புதன், டிசம்பர் 02, 2009

இளமை காக்கும் ஆயுர்வேதம்

இளமை காக்கும் ஆயுர்வேதம்அதர்வண வேதத்தின் துணை வேதம்தான் ஆயுர்வேதம். ஒருவன் ஆயுளை நீடிப்பதற்கும், ஆரோக்கியத்தைப் மேம்படுத்துவதற்கும் ஆயுர்வேதத்தில் பல்வேறு முறைகள் உள்ளன. ஆயுர்வேத சம்தைகளின் (நூல்கள்) காலம் கி.மு. 2000 முதல் கி.மு. 300 வரை.

இளமை நல்கும் ரசாயன சிகிச்சை: ஆயுர்வேதத்தின் 8 பிவுகளில் ஒன்று ரசாயன சிகிச்சை. நரை, திரை விழுந்த சவன முனிவர் ஆயுளை நீடிப்பதற்கும், மீண்டும் வாலிபம் பெறுவதற்கும் ரசாயன சிகிச்சை செய்து கொண்டதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.

இச் சிகிச்சைக்குப் பின்னர் சவன முனிவர் இளமை திரும்பி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தாராம். "உடலில் அடைபட்ட மெல்லிய பாதைகளைத் திறந்துவிடும் முறை' என்பதுதான் ரசாயன சிகிச்சையின் பொருள்.

நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள், வியர்வைத் துவாரங்கள், மெல்லிய ரத்தக் குழாய்கள் என உடலில் பல்லாயிரக் கணக்கான பாதைகள் உள்ளன.

உணவுக் குழாய், குடல் பாதை என்பது வாயில் இருந்து ஆசனவாய் வரை நீண்டுள்ள மிகப் பெய பாதை ஆகும். இப் பாதைகளில் ஏதேனும் அடைப்பு ஏற்படுமானால், நோய் உருவாக அதுதான் காரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆரோக்கியம் காக்க...: ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உடலின் பாதைகள் எப்போதும் அடைப்பில்லாமல் தூய்மையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுருங்கச் சொன்னால் ரசாயன சிகிச்சை என்பது உடலை இயற்கையோடு இயைந்த நிலைக்கு உருவாக்குவது. இது கேட்பதற்கு, படிப்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால் சிகிச்சை முறை அத்தனை எளிதல்ல. பஞ்ச கர்மா: உடல் அமைப்பைத் தூய்மைப்படுத்துவதற்கு அடிப்படையான 5 வழிமுறைகள் உள்ளன. இது "பஞ்ச கர்மா' என்று அழைக்கப்படுகிறது.

வமனா - வாய் வழியாக மருந்து கொடுத்து வாந்தி எடுக்கச் செய்து வாய் வழியாக கழிவுகளை வெளியேற்றுதல். விரேசனா -வாய் வழியாக மருந்து கொடுத்து குதம் வழியாக மலத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்றுதல்.

நஸ்யா - மூக்கில் சொட்டு மருந்துகளைச் செலுத்தி சளி முதலிய கழிவுகளை மூக்கு வழியாகவே வெளியேற்றுதல்.

வர்த்தி - ஆசனவாய் வழியாக எனிமா கொடுத்து கழிவுகளை ஆசனவாய் வழியாகவே வெளியேற்றுதல்.

ரக்த மோக்ஷா - மருந்து கொடுத்து கெட்ட ரத்தத்தை வெளியேற்றுதல்.

பஞ்ச கர்மா உடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு திசுக்கள் அளவில் செயல்படுகிறது.

பண்டைக்கால பஞ்சகர்ம முறை: பஞ்சகர்ம முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய முறைகள், நிறைவு செய்த பிறகு செய்ய வேண்டிய முறைகள் உள்ளன. முறையான, முழுமையான சுத்திகப்புக்கு 3- 4 மாதங்கள் தேவைப்படும்.

இப் பண்டைக்கால முறையை இப்போது பின்பற்றுவது இல்லை. இதைச் சாதாரணச் சூழலில் கடைப்பிடிப்பதும் சாத்தியம் இல்லை.

எல்லாச் சூழலுக்கும் ஏற்ற வாதஅதாபிகா: எனவே எந்தச் சூழலிலும் எல்லோரும் எளிதில் பின்பற்றக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது. வெயிலிலும் மழையிலும் பின்பற்றக்கூடிய ரசாயன சிகிச்சை என பொருள்படும் வகையில் "வாதஅதாபிகா' என அது அழைக்கப்படுகிறது. பிரம்ம ரசாயனா, சவனப்பிராசம், கோஷ்மந்த ரசயானா முதலிய மருந்துகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை இரவில் சாப்பிட வேண்டும். இரவு உணவுக்குப் பதிலாக இவற்றை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டும். பெரும்பாலும் ரசாயனங்கள் சாப்பிட்ட பிறகு பால் சாப்பிட வேண்டியதுஅவசியம்.

உடலில் இந்த ரசாயனங்கள் முறையாகச் செயல்பட வேண்டுமானால் சிலவகை சுத்திகப்பு அவசியம்.

குடலில் உள்ள கழிவுகளை அகற்றித் தூய்மைப்படுத்துவதற்கு பேதி மருந்து கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து ஜீரண சக்தியை அதிகப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும்.

ஒருவருக்கு பசி உணர்வு இயல்பாக இருக்குமானால் அவருக்கு ரசாயன சிகிச்சை தொடங்கலாம். ரசாயனத்துக்கு வயது, பால், இன பேதம் இல்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை ரசாயனம் அதிகக்கிறது. உடலில் நுண்ணுயிர்கள் வளரவோ, பல்கிப் பெருகவோ முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது.

திசுக்களை வலுப்பெற வைக்கிறது. செல் வளர்ச்சி இயல்பாக இருக்குமாறு செய்கிறது. உணவோடு இச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்து நெல்லிக்காய் ரசாயனம்.

மரபணுவியலை அடிப்படையாகக் கொண்டது இன்னொரு முறை. இது "குடிபிராவேசிகா' என்று அழைக்கப்படுகிறது. குடி என்றால் வீடு. வீட்டுக்குள் பிரவேசித்து சிகிச்சை பெற்று புதிய மனிதராக வெளியே வருதல் என்பதுதான் இதன் அர்த்தம்.

இதுவும் இப்போது பின்பற்றப்படுவது இல்லை. கடைசியாக குடிபிராவேசிகா ரசாயன சிகிச்சை செய்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. வயது முதிரும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ள செல்கள் அத் தன்மைக்கு தொடர்பில்லாமல் செயல்படுமாறு இச் சிகிச்சை செய்கிறது. வயது முதிர்ந்த செல்கள் புதிய, இளம் செல்களை பெருக்குமாறும், தொடர்ந்து இளமைப் புத்துணர்வுடன், செயல்துடிப்புடன் இருக்குமாறும் செய்யப்படுகின்றன.

குடிபிராவேசிகா ரசயான சிகிச்சை 45 வயதுக்கு மேல்தான் செய்யப்படும். பல், நகம், முடி முதலியவை அனைத்தும் விழுந்து, இளைமைப் பொலிவுடன் புதிய பல், நகம், முடி முளைக்கும் அளவுக்கு இந்த ரசாயன கிசிச்சை உடலின் அனைத்துச் செல்களையும் மாற்றுகிறது.

இச் சிகிச்சை செய்து கொள்பவருக்கு இதை மறுபிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இச் சிகிச்சையின்போது குறிப்பிட்ட உணவு மட்டுமே தரப்படும். பால், நெய் கலந்து தயாக்கப்படும் விசேஷ காட்டு அசி (சாலி) சோறு தரப்படும். வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. மருந்தாக நெல்லிக்காய் ராசயனம் தரப்படும்.

இச்சிகிச்சை பெறுபவர் நேரடியாக சூய ஒளி, ஒலி, காற்று படாத, மூன்று சுவர்களைக் கொண்டு இதற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் 2 மாதங்கள் அமர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

ஆயுர்வேதத்துக்கே உய தனிச்சிறப்பான ரசாயன சிகிச்சை இது. 100 ஆண்டுக்குப் பிறகு இப்போது ஆயுர்வேத மருத்துவர்கள் குழு ஒன்று சோதனை ரீதியில் குடிபிராவேசிகா சிகிச்சை செய்து பார்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான ரசாயன சிகிச்சைகள் ரத்த சுத்திகப்புத் திறனை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆயுர்வேத ரசாயனம் ஆன்டி ஆக்சிடன்டுகளை உற்பத்தி செய்து ரத்தத்தில் உள்ள ஃபிரீ ராடிகல்ஸ்களை கிரகித்துக் கொண்டு ரத்தத்தைத் தூய்மைப்படுத்துகின்றன.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக