ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

வலியில்லா வாழ்க்கைக்கு பக்க விளைவில்லா வரம் -மஹாயோகராஜ குக்குலு-( Maha Yogara Guggulu )

வலியில்லா வாழ்க்கைக்கு பக்க விளைவில்லா வரம் -மஹாயோகராஜ குக்குலு-( Maha Yogara Guggulu )
                                                                            
(Ref-பைஷஜ்யரத்னாவளி - ஆமவாதாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            சுக்கு சுந்தீ                                10 கிராம்
2.            மிளகு மரீச்ச                             10           “
3.            திப்பிலி பிப்பலி                   10           “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்10            “
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்           10           “
7.            பாடக்கிழங்கு பாத்தா                 10           “
8.            சதகுப்பை ஸதபுஷ்ப                       10           “
9.            மஞ்சள் ஹரித்ரா                          10           “
10.          மரமஞ்சள் தாருஹரித்ரா                   10           “
11.          ஓமம் அஜமோதா                         10           “
12.          வசம்பு வச்சா                             10           “
13.          பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) ஹிங்கு     10           “
14.          கொட்டைக் கரந்தை (உலர்ந்தது) ஹப்புஸ        10           “
15.          யானைத்திப்பிலி கஜபிப்பலீ           10           “
16.          கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக                 10           “
17.          கிச்சிலிக் கிழங்கு ஸட்டீ                   10           “
18.          கொத்தமல்லி விதை தான்யக              10           “
19.          கருப்பு உப்பு பிடலவண                    10           “
20.          கல்லுப்பு ஸ்வர்ச்சலவண                  10           “
21.          இந்துப்பு ஸைந்தவலவண                  10           “
22.          மோடி பிப்பலீமூல                         10           “
23.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்             10           “
24.          ஏலக்காய் ஏலா                      10           “
25.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ர              10           “
26.          சிறுநாகப்பூ நாககேஸர                     10           “
27.          கடல் நுரை ஸாமுத்ரபேன                 10           “
28.          அயபற்பம் லோஹ பஸ்ம                  10           “
29.          வெள்ளைக் குங்கிலியம் ஸர்ஜரஸ               10           “
30.          நெருஞ்சில் கோக்ஷுர                 10           “
31.          சித்தரத்தை ராஸ்னா                       10           “
32.          அதிவிடயம் அதிவிஷா                    10           “
33.          சுக்கு சுந்தீ                                10           “
34.          யவக்ஷாரம் யவக்ஷார                     10           “
35.          சீமைக்கொடுக்காய்ப்புளி ஆம்லவேதஸ      10           “
36.          கொடிவேலி வேர் சித்ரமூல                10           “
37.          புஷ்கர மூலம் கோஷ்ட                    10           “
38.          செவ்வியம் சவ்ய                          10           “
39.          புளி திந்திரிணி                      10           “
40.          மாதுளை ஓடு தாடிமத்வக்                 10           “
41.          ஆமணக்குவேர் எரண்டமூல                     10           “
42.          அமுக்கராக் கிழங்கு அஸ்வகந்தா           10           “
43.          சிவதை (கருப்பு) த்ரிவ்ருத்                  10           “
44.          நேர்வாள வேர் தந்தீ மூலம்                     10           “
45.          இலந்தை பாதரி                      10           “
46.          தேவதாரு தேவதாரு                      10           “
47.          மஞ்சள் ஹரித்ரா                          10           “
48.          கடுகரோஹிணீ கடூகீ                 10           “
49.          பெருங்குரும்பை மூர்வா                   10           “
50.          பிராம்மீ (காய்ந்தது) ப்ராஹ்மீ               10           “
51.          சிறுகாஞ்சூரி துராலபா                     10           “
52.          வாயுவிடங்கம் விடங்க                    10           “
53.          வெள்வங்கபற்பம் வங்க பஸ்ம             10           “
54.          ஓமம் அஜமோதா                         10           “
55.          ஆடாதோடை வேர் வாஸா மூல           10           “
56.          அப்பிரகபற்பம் அப்ரக பஸ்ம                10           “
57.          சுத்தி செய்த குக்குலு ஷோதித குக்குலு          10           “

அவற்றை உப்பு வகைகள், புளி வகைகள், பஸ்மங்கள், சுத்தி செய்த குக்குலு நீங்கலாக நன்கு பொடித்துச்ச் சலிக்கவும். அவ்விதம் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்து சலித்தப் புளி வகைகளைச் சேர்க்கவும். உப்பு வகைகளை தனித்தனியே பொடித்துச் சேர்க்கவும்.

இவ்விதம் சூர்ணத்தைத் தயாரித்த பின்னர் சுத்தி செய்த குக்குலுவைப் போதுமான அளவு திரிபலா கஷாயத்தில் சேர்த்துச் சூடாக்கிக் கரைத்துக் கொதிக்க வைத்து குடபாகம் போல் மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் முன்கூறிய சூர்ணம், பஸ்மங்கள் ஆகியவற்றை அத்துடன் சேர்த்து கலந்து அரைத்து 500 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    சுத்தி செய்த குக்குலுவை நெய் அல்லது தேன் சேர்த்து இடித்து சூர்ணம் முதலியவைகளைச் சேர்த்து இம்மருந்தைத் தயாரிப்பதும் உண்டு. உசிதமான கஷாயம் கொண்டு எல்லாவற்றையும் நன்கு அரைத்து மாத்திரைகளாக உருட்டி உலர்த்தியும் சிலர் தயாரிக்கின்றனர்.

அளவும் அனுபானமும்:  
   
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 1 முதல் 3 வேளைகள் வென்னீருடன்.

தீரும் நோய்கள்: 

கீல்வாயு (சந்திகாத வாத), ஆமவாதம் (ஆமவாத), குதிகால் வாதம் (வாதரக்த) போன்ற பலவித வாத நோய்கள், இரத்த தோஷம், தோல் நோய்கள் (குஷ்ட), பலவீனம் (பலக்ஷய / தௌர்பல்ய), இளைப்பு (கார்ஸ்ய).
கீல்வாயு, ஆமவாதம், குதிகால்வாதம் போன்ற நிலைகளில் இது சித்தரத்தைக் கஷாயத்துடன் தரப்படுகிறது. தோல் நோய்களில் வேப்பம்பட்டை, புங்கம்பட்டை, வாய்விளங்கம், கொட்டைக் கரந்தைப் பூ ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுகிறது. இளைப்பு, பலவீனத்தில் அஸ்வகந்தாதி லேகியத்துடன் இது தரப்படுகிறது. பாத ரசத்தால் விஷமித்த நிலைகளில் மஞ்சிஷ்டா, வேலம்பட்டை, பாடக்கிழங்குவேர் ஆகியவற்றின் கஷாயத்துடன் இது கொடுக்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. வேகமான இந்த வாழ்க்கை வலி என்னும் தடைகளை அவ்வப்போது சிலருக்கும் ,எப்போதும் பலருக்கும் ஒரு அங்கமாகிபோகிறது 
  2. வலியில்லா வாழ்க்கை ,வேதனையற்ற வாழ்க்கை  என்ற ஏக்கத்திற்கு இந்த மருந்து நல்ல அற்புத மருந்து ..
  3. அதி விடயம் -ஒரு கிலோ நான்காயிரத்திற்கு மேலே -முக்கிய இந்த மூல பொருளை எந்த ஒரு மருந்து கம்பெனியும் சேர்ப்பதில்லை -அதி விடயம் மூலிகை சேர்க்காத மஹா யோக ராஜ குக்குலு வேலை செய்யாது 
  4. மூட்டு வலி ,முதுகு தண்டு வட வலி ,தோள்பட்டை வலி ,குதிகால் வலி ,வாத வலி ,ஆம வாதம் ,ரக்த வாதம் ,எல்லா வலிகளையும் பக்க விளைவுகள் ஒரு சிறிதும் இல்லாமல் நீக்கும் ,வலிகளை குணப்படுத்தும் .
  5. ஆயுர்வேத சித்த மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிற இந்த யோகராஜா குக்குலு மாத்திரை பொதுவாக நல்ல தரத்தில் கிடப்பதில்லை என்பது தான் உண்மை 
  6. யோகாராஜா குக்குலு என்கிற மருந்தும் ,மகா யோகா ராஜ குக்குலுவும் வேறு வேறு பார்முலாக்கள் ,இரண்டும் ஒன்றல்ல ..
  7. தக்க கஷாயத்துடன் இந்த மருந்து வேகமாக வேலை செய்யும் 



Post Comment

காரணமில்லாத நாள்பட்ட காய்ச்சலை ஓட ஓட விரட்டும் -மஹாஜ்வராங்குச ரஸம் (Maha Jwarankusa Ras)

காரணமில்லாத நாள்பட்ட காய்ச்சலை ஓட ஓட விரட்டும் -மஹாஜ்வராங்குச ரஸம் (Maha Jwarankusa Ras)
                                                                                                
(ref-பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக  10           “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்



3.            சுத்தி செய்த நாபி ஷோதித நாபி      10 கிராம்
4.            சுத்தி செய்த ஊமத்தன் விதை ஷோதித
தத்தூரபீஜ  30           “

                இவைகளைத் தனித்தனியே சிறிது எலுமிச்சம்பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) அல்லது இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) சேர்த்து நன்கு அரைத்து விழுதாக்கிச் சேர்த்துப் பின்

5.            திரிகடு சூர்ணம் த்ரிகடு சூர்ண 120 கிராம் கலந்து 

எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்டுள்ள இரு வகைச் சாறுகள் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்துப் பதத்தில் 50 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 2 முதல் 3 வேளைகள் இஞ்சிச்சாறு அல்லது தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 
நாட்பட்ட சுரங்கள் (புராண ஜ்வர), விட்டுவிட்டு வரும் சுரங்கள், டைபாய்டு போன்ற விஷசுரங்கள், போன்ற பலவித காய்ச்சல்கள், ஜன்னி ,பொதுவாக இதனை தசமூலாரிஷ்டம், கஸ்தூரியுடன் கலந்து கொடுப்பது வழக்கம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

  1. பெயர் தெரியாத நாள்பட்ட காய்ச்சலை இந்த மருந்து அற்புதமாக நீக்கும் 
  2. இதனுடன் லிங்க சிந்தூரம் அம்ருதாரிஷ்டம் உடன் -காய்ச்சல் விதிகளுடன் இந்த மருந்தை தரும் போது எல்லா மர்ம காய்ச்சலும் மாயமாகிடும் 
  3. சரியான்  அளவில் நோயாளிக்கு கொடுத்தால் ஆண்டிபயாடிக் போல வேலை வேலை செய்யும் 
  4. டைபாய்ட் காய்ச்சலுக்கு இந்த மருந்து மிக நன்றாக வேலை செய்யும் 

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 10, 2014

விடாது ஓடும் உயிர்க் கடிகாரம்

புதுப்பிக்கும் மீள் ஆற்றல் சக்தி கொண்டவன் மனிதன் ...

ஆயிரம் தடைகள் வந்தாலும் மாற்று வழியில் ஓடிகொண்டிருக்கிறது  உயிர் ..

 உடம்பில் நோய்கள் கொண்டாலும் தேயாது புத்துணர்வு கொள்கிறது  மெய் ..

காலத்தில் கட்டாயத்தால் விடாது ஓடுகிறது உயிர் கடிகாரம் ..



மக்கள் அனைவரும் மருத்துவர்கள் ..

மாற்றத்தை விரும்பும் மக்கள்...

வியாபாரமாகி போனதால் மனிதம் தேய்ந்தது கார்பரேட் வணிக மருத்துவம் 

மருத்துவம் எனது தொழில் அல்ல -எனது உயிர்  அது ..

உயிர் கடிகாரம் என்னும் உந்து உணர்வு சக்தியே மனிதம் வளர்க்கிறது ..

Post Comment