சனி, ஜூலை 24, 2010

வலிகளை போக்கும் (அங்க மர்த ப்ரஷமணம்) மூலிகைகளின் -தொகுப்பு

சரகரின் அங்க மர்த ப்ரஷமணம் என்னும் உடல் மேல் வலிகளை போக்கும் உடல் சோர்வை நீக்கும் மூலிகைகளின் தொகுப்பு ..


சரகரின் மகா கசாய வர்க்கத்தில் மேல் வலிகளை போக்கும் பத்து மூலிகைகளின் தொகுப்பு இங்கே படங்களின் கொடுக்கபட்டுள்ளது 

  1. ஷாலி பர்னீ என்னும் பால் முதுக்கன் கிழங்கு 
  2. ப்ருஷ்ணீ பர்னீ என்னும் மூவிலை 
  3. ப்ருஹதி என்னும் முள்ளங் கத்தரி
  4. கண்டகாரி என்னும் கண்டங் கத்தரி
  5. ஏரண்டம் என்னும் ஆமணக்கு 
  6. காகொலி என்னும் காகோலி
  7. சந்தனம் என்னும் சந்தனம் 
  8. உஷீரம் என்னும் விலாமிச்சை வேர் 
  9. ஏலம் என்னும் ஏலக்காய்
  10. மதுயச்டி என்னும் அதிமதுரம் 
இந்த பத்து மூலிகைகள்
  1. உடல் வலிகளை போக்கும் 
  2. உடல் அசதியை போக்கும் 
  3. உடல் மேல் கை கால் உளைச்சலை போக்கும் 
  4. உடல் பலஹீனத்தை போக்கும் 
  5. வலிகளை போக்கி தாதுக்களை வலுப்படுத்தும் 
  6. விந்து விட்டாலும் (அதிக புணர்ச்சியினால் உடல் பலஹீனம் ) உடலை வலி சோர்வி லிருந்து காப்பாற்றும் 

பால் முதுக்கன் கிழங்கு -Pueraria Tuberosa என்னும் விதாரி..
விந்துவை பெருக்கும்-உடல் ஆற்றலை கொடுக்கும் -வயதாகாமல் தடுக்ககூடிய ரசாயனமாக -காய கல்பமாக பயன்படும் 


ப்ருஷ்ணீ பரணீ-desmodium gangeticum என்னும் மூவிலை 
பசியை தூண்டும் ,இதயத்திற்கு நல்லது ,நீர் வாதத்தை குறைக்கும் ,வாய்வை வெளியேற்றும் ,வலிகளை போக்கும் 


ப்ருஹதி என்னும் -solanum indicum முள்ளங் கத்தரி 
இதயத்தை வலுபடுத்தும் ,மலத்தை இறுக்கும்,மூத்திரம் பெருக்கும் ,வலிகளை போக்கும் 




கண்டகாரி என்னும்-Solanum xanthocarpum  கண்டங் கத்தரி 
ஆமவாததை போக்கும் ,சிறுநீரக கல்லை கரைக்கும் ,வலிகளை போக்கும் ,சளிக்கும் நல்லது 

ஏரண்டம் என்னும் Ricinus communis -ஆமணக்கு 
மலத்தை போக்கும் ,இடுப்பு வலிகளை போக்கும் ,தாய்ப்பால் பெருக்கும் ,விந்துவை சுத்தபடுத்தும்,நடுக்கு வாதத்தை போக்கும் 

சந்தனம் -santalum album
வாத நீரை போக்கும் ,தாகத்தை தணிக்கும் ,விந்துவின் அதிக போக்கை போக்கும் ,தலை வலி ,மற்றுமுள்ள உடல் வலிகளை போக்கும் 

உஷீரம் என்னும் -Vetiveria zizanioides விலாமிச்சை வேர் 
பசியை தூண்டி ,வாத நீரை குறைக்கும் ,மூத்திரம் பெருக்கும் 


ஏல என்னும்-Elettaria cardamomum ஏலக்காய் 
பசி தூண்டும் ,வயிறு வலி போக்கும் ,விந்தவை கட்டும் ,வலிகளை போக்கும் 


மதுயஷ்டி என்னும் -glycyrrhiza glabraஅதிமதுரம் 
சதை வலிகளை போக்குவதில் அசதிகளை போக்குவதில் அதிமதுரமே சிறந்தது 
மேலே சொன்ன இந்த பத்து மூலிகைகளும் நமக்கு -வலிகளை போக்கும் என்று ஆராய்சிகளும் நிரூபிக்கிறது 

Post Comment

5 comments:

lcnathan சொன்னது…

MOOLIKAIKALIN VIVARAM ARRINTHOOM, AANAAL, SEYMURAIUM,UTKKOLLUM MURAIYUM THERIVITHAAL, NALAMAAKA IRUKKUM.

curesure Mohamad சொன்னது…

நன்றி Ic nathan அவர்களே ..

மேலே சொன்ன மருந்துகளை -காய வைத்து சம அளவு பத்து பொருளையும் எடுத்து (நாட்டு மருந்துகடைகளில் எளிதாக கிடைக்கும் )..இடித்து வைத்து கொண்டு இருபது கிராம் இடித்த மருந்துடன் -இருநூறு மிலி தண்ணீருடன் கொதிக்க வைத்து அது நாலில் ஒரு பகுதியாக வற்ற வைத்து குடிநீராக்கி காலை மாலை வெறும் வயிற்றில் குடிக்க மேலே சொன்ன பலன் கிடைக்கும் ..

பெயரில்லா சொன்னது…

மருத்துவர் ஐயா வணக்கம்

என் கருத்துக்களை உங்களுக்கு E-Mail செய்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் நன்றி

பெயரில்லா சொன்னது…

நீங்கள் ஒரு மருத்துவ மா மேதைதான்

curesure Mohamad சொன்னது…

நண்பரே சாலமன் ..

தங்களது மெயிலுக்கு பதில் அனுப்பிஉள்ளேன் ..

நான் மருத்துவ மேதை இல்லை ..நான் கற்க வேண்டியது நிறைய உள்ளது ..மருத்துவ அறியாமை ஒழிய என்னால் முடிந்த மட்டில் எழுதிகிறேன் அவ்வளவுதான் .எல்லா புகழும் இறைவனுக்கே ..

கருத்துரையிடுக