வியாழன், ஆகஸ்ட் 08, 2019

சிறிய துவக்கம்


 ஒவ்வொரு நாளும் எதோ எழுத நினைத்து ..காலம் கடத்திய பின் ..எழுத மறுத்த நிலைக்கு ஒரு முற்று புள்ளி ..


www.alshifaayush.com

தொடர்வோம் 

Post Comment

புதன், மார்ச் 27, 2019

இத்தனை நோய்களுக்கும் காரணம் -சோடியம் பென்சொவெட் உங்கள் உணவில் கலந்த அர்க்கன்

பல்கி பெருகி வரும் பெரிய நோய்களான ..சிறுநீரக நோய்கள்...புற்று நோய் ..போன்றவை உருவாக காரணம்

நமது உணவில் கலந்துள்ள உணவை கெடாமல் வைக்கும் ப்ரிசெர்வேட்டிவ் சோடியம்  பென்சொவெட் என்னும் ஒர் அரக்கன்...

டாக்டர்.அ.முகமது சலீம்.,BAMS.,M.Sc.,MBA

எதில் இது இருக்கிறது?

எதில் இது இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?

அடைக்கபட்டுள்ள அனைத்து உணவுகளில் இது அதிகமாகவே உள்ளது..

எல்லா மசாலா பாக்கெட்டுகளில்
ஊறுகாய் பாட்டில்களில்..
ஜாம்களில்
ஹோட்டல்களில் கெட்டுபோகாம்ல் இருக்க கிட்டதட்ட அனைத்து உணவுளிலும்..
ஜீஸ்களில்
ஐஸ் க்ரீம்களில்
நொறுக்கு தீனிகளில்
கடைகளில் விற்கப்படும் எல்லா இனிப்பு பண்டங்களில்..
நெய்யில்..
தேனில்..
அனைத்து குளிர்பானங்களில்
பல இயற்கை உணவு என்ற போர்வையில் உலா வரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சத்து மாவுக்களில்..மற்றுமுள்ள உணவுகளில்
எல்லா உணவுகளிலும் ..

அளவுக்கு அதிகமாக உள்ளது..

0.1 கிராம் ..ஒரு கிலோவுக்கு சேர்க்க அனுமதி உள்ளது..
ஆனால் பல மடங்குகள் வியாபாரிகள் தெரிந்தும் தெரியாமலும்  சேர்க்கிறார்கள்..

இந்த சோடியம்  பென்சொவெட்-ப்ரிசெர்வேட்டிவ்
மூன்று வைகைகளில் ஆபத்து

1. அதிகம் சேர்த்தாலும் ..
2.சோடியம்  பென்சொவெட் கலந்த் உணவை -மறுமுறை சூடு செய்தாலும்
3. வைட்டமின் C யுடன் இணைந்து பென்சீனை உருவாக்கி- அது புற்று நோய்க்கான காரணியாக மாறி...


இன்னும் பல பல வழிகளில் நம்மை தாக்க காத்திருக்கிறது..

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடைய நல்லூர்-9042225333
ராஜபாளையம்-9043336888
தேனி                    -9047277577
திருநெல்வேலி -9042225999
சென்னை -          9043336000


Post Comment

திங்கள், மார்ச் 25, 2019

இந்த ப்ளாக் எத்தனை நபர்களுக்கு தெரியும் ?

நீண்ட இடைவேளைக்கு பின் எனது தளத்தை பார்க்கிறேன்..

நான் பின்னால் தான் இருக்கிறேன்..
மக்களுக்கு மருத்துவத்தில் விழிப்புணர்வு ஊட்ட இதை கையில் எடுத்தேன்..
ஆனால் இந்த தளம் பலரால் காப்பி அடிக்கபட்டு..எனது எழுதும் உணர்வுக்கு ஓர் சோம்பலை தந்த காரணத்தினாலோ என்னவோ..மிகப்பெரிய இடைவேளை ..


முயற்சி செய்கிறேன் ..
கால சுவடுகளில் எனது இந்த பிளாக் எதாவது மாற்றம் தர இயலுமா என்று ..


Post Comment

திங்கள், மார்ச் 18, 2019

கணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை


கணைய புற்று நோய் –ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மனோகர் பாரிக்கர் வரை ..



உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூட இந்த கணைய புற்று நோயால் ..எந்த வித மிக பெரிய சிகிச்சைக்கும் பலன் தாராமல் இறந்து போனார் ...பணம் இந்த சிகிச்சைக்கு பலன் தராது



இன்று இறந்து போன கோவாவின் முதல்வர் மனோகர் பாரிக்கர் அவர்களுக்கும் இந்த கணைய புற்று நோய் தான் இருந்தது.AIIMS போன்ற தரமான மருத்துவமும் கூட இந்த நோய்க்கு தீர்வை தரவில்லை ..மிக பெரிய பதவியில் இருந்தாலும் ..சிறந்த சிகிச்சை பலன் தரவில்லை என்பது இங்கே தெளிவாகிறது .



வெறும் அல்சர் தானே என்று  அலட்சியம் செய்யும் நிலையில் உள்ள நமக்கு தெரிய வாய்ப்பே இல்லை ...அது கணைய புற்று நோயாக கூட இருக்கும் என்று....சைலன்ட் கில்லர் என்று அடை மொழியோடு நம்மை தாக்க காத்திருக்கும் ஒரு புற்று நோய் இதற்கு மட்டுமே பொருந்தும். எளிதாக கண்டு பிடிக்கவே முடியாத கணைய புற்று நோய். கணைய புற்று நோய் என்று கண்டு பிடிக்கப்பட்டால் எந்த வகை சிகிச்சை அளித்தாலும் இரண்டாவது ஆண்டில் உயிர் பிழைக்க வாய்ப்பு 8 % சதவீதம் மட்டுமே..




இறப்பை இரக்கமற்று தரக்கூடிய புற்று நோயில் கணைய புற்று உலகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதை நினைக்க பயங்கரமாக இருக்கிறது.



ஆண்களில் வரக்கூடிய புற்று நோயில் 11  வது இடமும்,பெண்களுக்கு 9 தாவது இடத்தில் இருந்தாலும் வெகு வேகமாக முதல் மூன்று இடங்களுக்கு முன்னேறிக்கொண்டே இருக்கிறது இந்த கணைய புற்று நோய் ..



இந்த நோயினால் பாதிக்கப்பட்டு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நான்கு ஆண்டுக்கு மேல் ஒரு நோயாளியை ஆயுர்வேத சிகிச்சை பெரிய பொருட் செலவு இல்லாமல் காப்பாற்றி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கே தெரிவித்து கொள்கிறேன் .கடந்த பிப்ரவரி மாதம் அமிர்தா மருத்துவ கல்லூரியில் நடை பெற்ற புற்று நோய் கருத்தரங்கில் இந்த ஆய்வு கட்டுரையை பல்வேறு நிபுணர்களுக்கு மத்தியில் சமர்பித்தேன். பல மருத்துவ வல்லுனர்களின் பாராட்டை பெற்ற இந்த ஆய்வு கட்டுரையின் சான்றிதழையும் இத்துடன் இணைத்துள்ளேன் ...

கணைய புற்று நோய்க்கு ஆயுஷ் மருத்துவம் ஒரு சிறந்த தீர்வை தரவல்லது.


Post Comment

செவ்வாய், ஜனவரி 01, 2019

புதிய ஆண்டில் புத்துணர்வோடு எழுத முயல்கிறேன்

பிணி நீக்கும் பணியில் காலம்
கல்விக்கு பெரும் காலம்
பயணத்தில் சில காலம்
ஒய்வு மிக மிக குறுகிய காலம் ...


ஒடி கொண்டே இருக்கும் இந்த காலத்தில் எழுத்தில் எனது பங்கை நான் திரும்ப ஆற்றுவதே மக்களுக்கு செய்யும் ஒரு சேவையில் ஒரு அங்கம் என்று உணர்ந்தவனாய் எழுத துவங்குகிறேன்



Post Comment