சனி, டிசம்பர் 05, 2009

ஆயுர்வேதம், பண்டைய இந்திய அறிவியலாகும்

நமது உடலில் அனைத்து நோய்களையும் எதிர்க்கும் ஆற்றல் உள்ளுறவே அமையபெற்றுள்ளது என்பதே ஆயுர்வேத சிகிச்சையின் அடிப்படையாகும். மேலும் மருந்துகள் யாவும் இயற்கையிலே அமையப்பெற்றுள்ளது. ஆயுர்வேத சிகிச்சை ஒர் முழுமையான முறையாகும். ஆகவே ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் மன நிலையைபொறுத்து சிகிச்சை வேறுப்படும். ஆனால் மேற்கத்திய மருத்துவ முறையோ அறைகுறை அறிவை கொண்டு செய்யப்படுகிறது. இவை நோயின் மூலத்தை கண்டறிந்து அழிப்பதை காட்டிலும், பெரும்பாலும் நமது கண்களுக்கு புலப்படும் வலி போன்றவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவே முயல்கின்றன. மேலும் ஒர் நோயிற்கான மருந்துகள் பல உபாதைகளுக்கு வித்திடுகிறது.

ஆயுர்வேதம், இது ஒர் பண்டைய இந்திய அறிவியலாகும். இதன் தொடக்கம் கல் தோன்றி மண் தோன்றா காலமாகும். அதாவது இந்தியாவிலுள்ள மொழி, பண்பாடு போல் ஆயுர்வேதமும் ஆதியும் அந்தமும் அற்றது. புராணங்களின் படி ஆயுர்வேதம் பிரமணால், தந்வந்தரி மகானுக்கு அருள பெற்றதாகும். தந்வந்தரி பாற்கடலில் இருந்து வந்தவர். ஐன்ஸ்டீனின் E = mc2 என்னும் தத்துவத்தை அன்றே பாற்கடலை கடைந்த ஆற்றலில் இருந்து தந்வந்தரியென்னும் மனித உடல் (பொருள்) உருவாகியுள்ளதாக உருவகித்து கூற பெற்றுள்ளது.

செயல்

ஒர் நோய் மனித உடலில் அதன் தன்மையை வெளிகாட்டுவதற்கு பல காலங்களுக்கு முன்னரே நமது உடலில் தஞ்சமடைந்து விடுகின்றன. எவ்வாறு நோய் உருவாகி, தீவினை எற்படுத்த காலமாகிறதோ, அதேப்போல் அதை நீக்குவதற்கும், முற்றிலும் அகற்றுவதற்கும் காலமாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரே நிமிடத்தில், ஒரே நாளில் தீர்க்க கூடிய மந்திர, தந்திர, கண்கட்டி வித்தை மருந்துகள், மாத்திரைகள் இல்லையென்பதையும் உணர வேண்டும்.

செயலின்றி பலனில்லை. உங்களது வாகனம், வீடு, நிலம் ஆகியவற்றை பராமரிப்பது போல் உங்கள் உடல் மீதும் அக்கறை செலுத்துங்கள். நேரமில்லையென்னும் நொண்டி சாக்கை கூறாதீர்கள். தினமும் உங்கள் உடலை பற்றி எண்ணுங்கள், சிறிது நேரம் உடலை பாதுகாக்க செலவிடுங்கள். எவ்வாறு இயந்திரத்தின் உதிரி பாகங்கள், பராமரிப்பு இல்லையெனில் வேலை செய்ய மறுக்கிறதோ மனித உடலின் பாகங்களும் அத்தகையதே. குறிப்பாக கனையம், சிறுநீரகம், கல்லீரல், மன்னீரல் ஆகியவை மிகவும் பரிதாபமானவை. ஏனெனில் இவைகளில்தான் அனைத்து மருந்துகளின் வேதி நச்சு பொருள்களும் சென்று தஞ்சமடைகின்றன.

உங்களின் ஈடுபாடுடன் கூடிய எந்த ஒர் சிறு செயலுக்கும் கோடி பலனுண்டு. உங்களது மனமும் உடலும் இந்த இயந்திரமயமான உலகில் கடும் உலைச்சல், நெருக்கடிக்கு உள்ளாகின்றன. எனவே உங்களின் அக்கறையுடன் கூடிய எந்த ஒரு செயலும் ஏன் எல்லாம் சரியாகிவிடும் என்னும் எண்ணமே பல பலன்களை உண்டாக்கும்.

ஆரம்பிக்கும் முன்

Before you start (this may seem like a repeat of the previous section, but worth stressing again):

  • நம்புங்கள்! எதுவும் ஒரே நாளில் நடந்துவிடாது. நம்பிகையுடன் கடைபிடியுங்கள், தீயவை யாவும் அகலும் – நன்மைகள் பிறக்கும்.
  • எத்தகைய மந்திர, தந்திரமோ, மாயமோ கிடையாது என்பதை உணருங்கள்.
  • உங்களுக்காக மற்றவர்கள் வேலை செய்வார்கள் என்று எண்ணாதீர்கள். உங்கள் வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். உங்களுக்காக நான் மூச்சு விட இயலாது.

Concepts

பஞ்சபூதங்கள்

இந்த உலகம் மட்டுமல்ல நமது உடலும் பஞ்சபூதங்களால் அமைய பெற்றுள்ளது. எனவே நமது உடல்நிலை பஞ்சபூதங்களின் சமச்சீர் நிலையை பொறுத்தே அமைகிறது. இதுவே ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும்.

பூதம்உருவசெயல்
நிலம்தாதுக்கள்சமச்சீர் உணவு
நெருப்புஆற்றல்உடற்பயிற்சி, யோகாசனம்
காற்றுமூச்சுபிரான்னயாமம்
நீர்நீர்நீர் சிகிச்சை
அண்டம்மனம்தியானம்

பஞ்சபூதங்களும் சமச்சீராகயிருப்பது அவசியம். நல்ல ஆரோக்கியமான உணவு, தேகபயிற்சி அனைத்தும் சமச்சீராக அமைய பெற்றும் மன அமைதியில்லை எனில் யாவும் பயனற்றதாகிவிடும்.

மூன்று தோசாக்கள்

தோசாக்கள் என்பது பஞ்சபூதங்களால் அமைய பெற்ற மனித உடலின் ஆற்றல்களை குறிக்கும்.

தோசாபூதங்கள்
வடகாற்று & அண்டம்
பிட்டநெருப்பு & நீர்
கப்ஹாநீர் & அண்டம்

ஒரு ஆயுர்வேத மருத்துவர், முதலில் தன்னிடம் வரும் நபரின் உடலில் எவ்வாறு இந்த மூன்று தோசாக்களும் அமைய பெற்றுள்ளது என்பதை ஆராய்ந்து, அதற்கெற்ற மாதிரியே ஆலோசனைகள் வழங்குவார்.

மூன்று குணங்கள்

மூன்று குணங்களும் மனித மனதின் நிலையை தீர்மானிக்கிறது.

குணம்Characteristics
சாத்விக்essence, light, clarity, understanding, oneness
இராஜசிக்activity, inspiration, action, differentiation
தமாசிக்inertia, doubt, darkness, attachment

Post Comment

0 comments:

கருத்துரையிடுக