கோடையை -கொரோனாவை விரட்டும் தான்ய ஆயுர்வேத சூப் - முக்குற்றத்தையும் சமநிலை படுத்தும் யூஷம்
ஆயுர்வேதத்தில் நோய்க்கான மருந்துகள் மட்டும் எடுத்துரைக்காமல் பத்யம் மற்றும் அபத்யமான ஆஹாரம் மற்றும் விஹார முறைகளையும் எடுத்துரைக்கின்றனர். அவற்றுள் சில யவாகு(கஞ்சி), யூஷம்(சூப்), கடா, காம்பளிக போன்ற எண்ணற்ற வகைகள்.தான்ய வர்க்கங்களுள் தலைசிறந்த தான்யமாகவும், நித்திய சேவியாக எடுத்துரைக்கப்படுவது- பாசி பயிறு/ பச்சை பயிறு. இதனை அன்றாடம் உணவில் குழம்பாகவோ, சூப்பாகவோ எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.
யூஷம்/சூப் வகைகளுள் ஒன்று :
முத்க யூஷம்/பாசி பயிறு சூப் :
தேவையான பொருட்கள்:
1. பாசி பயிறு- 100 கிராம்
2. நெய் - 1 தேக்கரண்டி
3. மிளகு தூள் - தே. அளவு
4. இந்துப்பு - தே. அளவு 5. தண்ணீர் - 1400 மி. லி
4-5 மணி நேரம் ஊற வைத்த பாசி பயிறு, கழுகி பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் -1400 மில்லி ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
20-40 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அரை திட அல்லது semi solid consistency வரும் வரை கொதிக்க
வைத்து பதம் வரும் சிறிது நேரம் முன் மிளகு தூள், இந்துப்பு சேர்த்து
கொதிக்க விட வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்குமுன் அல்லது இறக்கிய பின்னர் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அன்றாடம் evening time snacks ஆக சேர்த்துக் கொள்ளலாம்.
பயன்கள்:
1. இது மூன்று தோஷங்களையும் சமநிலை படுத்த உதவுகிறது.
2. செரிமான நெருப்பு தூண்டியாக செயல்படுகிறது
. 3. கபத்தைக் குறைக்கிறது - ஆதலால் உடல் எடை குறைக்க
விரும்புபவர் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
0 comments:
கருத்துரையிடுக