செவ்வாய், ஜூலை 13, 2010

தேவை ஆலோசனை ..தேவை தங்களது கருத்து ...

நண்பர்களே ..தாங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ...
நீங்கள் பல பேர்கள் இலவச ஆலோசனையை இ மெயில் மூலமகாக பயன் படுத்தி பயன் பெற்றிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் ..
தினமும் பத்துக்கும் மேற்பட்ட ஈமெயில் கேள்வி ஆலோசனைகள் வருகிறது ..முடிந்த மட்டில் எல்லாவற்றிற்கும் பதில் எழுதி இருப்பேன் (அப்படி ஆலோசனை பதில் பெறாதவர்களுக்கு ஓரிரு நாளில் பதில் பெற்று கொள்ளலாம் ..

இலவச ஆலோசனையின் நோக்கமே மக்கள் எங்கிருந்தாலும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தி நலம் பெற வேண்டும் என்பது தான்..

நான் உங்களிடம் கேட்க விரும்புவது இது தான் ...

இலவச ஆலோசனையின் கேள்விகளை அதன் பதில்களையும் தனி லேபில் (கேள்வி பதில் என்று )போட்டு பிளாக்கிலேயே தங்களது பெயர் ஊர் சொல்லாமல் வெளிவிடவா ?
இதன் மூலம் பலர் சந்தேகங்களை எளிதில் கேட்க முடியும் 
எனது நேரம் மிச்சம் ஆகும் 
ஒரே வகையான கேள்வி -திரும்ப கேட்க பதில் எழுதுவது எளிது ..

இலவச ஆலோசனை தனியாக பெற விரும்புபர்கள் தொலை பேசியில் முன்னுரிமை கொடுக்கவா ?..
இதன் மூலம் சந்தேகங்கள் உடன் தெளிவு பெற முடியம் .
செல் பேசியில் விளக்கங்களை சரிவர புரிந்து கொள்ள முடியுமா ?
செல்பேசியில் ஆயுர்வேத மருந்தை உடனே எழுதி கொள்ள முடியுமா ?
செல்பேசியில் முழு ஆலோசனை பெற முடியுமா 

கேள்விகளுக்கு பதில் எழுதவே காலம் போத வில்லை ..எனவே ..பொதுவான கேள்விகளுக்கு கேள்வி பதில் லேபிளையே பயன் படுத்தலாமா 

Post Comment

18 comments:

கருத்துரையிடுக