மருந்துகளை கொடுக்க சொல்கிறது . காய்ச்சல் என்றால் நாம் உடனே ஊசி ,ட்ரிப்ஸ் ,க்ளுகோஸ்,ஆங்கில மாத்திரை கள் என்று உடன் இறங்கி விடுகிறோம் இது நல்ல தல்ல. ஊசி,குளுகோஸ்,ஆன்டி பயோடிக் மாத்திரைகள் போட்டாலும் வைரஸ் காய்ச்சல் உடனே குறைந்தா விடுகிறது ?.. எழு அல்லது பத்து நாட்களுக்கு இருந்து தானே குறைகிறது .பின் நாம் ஏன் உடனடி நிவாரணம் தேட வேண்டும்,,,,

காய்ச்சல் வந்தால் பட்டினி கிடப்பதே நல்லது.இதை தான் ஆயுர்வேதம் லங்கணம் பரம ஔ ஷதம் என்கிறது. காய்ச்சல் குறையும் வரை வெந்நீர் மட்டுமே அருந்துவதும் நல்லது.

காய்ச்சல் குறையு நில வேம்பு குடிநீர் கஷாயம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிக நல்லது





காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி

: 3264 இப்னு உமர் (ரலி)

காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி

: 5726 ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி).

.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக