புதன், ஆகஸ்ட் 26, 2015

மூலிகை போலி கதைகள் -உயிரையே பறித்து விடும் -எச்சரிக்கை பதிவு

எங்கு திரும்பினாலும் இலவச மருத்துவ குறிப்புகள் ..
Facebook,watsapp ,net,blog எங்கு திரும்பினாலும் இப்போது மருத்துவ குறிப்புகள் குவிந்து கிடக்கிறது ..எது உண்மை ..எது பொய் ..யார் எழுதியது ..இந்த குறிப்புகளின் உண்மை தன்மை என்ன ?

நிறைய போலி மருத்துவர்களும்
நிறைய போலி மருத்துவ குறிப்புகளும்
நிறைய  போலி மருத்துவ இலவச ஆலோசனைகளும் ..உயிரையே பதித்து விடும் ..

இந்த பதிவு யாருடைய மனத்தையும் புண் படுத்தும் நோக்கில் எழுதும் நோக்கில் எழுத பட்டதில்லை ..
இந்த பதிவை எழுதியவரும் தெரியாமல் எழுதி இருக்கலாம் ..ஆனால் எவ்வளவு பெரிய தவறு அது ..ஒரு வேளை இதை எந்த நோயாளியாவது அவர் சொன்னது போல் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும் ..அவரது லிங்க்
https://www.facebook.com/photo.php?fbid=282382635298597&set=a.118190841717778.1073741825.100005805882875&type=1&fref=nf&pnref=storyஇந்த பதிவர் ..மிக அற்புதமான மருந்தை பற்றி எழுதியுள்ளார் ...

அகத்தியர் குழம்பு ..இது ஒரு சித்த மருத்துவத்தின் மிக மிக அற்புதமான மருந்து ..எல்லா நோய்க்கும் இது மருந்தாகும் ...ஆனால் இந்த மருந்தை நோயாளிக்கு கொடுக்க வேண்டிய அளவு ..ஒரு மிளகு எடை அல்லது அதிக பட்சம் நான்கு மிளகு எடை அளவு -அதாவது 200 mili gram ,500 mili gram(mg) வரை மட்டும் தான் ..அனுபானம் மாற மாற அதற்கு தக்க மிக சிறந்த பலனை தர வல்லது ..இந்த மருந்தை கொடுத்தால் நன்கு வயிறு சுத்தமாகும் அதாவது பேதியாகும் ..வயிற்றின் கழிவுகள் அனைத்தும் போகும் ..
எந்த மருத்துவரும் பத்து கிராம் அளவுக்கு கொடுப்பதில்லை ..கொடுத்ததுமில்லை ..கொடுக்க போவதும் இல்லை ..நீர் வற்றி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது ..இந்த மருத்துவம் அறியாத இந்த பதிவர் மூன்று வேளை அதிகபட்சம் இருபது கிராம் கொடுக்க சொல்கிறார் ..என்ன நடக்கும் என்று நினைக்கவே மனம் பதறுகிறது ..


அவரது பதிவை கிட்டதட்ட 115 share செய்துள்ளார்கள் என்பதும் பலர் like and comment போட்டுள்ளார்கள் என்பதும் கூடுதல் தகவல்


இதே போல் பல போலி பதிவுகளை மக்கள் எச்சரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதை எழுதுகிறேனே தவிர ..யாரையும் புண் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லவே இல்லை என்று மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறேன் ...


உதாரணம் இரண்டு .


இந்துப்பு மூன்று வேலை சமைத்து சாப்பிட்டால் பழுதான கிட்னி பழைய நிலைக்கு திரும்பும் –டயாலிசிஸ் தேவை இல்லை என்கிறது அந்த பதிவு .

உண்மையில் இந்துப்பு நல்ல உப்பு என்றாலும் கூட –கிட்னி பெயிலியர் நோயில் நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப முற்றிலும் எந்த உப்பையும் (இந்துப்பையும் சேர்த்து ) தான் தவிர்க்க வேண்டும். முற்றிலும் பழுதான கிட்னி உள்ளவர்கள் இந்துப்பை நோய் சரியாகும் என்று சாப்பிட்டால் என்ன ஆகும் ? உண்மையில் மிக மிக மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தி உயிர்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் –எந்த ஒரு ஆதாரம் இல்லாத உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த கருத்தையும் தயவு செய்து ஷேர் செய்யாதீர்கள் .எழுதாதீர்கள் . எதோ ஒருவர் சரியானார் என்று சப்பை கட்டும் –ஒரு நோயாளிக்கு சரியானாதால் எல்லோருக்கும் சரியாகும் என்று தவறாக எழுதாதீர்கள். ஆயிரக்கணக்கான கிட்னி பெயிலியர் நோயாளிக்கு சிகிச்சை செய்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன் –எந்த உப்பும் கிட்னி பெயிலியருக்கு உதவாது ..

அனுபவ அறிவும் ,மனிதாபிமானம் உள்ள , மருத்துவ அறிவு உள்ள தக்க மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள் .
குறிப்பு ஒன்று -வீண் தர்க்கத்தை தவிர்க்க இந்த பதிவுக்கு நான் பின்னோட்டம் இட போவதில்லை
குறிப்பு இரண்டு – நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்று சுட்டி காட்ட இந்த பதிவு இல்லை –தவறு இருந்தால் இக்கணமே வருத்தம் தெரிவிக்கிறேன்

தரமான ஆயுர்வேத & ஆயுஷ்  மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)Post Comment

3 comments:

கருத்துரையிடுக