ஆகவே மூலநோயை ஒழிக்க சில டிப்ஸ் . . .
- அகத்திகீரை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை மாலை ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
- வல்லாரை இலைகளை இட்லி சட்டியில் பசும்பால் விட்டு தட்டில் துணி மீது பரப்பி நன்றாக அவிந்தவுடன் நிழலில்உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர மலச்சிக்கல் வராது.
- பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலத்தை குணப்படுத்தும்.
- குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி நீரில் அலசி வெயிலில் காயவைத்து, பவுடராக்கி கொள்ளவும். பொடியை ஒரு சிட்டிகை பசு நெய்யுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும். தவறாமல் 48 நாட்கள் சாப்பிட்டு வர மூலம் பூண்டோடு அழிந்து விடும்.
- அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வர இரத்த மூலம் நீங்கும். மூலக்கடுப்பு உஸ்ணம் நீங்கும்.
- கனிந்த வாழைபழம் , சீரகம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
- சுக்கு, மிளகு, கடுக்காய், பூண்டு, பிரண்டை, கற்றலை வேர், நீர்முள்ளி வேர் முதலியவற்றை சம அளவு எடுத்து அரைத்து புளித்த மோரில் குடித்து வர உள் மூலம் குணமாகும்.
- காய்ந்த திராட்சை பழம் வாங்கி பசும்பாலில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து பழத்தை பிழிந்து அந்த சாறை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மலசிக்கல் தீரும்.
0 comments:
கருத்துரையிடுக