மரணம் பலரை விதைத்திருக்கிறது ..கவிஞர் நா .முத்துகுமார் பலரது மனதில் விதையாகத்தான் விழுந்திருக்கிறார் ..
ஆறாத சோகம் தான் ..அந்த வரிசையில் கவிஞர் நா .முத்துகுமார் மஞ்சள் காமாலையில் இறந்தது மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி தான்..
அவரது உண்மை நோய் என்ன என்பது யாருக்கும் மிக சரியா தெரியாது ?
மஞ்சள் காமாலை எவ்வளவு நாள் இருந்தது .
அந்த மஞ்சள் காமாலை என்ன வகை ?
கல்லீரல் எந்த அளவு பாதிக்கப்பட்டு இருந்தது ?
வயிற்றில் இரத்த குழாய் சுருட்டு இருந்ததா ?
போர்டல் ஹைபர் டென்சன் என்னும் வயிற்றில் இரத்த அழுத்தம் இருந்ததா ?
உண்மையிலே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று அவருக்கு பரிந்துரைக்கபட்டதா ?.
எதுவுமே தெரியாமல் என்ன என்ன கட்டு கதைகள் அவரது நோய் பற்றி ..அதற்கு மருந்து பற்றி மூலிகை தெரிந்த மக்கள் எல்லாம் ஏகப்பட்ட பரிந்துரைகள் ..ஆயுர்வேதத்தில் ,சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கு மிக சிறந்த மருந்து உண்டு என்பது யாரும் மறுப்பதற்கே இல்லை ..ஆனால் இங்கே கொஞ்சம் கூட மருத்துவ அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மருந்து கம்பெனி மருந்து ஐந்து நாட்களில் ஹெபடைடீஸ் B வைரசை சரியாக்கும் என்று ஷேர் செய்கிறார்கள் மக்கள் ...
என்னுடைய எழுத்துலக நண்பர்களில் ஒரு மருத்துவர் பல நல்ல விஷயங்களை முக நூலில் பதிவிடுவார் ..அவர் தனக்கு வந்த ஒரு தகவலை ஷேர் செய்திருக்கிறார் ..அதன் விவரம் இது ..
கிட்டதட்ட கட்டுரை அவரது முக நூல் பதிவில் இருந்து
இன்று 18/8/2016 மாலை ஐந்து மணி வரை 23800 க்கு மேல் ஷேர் செய்யப்பட்டுள்ளது ..பல்லாயிரக்கணக்கான மக்கள் லைக் கொடுத்துள்ளார்கள் ..இந்த கட்டுரைக்கு சொந்த காரர் திரு இரா செந்தில் குமார் பக்கத்தில் அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்று கொடுத்தள்ளார்..அவரை முக நூல் மெசெஞ்சரில் தொடர்பு கொள்ள முயன்றேன் .ஆனால் அவரிடம் போனில் பேச இயல வில்லை ..
அந்த ஆயுர்வேத மருத்துவர் என்று குறிப்படும் இரா செந்தில் குமார் அவர்களின் முக நூல் பக்கம் இது தான் ..இங்கே கிளிக் செய்யவும் https://www.facebook.com/senthilvel.kannan?fref=nf&pnref=story.
அவர் எங்கே ஆயுர்வேத மருத்துவம் படித்தார் ..அவர் எங்கே மருத்துவ சிகிச்சை செய்து வருகிறார் என்ற எந்த தகவலும் இல்லை ...ஆனால் நிச்சயம் அவர் ஒரு முறையாக மருத்துவம் படிக்காதவர் என்று மட்டும் என்னால் முழுமையாக விளங்கி கொள்ள முடிகிறது ..
அவரது முக நூல் பக்கத்தில் ஒரு கேள்வி பதில் அவரது மருத்துவ அறிவை பறைசாற்றுகிறது ..உங்களது உதாரணம் இதோ
அவரது மருத்துவ கேள்வி ஞானத்தை அறிய இது ஒன்றே போதுமானது என்று சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன் ...அர்ஜுனா அரிஷ்டம் 5 மிலி எந்த ஆயுர்வேத மருத்துவரும் பரிந்துரைப்பது இல்லை ..20 ml to 25 ml தான் கொடுப்போம் ..அதை கொடுத்தாலும் ஹார்ட் அட்டாக் ? வராது என்பது சொல்வதற்கு இல்லை ...ஆனால் அவர் வரவே வராது என்று மிகைப்படுத்தி எழுதியிள்ளார் ..
இந்த நண்பர் எழுதிய அந்த கட்டுரை தான் ..மஞ்சள் காமாலை -ஹெபடைடீஸ் B வைரஸை சரியாக்கும் என்பது ஒரு மிக மிக தவறான தகவல் ..
திரு இரா செந்தில் குமார் ஆயுர்வேத மருத்துவர் என்று குறிப்படும் உங்களுக்கு எனது கேள்விகள் ..
- ஹெபடைடீஸ் B மஞ்சள் காமாலை -எத்தனை நோயாளிகளை நீங்கள் குறிப்படும் இந்த மருந்தை வைத்து குணமாக்கி உள்ளீர்கள் .
- அந்த நோயாளிகளின் ரிப்போர் பதிவு செய்யவும் ..அவர்களுக்கு எந்த முறையில் ஹெபடைடீஸ் B வைரஸ் உள்ளதை உறுதி செய்தீர்கள் ..அது கார்ட் முறையா ,எலைசா ,முறையா .வைரல் லோட் எவ்வளவு /
- எத்தனை நோயாளிகள் only carrier என்ற வகையில் இருந்தனர் .
- ஆணித்தரமாக வெறும் ஐந்தே நாளில் ஹெபடைடீஸ் B மஞ்சள் காமாலை குணபடுத்திய நோயாளிகளின் செல் நம்பர் மற்றும் விவரம் தர முடியுமா ?
- நீங்கள் எந்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் படித்தீர்கள்
- நீங்கள் இப்போது எங்கே பணி செய்து வருகிறீர்கள் .
இந்த விவரங்கள் எதுவமே தெரியாமல் முக நூல் மற்றும் அவரது பொய்யை ஷேர் செய்த மக்களை நினைக்க மிகவும் வருந்துகிறேன்..
தெரிந்து கொள்ள வேண்டியவை ...
- சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவத்தில் ,யுனானி மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து உண்டு என்பதில் எள் அளவுக்கும் சந்தேகம் இல்லை ..
- எளிதாக தானாக சரியாக கூடிய ஹெபடைடீஸ் A க்கு மிக எளிதான கீழாநெல்லி ,கரிசாலை போன்ற பல மூலிகைகளே போதும் .
- ஹெபடைடீஸ் B -carrier என்ற நிலையில் ,எந்த தொந்தரவும் இல்லாமல் இரத்தத்தில் பாரின் போக டெஸ்ட் எடுக்கும் போது எதேச்சையாக கண்டு பிடிக்கப்படும் Hb S Ag positive என்ற நிலையில் எல்லாருக்கும் negative ஆவதில்லை ..இதனால் பொதுவாக எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை என்பது தான் உண்மை ..
- முறையாக மருத்துவ அறிவு .பல ஆண்டுகள் மருத்துவ சிகிச்சை அனுபவ அறிவு உள்ள பழங்காலத்து சித்த ஆயுர்வேத மருத்துவ நூலில் உள்ள மருந்துகளை பயன்படுத்திற அறிவு ..மற்றும் நவீன மருத்துவ அறிவியல் knowledge உள்ள மருத்துவர்களை பார்த்து மருத்துவ சிகிச்சை எடுப்பது நல்லது
0 comments:
கருத்துரையிடுக