புதன், டிசம்பர் 02, 2009

பஞ்சகர்மாவின் ஆற்றல்

பஞ்சகர்மாவின் ஆற்றல்


இந்தியா என்றால் ஆயுர்வேதம் என்று சொல்லும் அளவிற்கு நம் நாடு ஆயுர்வேத சிகிச்சை முறைக்குப் பெயர் பெற்றது. பழம்பெரும் சிகிச்சை முறையான ஆயுர்வேதம் இந்தியாவில்தான் தோன்றியது என்பது பற்றி நாம் கவனம் கொள்வதில்லை. முறையான ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டால் அதன் பலன் சிறப்பானது. ஆயுர்வேத சிகிச்சைகளில் ஒன்றான பஞ்சகர்மா உடலின் உள்ளேயும் வெளியேயும் நோய்களைத் தீர்க்க உதவுகிறது.

பஞ்சகர்மா என்றால் என்ன? பஞ்சகர்மா மனிதர்களின் மனத்தை நெறிப்படுத்தி பரிசுத்தமான ஆன்மா கொண்ட மனிதராக மாற்றும். உடம்பில் தேவையில்லாதவற்றை நீக்கி உடம்பை சமச்சீரான நிலைக்குப் படிப்படியாகக் கொண்டு வரும் சிகிச்சை இது. இந்த சிகிச்சை, இளமை துள்ளும், மகிழ்ச்சியான, அழகான மனிதராய் உங்களை மாற்றும்.

பஞ்சகர்மா இந்திய அரச பரம்பரையினருக்கான தனிப்பட்ட சிகிச்சை முறையாக இருந்தது. நவீன கால செல்வந்தர்கள் போல பழங்கால அரச குடும்பத்தினர் அடிக்கடி இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். சில சமயங்களில் சில நாள்கள் கூட நீடித்தது. தங்கள் உடம்பில் நாளாவட்டத்தில் சேர்ந்துபோயிருக்கும் நோய்க்கூறுகளை நீக்கிச் சுத்தப்படுத்தும் இந்த சிகிச்சையின் செய்முறைகளை அவர்கள் மிகவும் விரும்பியுள்ளனர்.

மன அழுத்தம் உடையவர்களால் மிகவும் விரும்பப்பட்ட மருத்துவ மதிப்புமிக்க சிகிச்சையாக இது இருக்கிறது. இன்று இளைஞர்களிடமும் பழங்கால அரசர்கள் போல நிலையான இளமை, அழகைத் தேடியலையும் இந்தியகளிடமும் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது பஞ்சகர்மா. இது வருத்தமான செய்தியே. ஏனெனில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் நவீனப் பெண்களுக்கான சிறந்த சிகிச்சை என்பதை உணர்ந்து அனைத்து இந்தியர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டிய சிகிச்சை இது.Post Comment

0 comments:

கருத்துரையிடுக