சனி, டிசம்பர் 05, 2009

STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?

ருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.

இந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத்தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகளின் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.

மனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.

“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை இருவகையில் மட்டுமே தர இயலும்.

அவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.

நோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.

1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.

2. பசித்தீயை வளர்ப்பது.

3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.

4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.

5. உடற்பயிற்சி.

6. வெயிலில் அமர்ந்திருப்பது.

7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.

மேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என

Post Comment

0 comments:

கருத்துரையிடுக