எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் -
ஷட்பல க்ருதம் Shatphala grutham
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ராஜயக்ஷ்ம சிகித்ஸா)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. தண்ணீர் – ஜல 2.400 லிட்டர்
2. பசுவின் நெய் – க்ருத 0.600 கிலோ கிராம்
3. பசுவின் பால் – கோக்ஷீர 0.600
“
இவைகளை நன்றாகக் கலந்து
அதில்
1. திப்பிலி – பிப்பலீ 25 கிராம்
2. மோடி – பிப்பலீ மூல 25 “
3. செவ்வியம் – சவ்ய 25 “
4. கொடிவேலி வேர் – சித்ரக 25 “
5. சுக்கு – சுந்தீ 25 “
6. யவக்ஷாரம் – யவக்ஷார 25 “
இவைகளைக் கல்கமாக அறைத்துக் கலக்கிக் காய்ச்சி
மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.
அளவும்
அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பெருங்கழிச்சல் (க்ரஹணீ), பெருவயிறு (உதர), சூலை (சூல), குன்மம் (குல்ம), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), குடற்புண்கள், ராஜயக்ஷ்மா எனப்படும் TB
தெரிந்து கொள்ளவேண்டியவை ..
- ஆயுர்வேதத்தின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று -ஸ்ரோதஸ் என்பதாகும் .நமது உடல் பதிமூன்று வகையான ஸ்ரோதஸ்களால் ஆக்கப்ட்டுள்ளது ..புரிவதற்காக ஸ்ரோதசை உடலே ச்ரோஷஸ் மயம் எனலாம் .ஸ்ரோதஸ் என்றால் என்ன -ஒரு குழாய் ,ஒரு இரத்த தந்துகிகள் ,இணைப்பை ஏற்படுத்தும் பாலம் ,தாதுக்களை கடத்திடும் ஒரு வழி....என்றும் பலவாறு புரியலாம் ...
- பலவைதாமான நோய்க்கு இந்த ஸ்ரோதசில் ஏற்படக்கூடிய அடைப்பே காரணம்
எனலாம் -உதாரணதிற்கு கருக்குழாய் அடைப்பு ,விந்து குழாய் அடைப்பு ,இதய
அடைப்பு ,என்று அடைப்புகள் அனைத்தும் ஆயுர்வேதத்தில் ஸ்ரோதோ ரோதம் என்று
அளிக்கபடுகிறது ..இந்த பொதுவாக எல்லா நோய்க்கும் காரணமான ஸ்ரோதோ ரோதம்
என்பதனை சரி seyyum -முக்கிய மருந்தாக இந்த மருந்து உள்ளது
- கருக்குழாய் அடைப்புக்கும் தக்க துணை மருந்தோடு தர குணமாகும் என்பது இதற்க்கு உதாரணம்
- melum இந்த மருந்து காச நோய்க்கும் ,இளைத்துகொண்டே போகும் நோய்க்கும் தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்