ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து ஒருவருக்கு வேலை செய்யும் ஆனால் ஆதே வியாதியுள்ள அடுத்த நோயாளிக்கு அது வேலை செய்யாது .காரணம் பிரகிருதி என்று சொல்வோம் .பிரகிருதி என்றால் என்ன ?.அதை பின்னர் பார்ப்போம்
சிகிட்சா சூத்திரம் -இது தான் பார்முலா -இந்த முடக்கு வாதத்திற்கு பட்டினி(லங்கணம் ) அல்லது இலகுவான ஆகாரங்கள் ,பின் ஒத்தடம்(ச்வேதனம் ) அதற்க்கு பின் பசியை தூண்டும் மருந்துகள் (தீபனம் மற்றும் பாச்சனம்) அதற்க்கு பின் ஆமத்தை (செரிக்காத விஷமான உணவை )மாற்றும் மருந்துகளை தர வேண்டும் .எங்கே வேதனா ஸ்தாபனம் என்னும் வலியை நீக்கும் மருந்துகளை தர சொல்வதில்லை சாஸ்திரங்கள் -இது தான் சிகிச்சையின் படிகள் .
முடக்கு வாதத்தை -ஆட்டோ இம்யூன் டிஷ்ஆர்டர் () என்று சொல்வார்கள் -அப்படின்னா என்ன ? நமக்கு உதவக்கூடிய வெள்ளை அணுக்களே நம்முடைய மிருதுவான சவ்வெலும்புகள் மற்றும் சதைகளை தாக்கி அழிக்கும் வகையை சேர்ந்தது .
நாய் திருடனை கடிக்காமல் வளர்த்தவனையே கடித்தால் எப்படி ?-அதே போல் இந்த வியாதி .
அல்லோபதி என்னும் ஆங்கில மருத்துவத்தில் நாயை(வெள்ளை அணுக்களை ) அழிக்க மருந்து (இம்யூன் சப்ரசன்ட் -அதாவது ஸ்டீராயட்) கொடுப்பார்கள் ..ஆனால் நாங்கள் நாயை (வெள்ளை அணுக்களை )நமக்கு சாதகமாக பயன்படுமாறு (இம்யூனோ மாடுலேட்டார் ) உள்ள மருந்துகளை கொடுப்போம் .
சரி மருந்துகளை பார்ப்போம் ..
கசாயங்களில்
- ஆமா வாதாரி கசாயம்
- ராச்னா பஞ்சகம் கசாயம்
- ராச்னா சப்தகம் கசாயம்
- ராச்னா தசமூலம் கசாயம்
- புனர்ந்வாதி கசாயம்
- தசமூலம் கசாயம்
- ராச்னா த்வாதசம் கசாயம்
- ராச்னா பஞ்ச தசகம் கசாயம்
- சுண்ட்யாதி கசாயம்
- சுண்ட்யாதி சப்தகம் கசாயம்
- பிப்பல்யாதி கசாயம்
சாறுக்களில்
- நிற்குன்த்யாதி(நொச்சி ) ஸ்வரசம்
- ராச்னா (சிற்றத்தை) ஸ்வரசம்
- புனர்ணவாதி (மூக்கரட்டை ) ஸ்வரசம்
- ப்ரசாரிணி (முதியார் கூந்தல் )ஸ்வரசம்
சூர்ணங்களில்
- வைஷ்வனார சூர்ணம்
- பஞ்ச கோலாதி சூர்ணம்
- அஜ மோதாதி சூர்ணம்
- பஞ்ச சம சூர்ணம்
- சதபுஷ்பாதி சூர்ணம்
- முஸ்தாதி சூரணம்
- அதி விஷ சூரணம்
வடி என்னும் மாத்திரைகளில்
- சஞ்சீவனி வடி
- ஆமவாதாரி வடி
- அக்னி துண்டி வடி
- சித்திரகாதி வடி
- சர்வாங்க சுந்தரி வடி
- சிவா குளிகா
குக்கலு என்னும் மாத்திரைகளில்
- வாதாரி குக்குலு
- சிம்ஹநாத குக்குலு
- கைசோர குக்கலு
- ராச்னாதி குக்கலு
- த்ரயோ தசாங்க குக்கலு
- மகா யோக ராஜ குக்கலு
- யோகராஜ குக்கலு
ரச ஔஷதங்கள் என்னும் -சிந்தூரங்களில்
- சண்ட மாருத செந்தூரம் (சித்த மருந்து )
- ஆறுமுக சிந்தூரம் (சித்த மருந்து )
- கால மேக நாராயண சிந்தூரம் ( சித்த மருந்து )
- சமீர பண்ணக ரசம்
- வாதாரி ரசம்
- வாத கஜான்குச ரசம்
- ஆமவாத ரசம்
- ஆமவாத வித்வம்சி ரசம்
ஆசவ அரிஷ்டங்களில்
- அம்ருதாரிஷடம்
- தேவதார்வாதி அரிஷ்டம்
- பலா அரிஷ்டம்
- தஷமூலா அதிர்ஷ்டம்
- புனர்ணவாசவம்
தைலம் -(ஆம அவஸ்தையில் பயன்படுத்தகூடாது )
- ஆம வாத தைலம்
- கொட்டம்சுக்காதி தைலம்
- சைந்தவாதி தைலம்
- ப்ரசாரிணி தைலம்
- நாராயண தைலம்
- சுண்ட்யாதி கிருதம்
லேபம் என்னும் பற்றிடும் மருந்துகளில்
- தசாங்க லேபம்
- ஹரித்ர லேபம்
- சதபுச்பாதி லேபம்
- நிற்குன்த்யாதி லேபம்
- ஹிம்சாதி லேபம்
பஸ்மங்களில் தங்க பஸ்மம் மிக சிறந்தது ...
ஆயுர்வேதத்தில் இந்த முடக்கு வாதத்திற்கு பல வகையான பஞ்ச கர்ம என்னும் சோதனை(உடலை சுத்தம் செய்யும் )முறைகள் பல சொல்லப்பட்டுள்ளது .
வஸ்தி என்னும் சிகிச்சையும் ,ச்வேதனம் என்னும் முறைகளும் இந்த ஆம வாதத்திற்கு சிறந்த சிகிச்சை முறைகளாகும்.
நான் சவால் விடுகிறேன் ..
வெகு நாளாக வலி மருந்துகளையோ ,ஸ்டீராய்ட் மருந்து களையோ உபயோகித்தால் எலும்பு சிதைவடையும் ,ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்தி குறைந்து போகும் ,முகம் கை கால் வீங்கி போகும் ,மூத்திரம் சரிவர போகாது ,பசி எடுக்காது ,வயிறு புண்ணாகிவிடும் ,மாத்திரையின் வீர்யம் அதிகானாலும் வலி சொற்ப நேரத்திற்கே கேட்கும் ...
இந்த நிலை மாற வேண்டுமா ?
வெறும் இலை,தழை போன்றவற்றை வைத்தே நல்ல பலன் தர முடியும் ..மருத்துவம் முறையாக படித்த ,மூலிகைகளின் தீர்கமான அறிவை கொண்டவரை ,செந்தூரங்களை எடுத்த எடுப்பிலே உபயோக்கிகாத மருத்துவரை ,உணவு கட்டுப்பாட்டை கடை பிடிக்க சொல்லும் மருத்துவரை ,நல்ல ஆயுர்வேத மருத்துவரை பாருங்கள் ..உறுதியாக நல்ல பலன் கிடைக்கும் .போலி வைத்தியரிடம் ,காசுக்கு அடி போடும் வைத்தியரை ,போலி விளம்பரம் கொடுக்கும் மருத்துவரை புறக்கணியுங்கள் .....
அடுத்து வலியை போக்கும் மூலிகைகள்
6 comments:
உங்களின் பதிவுகள் அனைத்தும் தொடர்ந்து ஆர்வமாக படித்துவருகிறேன்சார்,பயனுள்ள தகவல்களை அளிக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்...அந்த வடமொழிசொற்கள் எனக்கு அர்த்தம் புரியவில்லைசார். உங்களுக்கு சிறமம் இல்லையேல் தமிழில் மொழிபெயர்த்து எழதுங்கள்சார்.
வாழ்த்துக்கள்...
வணக்கம்சார்.எனக்கு மீசையில் ஏற்பட்ட புழவெட்டு நோய்க்கு உங்களின் ஆலோசனைகள்படி சேராங்கொட்டை மருந்து எனக்கு பயனளித்துள்ளது,மருபடியும் மீசைமுடிவளருகிறது.மிகவும் நன்றிகள்சார்.
நண்பரே மச்ச வல்லபரே ..தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி ...ஆயுர்வேத மருந்து என்றால் சம்ஸ்க்ருதம் வார்த்தைகள் தான் .மருந்தின் பெயரை தமிழில் மொழி பெயர்க்க இயலாது .ஆனால் முடிந்த மட்டில் தமிழில் சம்ஸ்க்ருதம் கலக்காமல் எழத முயல்கிறேன் ...
தங்களது ..புழு வெட்டு சரியானதற்கு எல்லாப்புகழும் இறைவனுக்கே ..
தமிழில் ஆயுர்வேத மருத்துவம் பறறி விளக்கம் அருமை.தொடர்ந்து எழுதவும்.மருந்துகளின் ஸம்ஸ்கிருத பெயருக்கான தமிழ் பெயர்களை எழுதினால்,தமிழில் படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்
romba nanri
What is Solution for this. please kindly say.
கருத்துரையிடுக