பசியின்மையால் வருகிற நோய்களுக்கு -அக்னிதுண்டீவடீ -Agni thundi vat
  (ref-பைஷஜ்யரத்னாவளி – அக்னிமாந்த்யாதிகாரம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
I.        சுத்தி செய்த ரஸம் – ஷோதிதரஸ      10 கிராம்
2.      சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக  10           “
இவைகளைச்
சேர்த்துக் கஜ்ஜளி செய்து அத்துடன்
1.            ஓமம் – அஜமோதா                               10 கிராம்
2.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  10           “
3.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்10           “
4.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 10           “
5.            கொடிவேலி வேர் – சித்ரக                         10           “
6.            சீரகம் – ஜீரக                                     10           “
7.            வாயுவிடங்கம் 
-  விடங்க                       10           “
இவைகளைப்
பொடித்துச் சலித்த சூர்ணம், மற்றும் பொடித்த
II.           
 1.            ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார             10 கிராம்
2.            யவக்ஷாரம் – யவக்ஷார                10           “
3.            இந்துப்பு – ஸைந்தவலவண            10           “
4.            கல்லுப்பு – ஸ்வர்ச்ச லவண            10           “
5.            சோற்றுப்பு – ஸமுத்ர லவண                10           “
6.            பொரித்த வெங்காரம் – டங்கண சூர்ண   10           “
தனித்தனியே
சிறிது சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சூர்ண ஆகியன மற்றும்
III.            
1.            சுத்தி செய்த நாபி – ஷோதித வத்ஸநாபி           10 கிராம்
2.            சுத்தி செய்த எட்டிக்கொட்டை - ஷோதிதவிஷமுஷ்டி 160     “
ஆகியவற்றைச்
சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீர ரஸ) கொண்டு நன்கு அறைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி
உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
அளவும்
அனுபானமும்:      
ஒன்று முதல் இரண்டு
மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் வரை வெந்நீர், எலுமிச்சம் பழச்சாறு, தேன், இஞ்சிச்சாறு அல்லது ஜீரகக் கஷாயத்துடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:  
பசியின்மை (அக்னி மாந்தியம்), செரியாமை (அஜீர்ண), ருசியின்மை (அருசி) முதலிய ஜீரணக்கோளாறுகள்,
பெருங்கழிச்சல் (கிராணி)
மற்றும் செரியாமையின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் (ஆமஜ்வர).
தெரிந்து கொள்ள வேண்டியவை ..
- ஆமம் என்ற செரியாத நிலையால் வரும் நோய்களுக்கு இந்த மருந்தை கொடுத்து ஆரம்பித்தால் நல்ல பலன் தெரியும் ..
- அஜீர்ணத்தால் ஏற்படுகிற கிரகணிக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும் ..
- இந்த மருந்தை எனது கிளினிக்கில் கொடுத்து நல்ல பலன் கிடைத்துள்ளது ...நான் ஆமவாததிர்க்கும் இந்த மருந்தை பயன் படுத்துவதுண்டு ..
 


 
 
 
 


 
 
 
 
 
 
 



2 comments:
பசியின்மையை போக்க நல்ல மருந்து நன்றி சார்
பயனுள்ள பதிவு ! நன்றி சார் !
கருத்துரையிடுக