வெள்ளி, ஜூலை 16, 2010

மூட்டு வலிக்கு-தைலம் தேய்க்க வேண்டிய மர்ம புள்ளிகள்



கால் வலி உள்ள பல நோயாளிகளை தினமும் பார்க்கிறேன் ..அவர்கள் செய்யும் மிக பெரிய தவறு எண்ணைகளை ஒழுங்காக தேய்ப்பதே இல்லை .
உள்மருந்துகளை  சாப்பிடும் ஆர்வம் காட்டும் அதே நோயாளிகள் எண்ணைகளை தேய்ப்பதில் இல்லை 
காரணம் 
  1. வலிகளுக்கு தேய்த்தவுடன் இந்த எண்ணெய் மருந்துகள் வலிகளை கேட்காது .இது அவர்கள் மனதில் சோர்வை ஏற்படுத்தலாம் ..
  2. எண்ணெய் பிசுபிசுக்கு பலருக்கு பிடிபதில்லை 
  3. நேரம் ஒதுக்க முடிவதில்லை ..
  4. எண்ணெய் தேய்யதாலும் ஒத்தடம் கொடுக்க கஷ்டம் 
  5. தினமும்  தேய்ப்பதில் ஒரு சோம்பல் 
நூறு மிலி மூட்டு வலி தைலத்தை வைத்து கொண்டு மூன்று மாதங்களாக "இன்னும் தைலம் இருக்கு டாக்டர் "என்னும் நோயாளிகள் இன்னும் பலர் இருக்கிறார்கள் .எப்படி வலி குறையும் ?

தைலம் தேய்ப்பது பற்றி ஆலோசனை ..
  1. முறையான தைலம் தேய்க்கும் முறைகள் மூட்டுக்குள் எண்ணெய் பசையை உருவாக்கும் 
  2. குறைந்த பட்சம் ஒரு முறைக்கு பத்து மிலியாவது தேய்க்கணும் ..தேய்த்த பின் ஒத்தடமும் கொடுக்கணும் ..
  3. வலி இருந்தாலும் குறைந்தாலும் தினமும் தேய்க்கணும் 
  4. காய்ந்த மரம் போல் உள்ள எலும்பில்  பசை உண்டாகும் 
  5. முழுமையான தீர்வு பெற மருத்துவரின் சொல் பேச்சு கேட்கணும் 
  6. வலி நிவாரண ஆயின்மென்ட் எல்லாம் தற்காலிகம் தான் 
தேய்க்கும் முறைகள் பற்றி -
கால் மூட்டு எலும்பு தேய்மானதிற்கு எண்ணெய் தேய்க்க வேண்டிய இடங்கள் இவை ..
வலி கால் மூட்டில் இருந்தாலும் இந்த இடத்தில எல்லாம் தைலம் தேய்க்கணும் ..

வட்டிமிட்ட இடத்தில எல்லாம் வர்மம் ஒளிந்து கிடக்கிறது ....

அடி வயிறு ,தொடையின் மேல்பக்கம் -இடுப்பெலும்பு சேருமிடம் ....
இந்த இடத்தில்தான் சக்தியே ஒளிந்து கிடக்கிறது ...


எலும்பை ஒட்டிய காலின் வெளிபகுதி -மூன்று இடங்கள் -இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தும் 

பின் பக்க காலில் எண்ணெய் தேய்க்காமல் கால் வலி குறையவே குறையாது ..
இது மிக முக்கியம் ..இது தான் ஆணி வேர் ..


இந்த பகுதி -உள்ளந்தொடை,உள்ளம் பின் கால் -சதை நாரின் முடிச்சுக்கள் இவை ..இந்த நார் இல்லை எனில் மனிதன் நிற்கவே முடியாது ..
வெளிப்பகமுள்ள இந்த நரம்பு காலுக்கு வலுவை கொடுக்கும் ..இங்கேயும் தைலம் தேய்க்கணும் ..
பெட்டல்லா என்னும் இந்த சிப்பி எலும்பை இணைக்கும் இந்த மாய புள்ளிகள் மூட்டுக்கு பலம் .இந்த புள்ளியில் வலுவில்லை எனில் மூட்டில் சத்தம் வரும் .மூட்டு ஆடி விடும் ,மூட்டு -பிணைபில்லாமல் போய் விடும் ..

வெளிபகமுள்ள இந்த புள்ளிகள் -கணுக்காலுக்கும் ,மூட்டுக்கும் உள்ள இணைப்பை வலு படுத்தும் ..
இந்த புள்ளிகள் சதை நார்கள்..இந்த நார் இல்லாமல் மனித மாலை கிடையாது 

மூட்டுக்கு  அதிக வேலை கொடுத்தவர்களுக்கு  இந்த நரம்பில் வலு இருக்காது 
விளையாட்டு வீரர்களுக்கும் ,அடிபடுவதாலும் இந்த புள்ளி எளிதில் பாதிப்பு அடையும் 

சதை நார் கிழிந்து விட்டது என்று இதை தான் சொல்வார்கள் 

பின் உள்ள இந்த புள்ளிக்கு -மனிதனை தாங்கும் வேர் என்று பெயர் ..

மேலேயுள்ள இந்த வட்டத்தில் தைலம் தேய்த்து வந்தால் ..மூட்டு வலி பறந்து மறைந்து போகும் 

Post Comment

6 comments:

மதுரை சரவணன் சொன்னது…

படங்களுடன் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள்

curesure Mohamad சொன்னது…

நன்றி நண்பரே ..

பெயரில்லா சொன்னது…

T6cfgvi0ol,plijy

பெயரில்லா சொன்னது…

good

பெயரில்லா சொன்னது…

Thanks a Bunch

ramhanuman சொன்னது…

arumai

கருத்துரையிடுக