ப்ரதிமர்ஷ நஸ்யம்
-
என கூறப்படும் எளிய முறை நஸ்ய சிகிச்சையை
அனைவரும் அவரவர் வீடுகளில் சுயமாகவே எடுத்துக் கொள்ளலாம். பிறந்த குழந்தை முதல்
முதியவர் வரை அனைத்து வயதினரும் எல்லா காலங்களிலும் வெறும் பத்து நிமிடங்களில்
தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து கொள்ளலாம்...
சிகிச்சை
எடுத்துக்கொள்ளும் முறை:
அதிக காற்றோட்டம்
இல்லாத அறையை தேர்வு செய்துகொள்ள வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியை தைலம்
(தன்வந்தர தைலம் அல்லது கற்பூராதி தைலம் சிறந்தது)கொண்டு மிதமான அழுத்தத்துடன் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான மசாஜ்க்கு பின் சுடு நீரில் முக்கி பிழியப்பட்ட
பருத்தித்துணியினால் முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். செளகரியமாக படுத்து கொண்ட நிலையில் கழுத்தை உயர்த்தி தலையை சற்று தாழ்வாக
வைத்துக்கொண்டு இரண்டு நாசிகளிலும் இரண்டு
துளிகள் வீதம் தைலத்தை (அணு தைலம் சிறந்தது)விட வேண்டும். தைலம் நாசி
துவாரத்தின் உள்சென்றதை உறுதி செய்த
பின் வெதுவெதுப்பான நீரில் வாய்
கொப்பளித்து கொள்ள வேண்டும்.
கிடைக்கும்
பலன்கள் :
நாள் பட்ட நோய்கள்
அதாவது முகவாதம் , தலைவலி,ஒவ்வாமை ,வலிப்பு,பற்கள் சம்மந்தமான அனைத்து பாதிப்புகள்,முகத்தில் உண்டாகும் வீக்கம், காது சம்பந்தமான அனைத்து பாதிப்புகள்,இளநரை , கண் புறை முதலான அனைத்து கண் நோய்கள், மன நோய், நாசியில் உண்டாகும் தொந்தரவுகள் , கழுத்து வலி, டான்சில் ,தோள்பட்டை வலி, புற்று நோய், திக்கு வாய்,புலன்களின் தொய்வு, தூக்கமின்மை, மன அழுத்தம்,பயம்,க்ரோதம்,சோகம் போன்ற
மனம் சார்ந்த பாதிப்புகள், காய்ச்சல், முடியுதிர்வு
இன்னும்
பலவற்றிற்கு தீர்வு...
நாசித்துவாரம்
வழியாக செலுத்தப்பட்ட மருந்து எளிதாக நரம்பு மண்டலத்தை அடைவதால் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம்
பெறுகின்றன. இரத்த ஓட்ட அதிகரிப்பால்
பொலிவான சருமத்துக்கு எந்த ஒரு
நோயும் நம்மை நெருங்காது வைரம் போன்ற உடலுடன் ஆயுட்காலம் நீளுகிறது.
நோயின்றி
ஆரோக்கியமான வர்களும் இச் சிகிச்சைக்கு தகுதியானவர்களே,நோய் அல்லது உடல் உபாதைகளால் பீடிக்கப்பட்ட வர்கள் அருகிலுள்ள ஆயுர்வேத
மருத்துவரை அணுகுவதால் நோய்க்கான ஆலோசனை மற்றும் சிறந்த தைலத்தை
பரிந்துரைக்கப்பெறலாம்..
குறிப்பு:
0 comments:
கருத்துரையிடுக