அட்டை விடுதல்
அட்டை விடுதல் என்பது ஆயுர்வேதத்தின் சிறப்பு மருத்துவ முறையாகும்.
அட்டை விடுல் மருத்துவத்தின் பலன் அமிர்தம் உட்கொண்டதற்கான பலனாகும்.
ஆயுர்வேதத்தில் அட்டை
விடுதல் :
ஆயுர்வேதத்தின் சிறப்பு
அம்சமான பஞ்சகர்மாவில் ரக்த மோக்ஷனம் என்னும் சிகிச்சையில் அட்டை
விடும் சிகிச்சையும் ஒன்றாகும். இந்த சிகிச்சை முறையானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அட்டை விடுதல் சிகிச்சை ( இரக்த மோக்ஷனம்) என்பது
இரத்தத்தினை சுத்திகரிக்க்கும் முறையாகும்.இதன் மூலம் கெட்ட இரத்தம் வெளியேற்ற
பட்டு பல நோய்களை குணமாக்க முடிகிறது .
அட்டை
தண்ணீரில் வாழும் உயிரினம் ஆகும். உலக அளவில் 6000 விதமான அட்டை பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றுள் 100 - 150 வரையிலான அட்டை பூச்சிகள் மருத்துவ சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
அட்டைப் பூச்சிகள் விஷத்தன்மை உள்ளவை ,
விஷதன்மையற்றவை என இரு
வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
ஹிருடுனே என்ற வகையை சார்ந்த அட்டை பூச்சிகள் மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகின்றன.இவை சுமார் 1.2 cm முதல் 43 cm வரை காணப்படுகின்றன. கருப்பு , மஞ்சள் , பச்சை , அரக்கு போன்ற பல விதமான வண்ணங்களில் காணப்படுகிறது.அட்டை விடும் சிகிச்சை முறை
ஆஸ்திரேலியா , பிரிட்டீஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் கூட மேற்கொள்ளப்படுகிறது.
அட்டை விடுதல்:
அட்டை விடுதல் சிகிச்சை முறை நமது மருத்துவமனையில்
மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை முறையாகும்.இச்சிகிச்சை முறையில்
பலதரப்பட்ட மக்களும் பயன்பெற்று வருகின்றனர் .
இது பாதுகாப்பான , வலியற்ற சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சை முறைக்காக வாழ்க்கை முறைகளை மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை. இச்சிகிச்சையில் நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட அட்டை பூச்சி
மறுமுறை பயன்படுத்தப்படுவதில்லை. சிகிச்சையின்போது சராசரியாக 10 முதல் 60 மிலி அசுத்த இரத்தத்தை
வெளியேற்றுகிறது.
அட்டை விடுதலின் பயன்கள்:
அட்டை விடுதலில் இரத்தம் வெளியேற்றப்படும் போது
ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ,
கீழ்காணும் அறிகுறிகள் குணப்படுத்தப்படுகிறது.
· வீக்கம் குறைகின்றது.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது
· இரத்தநாளங்கள் சீர் செய்யப்படுகின்றது ,
இரத்த ஓட்டம் சீராகிறது.
· மன அழுத்தம் குறைகிறது.
· இரத்த நாளங்களில் இரத்தம் உறைதலை சரி செய்யும்
· வலி நிவாரணியாக பயன்படுகிறது.
· நோய் காரணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை
தூண்டுகிறது.
· பிற சுத்திகரிப்பு சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது அட்டை விடுதல் தேவையற்ற
தழும்புகள் , எரிச்சல் , நிறமாற்றம் போன்றவை
ஏற்படுவது இல்லை. தோலில் ஏற்படும் வீக்கம் ,
வலி , அரிப்பு , எரிச்சல் , தழும்புகள் போன்றவை இச்சிகிச்சை முறையில் சரி செய்யப்படுகின்றன.
இரத்த மோக்ஷனம்
ஆயுர்வேதத்தில் அட்டை
விடுதல் மட்டுமல்லாது அலாபு,,கடம் ,ஸ்ருங்கம் போன்ற உபகரணங்களை கொண்டும் இரக்த சுத்திகரிப்புகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் “கப்பிங்” முறையில் பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்தம் வெளியேயற்றப்படுகிறது.
இரத்த மோக்ஷனம் சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலமாக
குறுகிய காலக்கட்டத்தில் நோய்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன.
குணப்படுத்தும் நோய்கள்:
· தோல் சிவத்தல் ஃ எக்ஸிமா
· சோரியாஸிஸ்
· ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்
· கௌடி ஆர்த்ரைட்டீஸ்
· சயாடிகா ( வலி இடுப்பிலிருந்து கால் வரை பரவுதல்)
· இடுப்பு வலி
· மூட்டு வலி
· சர்க்கரை நோயினால் ஏற்படும் புண்கள்
· புரையோடிய புண்கள்
· கொப்பளம்
· இரத்த கொதிப்பு
· சோரியாட்டிக் ஆர்த்ரைட்டீஸ்
· கரப்பான்
· இரத்த நாளங்களில் இரத்தம் உறைதல்
· முன் வழுக்கை.
தைராய்ட்
கட்டிகள்
வெரிகோஸ் வெயின் என்னும் காலில் ஏற்படும் நரம்பு சுருட்டு
சில தீர்வு கண்ட நோயாளிகளில் சிலர் ..
1. பெயர் .சுபாஹானி P
வயது : 20 பெ
அட்டை விடுதலின் மூலமாக கொப்பளம் கண்ணுக்கு அருகில்
உள்ள அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற இந்த நோயாளி அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணமடைந்தார்.
2. பெயர் .அப்துல்
ரகுமான் . ஆ
வயது : 24 ஆ
அட்டை விடுதலின் மூலமாக சொரியாஸிஸில் இருந்து குணமடைந்தார் .
இரக்த மோக்ஷன சிகிச்சை :
“திருநெல்வேலி , கடையநல்லூர் ,ராஜபாளையம் உள்ள எமது அல் – ஷிபா மருத்துவ நிலையத்திலும் ,சென்னையில் கீழ் கட்டளையில் உள்ள ஹெர்ப்ஸ் &
ஹீல்ஸ் மருத்துவ நிலையத்திலும் - மேற்கொண்ட சிகிச்சை முறைகள் தகுதி பெற்ற மருத்துவர்களின்
ஆலோசனைப்படி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இச்சிகிச்சைகள் மேற்கொள்ள முன்பதிவு அவசியம்.
நோயாளிகளின் ஹீமோகுளோபின் அளவும் ,சர்க்கரை அளவும் பரிசோதித்து வருவது நல்லது .
கட்டுரை எழுத்தாக்கம் - டாக்டர் -கீர்த்திகா BAMS ,மருத்துவ அலுவலர் ஆயுர்வேதா ,திருநெல்வேலி அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை .
சிகிச்சைக்கு அணுக வேண்டிய முகவரி :
திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை & ஆராய்ச்சி
நிலையம்
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664.
கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில்,
தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04633 242522
ராஜபாளையம் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.
சென்னை கிளை
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4,
துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444
0 comments:
கருத்துரையிடுக