திங்கள், மார்ச் 30, 2020

கொரோனா காய்ச்சலில் ...வாத சுர குடிநீரா ? அல்லது கப சுர குடிநீரா ?

கொரனோ வைரஸ் காய்ச்சலில் பயன்தரப்போவது வாத சுர குடிநீரா ? 
அல்லது கப சுர  குடிநீரா ?


டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA

எச்சரிக்கை.  ஆராய்ச்சிகள் எதுவும் முறையாக நடத்தபட்ட பின்பே நாம் எதனையும் உறுதியாக கூற முடியும். 

ஆனால் திடீர் மருத்துவர்கள் , படிக்காத மேதைகள் வாத சுர குடிநீர் குடித்தால் கொரோனாவை ஒழித்து  விடலாம் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கதைகளை விடுகிறார்கள். 

அவர்கள் கொடுக்கிற மருந்தை குடித்தால் எல்லோரையும் கட்டி பிடிக்காலமாம். பரவாதாம். பயமே வேண்டாம் என்று சமூக விலகல் என்ற ஒன்றையே கேள்வி குறியாக்கும் ஒரு ஆபத்தான ஒரு மோசமான விஷயத்தை சொல்கிறார்கள்.ஐயா மருத்துவம் படிக்காத மேதையே .. அவருக்கு கூஜா தூக்கும் மக்களே.. ஒரே ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.. 

கேள்வி ஒன்று 

அவர். மருந்தே கண்டு பிடித்தார் என்ற வைத்து கொள்வோம். ஆனால் இந்த அரசாங்கம் சொல்கிற தனித்திரு , வீட்டில் இரு , சமூக விலகளை கடை பிடிக்க அவசியமே இல்லை என்பது எந்த விதத்தில் சரி ?


கேள்வி இரண்டு . 

அவர் சொல்கிற வாத சுர குடிநீர் சாப்பிட்டால் நமக்கு இந்த கொரோனா வராது என்று .. கடையில் இந்த வாத சுர  குடிநீரை சாப்பிட்டு ( அது உண்மையோ அல்லது போலியாக தயாரிக்கப்பட்டதோ ) நமக்கு இனி கொரோனா வராது என்று வெளியில் நடமாடினால் .. ஒரு வேளை  அவர்களுக்கு பாதித்து இருந்து மற்றவர்களை பாதித்தால் எப்படி ? இது சரியா ?



ஒரு வாதத்திற்கே எடுத்து கொள்வோம் . 

வாத சுர குடிநீரில் என்ன உள்ளது என்று பார்ப்போம் 



வாத சுரம் என்றால் என்ன ?

இந்த சித்தர் பாடலை பார்ப்போம் 


இந்த வைரஸ் காய்ச்சலில் வலிகள் இருக்குமா ? இந்த வைரஸ் காய்ச்சல் முக்குற்ற தத்துவ படி .. 
--------------------------------------------------------------------------------------------------------------------
கொரோனா முக்குற்றத் தத்துவ ஒப்பீடு :


குறிகுணங்களை  காட்டாதது :
கபத்தின் பண்பு

************************

சிறு சுரம் = கபம்

சீரற்ற சுரமாக இருந்தால் மட்டுமே வாதம்
(Fluctuations -high and low)
எனவே இது வாதசுரம் இல்லை

பித்தம் = அதீத வெப்பம்
103 /104
Like in dengue
எனவே  இது பித்தசுரம் இல்லை

Periodical பித்தத்தின் பண்பு
அதுவும் இங்கு இல்லை

************************
மலக்கட்டும்
கடுமையான வலியும்
வாத சுரத்தின் பண்புகள்
மேலும் கொட்டாவி விடுதல்  இல்லை
எனவே இது வாதசுரம் அல்ல

கண் எரிச்சல்
சிவத்தல்
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற குறிகுணங்கள் இல்லை எனவே இதை பித்தசுரம் அல்ல

************************

சிறு சுரமும்
சளியும் துவக்கம்
இது கபத்தின் பண்பு

தொண்டைக்கட்டு (கபம் )
விழுங்க சிரமம்

அதில்
வாதம் சேரும் போது :
வலி ஏற்படுகிறது
வறட்சி ஏற்படுகிறது
(Sore throat-dry cough)

கீழ்நோக்குங்கால் பாதிப்பால்
Diarrhea

மேல்நோக்குங்கால் பாதிப்பால் Nausea vomiting

கப வாதச்சேர்க்கையால்
பித்தம் படிப்படியாக குறைகிறது

சளியை பிரித்து வெளியேற்ற முடியாத நிலை

பித்தம் முற்றிலும் அழியும் போது கபவாதத்தால்
பிராணனுக்கு  தடை

மூச்சுத்தடை

உயிரிழப்பு

பித்தம் காரணமாக இருந்தால்
சளி எப்படி  உறையும்?

முக்குற்ற தத்துவம் விளக்கியது நன்றி.
மரு.ஜெ.ஸ்ரீராம்
மரு.கோகுலக் குமார்



எல்லா பெரும்பான்மையான சித்த மருத்துவர்களின் அனுபவ அறிவு , முக்குற்ற அறிவு , சேவை மனப்பான்மை , அரசு சித்த மருத்துவர்களின் தன்னலம் அற்ற உழைப்பின் எண்ணம் எல்லாம் கப சுர குடிநீர் இந்த கொரோனா வைரஸ் ஒழிக்க இந்த மருந்தையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி சரியான அணுகு  முறைகளோடு பயன்படுத்தலாம் என்பதே.. 

வேண்டுகோள்; மருத்துவம் என்பது புனிதம் ஆனது .. மருத்துவர்கள் இந்த நோயை எப்படியாவது ஒழிக்க போராடுகிறார்கள்... சிலர் அதில் தன் உயிரையும் துச்சம் என நினைத்து கற்ற கல்வி இந்த மக்களை காப்பாற்றாதா என்று சுய நலம் இல்லாமல் உழைக்கிறார்கள். எது போலி , எது உண்மை என்று சரியாக சிந்தியுங்கள். யாரையும் குறை கூற வில்லை .. அரை குறை அறிவு ஆபத்தானது... தெரியாது என்பதை தெரியாது என்பவனே  சிறந்த அறிவாளி, தமிழன் என்றால் எளிதில் எதையும் நம்புவான் என்று ஏமாற்றும் பலர் இங்கே இருக்கிறார்கள்.  

அரசு சொல்வதை கேட்போம். குடிநீர் குடித்து விட்டோம் நமக்கு இந்த கொரோனா வராது என்று அலட்சியம் செய்யாதீர்கள்.. நீங்கள் மட்டுமல்ல உங்களால் பலரும் பாதிப்பு அடைவார்கள் என்று கவனத்துடன் செயல் படுங்கள் 


Post Comment

1 comments:

Yarlpavanan சொன்னது…

அருமையான விளக்கம்

www.ypvnpubs.com

கருத்துரையிடுக