வியாழன், மே 27, 2010

கூகை கிழங்கு -அரரூட் கிழங்கு

கூகை கிழங்கு 
  • வேறுபெயர்கள் -அரரூட் கிழங்கு  ,கூவமா கிழங்கு -
  • செய்கை -குளிர்ச்சி உண்டாக்கி ,உள் அழலாற்றி ,உடல் உரமாக்கி 
  • குணம் -இருமல் ,சுரம் ,நீர்வேட்கை நீங்கும் ,உடலுக்கு சக்தி தரும் .

மேனியிடும் வாய்க்கு மிருதுவாம் ஆக்கியுண்ணத்
தானிருமல் வெப்பதிக தாகமிவை -ஏ னிருக்கும்
அம்பே ரிளங் கிழங்கி தியாவ்ர்க்கு மாமண ப்பூங்
கொம்பே கூகை கிழங்கை கூறு (அகத்தியர் குண பாடம் )

  • சீத பேதிக்கும் ,சிறுநீர் நோய் உள்ளவர்க்கும் -கூகை கிழங்கின் கஞ்சி நல்லது 




























குணமாகும் நோய்கள் -வயிற்றுபுண் ,வயிற்று பிரச்சனைகள் தீரும் 

Post Comment

சனி, மே 22, 2010

தும்பை -துரோண புஸ்பி



ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம் 

குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு ,பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு ,ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்க்கும் நல்ல பலனை தரும் .

காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும் 

மஞ்சள் காமாலைக்கு -இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும் 


தும்பையில்  பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. 
 வரலாறு 
  • தும்பை பூ  மாலை அணிந்து விட்டாலே அடுத்து  வருவது போர் தான்.கம்ப ராமாயணத்தில் சில பாடல்களில் இதனை காணலாம் 


மற்றும் வான்படை வானவர் மார்பிடை
இற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)
 
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;

இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)


இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .


அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'
கழுதைத் தும்பை எனும்   கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு  அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.



  • தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
 
  • தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால்  பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.  தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.
 
  • தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச்  சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.
 
  • தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.
 
  • தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு  மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.

  • நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.
 
  • தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும்  சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

  •  தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில்  பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது.
  •  அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்கத் தர விக்கல் நீங்கும்.
  •  தும்பை இலையையும், மிளகையும் அறைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விசம் இறங்கும்.
  •  தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.
  •  தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க வசம் இறங்கும்.
  •  தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.
  • தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
  •  தும்பைச் சாறு 200 மி.லி. வெங்காயச் சாறு 100 மி.லி. பசு நெய் 150 மி லி. ஆமணுக்கு நெய் 150 மி.லி. கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் உச்சிக் கரண்டியளவு கொடுத்து வர மாந்தம், கணை தீரும். இருமல், இளைப்பு மாறும். மலர்ச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடுதணிந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்.
  •  பெருந்தும்பைச் சாறு மோரில் கலந்து தரச் செரியாமை, கழிச்சல், மந்தம் நீங்கும்.
  •  தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்துப் புங்கு நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வரக்காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் தீரும்.
  •  தும்பைப் பூவையும், பெருங்காயத்தையிம் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
  •  தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இசிவு நீங்கும்.
  •  தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம் 100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக் கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூசிவரக் கிராந்தி புண் குணமாகும்.
  •  தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப் பெரும்பாடு நீஙுகும்.
  •  தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
  • தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் கொடுத்துவரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
  • தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
  •  தும்பைச் சாற்றையும்,பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.
  •  கழுதைத்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும்.
  •  தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
  •  கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து தர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு தீரும்.
  •  தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச்ச் செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
  • தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிடமும் மாறும்.
  • தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும். கண் பார்வை தெளிவடையும்.
  •  தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த வெட்டுக் காயம், ஆறாத இரண்ங்கள் ஆறும்.
  • தும்பை வேர், சுண்டைவேர் சூரணம், இலப்பைப் பிண்ணாக்கு சுட்ட சாம்பல் மூன்றையும் சன்னமாய் சலித்து எடுத்து மூக்கில் பொடியாய் பயன் படுத்ததலைபாரம், தலைவலி, மூக்கு நீர்பாய்தல், தலையில் உள்ள ரோகங்கள் எல்லாம் மாறும்.
  •  தும்பை, குப்பைமேனி, கையான்தகரையைச்சூரண்ம் செய்து தொடர்ந்து கற்ப முறையில் சாப்பிட்டுவர உடலில் ஏற்படுகின்ற நோய்களும், மன விகாரமும் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். நோயின்றி வாழலாம். 
  •  தும்பை வேர், சாரணைவேர், நாய்வேளை வேர், சித்துர மூல வேர், மிளகு, கழற்சுப் பருப்ப், கருஞ்சீரகம், பறங்கிப் பட்டை, பூண்டு ஆகிய இவற்றை ஓர் அளவாய் எடுத்துச் சூரணித்துத் தும்பைச் சாற்றில் பாவனை செய்து உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு பாலுல் அனுபானித்துத் தரச் சூலை, வாதம், முடக்கு வாதம், அண்டவாதம், வாயுக்குத்து, வயிற்றுப் பெருமல் தீரும்.
  •  சீரகம், காயம், வசம்பு ஆகியவற்றை வகைக்கு இருபது கிராம் எடுத்துத் தும்பைச் சாறு விட்டு அரைத்து மிளகளவு மாத்திரை செய்து குழந்தைகளின் உடல்வன்மை அறிந்து இஞ்சிச் சாறு, தேன், தாய்பால் ஏதாவது ஒன்றில் உரைத்துத் தரக் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மாந்தம், அதனடியாய்ப் பிறக்கின்ற மாந்த வலிப்பு, இசிவு, பொருமல், செரியாக் கழிச்சல் தீரும்.
  •  தும்பைச் சாறு 30 மி.லி. துத்தி இலைச் சாறு 30 மி.லி. பசும் பாலில் கலந்து கொடுத்து வர உள் மூலம், புற மூலம், இரத்த மூலம் தீரும்.
  •  ஒமத்தை அரைத்துத் தும்பை இலைச் சாறு கூட்டித் தர மாந்தம், மாந்தக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் தூரும்.
  •  தும்பைச் சாறு; பொடுதலைச் சாற்றில் பெருங்காயத்தை உரசித் தரச் சுழிமாந்தம், போர்மாந்தம் நீங்கும்.
  • தும்பைச் சாறு, கண்டங்கத்திரிச் சாறு இரண்டையும் தேனில் கலந்து தரக் கணை மாந்தம், மந்தாரக்கணம் தீரும். இருமல், இசிவு நீங்கும்.
  •  கவிழ் தும்பைச்சாறு, எண்ணெய் இரண்டையும் கலந்து மூன்று நாள் தர எலிக் கடி நஞ்சு தீரும்.
  •  தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.
  • தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணத் ஆகிய இவற்றுடன் அக்கரகாரம் கலந்து தேனில் குழைத்துத் தரத் தொண்டைச் சதை வளர்ச்சி கட்டுப்படும்.
  • தும்பை, மிளகு, வசம்பு, ஆகிய இம்மூன்றையும் அரைத்துத் துணியில் பொட்டலம் கட்டி நசியம் செய்யச் சன்னி தீரும்.
  • தும்பைச் சாற்றை மூக்கில் நசியமிடப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
  • தும்பைச் சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர் கோவை குணமாகும்.
  • தும்பைப் பூவைத் தாய் பாலில் ஊறவைத்துக் கண்ணில் பிளியச் சன்னி தீரும்.
  • தும்பைப் பூவைப் பசும்பால் விட்டரைத்து எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தலை முழுகி வரத் தலைபாரம், ஒற்றைதுதலைவலி,மூக்கடைப்பு, நீரேற்றம் நீங்கும்.
  • பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியைத் தடுக்கப் பெருந்தும்பை இலைக் குடிநீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம்.
  •  தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சரங்கு, சோறி, நமச்சல் தீரும்.
  •  தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும்.
  • தும்பைக் குடி நீர் செய்து தர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், மந்தம் தீரும்.
  •  தும்பைச் சாற்றைக் கண்ணிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் கண் பூ மாறும்.
  •  தும்பை இலையை அரைத்துக் கற்பமாக்கி எருமை மோரில் கலந்து பத்து நாள் தரச்சுக்கிலமேகம் தீரும்.
  •  தும்பை இலை, துளசி இலை, இஞ்சி வகைக்குச் சம எடையும், இதறுகு இரு மடங்கு பூண்டும் எடுத்து அரைத்துச் சிற்றாமணுக்கு இலையில் வைத்துச் சுருட்டி நெருப்பில் காட்டி வெதும்பிச்சாறு பிழிந்து துட்டெடை தரப் புற இசிவு தீரும்.
  •  தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும்.
  •  தும்பைச் சாறும், விளக்கெண்ணெய்யும் கலந்து தர வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும்.
  •  கவிள் தும்பை வேர், நத்தைச் சூரி வேர் இரண்டையும் அரைத்து வெண்ணெயில் கலந்து தர மூல நோய் தூரும்.
  •  ஆண்பனைக் குருத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பாலில் கலந்து தர அன்றே தீட்டாவாள். அன்று இரவு சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை கவிழ்தும்பைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி வடக்கு முகமாய் இருந்து குடிக்க மலட்டு தன்மை நீங்கி ஆண்குழந்தை பிறக்கும்.
  •  கவிழ் தும்பை வேரைப் பிடுங்கிக் கர்பிணியின் நெற்றியில் குளிசமாடி இருக்கக் குழந்தை சிரம மில்லாமல் பிறக்கும். சுக பிரசவமாகும்.
  •  தும்பை இலைச் சாறு, பூனைக் காஞ்சொரி இலைச் சாறும் கலந்து தரப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
  • கவிழ் தும்பையை உலர்த்திச் சூரணமாக்கிக் குருவை அரிசி மா கலந்து கருப்பட்டி சேர்த்துப் பிசைந்து தர பெரும்பாடு தீரும்.
  • தும்பை இலை, சாரணை இலை, ஓருள்ளிப் பூடு, வசம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துத் துணியில் முடிந்து நாசியில் பிழியப் பைத்தியம் தீரும்.
  •  கவிழ்தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவெடுத்து அரைத்துத் துணியில் தடவித் திரியாக்கி நெருப்பில் கொளுத்திப் புகைப் பிடிக்கச் சிரசு நோய்கள் எல்லாம் தீரும்.

 

குணமாகும் நோய்களில் -சளி போகும்,விஷம் தீரும் ,தோல் நோய் போகும் 

Post Comment

திங்கள், மே 17, 2010

மருதாணி -மதயந்திகம்


  • சமக்ருததில் மருதான்றியை  மதயந்திக என்று சொல்வோம் ..
  • செய்கையில் -கப பித்தத்தை குறைக்கும் ,அரிப்பை நிறுத்தும் .
  • சுஸ்ருதர் -இதனை மோதயந்தி என்று தனது சம்ஹிதையில் -சிகிட்சா ஸ்தானத்தில் இருபத்தைந்தாவது அத்தியாயத்தில் கூறுகிறார்.
  • தீர்க்கும் நோய்களில் -மஞ்சள் காமாலை ,மூத்திர க்ருச்ரம் என்னும் நீர் கடுப்பு ,அபஸ்மாரம் என்னும் வலிப்பு ,கண்டு என்னும் அரிப்பு நோய்,ரக்த அதிசாரம் போன்ற நோய்களை சரி செய்யும் ..

சித்த மருத்துவத்தில் -
  • செய்கை -துவர்ப்பி,விரண சுத்தி ,நாற்றமக்ற்றி .
  • பண்பு -கீல் வாயு ,குடைச்சல் ,தலை நோய்,கை கால் வலி,எரிச்சலில் -வெளிபூச்சு பூச சரியாகும் 
  • நகப்புண்,சுளுக்கு,புண் இவைகளுக்கு இலையை வைத்து கட்டி குணமாக்கலாம்.
  • இலையை தண்ணீரில் ஊறவைத்து தொடர்ந்து குடிக்க -மேக சொறி புண் படைகள் நீங்கும் 
  • இலை சாறை பாலுடன் சாப்பிட கை கால் வலி நீங்கும் 
  • இலை சாறை பால் -சர்க்கரையுடன் கொடுக்க விந்து பெருகும் 

  • பூ -இந்த பூவை தலையனையாக்கி படுக்க நல்ல நித்திரை வரும் ,உடல் வெப்பம் மாறும் 
  • விதை-நாற்றமகற்றும் .
  • வித்து சாற்றை தாளகதுடன் இழைத்து பூச வெண்குட்டம் -நிறம் மாறும் .
  • வேர்பட்டையின் செய்கை -துவர்ப்பி ,தாது வெப்பகற்றி,உடலை தேற்றும் ..

சோணித தொட்டே மெலாஞ் சொல்லாம லேகிவிடும் 
பேணுவர்க்கி ரக்தமோடு பித்தம்போம் -காணா
ஒருதோன்ற லென்னுமத னோதுமெ ழின் மாதே 
மருதோன்றி வெறால் மறைந்து .(அகத்தியர் குண பாடம் )

மருதோன்றி -முடியை கறுப்பாக்கும் .





























குணமாகும் நோய்கள் -தலை நோய்க்கு நல்லது ,முடிக்கும் நல்லது 

Post Comment

ஞாயிறு, மே 09, 2010

மூலிகைகளின் அகத்தியர் குணபாட பாட்டுக்கள்

அரக்கு -
குட்டம் அசுர்க்கு பித்தம் குன்மம் இரைப்பென்
புருக்கி பட்டிடு புண் கச்சூர் பங்கநோய் தொட்டோர்
அரக்கரக்குஞ் சன்னிகரம் ஐயம் இவைக்கெல்லாம்
அரக்குரக்கு நூலை அறி.
அக்ரகாரம் -
அக்ரகாரம் அதன் பேர் உரைத்தக்கால்
உக்கிராக அத்தோடம் ஓடுங்கான் ஐ முக்கியமாய்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே தாகசுரம்
கண்டகல் பயஞ்தோடுங்காண்.
அகத்தி -
மருந்திடுதல் போம் வன்கிரந்தி வாய்
வெந்திருந்த சனம் செரிக்கும்
வருந்த சகத்திலெழு பித்தமதி சாந்தியாம்
நாளும் அகத்தி இலை திண்ணுபவர்க்கு
அதிமதுரம் -
வயிறு, கழுத்து, தலை, நாரவாய் இவ்விடத்து நோய்கள்
சுரம் அதைப்பு ,உதாவர்த்தரோகம் ,வாயு மூலமுடி, எலி
பாம்பு இவற்றின் விடம் நீங்கும்.
அதிவிடையம் -
அதிவிடையஞ் சர்க்கராற்புத நோய் வெப்பு
கொதிமருவு கோழையொடு எதிர் வாந்தி
என்றுரைக்கும் நோய்க்கூட்டம் இல்லாதகற்றி விடும்
குன்றி நகர் முலையாய் கூறு.
அரத்தை -
 தொண்டையிற் கட்டும் கபத்தை தூரத்துரத்திவிடும்
பண்டை சீதத்தைப் பனகழக்கும்
கெண்டைவிழி மின்னேரகரப் பனை வேருக்கும் பசி கொடுக்கும் சொன்னோம் அரத்தை சுகம்.
அத்தி -
காரமோ உட்டினமாம் காதுகின்ற பித்தத்தை
நீரிழிவைத் தலை நீழ இரத்தம் சேரும்
கிரிசாரத்தைப் போக்கும் கிளர் கோளி எனும்
மரச்சரும் பாலதனை வாங்கு.
அகில்
தளர்ந்தலிருத்தருக்காம் தக்க மணத்தால்
வனைந்த சுரமணைத்துமோடு  வளந்திக்கு
மானே அகில் புகைக்கு வாந்தி அரோசகம் போம்
தானே தளர்ச்சி அறும் சாற்று.
அத்திப்பட்டை -
 வீறு கடுப்பு இரத்தம் வெண் சீத இரத்தமோடு
நாறு விரணங்களெல்லாம் நாடாவாம்  கூறுங்கால்
அத்தி தரும் மேகம்போம் யிழையே எஞ்ஞான்றும்அத்திப்பால் பட்டை கறி.
அரிதாரம்-
 தாகைத்தின் பேருரைக்க தால் கவுல் நோய் குட்டம்
நீளக்குளிர் காய்ச்சல் நீடுகபம்  நாளங்கொள்
துட்டப் பரங்கிப்புண் சூழ் அழுகன் மண்டை நோய்
கிட்டப்படுமோ கிளத்து.
அசுவகந்தி -
கொஞ்சம் துவர்ப்பாம் கொடிய சுயம் சூலை அரி
மிஞ்சு கரப்பான் பாண்டு வெப்பதப்பு  விஞ்சி
முசுவுறு தோடமும்போம் மோகம் அனலுண்டாம்
அசுவந்திக்கென்றறி.
அவுரி
 பெரிய அவுரித் தழைதான் ஓதுபதிணென்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் கும்  தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்க்கு உறுமாந்தம்
சீதம் அகற்றும் தெரி..
அமுரி -
 காணாக்கடிபோம் கதித்தெழுந்த வீக்கமது
காணாது காயசித்தி கைகுளாம் ஐ பூணே
பதித்த கொங்கை மாதே பகர் மாந்தருள்
உதித்த சிறு நீருக்கென்றோது.
அபின் -
நல்ல அபின் குணத்தை நாடறியும் நாம் புகல்வ
நல்ல குன்மம் வாதம் அருஞ்செலி நோய் பல்லில் வலி
பேதி மந்தம் அத்தி நோய் பீனசம் போம் வன்மை
சாதி உதர துத்திதான்
ஆலமரம் 
 சொல்லுகின்ற மேகத்தை துஷ்ட அகக்கடம்பை
கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்காண்  நல் வின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்.

 ஆகாசக் கருடன் கிழங்கு 
அரையாப்பு வெள்ளையகலாக் கொறுக்கை
கரையாத கட்டி இவை காணார்  வரையில்
திருடரெனச் செல்லும் விடம்சேர் பாம்பும் அஞ்சும்
கருடன் கிழங்கதனைக் கண்டு.
ஆடாதொடை 
ஆடாடைப் பன்னம் ஐயாறுக்கும் வாதமுதற்
கோடாகொடி சுரத்தின் கோதொழிக்கும் நாடின்
மிகுத்தெழுந்து சன்னி பதிமூன்றும் விலக்கும்
அகத்து நோய் போக்கும் அறி.
ஆளிவிதை 
 வீக்கம் அதிவாந்தி பேனி வலி வாயு
தூக்கு நரம்பின் குத்தல் தொல் அழலை _ஓக்காளம்
மளி அருசி விரைவாதப்போக்கும்
ளிவிதை தன்னால் அறி.
 இளநீர் 
இளநீரால் வாதபித்தமேகு மனதும்
தெளிவாய்த் துவங்கு இருமிகு திருஷ்டி தொளிவும்
குளிர்ச்சியுமுண்டாகும் கொடிய அனல் நீங்கும்
தளர்ந்தகன நொய்யதாகும் சாற்று.
இலவங்கப்பத்திரி 
 மேகசுரம் சீத்சுரம் வெட்டை சவாசங்காசம்
தாக பித்தம் வாந்தி சர்வாசிய நோய் மேகத்திறன்
கட்டியொடு தாதுநட்டம் கைப்புருசி போக்கிவிடும்
இட்ட இலவங்கத்தின் இலை..
 இந்துப்பு 
 அட்ட குண்மம் அசுர்க்கர சூர் சீதபித்த துட்ட
ஐயம் நாடிப்புண் தோடங்கள்  கெட்ட மல கட்டு
விடவிந்துப்பை காமிய நோய் வன்கரப்பான்
விட்டுவிட இந்துப்பை விள்.
 இரசம்
விழிநோய் கிரந்தி குண்மம் மெய் சூலை புண்குட்
அழிகால் இல் விந்துவினால் அத்தை  வழியாய்ப்
புரியும் விதியாதும் புரியினோயெல்லாம்
இரியும் விதி யாதுமிலை.
இண்டு
 பீனிசத்தைப் போக்கும் பெருகியதோர் நீரேற்ற
தானசிக்கச் செய்யும் இது சத்தியங்காண்_ வானசைக்கும்
மண்டைக் குடைச்சல் மருவுமுக சன்னியும் போம்
பண்டையுற்ற இண்டினுக்குப் பார்.
இலுப்பை
புண்ணும் புரையும் அறும் போதத் துவர்ப்பாகும்
எண்ணும் அகக்கடுப்பிருகமோ _ பெண்ணே கேள்
நீரிழிவு ஏகும் நெடுமோனம் மூலத்தால்
போரடர் கடுப்பு இரத்தம் போம்.
 இலந்தை 
பித்தம் மயக்கம் ருசி பேராப் பெரும் வாந்தி
மொத்த நிலம் எல்லாம் முடிந்திடுங்காண்  மெத்த
உலர்ந்த வெறும் வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை ந்றுங்கனியை எண்.
 இரஸ்தாளி வாழை 
 வெவ்வாழை வெள்வாழை சேர்ந்தரஸ்தாளி மொந்தன்
ஒவ்வும் இதை நோயோர்க்கு உலகத்தில்  சவ்வருக்கு
வாழை மலைவாழை பசும் வாழை கருவாழைகளில்
ஊழி கருவாழை நன்றாம் ஓது.
இஞ்சி 
இஞ்சிக்கிழங்கு இருமல் ஐயம் ஓக்காளம்
வஞ்சிக்கும் சன்னிசுரம் வன்பேதி விஞ்சுகின்ற
சூலையறும் வாதம்போம் தூண்டாத தீபனமாம்
வேலையுறுங் கண்ணாய் விளம்பு.
உள்ளி
 சன்னியோடு வாத்தலை நோவு தாளின் வலி
மன்னியவரு நீர்க்கோவை வன்சீதம் _ அன்னமே
உள்ளுளிக் காண்பாய் உளை முலைரோகமும் போம்
கொள்ளுளி தன்னால் வெகுண்டு.
ஊமத்தை 
வாதம் அறும் பித்தமயக்கம் அறும் மாநிலத்தில்
தீது க்ரப்பான் சிரங்கு அகலும் கோதாய் கேள்
மாமத்தமாகும் வரநசி எல்லாம் போகும்
ஊமத்தங்காய் என்றுரை.
ஊசிக்காந்தம் 
காந்தத்தால் சோபை குன்மம் காமிலமேகம் பாண்டு
சேர்ந்ததிரி தோடம் வெட்டை சீதங்கால் _ ஓய்ந்தபசி
பேருதரம் கண்நோய் பிரமியம்நீர் மையும் போம்
ஒரினிறை யுட் உறும் உன்.
எலுமிச்சை 
தாகங் குகைநோய் தாழா சிலிபதநோய்
வேகம் கொள் உன்மாதம் வீறுபித்தம் _மா கண்ணோய்
கன்னநோய் வாந்திபோம் கட்டுவாதித் தொழிலில்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து,”
எருக்கு 
எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும் வாயுவைத்
திருக்கறவே கொன்றுவிடும் தீர _ செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது.
எருமை மோர்
தாகம் கிரகணி சலக்கழிச்சல் காமாலை
கம் குடையு மற்றுப்போ மோகமில்லா
தேவாமிரதமு மாஞ்சீர் மானிடர் தமக்கு
மோவா மருந்து எருமை மோர்.
எண்ணெய் 
புத்திநயங்குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகளும்
சத்துவங் காந்தி தனி இளமை மெத்தவுண்டாம்
கண்ணோய் செவிநோய் கபால அழல் காசநோய்
புண்ணோய் போம் எண்ணெய்யால் போற்று.
எருமை வெண்ணெய் 
எருமை வெண்ணெய்க்கு எரி நீரிழிவு
பருவ மயிலே கேள் இப்பாரில் _ திருமியுறும்
மந்தமாம் வாதமிகு மாறா சுபங்கரப்பான்
தொந்தமா நோயடருஞ் சொல்.
ஏலம் 
தொண்டை வாய் கவுள் தாலு குதங்களில்
தோன்றும் நோய் அதிசாரம் பன் மேகத்தால்
உண்டைபோல் எழும் கட்டி கிரிச்சரம்
உழலை வாந்தி சிலந்தி விஷசுரம்
பண்டை வெக்கை விதாக நோய் காசமும்
பாழும் சோமப்பிணி விந்து நட்டம் உள்
அண்டை ஈளை வன்பித்தம் இவைகலாம்
லமாம் கமழ் ஏலமருந்தே.
ஓரிதழ் தாமரை 
 ஓரிதழ்த் தாமரையின் உற்ற குணத்தைக் கேளாய்
மார்பில் இல்லாத மங்கையர்க்கு மோரில்
குடிக்கப்பால் உண்டாகும் கோர மேகத்தை
படிக்குள் இருக்கா தொழிக்கும் பார்..
ஓமம்
சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம்  ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல். 
கந்தகம் 
நெல்லிக்காய் நீள் பதிணென் குட்டமந்தம்
வல்லைகலிசை குன்ம வாயு கண்ணோய் _ பொல்லா
விடக்கடிவன் மேகநோய் வீறுசுரம் பேதி
திடக் கிரகணி கபம் போம் தேர். 
கடுக்காய் 
கடுக்காயும் தாயும் கருதில் ஒன்றென்றாலும்
கடுக்காய் அத்தாய்க்கு அதிகம் காண் நீ  நோய்
ஒட்டி உடல் தேற்றும் உற்றஅன்னையோ சுவைகளை
ஊட்டியுடல் தேற்றும் உவந்து.
கடுகு ரோகணி 
மாந்தம் ஐயம் கரம் வாயுகரப்பன் மஞ்
சேர்ந்த மலக்கட்டு திரிதோடம்  பேர்ந்த பொட்டு
புண் வயிறு நோய் இவைபோம் பொற்கொடியே பேதி
உண்டாம் திண் கடுகுரோகணிக்குத் தேர்.
கருஞ்சீரகம் 
கருஞ்சீரகந்தான் கரப்பானொடு புண்ணும்
கருஞ்சீராய் பீனிசமும் மாற்றும்  அருந்தினால்
காய்ச்சல் தலைவலியும் கண்வலியும் போம் உலகினில்
வாய்ச்ச மருந்தெனெவே வை.
கடுகு 
இடிகாசம் நாசி சூர் ஈளை கபம் பித்தம்
கடிவாத சீதக்கடுப்போ  உடலில்
- – - – - – - – - – - – - – - – - – -
படுகோட்டு நோயென்னும் பங்கிவை களைப்புண்.
கஸ்தூரி 
சொல்லரும் வசியம் காந்தி சுகமுதல் அணுகும் பின்னும்
மெல்லியலார் தமக்கு நாதருத்தியாம் தலை நோய் ஏகும்
பல்லுரு கபமும் தீரும் பகரொணா பலமும் உண்டாம்
மல்லடர் சன்னி ரூட்சை மாறும் கஸ்தூரிக்கென்னே.
கண்டங்கத்திரி *
காசசுவாசம் கதித்த சய மந்தமனல்
வீசு சுரம் சன்னி விளைதோடம் சுறுங்கால்
டூத்தரயுணிற் கா எரிகாரம்சேர் கண்டங்
கத்திரி யுண்டாகில் காண்.
கற்றாழை
 பொல்லாமேகம் கபம் புழு சூலை குட்டரசம்
அல்லாடு மந்தம் பகரந்த குன்மம் _ எல்லாம் விட்
டேகுமரிக்கு எரிச்சல் கீரிச்சரமும்
கு குமரிக்கு மருண்டு.
கருநொச்சி 
மாதக்கடுப்பகலும் மாறாத பினசம் போம்
ஓதப்பேய் ஓடி ஒளிக்கும் காண்  வேதை செய்யும்
மண்டைக்குடைச்சலும் மாறும் கரு நொச்சிக்குப்
பண்டைத்தலைவலி போம்.
கழற்சி 
விரைவாதம் சூலை அறும் வெட்டையனல் ஏகும்
திரை சேர்ந்த குன்மம் நிலையா  துறைசேர்
அழற்சி விலகும் அருந்தில் கசப்பாம்
கழற்சி இலை என்றுரைக்கும் காண்.
கழுதைப்பால் 
கழுதைப்பால் வாதம் கரப்பான் விரணம்
தழுதளையுள் வித்திரதிதானே  எழுகின்ற
ஒட்டிய புண் மேகமொடு சொரிசிரங்கு
கட்டி இவை போக்கும் கழறு..
கள்ளி 
நரம்புச் சிலந்தி நளிர்வாத சன்னி
உரம்பெரிய வாதமிவை ஓடும்  செரும்புலியில்
கள்ளிமரப்பட்டயினால் காரநொச்சிப்பட்டையது
துள்ளு சன்னிவாத மகற்று..
கஸ்தூரி மஞ்சள் 
 தலைவலி,நீரேற்றம், சளையாத மேகம
உலைவு தரு பீனசத்தினோடே  வலி சுரப்பு
விஞ்சுகடி விடமும் வீறு விரணங்களும் போம்
மஞ்சட்கிழங்குக்கு மால். 
கஞ்சாக்கோரை 
 மாந்தக்கழிசலும் மாந்தம் கணம் போம்
சேர்ந்த மூலத்தின் இவை அடங்கும்  பூந்தடக்கை
அன்னமே மேகம் அறும் கஞ்சாக்கோரையினை
உண்ண இருமை ஓது.
களிப்பாக்கு 
களிப்பாக்கு தின்றக்கால் கண்டத்துள் கோழை
ஒளிப்பாகக் கட்டுதுண்மை  தளிர்ப்பான
பித்த அரோசகம் போம் பேதிமிக உண்டாகும்
சித்த மகிழ்ச்சியும் செப்பு.
கற்பூரம் 
 கிருமி சலதோடம் கிளைவலிப்பு சன்னி
பொருமல் மந்தம் அங்கிபட்டபுண்  எரிசுரங்கள்
வாந்தி பித்தம் சீதமுறு வாதம் செவி முகநோய்கள்
சன்னி கற்பூரம் ஒன்றால் சாற்று.
கல்நார்
 காசபித்தம் வாதங்கடுப்பீறு நோய் எரிவு வீசு
வீசுசர்த்தி நீரடைப்பு விந்து நட்டம்  பேசும் அசை
திண்ணாரைக்கூவு மந்தம் தீகுடர் கால் தாகமிவை
கன்னாரைக் கூவ விடுங்கான்.
கரு ஊமத்தை 
விந்திரதம் கட்டும் எழின்மேனிதரும் குட்டமொடு
வந்த வியர்ப்பரிப்பு மாற்றும் காண்  முந்த
பெருமத்தம் செய்சுரத்தை போக்குங்கயப்பாங்
சருமத்தம் நன் மூலி காண்.
கணப்பூண்டு

கணப் பூண்டிலைமேகக்கட்டியைக் கரைக்கும்
மணக்குமிக வாய்க்கு மதுரஞ்  சிணுக்கான
வாதகணம் பித்தகணம் மாறும் பசுரத்தின் கப
பேதம் அறப்போக்குமெனப் பேசு.
களாவேர் 
விடத்துறு நோய் பித்தம் ஐயம் வேர்வை அதிதாகம்
திடத்த உதிரத்தினது சிக்கில் _ சடத்து எழும்
அக்னிமந்தம் இவை அண்டா தொருநாளும்
சிக்கெனக் களாவேரைச் சேர்.
காட்டு சீரகம் .
கைகறுப்பு மாறும்கடிய மேகம் போகும்
மெய்குளிரும் பித்தம் விளையுமோ _ மெய்யகரி
கெட்டு பனைமுலையாய் குன்மவாதம் தொலையும்
காட்டு நற்சீரகத்தைக் காண்.
காந்தம் .
காந்தத்தால் சோபை குன்மம் காமில மேகம் பாண்டு
சேர்ந்த திரி தோடம் வெட்டை சீதம்கால் _ ஓந்த பசி
பேருதரங்கண்ணோய் பிரமியம் நீர் ஆமை போம்
ஓரினிறை ஆயுள் உறும் உண்.
கார்போக அரிசி.
கார்போகமாம் அரிசி கண்டால் கரப்பான் புண்
பீர்சருவ நஞ்சிவை போம் பித்தமுண்டாம் _ பார்மீதில்
வாதகபம் நமைச்சல் வன்சொறி சிரங்கு அறும்
சீர் மலர் குழலாய் செப்பு.
கிளியூரல் பட்டை .
மணவர்க்கமாகும் வருகரத்தைப் போக்கும்
தணலாகிய வெப்பைத் தணிக்கும் குணமார்
கிளியூரல் பட்டையது சீதம் பயிலும்
அளியூரல் கூந்தன் மின்னே ஆய்.
கிரந்தி நாயகம்.
சீதமது மாவிஷமும் தீரும் விழி நோயகலும்
பூதமொடு மருளும் போகும் காண் _ மேதினியுட்
ஆயகத்துப் புண் கிரந்தி ஆறு மயிலே கிரந்தி
நாயகத்தினாலே நவில்.
கூகை நீர்.
கூகை நீற்றால் மாதர் குய்ய நோய் வித்திரதி
ஆகமென்னும் மார்பு நோய் அண்டுமோ _போகம் அதில்
வீரியமும் உண்டாகும் வீழ்கிருமி நோயோடு
தூர் இருமல் ஈளையும் போம் சொல்.
குங்குமப்பூ.
விந்து நஷ்டம் தாகம் அண்டம் மேகசலம் சூலைகபம்
உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி_ முந்து கண்ணில்
தங்குமப்பூவோடு உறு நோய் சர்த்தி இவை நீங்கவென்றால்
குங்குமப்பூ ஓரிதழைக் கொள்.
குக்கில்.
காச சுவாசம் கனத்த மேகக்கட்டி
வீசு விஷக்கடி விரிச்ச குட்டம் _ பேசு
படர் தாமர சிரங்கு பண்டை விரணங்கள்
இடர் செய்யில் குந்திரிக்கம் எந்து.
குறிஞ்சான்.
 சிறு குறிஞ்சா வாதமொடு சீதத்தை நீக்கும்
மறுவுதிரம் இல்லாத மாதர் _ குறுமுலகில்
அத்தி சுரமும் அகலாக்கடி விஷமும்
தத்தி அகலத் தகர்த்தான்.
குன்றி மணி .
நேத்திர நோய் பித்தம் நிறமமுங்கல் காமாலை
வேர்த்திடும் தாபச்சோப வெப்புடனே _ கோத்திட்ட
ஐய முதல் யாவும் போம் ஆயிழையே காட்டிலுறை
செய்ய குன்றியின் விதையைச் சேர்.
கொம்பு பாகல் .
மருந்துகளின் நற்குணத்தை மாற்றும் அ·தொன்றோ
திருந்தவலி வாதத்தைச் சேர்க்கும் _ பொருந்து பித்தம்
கூட்டம் அவபத்தியத்தைக் கொண்டிருக்கும் வன்கரப்பான்
காட்டும் கொMபு பாகற்காய்.
கொன்றை .
மலக்கிருமி ஓடும் மது நீர் குடலாந்
தலத்து நோயும் குலைத்து சாயும் _ நிலத்துள்
என்றைக்கும் வாடாத இன்பமலர்க் கொம்பே
கொன்றைப் பசு மலரைக் கொள்.
கொல்லன் கோவை .
சூலை பாண்டு திரிதோஷம் அக்கி வெப்பு கண்ட
மாலைக்குடலின்வலி மாகுட்டம் _ ஆலவிடம்
உட்கரப்பான் மெய் எரிப்பும் உண்டோ கொல்லங்கோவை
கைக்குளிருக்க வின்னிங்காண்.
குங்கிலியம்.
பெரும்பாடு மேகம் போம் பேரா உடலில்
அரும்பிய புண் ஆறும் இவையல்லால் _ துரும்பாம்
எலும்புருக்கி புண் சீழும் ஏகும் உலகில்
சலம் பருகும் குங்கிலியத்தால்.
குரோசானி ஓமம்.
வெகு மூத்திரம் வாதம் வீரிய நட்டம் புண்
உகு பேதி உட்கடுப்புனூடே _ மிகு கரப்பான்
தீராக்கபம் இவை போம் செய்யக் குரோசானி என்றால்
வாரா மயக்கம் உறுமால்.
குமட்டி .
பற்று தீப்பூச்சிகலை பற்பலவா மந்தத்தை
சுற்றுந்திரப் பித்தத்தை தூவிட _ முற்றும்
அரிக்கும் அட்டி யாயிலை மாதங்கருரை அன்றோ
வரிக்குமட்டியாய் இலை மாதோ.
குப்பைமேனி.
தந்த மூலப்பிணி தீத்தந்திடு புண் சர்வ விஷம்
உந்து குன்மம் வாத உதிர மூலந்தினவு
சூலஞ் சுவாசம் தொடர்ந்து பீனசம் கபம் போம்
ஞாலங்கொள் மேனியதனால்.
குறுந்தொட்டி.
வாதசுரம் தாகம் மதலை கணம் மாந்தம்
சீதசுரம் பித்தமென செப்பனங்கும் _ ஓது நம்பால்
சேரா முட்டிக்கேகும் செய்ய மடமயிலே
பேராமுட்டித் தூரைப்பேசு.
கொடிக்கள்ளி.
துய்ய கரப்பன் சொறி சிரங்கும் புண்ணும் போம்
செய்யகடி குட்டநோய் சேருமோ _ மெய்யில்
அடிக்கடி சேர் குன்மவலி அத்தனையும் தீரும்
கொடிகள்ளிப் பாலுக்குக் கூறு.
கொத்தான் .
சித்தரறிவார் செறிகுழலே நீ கேளாய்
கொத்தான் மிகக்குளிர்ச்சி கொண்டக்கால் _ சுத்தம்
பிரமேகம் உட்கிரிச்சம் பித்தம் இளைப்பும்
அறுமே தவறாது அறி.
கொத்தமல்லி .
கொத்தமல்லிக்கீரை உண்ணில் கோர அரோசகம் போம்
பித்தமெல்லாம் வேறுடனே பேரும் காண் _ சத்துவமாம்
வெச்சனவே போகம் விளையும் சுரம் தீரும்
கச்சுமுலை மாதே நீ காண்.
கொடிவேலி.
கட்டி விரணம் கிரந்தி கால்கள் அரையாப்பு
கட்டி சூலை வீக்கங்காழ் மூலம் _ முட்டி இரத்தக்
கட்டு நீரேற்றம் கனத்த பெரு வயிறும்
அட்டும் கொடிவேலியாம்.
கோரோசனை .
நீரிழிவு மேகசுரம் நீங்கா கனல் வேகம்
கூரிய உன்மாதம் குழந்தைகள் நோய் _ பாரகபம்
வீறும் மசூரியும் போம் வேகந்தண்ணில் இரண்டாய்
கூறும் கோரோசனைகட்கு.
கோட்டம் .
நாட்டில் உறு வெட்டை நடுக்கம் எனும் நோய்கள்
கோட்டம் எனச்சொன்னால் சூலையும் காண் _ கூட்டில்
கர தோடம் தொண்டை நோய் தோலாத பித்தம்
பரடேசம் போமே பறந்து.
கோழி ஆவாரை இலை .
ஆழி சுற்றும் வையத்தடர்ந்த பேராமை ஒரு
நாழியினில் கெட்டு நலியும் காண் _ தோழிகள்
கோழி அவரைத் தழைக்குக் குன்மம் குடல் வாதம்
ஊழி வரைக்கும் வாரா ஓது.
கோவை .
கண்ணும் குளிர்ச்சி பெறும் காசமொடு வாயுவறும்
புண்ணும் சிரங்கும் புரண்டேகும் _ நண்ணுடலம்
மதிலார் வெப்பகலும் வீழாநீர் கட்டேகும்
கோதிலா கோவை இலைக்கு.
கோழிமுட்டை .
வாத பித்தம் சேர்ப்பிக்கும் வன் தோடம் புண் போக்கும்
தாதுவை மெத்தத் தழைப்பிக்கும் _ ஓது
கபத்தை அடக்கும் கரப்பான் உண்டாக்கும்
இபத்தை உறும் கோழிமுட்டை எண்.
சந்தனம் .
கோதில் சந்தஞ் சீதோஷ்ணம் கொண்டிருக்கும்
வாத பித்தம் ஐயம் மனப்பிரமை ஓது சுரம்
மேகந் தனித்தாகம் வெப்பு சொறியும் போக்கும்
ஆகத் தனக்குறுதி ஆம்.
சங்கம் வேர் .
சங்கம் வேர்ப்பட்டை சளி இருமலை சுரத்தை
அங்கவாதக் கடுப்பை ஆட தப்பை _ பங்கமே
செய்யும் கிரந்தியை உள் தீக்கால் கிருமியை இவ்
வையந் தனிலொழிக்குமால்.
சர்க்கரை .
அருந்து மருந்தின் அனுபானமாக
பொருந்து மடல் வாந்தி பித்தம் போக்கும் _ அருந்த ருசி
மதிக்கபத்தை நீற்று மகிழ்ச்சி உண்டாக்கு
நறுஞ்சர்க்கரை.
சடாமாஞ்சில் .
குட்டம் சிலந்தி விடம் கோர பிராண சுரம்
உட்டினங்கால் பேதி கண்ணோய் ஒட்டிருமல் _ கொட்டிரத்த
பித்தம் இரப்பேகும் பெருங்கோரை என்றுரைக்கும்
சுத்த சடாமாஞ்சில் தனைச் சொல்.
சதகுப்பை .
வாதமொடு சூதிகா வாதம் சிரசு நோய்
மோது செவி நோய் கபநோய் மூடுசுரம் _ ஓதுகின்ற
மூளைக்கடுப்பு முதிர் பீனசம் போக்கும்
ஞால் சதகுப்பை நாடு.
சவ்வாது 

சுரமும் தலைவலியும் துண்டத்தடைப்பும்
உரமுந்து நோயோடு உடற்குள் _ பரவி மிகக்
குத்துகின்ற வாயுவும் போம் கோதில் சவ்வாதினுக்கு
மெத்த வசியமுமாம் விள்.
சங்கங்குப்பி .
கரப்பான் கிரந்தி கருங்குட்ட ரோகம்
உரப்பான மேகம் ஒழியும் _ கருவாம்
கருங்கிரந்தி செவ்வாப்பு கட்டிகளும் ஏகும்
அருஞ்சங்கங்கங் குப்பிக் கறி.
சதுரக்கள்ளி .
கரப்பான் சொறியும் கடியும் கபமும்
உரப்பான குன்மம் ஒழிக்கும் _ நிரப்பான
பேதி தரும் சீதமென்ற பேச்சகற்றும் பூவுலகில்
சாது சதுரக்கள்ளிதான்.
சம்பீரம் .
தாகம் குனக நோய் தாழா சிலிபத நோய்
வேகங்கொள் உன்மாதம் வீறு பித்தம் _ மாகண்ணோய்
கன்ன நோய் வாந்தியும் போம் கட்டுவாதித் தொழிலில்
மன் எலுமிச்சங்கனியை வாழ்த்து.
சாதிக்காய் .
தாது நட்டம் பேதி சருவாசியம் சிர நோய்
ஓது சுவாசம் காசம் உட்கிரணி _ வேதோ
ஏலக்காய் வரும் பிணிபோம் ஏற்றமயல் பித்தம்
குலக்கய் அருந்துவர்க்குக் கூறு.
சாதி பத்திரி .
சாதி தரும் பத்திரிக்கும் தாபசுரம் தணியும்
ஓதுகின்ற பித்தம் உயரும் காண் _ தாது விருத்தி
உண்டாம் கிராணியோட கழிச்சல் அறும்
பண்டாங்குரையே பகர்.
சாதிலிங்கம் .
ஆதி இரத உருக்காதலால் சாதிலிங்கம்
ஓதில் இரத கணம் உற்று உடலில் _ தீது புரி
குட்டம் கிரந்தி கொடுஞ்சூலை வாதமுதல்
உட்டங்கு நோய்களை ஓட்டும்.
சிற்றாமணக்கு .
மருந்தின் அழலும் வளியின் மூலத்துள்
பொருந்து அழலும் போக்கும் _ குருந்திற்கு
நன்றாய் என வளர்க்கும் நாளும் அழல் தணிக்கும்
சிற்றாமணக்கின் நெய்தான் நேர்.
சிறுநாகப்பூ .
சிறுநாகப்பூவினது செய்கை சொல்வோம்
குறியாடும் மேகத்தைக் கொல்லும் _ நெறியை விட்டு
தீதா செல் வாயுவைத் தீர்க்கும் இருமல் போகும்
கோத்ஹ இதை அறிந்து கொள்.
சிற்றரத்தை .
வாந்தி பித்தம் கரப்பான் வாத சிரோரோகம்
சேர்ந்த கபம் முத்தோடம் சீதமொடு _ நேர்ந்த சுரம்
மற்றரத்தை காட்டி வரும் இருமலௌம் தீரும்
சிற்றரத்தை வன் மருந்தால் தீர்.
சிவனார் வேம்பு .
சாய்க்கு இடிப்புண் பழம்புண் சர்மகுட்டம் பிளவை
தீக்கடுக்கால் வன்பெரு நோய் சிந்துமா _ நோய்க்கு
விதையாதி வேம்பினா மெய்க்கழகு காலை
உதையாதி வேம்பினால் நண்ணு.
சிறுகீரை .
கண்புகைச்சல் நேத்திர நோய் காசம் படலம் ரசப்
புண் கிரிச்சரம் சோபை பொங்கு பித்தம் _ மண்பரவு
தாவர விடங்கள் போம் தாழாத்திருவும் உண்டாம்
கூவு சிறுகீரைதனைக் கொள்.
சிறுகுறிஞ்சான் .
சிறுகுறிஞ்சா வாதமொடு சீதத்தை நீக்கும்
மறுவு திரவு இல்லாத மாதர் _ உறு உலகில்
அத்திகரம் அகலாக் கடி விடமும்
அத்தி அகல தகர்க்குத்தான்.
சிறுபீளை .
பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக் கிரிச்சரம்
பூண்ட திரி தோடம் இவை போகும் காண்  தாண்டி
பரியவேளைத்துரத்தும் பார்வையில் கண் மாதே
சிறிய பீளைக்கு சிதைத்து.
சிறு புள்ளடி .
மாந்தகணம் பேராமம் வன்மந்தம் நீங்கிவிடும்
ஓய்ந்த முலைப்பாலும் ஒழுகும் காண் _ மோந்தே
சிறுபுள்ளடி உதையாத்தே மலர்ப் பூங்கோதாய்
சிறுபுள்ளடியை நிதம் சேர்.
சிறு காஞ்சோரி வேர்.
சிறுகாஞ்சோரி வேர் சிலேத்தும சுவாசத்தைக்
குறியாத மூச்சுரக் குழாத்தை _சொரியும்
கரப்பான் சிறு சிரங்கைக் காலைத்தாகத்தை
உரப்பாகச் சாடுமென ஓது.
சிவதை .
உள்ள மலமும் உதாவர்த்தமும் வயிற்றைக்
கொள்ளு பித்த வாதமும் போம் _ கூறுங்கால்
பிள்ளைகட்கு செப்பு கிரகமும் போம் தேனே
உலகத்துள் தப்பில் சிவதைக்குத் தான்.
சிலாசத்து .
கல்லடைப்பு மேகம் கனதூலம் வித்திரதி
சொல்லடைக்கு நீர் அருகல் சோணிதக்கால் _மெல்லிடையார்
இல்லச்சத்தில்லை எனும் இந்திரிய நட்டமாம்
கல்லச் சத்தில்லை எனும் கால்.
வாந்தி அருசி குன்மம் வாம்நோய் பிலிகம் இரைப்
பேந்திருமல் கல்லடை பிலாஞ்சனம் உட் _ சேர்ந்த கம்மல்
ஆசன குடாரி எனும் அந்தக் கிராணியும்
போசன குடாரி உண்ணப்போம்.
சீனி .
சீனிச்சர்க்கரைக்கு தீராத வன் சுரமும்
கூனிக்கும் வாதத்தின் கூட்டுறவும் _ஏனிற்கும்
வாந்தியோடு கிருமி மாறாத விக்கலுமே
போந்திசையை விட்டுப்புரண்டு.
சீதேவி கழுநீர்ப்பூ .
உடற்குக் குளிர்ச்சியதாம் உள் அழலை மாற்றும்
அடற்கப அரோசகத்தை ஆற்றும் _கடற்குள்
எழு நீர்க்குமிழி இகழு முலையாய்
கழு நீர் மலர் எனவே காண்.
சீந்தில் .
சீந்தில் கிழங்கு அருந்த தீபனமா மேகவகை
போந்த உதிரப்பித்தம் பொங்கு சுர _மாந்தம்
அதிசாரம் வெய்யகணம் ஆம்பல் நோயோடே
கதி விடமும் கெட்டு விடும் காண்.
சுக்கு .
சூலை மந்தம் நெஞ்செரிப்பு தோடம் ஏப்பம் அழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் _ வாலகப
தோடம் அதிசாரம் தொடர் வாத குன்மம்
நீர் தோடம் ஆமம் போக்கும் சுக்கு.
செவ்வியம் .

சூலை அருசி சன்னி தொல் இருமல் ஈளை பித்தம்
மேலை குரல் கம்மல் வெங்கள நோய் _ மூலசுரம்
கவ்வியந்தேறு கன தாவிர விடமும்
செவ்வியங் கொள்ளவிடும் நேர்.
செவ்வல்லி.

செவ்வல்லிப்பூவுக்கு சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
ஒவ்வு மேகப்பிணியும் ஓய்வதன்றி _ இவ்வுலகில்
கண்ணின் நோய் தீரும் கனத்த பித்த இரத்தமொடு
புண்ணின் நோய் பன்னோயும் போம்.
செரிகீரை .
வயிற்றுக்கடுப்பு மலஞ்சீதம் பேதி
நியத்த ரத்தப்போக்கியை நிறுத்தும் _ குயத்தை ஒரு
பார் சரியக்கிஆட்டும் பருவ வணங்கரசே
பார் செரிக்கீரையது பார்.
சென்பகப்பூ
 .
வாத பித்தம் அத்திகரம் மாமேகம் சுத்தசுரம்
தாது நட்டம் கண் அழற்சி _ மாதே கேள்
திண்புறு மணக்களிப்பாம் திவ்ய மணம் உட்டினம் சேர்
சண்பகப் பூவதற்குத்தான் .
சேங்கொட்டை .
குட்டம் சயரோகம் கொல்லும் விஷபாகம்
துட்டம் தரு கிருமி சூலையும் போம் _ மட்டவரும்
கூந்தன் மயிலே கிரந்திக்கூட்டம் போம் செங்கையில்
ஏந்து சேங்கொட்டை தானே.
தகரை .
தகரை படர் தாமரையைச் சொறியை
தகரவடிக்கு மந்தன் தன்னோடு இகலான
அத்தி சுரத்தையும் அதம் செய்யும் இம்மூலி
உத்தம மாஎன்றே உரை.
தழுதாழை .
வாதப்பிடிப்பென்ற வற்தாலியைப் புலிபோல்
போதப்பிடிக்கும் புகலவன்றோ_ காத
அழுதாழை பீனசத்தை அண்டா அகற்று
தழுதாழைப் பன்ன அதுதான்.
தண்ணீர் விட்டான் .
நீரிழிவைப்போக்கும் நெடுநாள் சுரத்தை எல்லாம்
ஊரை விடுத்தோட உரைக்கும் காண் _ நாரியரே
வெண்ணீர் பெய் சோம நோய் அனல் தணிக்கும்
தண்ணீர் விட்டான் கிழங்குதான்.
தலைச்சுருளி .
பாண்டகற்று மெய்யில் படர் குட்ட நோய் விலக்கும்
நீண்ட இருதய நோய் நீக்கும் காண் _ தாண் அதப்பை
முன்னே ஒழித்துவிடு மூவாத்தலைச்சுருளி
என்னே உலகிலிசை.
தராய் .
சூலையொடு மேகம் இவை தோன்றாமல் ஓட்டிவிடும்
மேலைவரு காலை விலக்கும் காண் _ ஆல
அராமேவிய அல்குல் ஆரணங்கே வெட்டை
தராவென்னும் உலோகம் அது தான்.
தக்கோலம் .
பாண்டு சுரம் போகும் பகரில் பலஞ்சேரும்
தீண்டும் உபயாசிமும் தீரும் காண் _ நீண்டதொரு
தாது விருத்தியாகும் தளர்ந்த மலமும் கட்டும்
கோது அகலும் தக்கோலம் கொள்.
தாமரைப்பூ .
பருத்த நற்தாமரைப்பூ பல்வாந்தி சோபை
துரத்திவிடும் இன்னும் சொலவோ _ சுரத்தில்
எடுத்து அணைக்கக் கண் குளிரும் ஏகும் சுரமும்
எடுத்த வீதாகமும் போம்.
தான்றிக்காய் .
சிலந்தி விடம் காமியப்புண் சீழான மேகம்
சிலந்தி வரும் வாத பித்தம் காலோடு அலர்ந்து உடலில்
ஊன்றிக்காய் வெப்பமுதிர பித்தும் சுரக்கும்
தான்றிக்காய் கையில் எடுத்தால்.
தாளிச பத்திரி .
நாசி களப்பிணிகள் நாட்பட்ட காசம்
வாசம் அருசி வமனங்கால் _
மேக மந்தம் அத்திசுரம் விட்டேகும் தாளிசத்தால்
ஆகும் சுகப்பிரசவம்.
தாழம்பூ .
தலை நோய் சலதோடம் சண்ணுகபம் காசம்
உலைவாதம் எல்லாம் ஒஉங்கும் _நிலசேர்
திருந்துடற்கு காந்திதரும் செம்மணமும் சூடும்
பொருந்துகிறை செந்தாழம்பூ.
தாமரைக்கிழங்கு .
கண்ணுக்கு ஒளிகொடுக்கும் காசபித்தம் போக்கும்
எண்ணும் குளிர்ச்சி தரும் ஏந்திழையே _ புண்ணுகளில்
தாமரைப்புண்ணும் போக்கும் தொந்திக் கடுப்பகற்றும்
தாமரைக் கந்தமது தான்.
திப்பிலி மூலம் .
தாகம் பித்தம் சோகந்தணியா சுரம் இருமல்
மேகம் குரற்கம்மல் மெய்கடுப்பும் _ஏகும் காண்
திப்பிலிமூலம் கண்டத்திப்பிலியதாம் நறுக்கு
திப்பிலி என்றே எருக்கால் செப்பு.
திப்பிலி .
இருமல் குன்மம் இரைப்பு கயப்பிணி
ஈளை பாண்டு சன்னியாசம் அரோசகம்
பொருமல் ஊதை சிரப்பிணி மூர்ச்சை நோய்
பூரிக்கும் சலதோடம் பீலிகமும்
வருமலப்பெருக்கோடு மகோதரம்
வாதம் முத்தோடச்சுரம் குளிர்
பெருமலைப்புரி மேகப்பிடகமும்
பெரும் திப்பிலிப் பேரங்குரைப்பவே.
திரிபலை ,
வித்திரதி நாசிநோய் வெண்குட்டம் ஆசனப்புண்
குத்திருமல் பாண்டு குட்டம் குன்மம் இரை _ பெற்று
மூர்ச்சை பிலிகம் பிரமியமொடு நண் சர்வ விட
மூர்ச்சையது முப்பலந்தான் முன்.
திரிகடுகு .

முக்கடுகால் ஆசிய நோய் மூலம் கொடிறு பிணி
திக்கடுகு பாண்டோடு சிரத்துறு நோய் _ அக்கடுக்குந்
தாவர நஞ்சென்றுலகில் சாற்று இந்நோய் முழுவதும்
தீவிர நஞ்சுண்டிறக்கும் நேர்.
தில்லைப்பால் .
பாரிசவாதம் சன்னிபாதம் சூலம் குட்டம்
நேருமுடவாதம் சில்விடம் போம்_ பேருரைக்க
இல்லை இல்லை என்றோடு எண்பது வாதமுமே
தில்லை மரப்பாலாற் றெளி.
திருகு கள்ளி .
வாத முடக்கறும் வன்கிரந்தி குட்டம் போம்
சீத மொழியும் கிருமி சேருமோ _ மாதே
பருகு பக்க நோயுடனே பாழ் கரப்பான் தீரும்
திருகு கள்ளிப் பாலால் தெளி.
தூதுவளை .
தூது பத்திரி ஊன் சுவையாக்கும் படி
தாது வைத்தழைப் பித்திடும் காயமது
வாத பித்த கபத்தையும் மாற்றும் வேர்
ஓதும் வல்லை பண்ணோயொழிக்குமே.
தேன் .

புண்ணும் புரையும் போம் போகா கரப்பாணாறும்
எண்ணரிய தீபனமா ஏந்திழையே _ கண்ணாகளில்
பூச்சி புழுவெட்டு கபம் பொல்லா இருமல் அறும்
பேச்சின் மனைத்தேனுக்குப் பேசு.
தேற்றான் .
கூற்றென்று உரைக்கும் விழி கோமளமே எப்போதும்
உற்றாம் பிரமியமும் உட்புண்ணும் _ ஆற்றல் இலா
வெட்டை அகக்கடுப்பு வீறி வரித் தேன்றாங்
கொட்டை தனை எடுத்துக்கொள்.
தேங்காய் .

வாதம்மாம் பித்தமு வனகரப்பானும் படரும்
தாது மிக விருத்தியாம் தாழ்குழலே _ போத நல்ல
அன்ன மிறங்கும் மதியரிசை உண்டாகும்
தென்னங்காய் பாலால் தெளி.
தேவதாரம் .
தேவதாரக்கு ணந்தானள் சேர்ந்துவளர் பீனசத்தை
காதகத்தில் ஓட்டும் சுரப்பலவே _ மாவலர்
சொல்லும் புராண சுரமொடு நீரேற்றத்தை
வெல்லும் மனம் தணிக்கு மெய்.
தில்லைப்பால் .
பாரிசவாதம் சன்னிபாதம் சூலம் குட்டம்
நேருமுடவாதம் சில்விடம் போம்_ பேருரைக்க
இல்லை இல்லை என்றோடு எண்பது வாதமுமே
தில்லை மரப்பாலாற் றெளி.
திருகு கள்ளி .
வாத முடக்கறும் வன்கிரந்தி குட்டம் போம்
சீத மொழியும் கிருமி சேருமோ _ மாதே
பருகு பக்க நோயுடனே பாழ் கரப்பான் தீரும்
திருகு கள்ளிப் பாலால் தெளி.
தூதுவளை .
தூது பத்திரி ஊன் சுவையாக்கும் படி
தாது வைத்தழைப் பித்திடும் காயமது
வாத பித்த கபத்தையும் மாற்றும் வேர்
ஓதும் வல்லை பண்ணோயொழிக்குமே.
தேன் .

புண்ணும் புரையும் போம் போகா கரப்பாணாறும்
எண்ணரிய தீபனமா ஏந்திழையே _ கண்ணாகளில்
பூச்சி புழுவெட்டு கபம் பொல்லா இருமல் அறும்
பேச்சின் மனைத்தேனுக்குப் பேசு.
தேற்றான் .
கூற்றென்று உரைக்கும் விழி கோமளமே எப்போதும்
உற்றாம் பிரமியமும் உட்புண்ணும் _ ஆற்றல் இலா
வெட்டை அகக்கடுப்பு வீறி வரித் தேன்றாங்
கொட்டை தனை எடுத்துக்கொள்.

நல்லெண்ணெய் .
புத்தி நயணக்குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புகழும்
சத்துவம் காந்தி தனி இளமை _ மெத்த உண்டாம்
கண் நோய் செவி நோய் கபால அழல் காசநோய்
புண்ணோய் போம் எண்ணெயால் போற்று.
நன்னாரி .
நன்னாரி வேரை நறுக்கி அரைத்து அதன்
விண்ணாரி ஊனால் வெதுப்பியே _ தின்னவெறி
தோணாது கற்றாழை சோற்றில் கலந்துண்ணக்
காணாது வண்டு கடி.
நந்தியாவட்டை .
காசம் படலம் கரும்பாவை தோடம் எனப்
பேசுவிழி நோய்கள் தமைப் பேர்ப்பதன்றி _ ஓசைதரு
தந்திபோலே தெறித்துச்சாறு மண்டை நோய் அகற்றும்
நந்தியா வட்டப்பூ நன்று.
நண்டு .
வயலில் உறு நண்டருந்த வாதக்குடைச்சல்
அயலிலும் இருக்காதணங்கெ _ துயிலவொட்டா
வன் சயித்தியம் கரப்பான் மன்குடல் இரைச்சலும் போம்
முன் பயித்தியம் கதிக்கு முன்.
நத்தை .
நத்தைக்கறி தனக்கு நாடாது மூலமுதல்
ஒத்தமல ரோகமெல்லாம் ஓடுங்காண் _ நித்தநித்தம்
தின்றால் செரியாது தேடறிய தாது விருத்தி
நன்றாகு மாதே நவில்.
நல்வேளை .
நல்வேளப் பூண்டை நாடுங்கால் வாதமும் போம்
சொல்லும் ஐயத்துடனே சோபை அறும் _ மெல்ல மெல்ல
தக்க அனலும் பித்தும் தான் எழும்பும் சாந்தமின்றி
அக்கர நோய் மிஞ்சு அறி.
நாய் வேளை .
வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதமிகு பீனசமும் ஓடுங்காண் _ போதெறிந்து
காய்வேளைக்காயும் விழிக்காரிகையே வையமதில்
நாய்வேளை உண்ண நவில்.
நாரத்தை.
நன்றியுற உலகில் நாரத்தங்காய் அருந்த
வென்றி தரும் புளிப்பால் மெய் சுத்தம் _ அன்றியுமோ
வாதமொடு குன்மம் அறும் கிருமியுய்வாம் போகும்
காதலறு தீபனமாம் காண்.
நாயுருவி .
மலிகாரம் கைப்புள்ள அபமார்க்கியின் வேரால் வசியமுண்டாம்
இலைமூல உதிரமந்தம் பேதிகபம் வியர்வு தந்தி இறங்கு மேகம்
மலைஏறும்படி பிரிய முள்ளரிசி பசி மாற்றும் வன்சமூலம் பல
மாதர்க்குள் அழுக்கைநீக்கும் வங்க செந்தூரம் பண்ணுமாதோ.
நாவல் .
மாந்தம் விளையும் வலிகரப்பான் உண்டாகும்
சேர்ந்ததொரு நீரிழிவும் சேருமோ _ நாந்தலொடு
வாய்வும் கடுப்பும் வருங்கொதிப்புத் தாகமும் போம்
தூய நாவல் பழத்தால் சொல்.
நாபி .
வாதவலி மந்தம் அறல் மாறாக் கர்ப்பினிகள்
ஓது குட்டம் குன்மம் ஓடுங்காண் _ காதலர் தம்
புத்தியோடு ஆருயிரும் தான் பூவும் வனைகுழலே
சுத்தி செய்த நாபியின் பேர் சொல்.
நில வாகை.
வாகை அனல் விரணம் வாத வரட்சியுடன்
தாகசுரமும் தணிக்கும் காண் _ ஆகமதில்
அக்கரமெல்லாம் அகற்றி விடும் பூவனமே
அக்கணத்தில் என்றே அறி.
நிலக்குமிழ் .
பேதியொடு கண் சொருகர் பேராத சீதளமும்
வாதவலி கொட்டாவி மாந்தமும் போம் _ ஓதச்
சலக்குமிழை ஒத்த தனக் கருங்கண் மாதே
நிலக் குமிழைக்கையிலெடு நீ,”
நிலப்பனை .
மேக அனல் தணியும் வெண்குட்டம் தான் விலகும்
போக மிகவுறும் பொற்கொடியே _ போகாத
சூலை மேகங்களொடு துன்னு கரும்புள்ளியும் போம்
சால நிலப்பனைக்குத்தான்.
நிலாவாரை .
நிலாவாரையின் குணந்தான் நீ கேள் மயிலே
பல மூல வாயு வெப்பு பகவைச் _ சிலகிரந்தி
பொல்லாத குன்மம் பொருமு மலக்கட்டு முதல்
எல்லாம் அகற்றுமென எண்.
நீர்ப்பூலா.
மாந்தம் கணம் பொருமல் மாறா சலத்துடனே
சேர்ந்த சொறி சிரங்கும் தீரும் காண் _ ஏந்தொழிலைச்
சேர்ப்பாகக் கொண்ட செந்திருவே பூவிலுறை
நீர்ப்பூலகப் பூண்டை நினை.
நீரடிமுத்து .
நீரடி முத்துக்கு நீங்கா கிரந்தி குட்டம்
போரிடு வாதமுமே போகும் காண் _ காரடுக்கும்
மென்குழலாய் பித்தம் மிகும் அலை உண்டாகும்
முன் கிளர் நமைச்சலறு முன்.
நுரை .
பட்டை கரப்பானோடு பாரஞ் சிலேத்தும சுரம்
ஒட்டி நின்ற புண் கிராந்தி ஓட்டும் காண் _ மட்டவரை
ஏந்து நுணாவின் இலை மந்தந்தீர்த்து நல்ல
காந்தி தரும் மேகம் அடும் காண்.
நெல்லி முள்ளி .
ஆக வலஞ்சசி அசுர்க்கு என்புருக்கி கண் நோய்
தாக முதிரப் பித்தந் தாது நட்டம் _ மேகனத்தின்
இல்லி முள்ளியாபோல் அருக்கலெண் காமிய வியங்கம்
நெல்லி முள்ளியாற் போ நினை.
நெய் .

தாகம் அழலை கட்கம் சர்த்தி பித்தம் வாயுபிர
மேகம் வயிற்றெரிவு விக்கல் அழல் _ மாகாசம்
குன்மம் வறட்சி குடல் புரட்டல் அத்தி சுட்கம்
சொன் மூலம் போக்கு நிரைத் துப்பு.
நெல்லிக்காய் .
நெல்லிக்காய்க்குப் பித்தம் நீங்கும் அதன் புளிப்பால்
செல்லுமே வாதம் அதில் சேர்துவரால் _ சொல்லும் ஐயம்
ஓடும் இதை சித்தத்தில் உண்ண அனலுடன்
கூடும் பிரமேகமும் போம் கூறும்.
நெரிஞ்சில் .
நல்ல நெரிஞ்சிலது நாளும் கிரிச்சரத்தை
வல்ல சுரம் அனலை மாற்றும் காண் _மெல்லியலே
மாநிலத்தில் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டும்
கூனுறு மெய் வாதமும் போக்கும்.
நேர்வாளம் .
ஓதில் உதரத்தூறு மலம் பன்நோய் விலகும்
பேதி மருந்தில் பெரிதாகும் _ வாதம் அறும்
கூர் வாளை ஒத்த கொம்பனையே பண்டிதர் சொல்
நேர் வாளக் கொட்டைதன நீ.
நொச்சி .
நாசம் தருவாதம் நாசிப்பிணியழல் சு
வாசம் தசனவுறு வந்தோடம் _ காசம் அறல்
உச்சியையடயை உறை நோயும் என்படுமோ
நொச்சி அடையை நுவல்.
மருக்காரை .
மருக்காரையின் வேர் தான் வாந்தி மருந்தால்
திருக்காஞ் சிலேத்தும் அதைத் தீர்க்கும் _ முருக்காருஞ்
செய்யவிதழ் மாதே திரிதோடமும் போக்கும்
வெய்ய மருந்தெனவே விள்.
மணத்தக்காளி .
வெவ்வழலும் மாறும் விரிகம்மல் போகும்
ஒவ்வு சிசுவுக்காம் உலவை விடும் _ செவ்வி
அருமணி கச்சி ஆயிழையே கேளாய்
கருமணி தக்காளி தனைக் கண்டு.
மருத மரம் .
ஓதும் என நீரிழிவை ஓட்டும் பிரமேகம்
காதம் என ஓடக்கடத்தும் காண் _போத
மயக்கமொடு தாக மாறா சுரத்தின்
தயக்க மறுக்கும் மருதம் சாற்று.
மலை வேம்பு .
மலட்டுப் புழுவும் வயிற்றின் வலியும்
மலட்டு வாயுவும் மடக்கி _கொலட்டும்
உலைவேகம் சினவேற்கண் திமமே கேளாய்
மலை வேம்பின் பேரை வாழ்த்து.
மனோசிலை .
மடலரிதாரத்தில் வரும் கரடி இரண்டும்
உடல் விடங்களைக் களையும் உண்மை _ கொடிய குட்டம்
காய்ச்சல் நடுக்கல் அசகல்லி இரைப்பு சிலந்தி
பேச்சறு மனோசிலைக்குப் பேசு.
மிளகு .

சீத சுரம் பாண்டு சிலேத்துமம் கிராணி குண்மம்
வாதம் அருசி பித்தம் மாமூலம் _ ஓதுச்ந்நி
யாசம் அபஸ்மாரம் அடன் மேகம் காசம் இவை
நாசம் கரி மிளகினால்.
மிளகு தக்காளி .
மந்தாகினி சோபை வாந்தி கழல் வாயு வெப்பம்
இந்து நோய் பாண்டோ எதிர் விக்கல் _முந்த
வளகு முத்தோடம் நோய் மாற்றும் கைப்பான
மிளகு தக்காளி இலை மெய்.
மாதுளை .
சங்கையறச் சொற்றவிர்க்கும் சந்நியாசம் சத்தி
அங்கை அதிதாக மனம் சேருமோ _கங்கை
இருந்தாழ மக்கட் கிரத்தலைச் செய்நோய் போம்
இருந்தாழ மக்களிகட் எண்.
மாவலிங்கப் பட்டை .
மாவலிங்கப் பட்டையினால் வாதமொடு சந்நிகளும்
பாவுகின்ற கல்லடைப்பும் ஆறுமே _ மாவெருக்கம்
பட்டை சந்நிவாதம் பல்விடம் போக்கும் கருவேல்
பட்டை நாநோய் தீர்க்கும் பார்.
மாமரம் .
சீதரத்தப்போக்கை சிக்கெனவெ தான் பிடிக்கும்
போத வயிற்றுக்கடுப்பை போக்கும் காண் _ ஏதுகின்ற
வாந்தியையும் தீர்க்கும் வெளி மாமரத்தின் வேர்ப்பட்டை
பூந்துகின் மாதே புகல்.
மாவிலக்கிழங்கு .
புளி நாளையின் கிழங்கோ பொன் போலச்செம்பைத்
தெளிவாகச் சுத்தியது செய்யும் _ வெளியான
மூல முள்ளை அறுக்கும் முது சுவைக்கு ஏதுவுமாம்
கோல மட மயிலே கூறு.
மாசிக்காய் .
அக்கரங்கள் போக்கிவிடும் ஆறாத வெப்பாற்றும்
மெய்க்குறுதி மாசிக்காய் மேன் மேலும் _ தக்கதொரு
பாலர் கணநோய் போக்கும் பன் மேகமும் தொலைக்கும்
வேலனைய கண்ணாய் விளங்கு.
முசுமுசுக்கை .
இருமலுடன் ஈளை இரைப்பு புகைச்சல்
மருகின்ற நீர் தோடம் மாறும் திருவுடைய
மானே முசுமுசுக்கை மாமூலி அவ்விலையைத்
தானே அருந்துவர்க்குத் தான்.
முருங்கை .
முருஙை வேர்ப்பட்டைக்கு மூடுகபம் தோட
எருங்குறாச்சந்தி சுரம் ஓடும் _ அருங்கை
வட்டைப் பெருமுலையாய் வாய்வொடு வ்டங்களும் மேற்
பட்டைக்குப் போமே பறந்து.
கொடி )முந்திரிப்பழம் .
 வெப்ப ருசி தாகம் விரணம் சுவாசகாசம்
எய்யப்புடைய பித்தம் இரத்த பித்தம் _செப்பும்
மடி மந்தம் மேகம் பத மூர்ச்சையும் போம்
கொடி முந்திரி கனிக்குக் கூறு.
முட்காவேளை .
வாகாதி மந்தம் அதிசாரம் அதிவறட்சி
போகாச் சுரம் தாகம் போக்க மருந்தோகையில்
சிக்காவேளை பதத்தை த்ன்னச்செய்விக்க என்றான்
முக்காவேளைப் பதத்தை முன்.
மூக்கரட்டை .
சீதம் அகற்றும் தினவடக்கும் காந்தி தரும்
வாத வினையை அடிக்கும் காண் _ பேதி
கொடுக்கும் அதை உண்டாக்கால் கோமளமே பித்தம்
அடுக்குமே முக்கரட்டையாய்.
வல்லாரை .
அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றுக்கடுப்பு
தக்க இரத்தக் கடுப்பு தான் ஏகும் _ பக்கத்தில்
எல்லாரையும் அருந்து என்றே உரைத்து தன் மனையுள்
வல்லாரையை வளர்த்து வை.
வாகை .
வாகை அனல் விரணம் வாத வறட்சியுடன்
தாக சுரமும் தணிக்கும் காண் _ஆகமதில்
அக்கரமெல்லாம் அகற்றிடிவீர் பூவனமே
அக்கணத்தில் என்றே அறி.
வாய் விளங்கம் .
பாண்டு குட்டம் குன்மம் பருந்தூல நோய் வாதம்
தீண்டு திரிவிடம் சிரம் துண்டம் _ பூண்டமடி
நோய் விளங்க காட்டாத நுண்கிருமி ஆசனப்புண்
வாய் விளங்கம்காட்ட விடுமால்.
பரங்கிப்பட்டை.
தாகம் பல வாதம் தாது நட்டம் புண் பிள்ளை
மேகம் கடி கிரந்தி வீழ் மூலம் _ கோமுடம்
குட்டை பசுந்தர மேற்கொள் மனம் போம் பரங்கிப்
பட்டையினை உச்சரித்துப் பார்.
பச்சைக்கற்பூரம்.
அட்ட குன்மம் சூலை அணுகாது வாதமொடு
துட்ட மேகப்பிணியும் தோற்றாதே _மட்டலரும்
கூந்தன் முடிமாதே கொடிய கபம் போகும்
சார்ந்த பச்சைக் கற்பூரத்தால்.
பசுந்தயிர் .
பசுவின் தயிரால் பசி மிக உண்டாகும்
இசிவுறும் சீரண நோய் ஏகும் _பசை அகன்ற
தாக இளைப்பிருமல் தாங்கொணா மெய் எரிவும்
ஏகு உலகில் இயல்பு.
பசு மோர் .
வீக்க மகோதரம் வீறு குன்மம் பாண்டு பித்தம்
தாக்கு மருந்திட்ட அதிசாரமொடு _ கூக்குரலே
மாறா திரி தோடமந்த மனத்தாகம் போம்
வீறாவின் மோருக்கு மெய்.
பனை வெல்லம் .
தெங்கின் வெல்லத்தால் செரியா குணம் சோபை
அங்கமுறு நீரும் அதிகரிக்கும் _ தங்குபனை
வெல்லத்தால் வாத பித்தம் வீறுகபம் ச்ந்நிநோய்
வல்லருசி குன்மம் அறுமால்.
பற்பாடகம் .
சீதவாத சுரம் போம் தீராத தாகம் போம்
போத இரு கண் குளிரும் பொய்யலவே _ பூதலத்துள்
வற்பார் பயித்தியமும் மாபித்தமும் தொலையும்
பற்பாடகத்தை உன்னிப்பார்.
பருத்தி இலை .
பருத்தி இலை மொட்டிரண்டை பாலில் அரைத்துண்ண
வருத்துகின்ற மேகம் எல்லா மாறும் _பருத்த
இரத்த பித்தமொடு விரண வீக்கம் போம்
அரத்த இதழ் மாதே அறை.
பசும்பால் .
பாலர் கிழவர் பழம் சுரத்தோர் புண்ணாளி
சூலையோர் மேகத்தோர் துர் பலத்தோர் _ ஏறுமிவர்
எல்லார்க்கும் ஆகும் இளைத்தவர்க்குச் சாதகமாம்
நல்லாய் பசுவின் பால் மாட்டு.
பாவட்டை இலை .
சீதவாதங்கள் அறும் தீபனமோ உண்டாகும்
வாதம் கபம் ஒழியும் வார்குழலே _போதவே
ஆவட்டைத்தாக சுரம் அற்றுவிடும் தோடம் போம்
பாவட்டைப் பத்திரிக்குப் பார்.
பாகல் இலை .
பிரியா கிருமி அறும் பேதி உண்டாம் தோடம்
முறியும் இரதம் முறியும் _குறியாத
மா கற்புடைய மட மயிலே எப்போதும்
பாகல் தழைக்குப் பயந்து.
பிரண்டை .
பிரண்டையை நெய்யால் வறுத்து பின்பரைத்து மாதே
சேர்ந்த மூலம் கபம் உட் செம்புனலை போக்கோந்த நடை
எல்லாம் அகலும் எழும்பும் அதிகப்பசி
மல்லர் பிரண்டை உண்டு வா.
பிரப்பங்கிழங்கு .
தந்த ரோகத்தை தணியாத வாதத்தை
உந்து சூலைப்பிடிப்பை ஓட்டுங்காண் _ வந்து
காப்பு திறப்பு எனக்காட்டு நகை மாதே
பிரப்பங்கிழங்கதனைப் பேணு.
பீர்க்கங்காய் .
தின்றவுடன் பீர்க்கங்காய் சீதம் உறும் காண்பித்தம்
ஒன்று மூன்றாக உயருமே _ மன்றலணி
காராளகக் கச்சை முலைக்காரிகையே வாதம் கபம்
நேரளவைத் தாண்டும் நினை.
பூசணிக்காய்  .
பெரும் பூசனிக்காய்க்கு பித்தமொடு உட்காய்ச்சல்
அருஞ்சார நீர்க்கட்டருகல்_ மருந்த்டுதல்
பித்தசுரம் அத்திகரம் பேய் வறட்சி மேகமும் போம்
மெல்ல அனிலம் உறும் விள.
பூவரச சமூலம் .
நூற்றாண்டு சென்றதொரு நுண்பூவரசம் வேர்
தூறாண்ட குட்டம் தொலைக்கும்காண் _ வீறிப்
பழுத்த இலை விதை பூ பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரோசனமும் போம்.
பெருங்காயம் .
தந்த வேதந்த மூலத்தெழும் பிணி
சருவகாளம் விருச்சிக கீடம்மா
மந்தம் வாதம் உதாவர்த்தம் அல்குல் நோய்
மார்பணம் கட்ட குன்மம் மகோதரம்
உந்து கர்ப்பத்தின் வித்திரஞ் சூலைசூர்
உதிரப்பூச்சி சிலேத்துமம் ஊறும் வலி
வந்த மெய் கடுப்பொடு இவை முற்றுமே
மாயு நாறு நற் காயம் கிடைக்கினே.
பெருஞ்சீரகம் .
யோனி நோய் குன்மம் உருட்சை மந்தம் பொருமல்
பேதனம் உறு காசம் பீலிகம் இரைப்பீனா உரை
சேர்க்கின்ற வாதமும் போம் சீர்பெரிய சீரகத்தால்
மூக்கு நோயில்லை மொழி.
பெருமருந்து .
பெரு மருந்தின் வேர் பித்தம் பீறிரைப்பு காசம்
வரு சுரம் உடம்பு வலி வாதம் _ உருவுவிடம்
ஒன்றிய மாகடிகள் ஓட்டும் உலகிலிது
அன்றியது கோசிகிச்சைக்காம்.
பொன்னாங்காணி.
காசம் புகைச்சல் கருவிழி நோய் வாத அனல்
கூசும் பீலிகம் குதாங்குர நோய் _ பேசியவையால்
எனாங் காணிப்படிவமேமாம் செப்ப எண்ணெய்
பொன்னாங் காணிக் கொடியைப் போற்று
பொடுதலை.
பொடுதலையி பேருரைத்தால் பேராமம் போக்கும்
அடுதலை செய் காசமும் அடங்கும் _ கடுகிவரு
பேத்யொடு சூலை நோய் பேசரிய வெண்மேகம்
வாதமும்போ மெய்யுரைக்கும் வாழ்த்து.
பொற்றலைக்கையான் .

பொற்றலைக்கையாந்தகரை பொன்னிறமாக்கும் உடலை
சுத்தமுற கட்கு சுகம் கொடுக்கும் _சிற்றிடையாய்
சிந்தூரங்ககு ஆகும் சிந்தை தனைத் துலக்கும்
உர்தி வளர் குன்மம் ஒழிக்கும்.
பொன் முசுட்டை .
வாதமொடு பித்தத்தை மாற்றுமே மாநிலத்தில்
சீதம் அகற்றும் தினவடக்கும் _ மாதே கேள்
உண்டிக்கும் வாசனையாம் ஓங்கு வளர் அனலை
கண்டிக்கும் பொன்முசுட்டை காண்.
பொரிகாரம் .
வெங்காரம் சர்ப்பவிடம் ஐயம் நீரடைப்பு
மங்கா கிராணி ரத்தமாம் மூலம் பங்கம் செய்
வாயுவுடன் கல் அடைப்பு வன் கிருமி அட்ட குன்மம்
ஓயும்படி புரியும் ஓது.
மயிலிறகு .

அத்திப் பிரமேகம் போமாடைகட்ட சாம்பலுக்கு
தந்தி வரு இரத்தம் தடைபடும்காண் _ சத்தியமாய்
கம்பலச் சாம்பல் சந்தி காதும் மஞ்சை தோகை பற்பம்
கும்பு விக்கல் வாந்தி கெடுக்கும்.
மர மஞ்சள் .
அழன்ற கண மூலம் அருசியுடனே
உழன்ற கண சுரமும் ஓடும் _ சுழன்றுள்ளே
மீறு சுரமும் தணியும் வீசு மாமஞ்சளுக்கு
தேறு மொழி யனமே செப்பு.
விலாமிச்சம் .
மேகம் விழி எரிச்சல் வீறி இரத்த பித்தமொடு
தாக மத மூர்ச்சை பித்தங்கள் மயக்கம் _ சோகம்
சிர நோய் இவை ஏகும் செய்ய விலாமிச்ச
எரிகரமும் இல்லை இசை.
வில்வம் .
விவத்தின் வேருக்கு வீறுகுன்ம வாயுகபம்
சொல்ல ஒண்ணாப் பித்த தொடர் சோபை _வல்லகப
தாகசுரம் நீறேற்றம் சந்நியொடு மெய்வலியும்
வேகமொடு நீங்கும்ர்ர்.
விளா .
அழ்ன்ற கணவேக அதிதாகம் தீரும்
சுழன்று வரு பித்தம் தொலையும் _ உழன்று
பொரு நிலை மேகத்துடனே புண்சுரமும் போகும்
அரு நில விளாவுக்கு அயர்ந்து.
விஷ்ணுகிரந்தி .
செய்ய மாலின் கிரந்தி தீராத வல்லசுர
ஐய அறுக்கும் அனல் தணிக்கும்_ வெய்யகப
வாச இருமலையும் கட்டறுக்கும் வாதத்தால்
ஊடாகும் பிணிபோக்கும்.
வேங்கை.
குத்திருமல் வெட்டையொடு கூறு மூல மாந்தம் இலை
எத்திசையும் வாறா இடையும் காண் _ சத்தியமாய்
புண்ணிருமல் சீழ் ஒழுகற்போகு மலம் இறங்கும்
கண் ஒளிரும் வேங்கைக்குக் காண்.
வேப்ப நெய் .
வாதம் போம் பித்தமிகு மாறாக் கிரந்தியொடு
மோது கரப்பான் சிரங்கு முன் இசிவும் _ ஓதுடலில்
நாப்பணுறு சுரமும் சந்நியும் தொலையும்
வேப்பநெய் என்றொருக்கால் விள்ளு.
வேப்பம் பிண்ணாக்கு.
சந்நியுடன் வாதம் தலைநோய் போம் வாதம் அறும்
முன்னி நின்ற தோடம் முறியும் காண் _பண்ணு தமிழ்
வல்லவரே வேம்பின் வழி வந்த பிண்ணாக்கு என்றொருகால்
சொல்ல ஐயம் போமே தொலைந்து.
வெந்தயம் .

பிள்ளைக் கணக்காய்ச்சல் பேதி சீதக்கழிச்சல்
தொள்ளை செய்யும் மேகம் தொலையும் காண் _ உள்ளபடி
வெச்சென்ற மேனி மிகவும் குளிர்ர்ச்சியதாம்
அச்சம் இலை வெந்தயத்திற்காய்.
வெள்ளருகு .
குன்மமொடு வாயு குடல் வாதம் சூலை இவை
சென்மம் விடுத்தோடிச் சிதையும் காண் _ வன்முலையாய்
உள்ளுருகிக் கிரந்தி சொறி ஒட்டிய சிரங்கும் அறும்
வெள்ளருகு தன்னை விரும்பு.
வெங்காயம் .
வெப்ப மூலங் கிரந்தி வீறு ரத்த பித்தமுன்
செப்பு நா அக்கரம் தீராத தாகம் _ வெப்பு
கடுப்பு அறும் மந்தம் சந்நி காசம் வயிற்று உப்பல்
தடிப்பேறும் வெங்காயத்தால்.
வெற்றிலை .
ஐயம் அறும் காண் அதன் பாரம் கொண்டக்கால்
பைய சைத்தியம் போம் பைந்தொடியே _மெய்யின்
கடியின் குணம் போகும் கர வெற்றிலைக்குப்
படியும் முத்தோடம் இதைப்பார்.
வெள்ளாட்டுப்பால்.
வெள்ளாட்டுப் பாலுக்கு மேவிய நல் தீபனம்
தள்ளாடு வாத பித்தம் சாந்தமாம் _ உள்ளிரைப்பு
சீதமதிச்சாரம் சிலேத்தும அறும் புண் ஆறும்
வாதக்கிலேசமும் போம் அறி.
வெண் நொச்சி .
நாசம் தருவாதம் நாசிப்பிணி அழல்
சுவாசம் த்சன உருவன் தோடம் _ காசம் அறல்
உச்சி உடையை உறைதோயும் என்படுமோ
நொச்சி அடையை நுவல்.
வெட்டிவேர் .
பித்தவிதாகம் சசிகாமிலங் கறை பித்த அனல்
தந்திடு குட்டம் சிர நோய் களமடி தாதுநட்ட
டந்த புனல் புண் வன் மூர்ச்சை வரி விழி நோய்
வித்திர மேகத்தின் கட்டியும் போம் வெட்டி வேரினுக்கே.
வால் மிளகு .
வாத பித்த ஐயம் வயிற்றுவலி தாகம்
சீதம் பல நோய் சிதையும் காண் _ போத
அதி தீபனம் அணங்கரசே நாளும்
துதி வால் மிளகு அருந்தச் சொல்.
வெட்பாலை .
வெட்பாலை தன் அரிசி வீறு பித்த வாதமொடு
கொட்பார் கரப்பன் குடல் வாதமொடு
காணாமலே நாளும் கண்டிக்கும் காசினியில்
பூணார் முலையாய் புகல்.
வெண் காட்டான் வேர் .
மாதரால் வந்த வெட்டை வன்மேகம் சென்னிவலி
ஓது சுரம் விழி நோயோடும் _ பேதியொடு
மாக்கட்டாஞ் சீதம் அறும் மாமூலியாம் வெள்ளை
காக்கட்டான் வேரைக்கருது.
வெதுப்படக்கி .
வெள்ளெடுப்பு சீதம் வெதும்பல் சுரத்துடனே
அள்ளெடுக்கு மாந்தம் அதி மாந்தம் _ தெள்ளு மொழி
மாதே வெதுப்படக்கி வன் தழையும் காய்ச்சலொடு
கோதேறி இரத்தமும் போக்கும்.
வெள் வேல் .
பித்த மயக்கம் அறும் பேருலகின் மானிடர்
குற்ற சுரவாத ஓடும் காண் _ குத்துகின்ற
சந்துக் குடைச்சல் விடும் சர்வாங்க வாதம் போகிக்
கொத்துலவும் வெள் வேலுக்கு.
வெள்ளரி.
பிஞ்சு வெள்ளரிக்காய்க்குப் பேசு திரி தோடம் போம்
வந்சியரே முற்றிய காய் வாதமுமாம் _ நைந்த கனி
உண்டால் சைத்தியமாம் உள்ளிருக்கும் அவ்விதையைக்
கண்டாலும் நீர் இறங்கும் காண்.

Post Comment