சனி, டிசம்பர் 05, 2009

குழந்தை பிறப்பை தள்ளிப் போடலாமா?

திருமணம் என்ற புதிய உறவுக்கு முழுமையான அர்த்தம் தருவதே குழந்தைதானே!

கண்களுக்கே புலப்படாத ஒரு சின்ன செல்லில் இருந்து ஒன்பது மாதங்களில் கிட்டத்தட்ட மூன்று கிலோ எடையுள்ள ஒரு குழந்தை உருவாவது எவ்வளவு பிரமிப்பான விஷயம்! இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்பவர்கள், குழந்தை பிறப்பைச் சில வருடங்களுக்குத் தள்ளிப் போடுகிறார்கள். அவர்களது கோணத்தில் பார்த்தால் அதில் தப்பில்லை. மேற்படிப்பு, பிரமோஷன், சொந்த வீடு என ஏகப்பட்ட கனவுகள் அவர்களை இப்படி முடிவெடுக்க வைக்கின்றன.

ஆனால், இதில் ஒரு மோசமான விளைவும் உண்டு! இப்படிக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுகிறவர்களிடம் உளவியல் நிபுணர்கள் ஓர் ஆய்வு நடத்தி உள்ளார்கள். இப்போ வேண்டாம் என்று அவர்களுக்குள் உருவாகும் நினைப்பு, ஆழ்மனதில் அப்படியே தங்கி, இந்த எதிர்மறையான உணர்வால் ஒரு சிலருக்குப் பின்னர் குழந்தை உருவாகாமலே போய்விடுகிறதாம்!

அப்படியானவர்களுக்குக் குழந்தை உருவானாலும் அதன் எதிர்காலம் கவலைக்குரியதாக ஆகிவிடுகிறது. நான் வேண்டாத விருந்தாளி என்ற நினைப்போடு அந்தக் குழந்தை இந்த உலகில் அடியெடுத்து வைக்கிறது. காலம் முழுக்க அந்த நினைப்பு அதன் அடிமனதில் இருந்து சித்ரவதை செய்கிறது என்கிறார்கள் ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள்!


கர்ப்பிணிகளைப் பராமரிப்பது என்பது நவீன மருத்துவத்தில் சற்றுத் தாமதமாகத்தான், அதாவது, கர்ப்பம் உறுதியான மூன்றாவது மாதத்துக்குப் பிறகுதான் தொடங்குகிறது. ஆனால், ஒரு பெண் பூப்படையும் போதிலிருந்தே அக்கறையோடு இந்தப் பராமரிப்பை ஆரம்பித்து விடுகிறது ஆயுர்வேதம். வயதுக்கு வந்த பெண்ணுக்கு புட்டு சுற்றுவது, உளுந்து கஞ்சி தருவது எல்லாமே கருப்பையை வலுப்படுத்தத்தான்! பாட்டி வைத்தியமாக வீட்டில் ஏராளமான நாட்டு மருந்துகள் தருவார்கள். ரத்த சோகையிலிருந்து அந்தப் பெண்ணை மீட்கத்தான் இந்த மருந்துகள்.

ஆயுர்வேதத்தில் ரசாயன வாஜுகரண சிகிச்சை என்று ஒன்று இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கும் விந்தணுக் குறைபாடுகளை இந்தச் சிகிச்சை சரிசெய்கிறது. பெண்களுக்கும் மாதவிடாய் தொடர்பான பக்கவிளைவுகளுக்கு எளிதான மருந்துகள் இருக்கின்றன.இது எதற்கு? மாதவிடாய் ஆரம்பித்த நாளிலிருந்து சரியாக பன்னிரண்டாவது நாள் முதல் பதினெட்டாவது நாளுக்குள் உறவு நிகழ்ந்தால் மட்டுமே கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால், அந்த நாட்களுக்குள் சாந்தி முகூர்த்தம் நடக்கிற மாதிரி பார்த்துக் கொள்வார்கள்.

இந்தப் பூமியில் பிறக்கிற ஒவ்வொருவரும் சாதனையாளர்கள் தான். பத்துக் கோடிப் பேருக்கான ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்த பிறகே அவர்கள் பிறக்கிறார்கள். ஆம்... தாம்பத்ய உறவின்போது கிட்டத்தட்ட பத்துகோடி விந்தணுக்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒரே ஒரு விந்தணு மட்டுமே மற்ற எல்லாவற்றையும் தாண்டி முன்னேறி கருமுட்டையை அடைந்து, குழந்தைப் பிறப்புக்கான அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது.

சரி... கர்ப்பம் நிச்சயம் என முடிவாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? கர்ப்பிணியின் கணவனும் அவளது குடும்பமும் என்ன விலை கொடுத்தாவது அவளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அவள் காதுகளில் நல்ல செய்திகள் விழவேண்டும், இனிமையான இசை ஒலிக்க வேண்டும், இனிப்பான பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் ஆயுர்வேத ஆசான்கள்.

ஒரு கர்ப்பிணி அனுபவிக்கும் உணர்வுகள், பார்க்கும் விஷயங்கள், தொடும் பொருட்கள், கேட்கும் சங்கதிகள், சாப்பிடும் உணவுகள்... என எல்லாவற்றின் சாரமும் அப்படியே குழந்தைக்கும் சென்று சேருகிறது. அதனால், கருத்தரித்த முதல் நாளில் இருந்தே குழந்தையின் நல்ல வளர்ச்சிக்கு உகந்த வகையில் தாயின் பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும்.

கரு உண்டாகி ஒரு மாதம் கழித்து மாதவிடாய் தள்ளிப்போன பிறகுதானே, டாக்டரிடம் சென்று பரிசோதித்து கரு உருவாகி இருப்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது? ஆனால், கரு உருவாகி இருப்பதை அந்த நொடியிலேயே உணர்ந்து கொள்ள முடியும் என்கிறது ஆயுர்வேதம். சங்கம வழிபாடு முடிந்த அந்த நொடியிலேயே வயிற்றில் பாரம் உண்டானது போன்ற உணர்ச்சி இருக்கும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். அதிக சோம்பலாக இருக்கும். நா வறட்சி ஏற்படும். உடல் வாட்டம் உண்டாகும். உடல் சிலிர்த்து மயிர்க்கால்கள் கூச்செறியும். சாதாரணமாக முடியும் ஒரு உறவுக்கும் கருத்தரிப்பில் முடியும் ஒரு உறவுக்குமான வித்தியாசத்தைப் பெண்களால் நன்கு உணர முடியும்.

அந்த நிமிடத்தில் தொடங்கி, நிரம்பி வழியும் ஒரு எண்ணெய்க் குடத்தைப் பக்குவமாகக் கையாள்வது போல குடும்பம், அவளைப் பராமரிக்க வேண்டும் என்கிறார் சரகர். அந்தக் குழந்தையின் பிரகிருதி அந்த நிமிடத்திலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது ஆணா, பெண்ணா என்பதும் அப்போதே முடிவாகி விடுகிறது. அதோடு மட்டுமல்ல... தன் மீது காட்டப்படும் விருப்பு வெறுப்புகள், தாயின் கருப்பைக்கு வெளியே இயங்கும் உலகம் என அனைத்தையும் கருவில் இருக்கும் குழந்தையால் உணர்ந்துகொள்ள முடியும்.

குழந்தைகள் கருவில் இருக்கும்போதே அவற்றின் அம்மாக்கள் பார்க்கும் மெகா சீரியல்களின் டைட்டில் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அவற்றை ரசிக்க ஆரம்பித்து விடுகின்றனவாம். பிறந்த பிறகு, அந்தப் பாடலை விஷுவலோடு பார்க்கும் போது, இதை ஏற்கெனவே நான் கேட்டிருக்கேனே என்ற உணர்வு அதற்கு ஏற்படுகிறதாம்.Post Comment

0 comments:

கருத்துரையிடுக