புதன், டிசம்பர் 02, 2009

மூட்டு வலி-ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம். மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம்.

முனிவர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான், இன்றைக்கு ஆயுர்வேத மருத்துவ முறையாக மனிதர்களுக்குப் பலன் அளித்துக் கொண்டிருக்கின்றன.

திட்டமிடல்: காலை எழுந்தவுடன் கடவுள் ஸ்லோகங்கள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என ஒன்றே முக்கால் மணி நேரம் கடந்தவுடன், அன்றைய வேலைகள் குறித்து மனதுக்குள் திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அன்றைய வேலைகளை மனம் திட்டமிடுவதே தியானம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு காலை 4.30 மணிக்கு எழுந்து தினமும் முறையாக அனைத்தையும் செய்வதை எமம், நியமம் (சுய கட்டுப்பாடு, ஒழுக்கம்) என்கிறது ஆயுர்வேதம். நோய் வராமல் தடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை அஸ்திவாரங்கள்.

முதல் கட்ட அறிகுறி: இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக 40 வயதைக் கடந்தவர்களில் 60 சதவீத பேர் மூட்டுவலி காரணமாக அவதிப்படுகின்றனர். முதல் கட்ட அறிகுறியாக தசைப் பிடிப்பு அல்லது இடுப்புப் பகுதியில் வலி அல்லது கால் மூட்டுகளில் வலி ஏற்படும். மூட்டும் எலும்பும் சந்திக்கும் இடத்தில் உராய்வுத் திரவம் ("சைனோவில்'') குறைந்து மூட்டு தேய்வதே பிரச்சினைக்குக் காரணம். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, நச்சுப் பாதிப்பு ஏற்படுவதே இளம் வயதிலேயே மூட்டு வலி ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.

அதிக எடை, உடற்பயிற்சி இல்லாமை: மூட்டு வலிக்கான சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பு அடிப்படைக் காரணங்களான உடல் எடை, உடற்பயிற்சி இல்லாமையைக் கருத்தில் கொள்வது அவசியம். உடல் எடையைச்
žராக வைத்துக்கொள்ள உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அசைவ உணவைத் தவிர்த்தல், உருளை - பட்டாணி - வாழைக்காயைச் சாப்பிடாமல் இருத்தல். ஐஸ் தண்ணிர் உள்பட குளிர் பானங்களைத் தவிர்த்தல், பகல் நேர தூக்கத்தைத் தவிர்த்தல் ஆகியவை மிகவும் முக்கியமானதாகும். மஞ்சள் கரு இல்லாமல் முட்டை சாப்பிடலாம்.

மருதுவர் அல்லது பிஸியோதெரப்பி நிபுணரின் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். 15 நாள் சிகிச்சை முறை: ஆயுர்வேத மருத்துவத்தின்படி மூட்டு வலியைப் போக்க 15 நாள் "பஞ்சகர்ம'' சிகிச்சை முறை உள்ளது. முதல் 7 நாள்கள், 8வது நாள், அடுத்து 7 நாள்கள் என மூன்று கட்டமாக மொத்தம் 15 நாள்கள் சிகிச்சை அளித்து மூட்டு வலியை முற்றிலும் போக்கி நோயாளிக்கு நிவாரணம் அளிக்க முடியும்.

உள்ளுக்கு மருந்தும் வலி உள்ள இட்டத்தில் எண்ணெய் சிகிச்சையும் 7 நாள்கள் அளிக்கப்படும். முதல் கட்ட 7 நாள் சிகிச்சையின் முடிவில் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் வயிற்றுக்குக் கொண்டுவரப்பட்டு, 8-வது நாள் உடலில் இருந்து மலம் மூலம் நச்சுக்கள் வெளியேற்றப்படும். இறுதிக் கட்டமாக, கடைசி 7 நாள்கள் எண்ணெய் மற்றும் உள்ளுக்கு மருந்து கொடுத்து உடலில் உள்ள ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு மூட்டு வலிக்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படும்.

சிற்றாமுட்டி, அஸ்வகந்தா, சிற்றாத்தை, நொச்சி உள்ளிட்ட மூலிகைகள் அடங்கிய மருந்துகள் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சையைத் தொடங்கும் முன்பு தேவைப்படும் நிலையில் எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். எனவே ஆயுர்வேத மருத்துவ முறையைக் கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாமே.!


Post Comment

0 comments:

கருத்துரையிடுக