சனி, டிசம்பர் 05, 2009

ஆண்மைக் குறைவின் வகைகள்

ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு என்றால் என்ன?
ஆண்களின் விசேஷ சக்தி குறைபாடு அல்லது ஆண்மைக் குறைவு என்பது உடலுறவின் போது ஆண் செயல்பட முடியாமல் போவது. ஆணின் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமலோ அல்லது போதுமான அளவு விறைப்புத் தன்மை அடையாமலோ சரியான முறையில் உடலுறவு கொள்ள முடியாமல் போவது. ஆண் உடலுறவைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறுகிய நேரத்தில் விந்து வெளிப்படுவது

ஆண்மைக் குறைவின் வகைகள்
ஆண்மைக் குறைவு பொதுவாக 3 வகைப்படும்.
1. முதன்மை ஆண்மைக் குறைவு சிறு வயதிலிருந்தே ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை அடையாமல் போவது.
2. நடுநிலை ஆண்மைக் குறைவு சீராக நல்ல முறையில் இயங்கி வந்த ஆண் உறுப்பு ஒரிரு முறையாக பிரச்சனையை சந்திப்பது.
3. முதுமை ஆண்மைக் குறைவு ஏறுகின்ற வயது காரணமாக ஆண்மைக் குறைவு ஏற்படுவது.

இவை தவிர விந்து முந்துதல் - ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பில் நுழைந்தவுடன் விந்துவை வெளியேற்றி விடுவது

இதற்கான காரணங்கள்

      • சோர்வு
      • ஆசையின்மை
      • வெறுப்பு
      • அதிக உணர்ச்சி வசப்படுவது

ஆண்மைக் குறைவும் ஆயுர்வேதமும்

பழமையான ஆயுர்வேத மருத்துவ முறையில் ஆண்மைக் குறைவு மருத்துவத்திற்கென 'விருக்ஷ சிகிட்ஸா' என்ற முறை உள்ளது. ஆயுர்வேதத்தில் ஆண்களுக்கு விசேஷ சக்தி தந்து குதிரை பலம் தருவதற்கும் அதிகமாக உடலுறவில் ஈடுபட "வாஜி கர்ணம்" என்ற சிகிச்சை முறையும் உள்ளது. விறைப்புத் தன்மை விறைப்புத் தன்மை என்பது உடலின் செயல்பாட்டிலேயே மிகவும் சிக்கலானது - ஏனெனில் விறைப்புத் தன்மை பெற நரம்புகள், இரத்தக் குழாய்கள், சுரப்புகள் மற்றும் நல்ல மனநிலை தேவைப்படுகின்றது. இதில் ஏதாவது ஒன்று இல்லையெனில் விரைப்புத் தன்மை அடைவது கடினம். இவை தவிர மூளை ஒரு வித சந்தோஷ ஊக்கியைச் சுரக்கின்றது. இந்த சுரப்பு இரத்த நாளங்களை விரிவடையச் செய்து ஆணின் உறுப்புகளுக்கு அதிகமான இரத்தத்தை செலுத்துகின்றது. அந்த ஊக்கியானது உடலுறவு முடிந்தவுடன் தளர்வை உண்டாக்கி இரத்தத்தை உறுப்புகளிலிருந்து வெளியேற்றுகின்றது. இதனால் விரைப்பு குறைந்து ஆண் உறுப்பு இயல்பு நிலையை அடைகின்றது.


ஆண்மைக் குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்
எவரிடமாவது இவ்வுலகில் உன்னதமான மேன்மையான செயல் எது என்று கேட்டால் ஆண் பெண் சேர்க்கை என்று தான் பதில் வரும். ஏனென்றால் உடலுறவு ஒன்று தான் சந்ததியினரை உண்டாக்கக் கூடியது. உடலுக்கு உற்சாகமளிக்கக் கூடியது. மனநலப் பிரச்சனைகளுக்கும், உடல் நலப் பிரச்சனைகளுக்கும் வடிகாலாக அமைந்து புதுத் தெம்பையும் புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. உலகின் ஆதாரமாக விளங்குவதும் ஆண் பெண் உறவே ஆகும். அத்தகைய உன்னதமான செயல்பாட்டில் குளறுபடியும் மனக்கசப்பும் சொல்ல முடியாத மன வேதனையையும் ஏற்படுத்தக் கூடியது ஆண்மைக் குறைவு. இதனால் மனவெறுப்பு, சோர்வு, கோபம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் தள்ளப்படுகின்றனா. ஆண்மைக் குறைவிற்கு தக்க தருணத்தில் தகுந்த மருத்துவம் செய்து கொண்டால் வாழ்க்கையை மீட்கலாம்.


Post Comment

0 comments:

கருத்துரையிடுக