ஏலாதிச் சூரணம்
ELADHI CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
“ கொள்ளவே யேலாதிச் சூர ணங்கேள்
குணமான லவங்கமொன்று மிளகி ரண்டு
விள்ளவே நாகம்நாலு தாளிச மெட்டு
விதமான குகைநீறு பதினா றாகும்
நள்ளவே சுக்கதுதான் முப்பத் திரண்டு
நலமான வேலமது வறுபத்து நாலு
கள்ளவே சர்க்கரைதான் சமனாய்க் கூட்டிக்
கலந்துபுதுக் கலசமதில் பதனம் பண்ணே. “
- சித்த வைத்திய திரட்டு
சேரும் பொருட்களும், அளவும் :
கிராம்பு 0.39 % மிளகு 0.79 %
சிறுநாகப்பூ 1.57 % தாளிசபத்திரி 3.15 %
கூகைநீர் 6.30 % சுக்கு 12.60 %
ஏலக்காய் 25.20 % சர்க்கரை 50.00 %
அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது வெந்நீரில் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
பித்தவாயு, வாயு, கிரந்தி, விரணம், அரிகிரந்தி, சில்விஷம், குட்டம், குறைநோய், பெரும்பாடு, எலும்புருக்கி, ஆரம்ப குஷ்டம், சொறி, சிரங்கு.
தெரிந்து கொள்ள வேண்டியவை ..
சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள ஏலாதி சூரணமும் ஆயுர்வேத மருந்தில் உள்ள ஏலாதி சூரணமும் ஒன்றல்ல ..
தோல் நோய்களில் இந்த ஏலாதி சூரணத்துடன் பலகறை பற்பம் கலந்து தர மிக நல்ல பலன் அளிக்கும் ..
பித்த வாயு ,எரி வாயுக்கு இந்த மருந்தோடு சங்கு பற்பம் கலந்து தர நல்ல பலன் தரும் ..