செவ்வாய், மார்ச் 31, 2020

சுவாச மண்டல நோய்களில் சிறந்த மருந்து -தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம் -Dashamoola katutryadhi Kashayam

சுவாச மண்டல நோய்களில் சிறந்த மருந்து -தசமூலகடுத்ரயாதி கஷாயம்  -Dashamoola katutryadhi Kashayam
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

















1.            வில்வவேர் – பில்வமூல                    - 10 கிராம்
2.            முன்னைவேர் – அக்னிமாந்த்ய               - 10       “
3.            பெருவாகைவேர் – ஸ்யோனாக               - 10       “
4.            குமிழ்வேர் – காஷ்மரீ                        - 10       “
5.            பாதிரிவேர் – பாட்டலா                    - 10       “
6.            மூவிலைவேர் – சாலிபர்ணீ                - 10       “
7.            ஓரிலைவேர் – ப்ரிஸ்னிபர்ணீ               - 10       “
8.            முள்ளுக்கத்திரிவேர் – ப்ருஹத்தீ             - 10       “
9.            கண்டங்கத்திரி வேர் – கண்டகாரீ             - 10       “
10.          நெருஞ்சில் – கோக்ஷூர                     - 10       “
11.          சுக்கு – சுந்தீ                                 - 10       “
12.          மிளகு – மரீச்ச                              - 10       “
13.          திப்பிலி – பிப்பலீ                            - 10       “
14.          ஆடாதோடைவேர் – வாஸாமூல             - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுபுகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.


கஷாயம் தயாரிக்கும் விதம்:

கஷாயப் பொடி – 60 கிராம்
 தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்ட வேண்டியது.

அளவு:   
        
30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  





இருமல் (காஸ)இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ)காய்ச்சல் (ஜ்வர)விலாப்பகுதியில் வலி (பார்ஸ்வருஜா)இடுப்பு வலி (டிரிக்கருஜா) மற்றும் பல வித வாயுப் பிடிப்புகளும்வாத ரோகங்களும்கபவாத ஜ்வரம் எனப்படும் Pneumonia விலும்மற்றும் மூச்சுமண்டலம் சார்ந்த நோய்களிலும் ரஸபூபதி ரஸம் மற்றும் தேனுடன் தரப்படுகிறது. டைபாய்டு போன்ற காய்ச்சல்களில் கால கூட ரஸஸன்னிபாத பைரவ ரஸ போன்றவற்றுடனும்இருமல்சளி போன்றவற்றில் சீதாம்சுரஸதாளீசாதி சூரணம் மற்றும் ரஸபூபதி ரஸத்துடனும் தரப்படுகிறது. தலைவலிஉடல்வலி ஆகியவற்றில் ஸ்வர்ண வாதராக்ஷசவாதகஜாங்குஸ போன்ற ரஸௌஷதங்களுடன் தரப்படுகிறது.

மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை-
  1. தஷமூலங்கள் ,திரிகடுகு ,ஆடாதோடை சேர்ந்த மருந்து என்பதால் -எந்த வித நுரையீரல் ,காது மூக்கு தொண்டை சார்ந்த நீர் நோய்கள் ,பீனசம் என்னும் சைனசைட்டீஸ் ,அலர்ஜி,ஆஸ்த்மா வுக்கு இந்த மருந்து சிறந்தது .
  2. தமக சுவாசம் என்னும் ஆஸ்த்மாவுக்கு -வ்யோஷாதி வடகம் என்ற மருந்தோடு சாப்பிட நல்ல பலன் தெரியும் 
  3. உடல் வலி ,அசதிக்கும் ,பசியின்மைக்கும் ,இடுப்பு வலிக்கும் இந்த மருந்தை தரலாம் 
  4. உண்மையான தஷமூலங்கள் சேர்கிறார்களா என்பதை பொறுத்துதான் மருந்து வேலை செய்யும் விதம் மாறுபடும் 

சுவாச மண்டல வைரஸ் நோய்களில் இந்த மருந்தையும் ஆராய்ச்சியின் அடிப்படையில் முயன்று பார்க்கலாம். தக்க துணை மருந்தாக பயன்படுத்தலாம். 

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக