சனி, டிசம்பர் 05, 2009

எலும்பு மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம்

எலும்பு மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம், அதனால் உண்டாகும் வலி நம்மில் பலருக்கும் தொல்லை தருவதாக உள்ளது.
இந்தத் தேய்மான நிலையை ஆயுர்வேதம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது. முதல் நிலை எலும்புத் தேய்மானம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடும்.
உடல் எடை அதிகமாக அதிகமாக இடுப்பு எலும்புகளும் முழங்கால் மூட்டும் சுமை தாங்க முடியாமல் தேய்ந்து வலியை ஏற்படுத்துகின்றன.
வலி, வீக்கம், இறுக்கம், கழிப்பறையில் அமர்வதில் சிரமம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இரண்டாம் நிலை எலும்புத் தேய்மானம், வேறு சில காரணங்களினால் ஏற்படும்.
காரணம் என்ன? உடலில் வாதம் அதிகரிக்கும்போதுதான் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் ஆயுர்வேதத்தில் எளிய முறையில் சிகிச்சைகள் உள்ளன.
ஆயுர்வேதத்தில் பஞ்சகர்மா சிகிச்சை உள்ளது. அபியங்க ஸ்வேதனம் எண்ணெய் மசாஜ், ஆவி மசாஜ், பிழிச்சல், தாரை, வெது வெதுப்பான எண்ணெய்யை உடல் முழுவதும் அல்லது வலி இருக்குமிடத்தில் ஊற்றுவது எனப் பல வகையான ஆயுர்வேத சிகிச்சை முறைகள் உள்ளன.
குடலை சுத்தம் செய்யும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதும் பலன் தரும். வெளி மருந்துகள் போல உள்மருந்துகளும் உண்டு.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக